வடுவுக்கு வயது ஆறு
மறக்க முடியாத புலிகளின் பொதுமக்கள் மீதான தற்கொலைத்தாக்குதல்
மூதூர் முஹம்மதலி ஜின்னாஹ் ஜே.பி.
பொதுமக்களைக் கொல்வதற்காகப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தற்கொலை தாக்குதல்
02.10.2000 அன்று மூதூர் இஸ்லாமிய கலாசார முன்றலில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குழுமிநின்ற முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டது .மூதூர் பிரதான வீதி மக்களால் நிரம்பி வழிகின்றது. தற்கொலை குண்டுதாரி பிரதான வீதிக்குஅண்மையில் உள்ள மார்க்கட் ஆற்றைக் கடந்து வருகின்றான். மக்கள் தேர்தல் பிரசாரத்தைக்கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அங்கிருந்த ஒரு தேனீர் கடையில் பசி மிகுதியின் காரணமாகதற்கொலையாளி கிழங்குரொட்டி சாப்பிட்டதை தேனீர் அருந்திக்கொண்டிருந்ததை ஏனையோர் காண்கின்றனர். எனினும் பொதுமக்களில் ஒருவனென தவறாக எண்ணியிருந்தனர்.அ தோ பிரசாரம் முடிவுக்கு வருகின்றது. உடனே அழைத்து வந்தவர்கள் தற்கொலையாளியைவிரைவுபடுத்துகின்றனர். ''சுணங்கினமென்டால் சைக்கில எடுத்துக்க மாட்டம்"" என்று இயல்பாகப்பேசிக்கொண்டு வெளியேறுகின்றனர். தற்கொலையாளி தலை கவிழ்ந்து நடக்கின்றான்.
மாலை மயங்கிக்கொண்டு வருகின்றது. 'அல்லாஹ{ அக்பர்" ஏகநாயகனே பெரியோன் என்றும் மஃரிப் பாங்கோசை அக்கரைச்சேனைப் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஓங்கி ஒலித்து காற்றில் கலந்து காதில் இனிக்கிறது. படைத்த ரப்பை தொழுது நன்மை பெற மக்கள் முண்டியடித்து வெளியேற முற்பட்டவேளையில் தற்கொலையாளி மின்னலென நுழைந்து அதோ... விண்ணைப் பிளக்கும் மாபெரும் முழக்கம் உயிரை உறைய வைக்கும் அப்பெருவெடிப்பில் என்ன நடந்தது என்று
உணரவே சற்று நேரம் பிடித்தது.சுற்றிலும் புகைமண்டலம். புகைசுற்றுக் கலைகிறது. அந்தோ மரண ஓலம். ''யாஅல்லாஹ்யாஅல்லாஹ்... காப்பாற்றுங்க ... காப்பாற்றுங்க ... என்று கலிமா சொன்னவர்களின் இரத்தத்தால்பிரதான வீதி குளிக்கிறது.உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் குவிந்து கிடக்கின்றன. உடல்கள் சல்லடையாகிக் கிடக்கின்றன.
சுற்றிலுமிருந்த சுவர்களிலும் கடைகளின் முகப்புகளிலும் அங்கிருக்கும் வேப்பை, காஞ்சி மரங்களில்இரத்தம் கலந்த சதைத் துண்டுகள் ஒட்டிக்கொண்டிருக்க, சாதித்துவிட்ட ப10ரிப்புடன் மாவீரராகிவிட்டதற்கொலைக்காரனின் சேறுபடிந்த கால்களும் தலையும் ஓரமாகக் கிடக்க, தம் உறவுகள் இரத்தத்தில் குளித்திருப்பதை அவதானித்த மக்கள் கண்ணீர் பொங்க வாய்விட்டழுதுகொண்டு, பலர்மயங்கிவிட ஏனையோர் குற்றுயிராய் கிடப்பவர்களை தூக்கிக்கொண்டு ஓடுகின்றனர். வைத்தியசாலை மையித்துக்களாலும் குற்றுயிர்களாலும் நிரம்பி வழிகிறது.''தண்ணி ... தண்ணி ..."" என்று அழுகின்றவர்களின் வாயில் ஊற்றிய நீர் விழுங்கப்படாமல் கலிமா கூறி கையசைத்து, விடைபெற்று பிரிந்த காட்சிகள் கண்களைவிட்டு என்றைக்கு மறையப் போகிறது. ஒரேயொரு வைத்தியரால் என்னதான் செய்துவிட முடியும். ஓடியோடி முடிந்ததைச்செய்கிறார். சிலர் தோள்களிலும் ட்ரக்டர்களிலும் தம் உறவுகளைச் சுமந்துகொண்டு துறைமுகத்துக்கு ஓடுகிறார்கள். நேவிப் படகில் ஏற்றி திருமலை வைத்தியசாலைக்கு விரைகின்றனர்.
இரத்தத்தின் இரத்தங்களை எப்படியும் காப்பாற்றியே தீருவது என்ற வேகத்தில் தம் இரத்தத்தை வழங்க இளைஞர் கூட்டம் முண்டியடிக்கிறது. ஆயினும் மௌத்தின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து 24 என்றானது. முடிந்தவரையில் அங்கவீனர்களாகவேனும் 48 பேர் காப்பாற்றப்பட்டனர்.உழைத்து, உண்டு, ஊட்டி வாழ்ந்தவர்கள் இன்று கை இழந்தவர்களாக, கால் இழந்தவர்களாக,கண்ணிழந்தவர்களாக தங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இன்னும் உயிரோடு இருந்தால் நடைபெறப் போகும் சமாதானப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின்பங்கைப் போராடிப் பெற்றுக்கொண்டு விடுவார்கள் என்பதால் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதம் தன்னிகரில்லா தலைவனான மர்ஹ_ம் அஷ்ரபை பறிகொடுத்த வேதனை வாட்டிக்கொண்டிருக்க,மற்றுமொரு தற்கொலை தாக்குதலில் தம் உறவுகளை இழந்த மக்கள் இன்றும் பொங்கியெழுகின்றனர்.உழைத்து உணவ10ட்டிய மக்களை இழந்த ஏழைப் பெற்றோர்கள், பெற்றோர்களை இழந்த அநாதைகள், விதவைகள், ஊனமடைந்தவர்கள், ஊருக்குழைக்க உருவாகி வந்த பட்டதாரிகளைஇழந்தவர்களாக அற்பசொற்ப நிவாரணங்களைப் பெற்றுக்கொண்டு வாழும் வாழ்க்கை காண்போர்நெஞ்சைக் கசிந்துருக வைக்கும். கணப்பொழுதில் கண்முன்னே காவுகொண்ட உறவுகளைக்காண்பது போன்ற பிரமையை இன்றும் மூதூர் பிரதான வீதி ஊட்டுகிறது. மூதூர் இஸ்லாமியகலாசார மண்டப வீதியைக் கடக்கும்போது மனம் தன்னையறியாமலே கணக்கிறது. கண்கள்பணிக்கிறது.
புலிகளுக்கோ ஒரு மாவீரர் கிடைத்தான்.
அரசியல்வாதிகளுக்கோ மனமுருகப் பேசி வாக்குகளை அள்ள அருமையான பொயின்ட்
கிடைத்தது.
எங்களுக்கோ மையித்துகளும் அங்கவீனர்களும் கிடைத்தார்கள்.
புலிகளின் போராட்டம் தோள் கொடுத்த முஸ்லிம்களுக்கு அள்ளி வழங்கி வரும் வடுக்களுள்
ஒரு வடுவான மூதூர் இஸ்லாமிய கலாசார தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இன்று வயது
ஆறு.
-நவமணி -08.10.06 -
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு