மூன்று அவசரவேண்டுகோள்கள்.

யாழ்ப்பாண வர்த்தகர்கள் அச்சமின்றித் தம் நடவடிக்ககைளை மேற்கொள்ள வழிவிடுமாறு அரசாங்கம் புலிகளைக் கேட்டுக்கொள்கிறது

நோர்வே ஊடாக அரசு புலிகளிடம் விடுத்திருக்கும் மூன்று அவசரவேண்டுகோள்கள்.


கிளிநொச்சிக்கான தமது நாளைய (டிசம்பர் 8ஆம் திகதி) விஜயத்துக்கு முன், நோர்வே சிறப்புத் தூதுவர் ஜொன் ஹன்சன் பவர் மற்றும் நோர்வே நாட்டுத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் சமாதானச் செயலகத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி பாலித்த கொஹொனவை இன்று சமாதானச் செயலகத்தில் சந்தித்தனர்.

புலிகளிடம் எடுத்துக் கூறுவதற்காக கலாநிதி கொஹொன இலங்கை அரசாங்கத்தின் மூன்று அவசர வேண்டுகோள்களை திரு. பவருக்குத் தெரிவித்தார். மக்களின் ஆதங்கங்கள் பற்றிக் கவலை கொண்டுள்ள பிரதிநிதிகள் தாம் எனக் கூறிக்கொள்ளும் புலிகள் பின்வருவன தொடர்பாக உடன் பதிலளித்துத் தமது உண்மையான கவலையைப் பிரதிபலிக்க வேண்டும் என அவர் வேண்டிக் கொண்டார்:

யாழ்ப்பாணக் குடாவில் உள்ள சுமார் 4,000 தனியார் வர்த்தகர்கள் அச்சுறுத்தலின்றித் தம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொருட்களை விற்பதற்கு அவர்களுக்கு வழிவிடுதல். தற்போது வர்த்தகர்கள் தம் நடவடிக்கையை மேற்கொள்வதை புலிகள் அமைப்பு தடுத்துள்ளது. 450 கூட்டுறவுச் சங்கக் கடைகளும் 16 இராணுவக் கடைகளும் பொதுமக்களுக்கான விநியோகத்தை மேற்கொள்வதற்குப் போதியளவாக இல்லை.
ஏ-9 நெடுஞ்சாலையில் முகமாலை சோதனைச் சாவடியைத் தாண்டி அவசரமாகத் தேவைப்படும் நிவாரணப் பொருட்களை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்வதற்கான வாகனத் தொகுதி பற்றிய அரசாங்கத்தின் யோசனைக்கு உடனடியாகப் பதிலளித்தல். அரசாங்கம் ஏற்கனவே கன ரக வாகனங்களையும் பொருட்களையும் ஏற்பாடு செய்திருப்பதோடு அமுலாக்க மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்காகக் காத்திருக்கிறது. இந்த யோசனை தொடர்பாக புலிகள் ஏதும் சிக்கல்களை எதிர்நோக்குவதாயிருந்தால் அவை பற்றிக் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளது. அரசாங்கத்தின் இந்த யோசனையை இரு வாரங்களுக்கு முன் தெரிவித்த இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு இதுவரை புலிகள் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான பாதுகாப்பு வலயத்தை வாகரையில் அமைப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் யோசனைக்கு உடனடியானதொரு பதில். இந்த யோசனையை சில வாரங்களுக்கு முன்பு இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினூடாக அரசாங்கம் புலிகளுக்குத் தெரிவித்த போதிலும் அதற்கான சாதகமான பதிலெதுவும் இதுவரை கிடைக்கவில்லை. உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களை அவசரமாக இராணுவ நிலைகளில் இருந்து குறித்துரைக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அகற்ற வேண்டும் என்பதை இலங்கை அரசர்ஙகம் இனங்கண்டுள்ளது.
மேற்படி யோசனைகள் அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த திரு. பவர் அவற்றை புலிகளுக்குச் சமர்ப்பிப்பதாக உறுதியளித்தார். இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் கலாநிதி கொஹொன மேலும் தெரிவித்தார்.



நன்றி சமாதானச்செயலகம்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு