ஆண்களுக்கும் உகந்த அறிவுரைகள்

கருமையான கூந்தலை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. நம் அனைவருக்கும் கூந்தல் பெரியதோ, சிறியதோ அதை அழகாக வைத்திருக்க வேண்டும். விதவிதமான அலங்காரங்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது.
இப்படி நமது கூந்தலை அழகு படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் கூந்தலை நன்றாக ஆயுர்வேதிக் ஆயில் மசாஜ் மூலம் பராமரித்துக்கொள்ள வேண்டும் என்கிறார் பிரபல சர்வதேச அழகுக் கலை நிபுணர் ஹசீனாசையத். இவர் சென்னை திருவல்லிக்கேணியில் இந்தியன் இன்ஸ்டிடிïட் ஆப் பிïட்டி தெரபி மற்றும் தி.நகரில் ஆம்பியன்ஸ் இன்டர்நேஷனல் அழகுக்கலை பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.
அவர் மேலும் கூறியதாவது:-
கூந்தலை நல்லமுறையில் பராமரித்தால்தான் நாம் விரும்பும் வண்ணத்தில் கூந்தலை பல்வேறு விதங்களில் ஸ்டைல் செய்து கொள்ளலாம். நீளமான கூந்தலை சுருட்டிக் கொள்ளலாம். சுருள் முடியை நிமிர்த்திக் கொள்ளலாம்.
இப்படி இன்றைய நவீன உலகில் கூந்தலை எப்படி வேண்டுமானாலும் சில மணி நேரங்களில் ஸ்டைல் செய்து கொள்ளலாம். இன்றைய பேஷன் உலகில் பல பெண்கள் வெளியே விசேஷங்களுக்கு செல்கையில் தங்களது கூந்தலை தற்காலிகமாகவோ சுருட்டிக்கொள்ளவோ விரும்புகிறார்கள்.
இதற்கு ஹாட்ரோலர்ஸ், ஹாட்டாங்க்ஸ், கிரீம்பர்ஸ் என்று பலவிதமான கருவிகள் பயன்படுத்தலாம். பெர்மிங்கும் இன்றைய பெண்கள் மிகவும் விரும்பி செய்து கொள்கிறார்கள். இதே போல் சுருள் முடியையும் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நிமிர்த்திக் கொள்ளலாம்.
இது மட்டுமில்லாமல் இன்றைய பெண்களிடம் ஹேர்கலரிங் வரவேற்பை பெற்றுள்ளது. இதிலேயும் பல்வேறு விதமான நிறங்கள் உள்ளன. அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிறம் மாற்றிக் கொள்ளலாம். இப்படி நமது கூந்தலை நாம் அழகாக அலங்கரித்துக் கொள்ளலாம்.
இளநரையா?
இளநரைக்கும் செம்பட்டை முடி கருநிறமாகவும் முற்றிய பெரு நெல்லிக்காய்களை கொட்டை நீக்கி நிழலில் உலர்த்தி பின்பு தேங்காய் எண்ணெயில் போட்டு கருகும் வரை கொதிக்க விட வேண்டும்.
இளநரையை போக்கி இதையும் டிரை பண்ணி பார்க்கலாம். சிவாக்காய், பாசிப்பயிறு, பச்சரிசி, சிறிது கறிவேப்பிலை, மருதாணி இலை ஆகியவற்றை காயவைத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வாருங்கள். இள நரை மாயமாவதை கண் கூடாகக் காண்பீர்கள்!
பின்பு வடிகட்டி தினமும் தடவி வர வேண்டும். இவ்வாறு செய்தால் தலைமுடி கருநிறமாகும்.
அதிமதுரத்தை பொடி செய்து எருமைப்பால் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் வழுக்கை மறைந்து தலைமுடி வளர ஆரம்பிக்கும்.
தினமும் இரவில் சுத்தமான தேங்காய் எண்ணையை லேசாக சூடுபடுத்தி தலையில் 10 நிமிடம் தேய்த்துக் கொண்டு பின்பு காலையில் ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூள் (சோறு வடித்த கஞ்சியில் கலந்து) தலைக்கு குளித்தால் நீண்ட கூந்தலை பெறலாம்.
வேப்பிலையும் மஞ்சளையும் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்தால் பொடுகு மறைந்து விடும்.
செம்பருத்திப்பூவை நன்றாக காயவைத்து தேங்காய் எண்ணையில் போட்டு வைத்து தலைக்கு தேய்த்து வாருங்கள். கூந்தல் செழிப்பாக வளரும்.
துளசி இலையை அரைத்து தலையில் தடவி குளித்து பிறகு ஷாம்பு போட்டு குளிக்க... பேன் இராது.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு