ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
பார்க்குரல் கொண்ட போஸ்னியா, பீகாரில் ஜகன்னாபாத்தில் சிறை தகர்ப்புக்குப் பின் என்று மாறுபட்ட சூழல்களில் அமைதிப் பணி என்று அன்பு வலையை எப்படி விரிக்க முடிகிறது?
அதில் தான் வெற்றி இருக்கிறது. இப்போது கூட மொராக்கோவில் இருந்து 42 பேர் குழு இங்கு வந்து சென்றதைப் பார்த்தீர்கள். போஸ்னியா மட்டும் அல்ல, ஐரோப்பாவின் பல பகுதிகளிலும், அமெரிக்காவிலும் பண்புப் பதிவு பெற, மனித உணர்வு பெற ஆர்வம் அதிகரித்திருப்பதை இவர்கள் வருகை காட்டுகிறது.
பீகாரில் ஜகன்னாபாத் சிறை தகர்ப்புக்குப் பின் அங்கே விவசாயிகளின் போர்ப் படையான ரண்வீர் சேனாவுக்கும், மவோயிஸ்ட் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடிக்கும் என்று எதிர்பார்த்தனர், அவ்வளவு இறுக்கம். ஆனால் "வாழும் கலை' இயக்கப் பிரசாரகர்கள் இரு தரப்பையும் சந்தித்துப் பேசி தொடர்ந்து அமைதி காத்தனர். அதனால் பெரிய அளவில் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது.
கம்யூனிசம் தவிடுபொடியான பின் இன்றுள்ள ரஷ்யாவின் நிலையே வேறு. அமெரிக்காவும் ஒரே வல்லரசாக தான் நினைத்ததைச் செயல்படுத்தும் முடிவில் இருக்கிறது. கம்யூனிசத்திற்கும் மதத்திற்கும் இடைவெளி அதிகம். ஆனால் தங்கள் இயக்கம் அதிபர் புடின் ஆதரவைப் பெற்றது எப்படி?
ரஷ்யாவில் வாழ்க்கை முறை நெறிகெட்டிருப்பது உண்மை, அங்கிருக்கும் கிறிஸ்தவ சர்ச் முதலில் வாழும் கலை அமைப்பு வளர்வதை ஆதரிக்கவில்லை . ஆனால் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கை, தெளிவில்லாத அரசியல் சூழ்நிலை ஆகியவற்றில் இருந்து வெளியேற மக்கள் விரும்புவதன் அடையாளமே அங்கு "சுதர்ஷன கிரியா' பயிற்சி நடத்த அனுமதிக்கப்பட்ட செயலாகும். ரஷ்ய ராணுவத்தினர் ஒரு லட்சம் பேருக்கு அரசு அனுமதியுடன் இப்பயிற்சி தற்போது தரப்படுகிறது.
தமிழகத்தில் பாபநாசத்தில் பிறந்த தாங்கள் இம்மாதிரி அன்புப்பிணைப்பை அதிகரிப்பதில் பெரும் வெற்றி கண்டிருப்பது பெருமையாக இருக்கிறது. ஞானத்திற்கும், இலக்கியத்திற்கும் முன்னணியாக உள்ள பகுதி தமிழகம். இங்கே பிறக்காமல் இருந்திருந்தால் பெருமை பெறுவது சிரமம் என்றே கூறுவேன். அதனால் தமிழகத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். தவிரவும் "வாழும் கலை ' அமைப்பு துவங்கி , 25 ஆண்டுகள் ஆகி வெள்ளி விழா நடைபெற இருக்கிறது. விழா வரும் பிப்ரவரி 17 முதல் 19ம் தேதி வரை இங்கே பெங்களூரில் நடக்கும். அந்த மகா சத்சங்கத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக அன்புள்ளங்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மகா சத்சங்கத்திற்கு எல்லாரும் வர அழைக்கிறேன். அதன் மூலம் எல்லா இல்லங்களிலும் அன்பு ஒளி பரவட்டும்.

2 மறுமொழிகள்:
அகரன்,
ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் சேவை மகத்தானது
அகரன்,
ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் சேவை மகத்தானது
Post a Comment
<< முகப்பு