கிழக்கில் அழிவுப்பாதையில் முஸ்லிம்கள்

(நவமணி- அக்டோபர்)

நான்காம் கட்ட ஈழப்போர் கிழக்கிலிருந்து ஆரம்பமாகும் சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். கிழக்கில்நடைபெறும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்ததன் விளைவேஇந்த கூற்று என நம்பப்படுகிறது.புலிகளையும் தமிழ்த் தரப்பையும் பொறுத்தவரையில் வடக்குமட்டுமல்ல, கிழக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வடக்கு கிழக்கு இணைந்த நிர்வாகத்தை - அதிகாரத்தை எவ்விதத்திலேனும ;பெறுவதே அவர்களது குறிக்கோள். வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படவேண்டும் என்பதை அவர்கள் முழுமையாக எதிர்க்கின்றனர். வடக்கில் புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் கிழக்கில் அப்படி இல்லை. காரணம் கிழக்கில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. கிழக்கில் புலிகள் ஆதிக்கம்செலுத்துவதையும் விரும்பவில்லை.

கடந்த இரு தசாப்தங்களில் கிழக்கில் முஸ்லிம்களை அடக்கியாளபுலிகள் மேற்கொண்ட அடாவடித்தனங்கள் அவர்கள் மீதான வெறுப்பைஅதிகரிக்கச் செய்துள்ளன. பள்ளிவாசல்களுக்குள் கிராமங்களுக்குள் புகுந்து புலிகள் நடத்திய படுகொலைகள், முஸ்லிம்களைக் கடத்தியது, கப்பம் கேட்டுத் துன்புறுத்தியது, முஸ்லிம்களது பொருளாதாரத்தை அழிக்க முற்பட்டது, சுருக்கமாகக் கூறினால் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பில் புலிகள் ஈடுபட்டது பகிரங்க உண்மைகள்.வடக்கிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் கடந்த 16வருட காலமாக அகதி முகாம்களில் அல்லல்படுகிறார்கள்.கிழக்கிலிருந்தும் முஸ்லிம்களை விரட்டுவதே தங்களது நோக்கம்என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் புலிகள் மூதூரை ஆக்கிரமித்துமுஸ்லிம்களை அகதிகளாக்கினார்கள்.கிழக்கில் புலிகளின் பார்வை தீவிரமாக இருப்பதை அறிந்த பேரினம் கிழக்கில் தனது பிடியை இறுக்குவதில் அதி தீவிரமாக உள்ளது. சிங்களக் குடியேற்றம், சிங்களவர் ஆதிக்கம் ஆகியவற்றை அதிகரிப்பதன் மூலம் பேரினவாதம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. பொத்துவிலில் நடந்த சம்பவங்கள் பேரினவாத திட்டங்களை வெளிப்படுத்துவதாக உள்ளன.

ஆக கிழக்கில் முஸ்லிம்கள் பாக்குவெட்டியில் சிக்கியது போல் தவிக்கிறார்கள். பேரினத்தாலும் பிரச்சினை, ஒரே மொழியைப் பேசும் தமிழ் சிறுபான்மையினத்தாலும் பிரச்சினை. என்றாலும் இந்தவிபரீத நிலையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் நிலையில் முஸ்லிம்கள் இல்லை. காரணம் அவர்கள் மத்தியில் ஐக்கியம் இல்லை, சகோதரத்துவம் இல்லை. விவேகமான வழிகாட்டிகளும் இல்லை.கடந்த சில மாதங்களில் நடந்த சம்பவங்களே முஸ்லிம்களின் அவல நிலையை படம்பிடித்துக்காட்டப் போதுமானவை. புலிகள் மூதூரை ஆக்கிரமித்து படையினருடன் யுத்தம் புரிந்தபோது இடையில்கிழக்கில் முஸ்லிம்கள் பாக்குவெட்டியில் சிக்கியது போல்தவிக்கிறார்கள்.

பேரினத்தாலும் பிரச்சினை, ஒரேமொழியைப் பேசும்தமிழ் சிறுபான்மையினத்தாலும ;பிரச்சினை. என்றாலும் இந்த விபரீத நிலையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் நிலையில் முஸ்லிம்கள் இல்லை. காரணம் அவர்கள் மத்தியில் ஐக்கியம் இல்லை, சகோதரத்துவம் இல்லை. விவேகமான வழிகாட்டிகளும் இல்லை. சிக்கிய முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. புலிகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவதில் அரச தரப்பு காட்டிய அவசரம் முஸ்லிம்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதில் காட்டப்படவில்லை. பொத்துவிலில் பத்து அப்பாவி முஸ்லிம்கள் குரூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவானபோது, சுயாதீனமான விசாரணை நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மதிக்காமல் முஸ்லிம்களை கடத்தல்காரர்களாகவும் புலிகளுக்கு ஆதரவானவர்களாகவும் காட்டி அடக்கியொடுக்கவே முயற்சிகள் நடந்தன.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் இத்தகைய சம்பவங்களின்போது முஸ்லிம்களைப் பார்க்காமல் தங்கள் பதவிகளையே பார்த்தன. நீதி நியாயத்தை வலியுறுத்த, முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுக்க முடியாத நிலையில் தலைமைகள் செயலற்றுக்கிடந்தன. அரசியல் தலைமைகள் தான் இப்படியென்றால் மார்க்க அறிஞர்கள் எனக்கூறப்படும் உலமாக்களும் முஸ்லிம்களை ஐக்கியப்படுத்தி ஓரணிக்குள் திரட்டி அவர்களது சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தி சமத்துவத்தை நிலை நாட்டி உரிமைகள் பெற்ற தனித்துவ சமுகமாக வாழச் செய்யும் சக்தியுள்ளவர்களாக இல்லை. அரசியல்வாதிகளைப் போல் உலமாக்களும் பல்வேறு கொள்கைகளை முன்வைத்து தாமும் பிரிந்து முஸ்லிம்களையும் பிரிக்கிறார்கள்.

இலங்கையில் தனி முஸ்லிம் கிராமமாக பிரபல்யம் பெற்ற காத்தான்குடியில் முஸ்லிம்கள் பிளவுபட்டு, பிரிந்து மோதிக்கொண்டு, முஸ்லிம்களது இரத்தத்தை ஓடவிட்டு, சொத்துக்களை அழித்து புனித ரமழான் மாதத்தின் கண்ணியத்தையே சீர்குலைக்கும் நிலையை காண முடிகிறது. முஸ்லிம்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் எனக் காட்ட முஸ்லிம் விரோத சக்திகள் தருணம் பார்த்திருக்கும்போது மார்க்கத்தின் பெயரால் மோதிக்கொண்டு பாதுகாப்பு படையினர் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் அளவுக்கு மோசமான கலவரத்தில் ஈடுபடுவது தவறான பிரசாரங்களுக்கும் அழிவுகளுக்கும் அல்லவா வழிசமைக்கும். சரியான வழிகாட்டல் இல்லாமல், விவேகமான தலைமைத்துவம் இல்லாமல் கிழக்கில் முஸ்லிம்கள் அழிவுப் பாதையை நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கிழக்கில் நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானால் முஸ்லிம்கள் அழிவதைத் தடுக்க யாராலும் முடியாமல் போய்விடும். கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் விபரீதங்களின் விளைவுகள் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் மோசமாக எதிரொலிக்கலாம். முஸ்லிம்கள் மத்தியிலுள்ள கல்விமான்களும் சிந்தனையாளர்களும் சமூக ஆர்வலர்களும் இந்த நிலையை மாற்ற விவேகமாக ஏதாவது செய்வது அவசரம், அவசியம்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு