முஸ்லிம் இனத்தவர்கள்,தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்களல்லர்

''நாங்கள் தமிழ்பேசும் முஸ்லிம் இனத்தவர்கள்,தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்களல்லர்''-முஸ்லிம் முன்னணி எழுத்தாளர் மஹ்ரூவ் பவுசர்


லண்டன் தமிழர் தகவல் நடுவத்தில் 1.10.06ல் நடந்த கருத்தரங்கு.

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.


லண்டனில் செப்டம்பர் மாதம் 23ஃ24ம் திகதிகளில், கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் நடந்த 33வது இலக்கியச்சந்திப்புக்கு, ''ஈழத்தமிழ் இலக்கியமும் முஸ்லிம் படைப்பாளிகளும்'' என்ற தலைப்பில் பேச இலங்கையிலிருந்து வந்திருந்த, முஸ்லிம் எழுத்தாளரான மஹ்ரூவ் பவுசருடனான ஒரு கருத்தரங்கு 01.10.06 ஞாயிற்றுக்கிழமை காலை லண்டனில் உள்ள தமிழர் தகவல் நடுவத்தில் நடந்தது. தகவல் நிலையப் பொறுப்பாளர் திரு. வரதகுமார் அவர்கள் கூட்டத்திற்குத் தலமை வகித்தார். லண்டனில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், சமுகநலவாதிகள், எழுத்தாளர்கள், எனப்பலர் கூட்டத்திற்குச் சமூகம் கொடுத்திருந்தனர். ''இன்று நடக்கும் அரசியற் பிரச்சினைகளும் முஸ்லிம்களின் மனித உரிமைகளும்'' பற்றிப் பேசிய பவுசரின் பேச்சிலிருந்து எடுத்த சில கருத்துக்கள் இந்தக் கட்டுரையில் அடக்கப்பட்டிருக்கின்றன.

திரு மஹ்ரூவ் பவுசர், இலங்கையில் நன்கு தெரியப்பட்ட மனித உரிமைப் போராளியும் முன்னணி முஸ்லிம் எழுத்தாளர்களில்மொருத்தருமாகும். அத்துடன் இவர் ''மூன்றாம் மனிதன்'' என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்துகொண்டு அப்பிரசுரத்தின் மூலம் இதுவரை இருபத்தொரு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். தினகரன் பத்திரிகையின் ஆசிரியராகவும் அண்மையில் நியமனம் பெற்றிருக்கிறார். 'மிலேனியம் புக் லாண்ட்' என்ற ஸ்தாபனத்தின் முக்கிய நிர்வாகியாகவுமிருக்கிறார்.தென்னிந்தியாவில் 2000ம் ஆண்டு நடந்த ''தமிழ் இனி'' போன்ற பல மகாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

அவர் தனது, ''முஸ்லிம் மக்களும் மனித உரிமைகளும்'' என்ற தலைப்பில் நிகழ்த்திய பேச்சில் கீழ் காணும் கருத்துகள் பிறந்தன: இன்று இலங்கையில், யதார்த்த சமுகநிலைகள், மக்கள் குழுக்கள், அவர்களின் குரல்கள் என்பன பல பிரச்சினைகளை முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. மனித உரிமைகள், பல்லின மக்களின் உரிமைக்குரல்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நிலை முக்கியமான விடயங்களாக உருவாகியுள்ளன. கடந்தகால நிகழ்ச்சிகள் பல்லின மக்களிடையேயும் ஒரு பரபரப்பான நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட முயற்சிகளாற் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கலாம். பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டுபோவதால், இன்றைய நிலையில் பல்லின மக்களும், பகைமைக்கண்களுடன் ஒருத்தரை ஒருத்தர் அவதானிக்கிறார்கள். இன்று, இலங்கை ஒரு சமத்துவமற்ற, குழப்பமான சமுதாயமாக விருக்கிறது.

கடந்த காலங்களிற் தலையெடுத்த அரசியற் பிரச்சினைகள் இன்று , இனப்பிரச்சினை போன்ற அக முரண்பாடுகளைக் கொண்டு வந்திருக்கிறது. இலங்கையில் இன்று பெரிது படுத்தப்பட்டிருக்கும் சிங்கள தேசியவாதமோ அல்லது குறுகிய தமிழ்த் தேசியவாதமோ இன்றைய பிரச்சினைகளைத் தீர்க்கும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்று சிந்தனையாளர்களும் புலம் பெயர்ந்து வாழும் மனித உரிமைவாதிகளும், முற்போக்குவாதிகளும் இலங்கையில் பல்லினங்களும் சமத்துவமாக வாழும் ஒரு சமுதாயம் உருவாகப் பாடுபடுகிறார்கள். இலங்கையில் தற்போது நடக்கும் விடயங்களால், ஏற்கனவே நிம்மதியற்றிருந்த சமுதாய நிலை மனித இனமே வெட்கப்படும் மனித உரிமை மீறல்களுக்கு முகம் கொடுக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளது.

நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துப் பலர் சேர்ந்து குரல் கொடுக்கவேண்டியிருக்கிறது. தமிழ் முற்போக்கு சக்திகள், இலங்கையில், இன, மத, மொழி வேறுபாடுதாண்டி நடக்கும் சகல மனித உரிமைமீறல்களையும் எதிர்த்துக்குரல் கொடுக்கின்றன. அதற்காகப் பலர் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். நாட்டைவிட்டோடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து நடக்கும் வன்முறைகளாற் சில கொலையாளர்கள் சந்தோசப்படுகிறார்கள். கெப்பற்றிக்கொலாவ, மூதூர், செஞ்சோலை, பொத்துவில் போன்ற பலபகுதிகளில் நடந்த கொலைகளைப்பார்த்து சந்தோசப்பட வௌ;வேறு கூட்டங்கள் இருக்கின்றன. கொலைகளை நியாயப்படுத்திச் சந்தோசப்படும் சிந்தனைகள் மக்கள் மனதில் தெரிந்தோ தெரியாமலோ மிகவும் ஆழமாகப் புகுத்தப்பட்டு விட்டன. தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். அந்தப்பிரச்சினையிலிருந்து, அதைத் தொடர்ந்து இன்று முஸ்லிம் பிரச்சினை தோண்டியிருக்கிறது. இவற்றிற்கு நிவாரணம் எடுக்கும் முயற்சிகள் இன அடிப்படையில் அமைவதல்ல. சிங்கள பயங்கரவாதத்தாலும் அதற்கு எதிரான வாதங்களாலும், இலங்கையில் எழுத்துரிமை, பேச்சுரிமைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. துப்பாக்கிகளின் அதிகாரம் மிகவும் மோசமாகத் தலை விரித்தாடுகின்றது.

இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினை; தமிழ்த் தேசியத்துக்கு எதிர்நிலைப்பார்வையா, அல்லது சார்ந்த பார்வையா? இலங்கையின் வடக்கு, கிழக்குப் பக்கங்களில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினை அவர்களின் சமத்துவ வாழ்க்கையின் அத்திவாரமாகும். இது, இதுவரை தீர்க்கப்படாத விடயமாகவிருக்கிறது. முஸ்லிம் மக்களின் பிரச்சினை என்ன? அது எப்படி வடிவம் எடுக்கிறது? அதன் தோற்றப்பாடுகள் என்ன என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் தனித்துவத்திற்கும் உரிமைகளுக்கும்' ஒலிக்கும் குரல்களுக்குச் செவிமடுக்கவேண்டும். ஒட்டுமொத்தமான, வட, கிழக்கு மக்களின் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கென்ன? அவர்கள் (முஸ்லிம்கள்) எப்படி நடத்தப்படுகிறார்கள்? விடுதலைப்புலிகள் இதை எப்படிப்பார்க்கிறார்கள் கையாள்கிறாகள்?

வடக்கும் கிழக்கும் ஒரு தனித்த பிராந்தியம் அங்கு தமிழரும் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். தனித்த தமிழ்த் தேசியத்தில், முஸ்லிம் மக்களின் சமத்துவ வாழ்க்கை நிலைக்கு இடமில்லாதபோது, வட கிழக்கு தனித்த அரசியற் பிராந்தியமாகவிருக்காது என்பது, முஸ்லிம்கள் தங்களுக்குத் தனிப்பிரதேசம் கேட்கும் நிலைக்குப்போகும். கருணாவும், கிழக்குமக்களின் சமத்துவ வாழ்க்கைக்காகக் கிழக்குப்பிராந்தியத்தின் பிரிவு பற்றிப்பேசியதுமுண்டு. ஆரம்ப காலத்திலிருந்து எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் இன்றைய பிரச்சினைகள் உருவாகும் நிலைகளுக்குத் தள்ளப்பட்டபின், முஸ்லிம்களைத் தங்களின் (விடுதலைப்புலிகளின்), நன்மைகளுக்குள் வைத்துக்கொண்டு நடத்துவது சரியல்ல. 1955ம் ஆண்டுவரைக்கும் முஸ்லிம்கள் தமிழரின் அரசியற் பிரச்சினைக்குள் இருக்கவில்லை. அதன்பின், தமிழரசுக்கட்சியின் மூலம் பாராளுமன்றம்போய், அதன்பின் தங்கள் நன்மைக்காகக் கட்சி மாறிய முஸ்லிம் தலைவர்களை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்தமாக அனைத்து முஸ்லிம்களையும் எடைபோடுவதும், இதுதான் முஸ்லிம் சமுதாயத்தின் பொதுவான அடையாளம் என்று சித்தரிப்பதும் கவனமாகப் பார்க்கப்படவேண்டிய விடயங்கள்.

1985ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் நடந்த பலவிடயங்கள் முஸ்லிம் அடையாளங்களாக மாறியது. விடுதலைப்புலிகளின் இந்த அடையாளக்குறியீடுகளை 'இஸ்லாமியத்தமிழர்கள்' வெறுத்தார்கள். சிங்களப் பேரினவாதிகள் எப்படித் தமிழரின் அடையாளங்களைப் பார்த்தார்களோ அப்படியே விடுதலைப்புலியினரும் முஸ்லிம்களைப் பார்க்க்கும்போது, முஸ்லிம்களை வௌ;வேறு தளங்களுக்குத் தள்ளிவிட்டார்கள். வட,கிழக்கில் முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஒக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய அதேகாலகட்டத்தில் கிழக்கிலிருந்தும் முஸ்லிம்களை வெளியேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதன்பிரதிபலிப்பாக, முஸ்லிம்கள் வாழ்ந்த பல கிராமங்கள் இன்னும் வெற்றிடங்களாகவிருக்கின்றன. 1991-95 வரைக்குமுள்ள காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். தாங்களும் தமிழர்கள்தான் என்ற உணர்வுடன் விடுதைப்புலிகளின் போராட்டத்தில் இணைந்திருந்த நூற்றுக் ;கணக்கான முஸ்லிம் போராளிகள் ஒரு இரவில், அவர்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களென்ற காரணத்தால் கொலைசெய்யப்பட்டார்கள். இந்தக் கொடுமையான நிகழ்ச்சிகள், முஸ்லிம்களை அன்னியப்படுத்திவிட்டன.

கிழக்கில் முஸ்லிம் மக்கள் விவசாயிகள். கிழக்கை விட்டு மற்றப்பகுதிகளில் வாழும் முஸ்லிம் வியாபாரம், அரச உத்தியோகங்களில் இருக்கிறார்கள். கிழக்கின் சனத்தொகையின் 28 வீதமான முஸ்லிம்கள். விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள், ஒட்டுமொத்தமான அரச நிலத்தில் 10வீதமான நிலத்தின் சொந்தக்காரார்களாக மட்டும்தான் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அரசு, முஸ்லிம்களுக்குக் காணிகளைப் பகிர்ந்து கொடுக்க வந்தபோது பல பிரச்சினகள் வந்தன. விடுதலைப்புலிகளின் கருத்து நிலைகள் முஸ்லிம் பிரிவினைக்குத் தளமமைத்தது. வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுபோது ''தற்காலிக'' வெளியேற்றம் என்றுதான் சொல்லப்பட்டது. அது நடந்து 13 வருடங்களாகியும் அந்த மக்கள் இன்னும் 'அகதிகளாகத்தான்; வாழுகிறார்கள். மீளச் சென்று யாழ்ப்பாணத்தில் வாழும் நம்பிக்கை அவர்களிடம் குறைந்து விட்டது.

இன்று விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்படும் 'ஈழம்'' என்பது. ''தனியரசு'' பற்றியது. இந்தக்கோட்பாட்டைத் தமிழ்ப்பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. வட, கிழக்கை விடுதலைப் புலிகளிடம் கையளிப்பது பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தும். அங்கு முஸ்லிம் மக்கள் ஒடுக்கப்படுவார்கள். சிங்கள பௌத்தவாதம் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கியது. விடுதலைப்புலிகளின் இராணுவச்செயற்பாடுகள் முஸ்லிம்களை ஒடுக்குகின்றது. ஆனாலும் பலதரம் முஸ்லிம்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க விடுதலைப் புலிகளை நாடினார்கள் ஐPமுகு இலங்கையில் இருந்தபோது முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்தார்கள். வாகரையில் கிட்டு, மாத்தைய்யாவுடன் சேர்ந்து, முஸ்லிம் மக்களின் பிரச்சினை பற்றிப்பேச ஒரு மகாநாடு நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை, முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி ஒரு தீர்வையும் முன்வைக்கவுமில்லை.

இன்று இலங்கையில், முற்போக்கு சக்திகள் அனைத்தும் அடக்கப்பட்டிருக்கின்றன. இன்று, முஸ்லிம் மக்களின் பிரச்சினையை வட, கிழக்கு மக்களின் பிரச்சினையுடன் வைத்துத்தான் பார்க்கவேண்டும்.மனித உரிமைகளைப் புறக்கணித்துவிட்டுத் தேசிய விடுதலையை முன்வைக்க முடியுமா என்ற கேள்விகள் எழுப்புகின்றன. 1980களில் எப்படி முஸ்லிம் மக்கள் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருந்தார்களோ அதே மாதிரியே இன்று முஸ்லிம் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். இந்த வன்முறைகளுக்கு முகம் கொடுப்பது ஒட்டுமொத்தமான அழிவைத்தான் எங்களுக்கு ஏற்படுத்தும்.

இன்றைய பல ஊடங்கள், ஊடக தர்ம தார்மீகங்களை மீறுகிறார்கள். தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யத் தவறுகிறார்கள். முஸ்லிம்களை இனவிரோதிகளாக, துரோகிகளாகத்தான் பார்க்கிறார்கள். சில புத்திஜீவிகள் கூடத் தாங்கள் சார்ந்த்திருக்கும் தளங்களிலிருந்துதான் பிரச்சினைகளைப்பார்க்கிறார்கள், எடைபோடுகிறார்கள். தேசியப்பிரச்சினையை முன்னெடுப்பவர்கள் மனித உரிமை மீறல்களைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமான விடயம். கடசியாகத் தன் பேச்சில் '' மற்றவனின் சுதந்திரத்தை மறுப்பவர்கள் ஒட்டுமொத்தமான 'மனிதர்களின் சுதந்திரத்தை' வெறுப்பவர்களாகத்தானிருப்பார்கள்'' என்று பவுசர் குறிப்பிடார். அவரின் பேச்சைத்தொடர்ந்து பல்ரின் கேள்விகள் இடம் பெற்றன.

முஸ்லிம் 'இன அடையாளம்' பற்றிக்கேட்கப்பட்ட கேள்விக்கு '' முஸ்லிம்கள் மொழியால் தங்களை அடையாளம் காணாமல் தங்களின் இனத்தால் அடையாளம் காண்கிறார்கள். நாங்கள் தமிழ் பேசும் முஸ்லிம் இன மக்கள்'' என்று விடையளித்தார். இன்னுமொருவர், முஸ்லிம் ''அடையாளம்'' பற்றிப்பேசும்போது, '' வடக்கும் கிழக்கும் தமிழரின் தாயகம், கடந்த நூறு வருடங்களாக வட கிழக்கில் எந்தச் சிங்களவ்ரும் வாழவ்pல்லை, இன்று சிங்களக்குடியேற்றத்தால் வடகிழக்கு கணிசமான சிங்கள மக்களைக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள், இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்திருக்கிறாகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தக்கால கட்டத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்களின் ' தனித்துவம்'' பற்றிப் பேசுவது சரியல்ல'' என்று சொன்னார்.

அதற்குப்பதிலளித்த பவுசர், ''வடக்கும் கிழக்கும் தமிழ்பேசும் மக்களான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் தாயகம் ஏன் இன்று முஸ்லிம்கள் தனித்துவத்தை' முன்னெடுக்கிறார்கள் என்பதைன் காரணிகளை ஆராய்தல் நல்லது என்றார்.

இன்னொருத்தர் குறிப்பிடும்போது, '' இலங்கையில் வாழும் முஸ்லிம்களில் ஒட்டுமொத்தமான தொகையில் 38 வீதமானவர்கள் மட்டும்தான் வட, கிழக்கில் வாழ்கிறார்கள். மிகுதி 68 வீதமும் இலங்கையின் பல பகுதிகளிலும் பரந்து வாழ்கிறார்கள். 47ம் ஆண்டுக்குப்பின் இலங்கை அரசாங்கம் தமிழ்ப்பகுதிகளைப் பிரிப்பதில் ஆர்வம் காட்டிக் குடியேற்றங்களை முன்னெடுத்தார்கள். இன்று நடக்கும் '' தமிழீழக் கோரிக்கைக்கு' முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமான பங்களிப்பைச்செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. முஸ்லிம்களுடன் வாழ்ந்த தமிழ்ப்பகுதிகளில் மக்களின் கொலைகளுக்கு முஸ்லிம் ஹோம் கார்ட்ஸ் பொறுப்பாளிகளாயிருந்தார்கள்.

இன்று தொடரும் நடவடிக்கைகள் பல்லின மக்களின் தொடர்புகளையும் உறவுகளையும் துண்டாடிவிட்டதால் கசப்பும் பகையுணர்ச்சிகளும், பழிவாங்கும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன. இவை நிறுத்தப்படவேண்டும். சமூக நலத்திட்டங்கள், சமூகப்பெரியவர்களின் பங்களிப்புக்கள் ஒரு நல்ல சமுதாய உறவை வளர்க்க உதவிசெய்யும். சமூக நலத்திலும் விருத்தியிலும், சமூக உறவை வளர்ப்பதிலும் அக்கறை கொண்டவர்கள் அடிமட்டமக்களுடன் இணைந்து பல வேலைகளைச்செய்யலாம்' என்றார். அதற்குப் பதில் அளித்த பவுசர்'' ஒரு கட்டுக்கோப்பான, பல்லின மக்கள் நல்லுறவுடன் வாழும் சமுதாயத்தை கட்டியமைக்கும் திட்டம் சாத்தியமானதே. அது மற்றவர்களின் அடையாளத்தை அழிப்பதனாற் சாத்தியப்படமாட்டாது. மனநிலையில் இஸ்லாமியத்தமிழர்களை வேறுபடுத்திப்பார்க்காமல் தமிழர்களுடன் சேர்த்துப்பார்க்கவேண்டும். ரnவைல றiவா னiஎநசளவைல என்பது மிகவும் முக்கியம். அடக்கு முறைக்கு எதிராகத் தமிழ்மக்களுக்கு வந்த விழிப்புணர்ச்சி முஸ்லிம் மக்களுக்கும் வந்து விட்டது.

'இலங்கை முஸ்லிம் மக்கள், தங்களை அகில முஸ்லிம்களுடன் இணைத்து அடையாளம் காணப்பார்க்கிறார்களா'' என்ற கேள்விக்குப் பதிலளித்த பவுசர்'' இது எதிரும் புதிருமான கேள்வி. இன்றைய இலங்கை அரசியற் பிரச்சினையில் இலங்கை முஸ்லிம்கள் தங்களைத் தனியினமாக அடையாளம் காண்கிறார்கள் தங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப்பார்க்கிறார்கள். முஸ்லிம்களின் சிந்தனை மொழி தமிழ், வீட்டு மொழி தமிழ். தேசியம் என்பதில் பல்லினங்கள் இருக்கலாம் . அந்த தேசியப் பிரதேசத்தில் அங்கு வாழும் மக்கள் அத்தனைபேரும் சமமாக நடத்தப்பட்வேண்டும் இல்லையென்றால், தமிழரை அடக்க முனைந்த சிங்களவரிடமிருந்து தமிழர் பிரிய முனைந்ததுபோல் ,தமிழ்த் தேசியத்திமூலம் முஸ்லிம்களை அடக்க முயலும்போது முஸ்லிம்கள் பிரிந்துபோக நினப்பதும் தவிர்க்கமுடியாதது என்று நினைக்கிறார்கள்'' என்றார்.

பல்லின ஒற்றுமைக்கும், சமூகவிருத்திக்கும் முற்போக்கு சக்திகள் இணைந்து உழைக்கவேண்டும் என்ற குரலுடன் கருத்தரங்கு முடிவு பெற்றது.

11 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

//தாங்களும் தமிழர்கள்தான் என்ற உணர்வுடன் விடுதைப்புலிகளின் போராட்டத்தில் இணைந்திருந்த நூற்றுக் ;கணக்கான முஸ்லிம் போராளிகள் ஒரு இரவில், அவர்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களென்ற காரணத்தால் கொலைசெய்யப்பட்டார்கள். //

அறியாத செய்தி.
நன்றி

2:00 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

முஸ்லிம் போராளிகள் இயக்கத்தினராலேயே கொல்லப்பட்டார்கள். என்பது அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகும். அதற்கான ஆதாரம் காட்ட இயலுமா? ஆனால் ஒன்று மட்டும் கண்கூடு, பலாலித் தளத்தில் இறந்துபோன பன்னிருவரில் ஒருவர் முஸ்லிம் என்றறிந்ததேன்.

தற்போதெல்லாம் போராளிகளின் பெயரில் கிறித்துவப் பெயர்கள் இருக்குமளவிற்கு முஸ்லிம் பெயர்கள் காணவில்லை.

இது அந்த முஸ்லிம் பேச்சாளரின் கூற்றை உறுதிப்படுத்துவதாகத் தான் உள்ளது. மேலும் ஒரு நண்பர் சொன்னார், தமிழீழப் போராளிகளிடையே சாதி ரீதியிலான பெரும் பிளவு இருக்கிறதென்றும், அதுவும் கருணாவின் விலகலுக்கு ஒரு முக்கியக் காரணமென்றும்.

3:25 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

//வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுபோது ''தற்காலிக'' வெளியேற்றம் என்றுதான் சொல்லப்பட்டது. அது நடந்து 13 வருடங்களாகியும் அந்த மக்கள் இன்னும் 'அகதிகளாகத்தான்; வாழுகிறார்கள். //

மோடி ஆளும் குஜராத்தில் கூட எந்த முஸ்லீமும் அகதியாக இல்லை.
இந்த முஸ்லீம் அகதிகளுக்கு இந்திய செக்குலரிஸ்டுகள் ஆதரவு குரல் கொடுப்பதில்லை. ஏன்?

8:18 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

//வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுபோது ''தற்காலிக'' வெளியேற்றம் என்றுதான் சொல்லப்பட்டது. அது நடந்து 13 வருடங்களாகியும் அந்த மக்கள் இன்னும் 'அகதிகளாகத்தான்; வாழுகிறார்கள். //
மோடி ஆளும் குஜராத்தில் கூட எந்த முஸ்லீமும் அகதியாக இல்லை.
இந்த முஸ்லீம் அகதிகளுக்கு இந்திய செக்குலரிஸ்டுகள் ஆதரவு குரல் கொடுப்பதில்லை. ஏன்?

8:19 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

//வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுபோது ''தற்காலிக'' வெளியேற்றம் என்றுதான் சொல்லப்பட்டது. அது நடந்து 13 வருடங்களாகியும் அந்த மக்கள் இன்னும் 'அகதிகளாகத்தான்; வாழுகிறார்கள். //
மோடி ஆளும் குஜராத்தில் கூட எந்த முஸ்லீமும் அகதியாக இல்லை.
இந்த முஸ்லீம் அகதிகளுக்கு இந்திய செக்குலரிஸ்டுகள் ஆதரவு குரல் கொடுப்பதில்லை. ஏன்?

8:29 AM  
Blogger bala மொழிந்தது...

There is no issue in Muslims having a strong identity as Muslims as well as a linguistic identity so long as the primacy of Islamic identity doesn't conflict with the interests of the majority non muslim linguistic group.

Quite unfortunately ,the pan islamic leanings that Islamists start to develop and harbour,lead to many conflict situations in very many parts of the world.
These conflicts doesn't have to be necessarily between Mulslims and non muslims speaking the same language.

It can be between Muslim Groups speaking different languages.

One saw that in the creation of Bangladesh and to some extent in the internal bickerings and violent conflicts between Punjabi and non pujabi speaking muslims in Pakistan.

The problem in Srilanka is that Tamil speaking muslims think differently compared to the tamil speking Hindus and Christians as to what they should aspire for.

This is what ofcourse I heard from SriLankan Tamils I had met when I used to work abroad.

bala

8:58 AM  
Blogger bala மொழிந்தது...

அனானி சொன்னது,

"வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுபோது ''தற்காலிக'' வெளியேற்றம் என்றுதான் சொல்லப்பட்டது. அது நடந்து 13 வருடங்களாகியும் அந்த மக்கள் இன்னும் 'அகதிகளாகத்தான்; வாழுகிறார்கள். //
மோடி ஆளும் குஜராத்தில் கூட எந்த முஸ்லீமும் அகதியாக இல்லை.
இந்த முஸ்லீம் அகதிகளுக்கு இந்திய செக்குலரிஸ்டுகள் ஆதரவு குரல் கொடுப்பதில்லை. ஏன்?"//

அனானி,

அங்கு உள்ள இஸ்லாமியர்களுக்கு இங்கே வாக்குரிமை குடுத்து விட்டால்,நம்ம ரம்ஜான் கஞ்சி முதல்வர் அங்கேயும் போய் கஞ்சி குடிப்பார்.

பாலா

9:16 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

அனானி கேட்ட கேள்விக்கு செக்குலரிஸ்டுகள்தான் பதிலளிக்க வேண்டும்

ஆனால், தமிழ்நாட்டு இடதுசாரி இஸ்லாமிய செக்குலரிஸ்டுகள் இந்தியாவில் முஸ்லீம்களுக்கு உரிமை இல்லை என்று இடதுசாரிகளும், இஸ்லாமிஸ்டுகளும், திராவிடங்களும் கத்துவது, முஸ்லீம்களை தூண்டிவிட்டு இந்தியாவை அழிக்கத்தான். குறைந்தது இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை நசுக்கத்தான். (மேதாபட்கர் அப்ஸலை விடுதலை செய்ய தர்ணா செய்வதை கவனியுங்கள்)

ஆனால், புலிகளுக்கு எதிராக ஒரு வார்த்தை இவர்கள் பேசமாட்டார்கள். காரணம், புலிகளும் இந்தியாவை அழிக்க அலல்து குலைக்க இவர்கள் உபயோகப்படுத்திக்கொள்ளும் சாதனம் என்பதால்.. முஸ்லீம்கள் மீது உண்மையிலேயே பாசம் இருந்தால் இந்நேரம் செக்குலரிஸ்டுகளால் எத்தனை பதிவுகள் எழுதப்பட்டிருக்கும். எத்தனை ஆனந்தவிகடன் பக்கங்கள் செலவிடப்பட்டிருக்கும் என்று கணக்குப்போட்டு பாருங்கள்..

ஒரு ஆளுக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு வரிந்து கட்டிக்கொண்டு எழுதுபவர்கள் இத்தனை ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு, இத்தனை ஆயிரக்கணக்கான் முஸ்லீம்களுக்கு கட்டைப்பஞ்சாயத்து மரணதண்டனை கொடுத்ததை கண்டுகொள்ளாமல் போனதை பாருங்கள்.

தெரிகிறதா?

அண்ணாணி

9:33 AM  
Blogger bala மொழிந்தது...

அனானி சொன்னது,
//"ஒரு ஆளுக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு வரிந்து கட்டிக்கொண்டு எழுதுபவர்கள் இத்தனை ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு, இத்தனை ஆயிரக்கணக்கான் முஸ்லீம்களுக்கு கட்டைப்பஞ்சாயத்து மரணதண்டனை கொடுத்ததை கண்டுகொள்ளாமல் போனதை பாருங்கள்"//

அனானி,

நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. அருந்ததி ராய் போன்ற போலி மனித உரிமை காவலர்கள் மட்டுமல்ல,நம் ரம்ஜான் கஞ்சி முதல்வர் கூட புலிகள் அப்பாவி இஸ்லாமியர்களை கொன்றதை கண்டிக்கவில்லை.

தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் இலங்கையில் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்திருப்பது வருந்தத்தக்கது.ஆனால் புலிகள் செய்த வன்முறை அயோக்யத்தனம்.

பாலா

10:38 AM  
Blogger bala மொழிந்தது...

அனானி சொன்னது,
"ஒரு ஆளுக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு வரிந்து கட்டிக்கொண்டு எழுதுபவர்கள் இத்தனை ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு, இத்தனை ஆயிரக்கணக்கான் முஸ்லீம்களுக்கு கட்டைப்பஞ்சாயத்து மரணதண்டனை கொடுத்ததை கண்டுகொள்ளாமல் போனதை பாருங்கள்"

ஒன்றை சொல்ல தவறி விட்டேன்.
சிங்களர்கள் யாழ்ப்பாணத் தமிழர்களை கொல்வதையும் அருந்ததி ராய் போன்றவர்கள் கண்டித்ததில்லை.

பாலா

10:53 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

This information give correct positions of muslims ie tamil muslims in srilanks. LTTE speaks more about freedom without giving freedom to their muslim brothers. this shows prabakaran is another modi.

12:04 PM  

Post a Comment

<< முகப்பு