கடல்கோள் (சுனாமி)நிதியில் புலிகள் ஆயுதங்கள்

கடல்கோள் (சுனாமி)நிதியில் புலிகள் ஆயுதங்கள் வாங்கியது குறித்து இன்டர்போல் விசாரிக்கும்

கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்புகளுக்குமாக நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கத்தில் சர்வதேச ரீதியில் தமிழர் புனர்வாழ்வு அமைப்பினர் சேகரித்த நிவாரண நிதிகளில் சுமார் 327கோடி ரூபா வரையான பணத்தொகையை விடுதலைப் புலிகள் அமைப்புக்காக யுத்த ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக மேற்படி அமைப்பு செலவு செய்துள்ளதாக கடும் குற்றச்சாட்டுகள் தரிவிக்கப்பட்டிருப்பதாகவும் இந்தக் குற்றச் சாட்டுகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பற்றி இரகசிய புலனாய்வுத் துறை உத்தியோகத்தர்கள் பரந்த அளவிலான புலன் விசாரணைகளைத் தீவிரமாக ஆம்பித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் இவ்வாறான ஆயுதக் கொள்வனவுகள் பற்றியும் அவற்றுக்காக தமிழர்புனர்வாழ்வு அமைப்பு TRO கடல்கோள் நிதியைச் செலவிட்டிருக்கும் செயற்பாடுகள் பற்றியும் விசாரணை செய்வதற்காக இரகசிய புலனாய்வுத் துறையினர் "இன்ரர்போல்" எனப்படும் சர்வதேச பொலிஸ் பிரிவின் உதவியையும் மற்றும் மேற்படி தமிழர் புனர்வாழ்வு அமைப்பால் கடல்கோள் நிதிகள் வைப்புச் செய்யப்பட்ட மத்திய வங்கி தரப்பின் உதவியையும் பெறப்பட்டிருப்பதாக மேலும் இரகசிய புலனாய்வுப் பிரிவு தரப்பில் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்திகளுக்கேற்ப மேற்படி தமிழர் புனர்வாழ்வு அமைப்பு கடல்கோள் அனர்த்தங்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தமது அமைப்பால் எடுக்கப்படுவதாகவும் அதற்காக நிதி உதவிகளை வழங்கும் படியும் கோரி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கோடிக்கணக்கான உதவி நிதியைச் சேகரித்ததாகவும் அவற்றில் பெரும் பங்கு நிதியை அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான யுத்த ஆயுதங்கள் கொள்வனவுக்காக புலிகள் அமைப்புக்குக் குறித்த தமிழர் புனர்வாழ்வு அமைப்பு வழங்கி விட்டதாகவும் பல தரப்பிலிருந்து குற்றச் சாட்டும் சந்தேகமும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் எனவே தான் இந்தச் சம்பவங்கள் பற்றி உடனடியாக பரந்த விசாரணைகளை இரகசிய புலனாய்வுப் பொலிஸ் பிரிவினர் ஆரம்பித்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி தமிழர் புனர்வாழ்வு அமைப்பு இவ்வாறாகச் சர்வதேச நிதியில் சேகரித்த கோடிக்கணக்கான பணத்தையும் ஸ்ரீலங்காவிலுள்ள பல்வேறு வங்கிகளிலும் தமது வைப்புக் கணக்குகளில் இட்டுவைத்துள்ளார்கள் எனவும் இவ்வாறு மொத்தம் 164 வங்கி வைப்புக் கணக்குகளில் மேற்படி அமைப்புகளின் பேரில் கோடிக் கணக்கிலான சர்வதேச கடல்கோள் நிதியும் இடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் இரகசிய புலனாய்வுப் பிரிவு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் குறிப்பாக கூடுதல் பணத் தொகை இடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குறிப்பிட்டதொரு வங்கி வைப்புக் கணக்குப் பற்றி புலனாய்வுப் பிரிவின் கவனம் திருப்பப்பட்டிருக்கும் நிலையில் அந்த வங்கி வைப்புக் கணக்கு பற்றி விசேட தீவிர விசாரணைகளை தற்போது இரகசிய புலனாய்வுத் துறை மேற்கொண்டுள்ளது. மேலும் மேற்படி தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் வைப்புக் கணக்குகளில் இடப்பட்டிருந்த பணம் எப்போது மீள எடுக்கப்பட்டு இவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது பற்றி வங்கிகள் தரப்பிலிருந்து புலனாய்வுத் துறையினர் தகவல்களை சேகரித்து அதன் அடிப்படையில் தீவிர புலன் விசாரணைகளை முடுக்கி விட்டதாக இரகசிய புலனாய்வுப் பிரிவு தரப்பின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர் திவயின பத்திரிகைக்குக் கூறியுள்ளார

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு