அன்றும் இன்றும் சிரித்திரன்

அன்றும் இன்றும்
அன்று யாழ் நகரிலிருந்து சிரித்திரன் என்ற சஞ்சிகை வெளிவந்ததை யாரும் இலகுவில் மறந்து இருக்கமாட்டீர்கள், சிரிக்கவும் சிந்திக்கவும் என வலு சீரியஸ்ஸான விசயங்கள் கூட படு நகைச்சுவையாக வெளிவரும்,ஒருமுறை சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் அவர்கள் தமிழ்நாடு சென்று இருந்தார்,அப்போது தமிழக பிரபல சஞ்சிகை ஒன்று, சிரிக்கவும் சிந்திக்கவும் சஞ்சிகை நடத்தும் நீங்கள் எங்கள் தமிழக வாசகர்களுக்காக சிரிக்கவும் சிந்திக்கவுமாக உங்கள் இலங்கையைப்பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டு இருந்தார்கள், அதற்கு அவர், ; எதுவித அசுமாத்திரமும் இல்லாமல், 'நாலுபக்கமும் கடலால் சூழ்ந்த நாடு இலங்கை, நாங்கள் தாய்லாந்திலிருந்து ரின்மீன் இறக்குமதி செய்கின்றோம்.என்றார், அது அன்று நடந்தது.

ஆனால் இது இன்று,

அவர் தமிழகம் சென்றால் இப்போதும் அதே தமிழக பிரபல சஞ்சிகை ஓன்று, சிரிக்கவும் சிந்திக்கவும் சஞ்சிகை நடத்தும் நீங்கள் எங்கள் வாசகர்களுக்காக சிரிக்கவும் சிந்தனைக்குமாக இப்போது உங்கள் இலங்கையைப்பற்றி ஏதாவது சொல்லுங்களேன் என்று கேட்டு இருந்தால், சிரித்திரன் ஆசிரியர் என்ன சொல்லியிருப்பார்…..

வன்னிப்பெருநிலப்பருப்பில் புலிகள் தமிழ் ஈழத் தனியரசை ஒரு நாட்டுக்குரிய இறையாண்மையோடு நடத்துகிறார்கள், மன்னாரிலிருந்து தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குச் செல்கிறார்கள்..

சிரிக்காதீர்கள்,சிந்தியுங்கள்

நவீனசிரித்திரன்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு