கூட்டல் கணக்கு கொஞ்சம் உதைக்குதே

இன்னா தலைவா. கூட்டல் கணக்கு கொஞ்சம் உதைக்குதே?


- வணங்காமுடி குண்டாயுதபாணி (நன்றி.தாயகம்)


யுத்தத்தில் முதலில் பலியாவது உண்மை தான், யுத்தம் புரியும் இரண்டு தரப்புமே அழிவுகளை வசதிக்கு ஏற்ப மறைத்தும் மிகைப்படுத்தியும் வெற்றி தங்கள் பக்கம் தான் என்று பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது நடைமுறை, தங்கள் தரப்பு இழப்புகளை குறைத்தும் எதிரியின் இழப்பை கூட்டியும் வெற்றி தம் பக்கம் தான் என்று காட்ட முயற்சி ஒருபுறமிருக்க,, மக்களின் அழிவை ஒரு தரப்பு கூட்டி அனுதாபம் தேட முயல. மக்களை இராணுவ இலக்குகள் என்று கணக்குக் காட்டித் தப்பித்துக் கொள்ள மறுதரப்பு முயலும், சில நேரங்களில் உண்மைகள் வெளிவரலாம், மறுவேளைகளில் தெரியாமலே புதைந்தும் போகலாம்,

இதில் நமது யுத்தம் மட்டும் என்ன விதிவிலக்கா அரசும் புலிகளும் தங்கள் இழப்புகளையும் எதிர்த் தரப்பின் இழப்புகளையும் மக்களின் இழப்புகளையும் வெளியில் தெரிவிக்கும் போது வழமை போல நடந்து கொள்ள. நம்ம தமிழ் ஊடகங்களுக்கோ கற்பனைக்குப் பஞ்சம் இருக்காது, அதிலும் இறந்தது இராணுவம் என்றால். தமிழ் ஊடகங்களுக்கு ஒரே குஷி,, எண்ணிக்கையை அதிகரிப்பதில் ஒரு போட்டியே நடக்கும்,

உதாரணத்திற்கு. புலிகள் தாங்கள் தாக்கியழித்ததாகக் கூறும் ட்வோராப் படகுகளினதும். அரசு தாம் தாக்கியழித்ததாகக் கூறும் புலிகளின் படகுகளையும் கூட்டிப் பார்த்தால். இரு தரப்புமே தற்போது கட்டுமரத்தில் சென்று தான் யுத்தம் செய்ய வேண்டி வந்திருக்கும், ஒரு புறத்தில் அரசாங்கத்தின் பிரசாரத்தை யாரும் நம்புவதில்லை. அதிதீவிர அரச ஆதரவாளர்களையும் அதிதீவிர புலி எதிர்ப்பாளர்களையும் தவிர? கொழும்புப் பத்திரிகைகள் அந்த அறிக்கைகளை ஆதாரம் காட்டி கட்டுரை வடிப்பதில்லை, ஆனால். புலிகளின் ஊடகங்கள் புலிகளின் உரிமை கோரல்கைள மட்டுமே ஆதாரம் காட்டி ஆய்வு நடத்தும்,

மறுபுறத்தில் அந்த ட்வோராப் படகுகள் எல்லாமே தற்கொலைப் பெண் புலிகளின் தாக்குதலில் இறப்பதாக இருந்தால். மாவீரர்களில் பாதிப்பேர் ட்வோரா அழிப்பில் இறந்திருக்கக் கூடும், முன்புதான் இஸ்ரேலில் இருந்து படகுகளை வாங்கினார்கள், இப்போது கொழும்பிலேயே இப்படகுகளைக் கட்டிக் கொள்கிறார்கள், ஒன்று போனால் இன்னொன்று,, கட்டலாம்,

ஆனால்,, ஒரு கரும்புலி போனால்,, இன்னொரு புதைகுழி?

தாங்கள் நடத்தும் எதிர்த்தரப்பின் அழிவுகளைக் காட்டி துள்ளிக் குதித்து வியாபாரம் பண்ணும் புலிகள் அதன் பின்னால் உள்ள மனித உயிரின் அவலத்தை பெரிது படுத்துவதில்லை, கடற்படைப் படகுகள் மீதான தாக்குதல் பற்றிய முழுப்பக்கச் செய்தியின் அடியில் ஒருவரியில் இறந்த கடற்புலிகளின் எண்ணிக்கை வரும், வெளிநாட்டு ஆதரவாளர்களும் கடலில் ஆழ்ந்த படகு பற்றிப் புல்லரித்துப் போவார்கள், இறந்து போன கரும்புலி அடுத்த மாவீரர் தினத்தில் பார்த்துக் கொள்ளலாம்,

புலிகளின் பிரச்சாரப் பிரிவின் மகத்தான வெற்றிகரமான பின்வாங்கல்கள் பிரச்சாரத்தை நன்கு ரசித்தது யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் விரட்டப்பட்ட போது தான், இராணுவம் பலாலியில் இருந்து வெளியேறிய போது புலிகள் மாவட்டபுரத்தில் தடுத்து நின்று போராடுகிறார்கள் என்று தொடங்கி மல்லாகம். சுன்னாகம். உடுவில் என்று காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாணம் வரும்வரையில் உள்ள ஒவ்வொரு சந்தியிலும் இராணுவ முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியதாக புலிகளின் பிரசாரம் தொடர்ந்தது, அப்படியே தடுத்து நிறுத்தும் போராட்டம் கிளாலி வழியாக கிளிநொச்சி வந்து சேர்ந்தது,

செய்தியைக் கேட்டவர்கள் எல்லாம் இராணுவத்தை புலிகள் தடுத்து நிறுத்தும் திறமை குறித்துப் புல்லரித்துப் போனார்கள், ஆனால்,, அங்கே புலிகளால் பலவந்தமாகக் கூட்டிச் செல்லப்பட்டு பற்றைகளுக்கு நடுவில் படுக்க விடப்பட்டவர்களுக்குத் தான் இந்த வெற்றிகரமான தடுத்து நிறுத்தல்களின் துயரம் விளங்கும், வெளிநாட்டில் உள்ளவணுகளுக்கு அது புரியாது, இப்போது இந்த எமது தரப்பில் எதுவித சேதமும் இல்லாமல். வெற்றிகரமாகப் பின்வாங்கும் இனிப்பான சேதியைத் தருவதற்கு ஆஸ்தான விதூஷகன் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார், தமது தரப்பில் சேதம் எதுவும் இல்லை என்பதுடன் பல்வேறு வார்த்தை அலங்காரங்களுடன் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களைச் சுத்துவதற்காக இராணுவப் பேச்சாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார், ஈருடகப்படை. விமானப்படை புகழ் இளந்திரையன் அவ்வப்போது பாதுகாப்பு கவுன்சில், இராணுவ இலக்குகள். என்று பல வார்த்தை அலங்காரங்களுடன் கற்பனை வளம் பொங்க. பாலசிங்கம் அரசியல் விளக்கம் கொடுத்த கணக்கில். இராணுவ விளக்கம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்

இறந்தவர்கள் மாற்று இயக்கத்தினர். இராணுவத்தினர். பொதுமக்கள் என்றால். எண்ணிக்கை தவறாமல் அறிக்கை விட்டு அரசியல் நடத்தும் புலிகளுக்கு தங்கள் தரப்பில் சேதம் என்றதும் கூட்டல். கழித்தல் மறந்து போய் விடுகிறது, இந்தியச் சினிமா நாயகர்கள் போல. துப்பாக்கிக் குண்டுகளை ஜமாய்த்துக் கொள்ளும் மாவீர மாயாவிகள் போல. எந்தத் தாக்குதலிலும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை விட மிகவும் சொற்ப அளவிலேயே புலிகளின் இழப்பு இருக்கும், விமானக்குண்டு வீச்சில் மாடுகள் இறந்தாலும் அதன் எண்ணிக்கையை தேடிக் கண்டுபிடித்து செய்தி வெளியிடும் புலிகள் தங்கள் இழப்பை மட்டும் சொற்பமாக்கியிருக்கிறார்கள், இராணுவம் பல புலிகளைக் கொன்றதாகக் கூறும் போது கூட புலிகள் அவ்வாறு நிகழவில்லை என்று மறுத்திருக்கிறார்கள்,

நான்காவது பெரிய இந்திய இராணுவத்தை புலிகள் வெளியேற்றியதாக பீற்றிக் கொண்ட போது ஐயாயிரம் பேர் அளவில் இருந்த மாவீரர் எண்ணிக்கை. தற்போது தம்மாத்துண்டு இலங்கை இராணுவத்தின் தயவில் பதினெட்டாயிரம் வரை உயர்ந்திருக்கிறது, புலிகளின் பிரசார அறிக்கையில் சொற்பம் சொற்பமாய் இருந்த எண்ணிக்கை பதினெட்டாயிரம் வரை எட்டியது ஆச்சரியமானது ஒன்று, இதில் களப்பலியானவர்களையும் விட. யுத்தநிறுத்த காலத்தில் கிணற்றில் விழுந்து. பாம்பு கடித்து. நோய்வாய்ப்பட்டு. உந்துருளி மோதி வீரமரணமடைந்தவர்கள் என இன்னொரு தொகையும் உண்டு,புலிகள் மறுக்கிறார்களோ. உரிமை கோருகிறார்களோ. புலிகளின் ஆதரவாளர்கள் புலிகளை வாய்மை தவறாத அரிச்சந்திர புத்திரர்கள் என்று புகழ் பாடுவது மட்டுமன்றி யாராவது புலிகளுக்கு இழப்பு என்று என்று கூறினால். வரிந்து கட்டி சண்டைக்கு செல்வது போல உவங்கள் பொய் சொல்றாங்கள் என்று குற்றம் சாட்டுவதுண்டு, எனவே. 818 மாவீரர்கள் இந்த வருடம் உயிரிழந்ததான புலிகளின் கணிப்பை ஒரு தடவை உறுதி செய்யும் உத்தேசம் எழுந்ததில் ஒரு முயற்சியை மேற்கொண்டோம், புலிகள் தங்கள் தகவல்களை உத்தியோகபூர்வமாக ஆங்கிலத்தில் அறிவிக்கும் தமிழ்நெட் இணையத்தளத்தின் இவ்வருடச் செய்தித் தொகுப்பை மீளப் பார்வையிட்டு இவ்வருடம் புலிகள் தங்கள் தரப்பில் இறந்ததாகக் கூறிய எண்ணிக்கையை கூட்டி உறுதி செய்ய முயன்றோம்,

இதன்படி இழப்புகளும் அவை நடந்த திகதிகளும் பின்னிணைப்பில் தரப்பட்டிருக்கின்றன, தமிழ்நெட்டில் அத்தேதிகளில் அச்செய்திகளை உறுதி செய்யலாம், இழப்புகள் பலவற்றை தொகுத்த போதிலும் புலிகள் உரிமை கோரியவற்றை மட்டுமே கணக்கில் சேர்த்திருக்கிறோம், இயக்கத்திலிருந்து விலகி வாழ்ந்த போது கொல்லப்பட்டவர்கள். புலிகளின் துணைப்படையினர். உரிமை கோரப்படாவிட்டாலும் புலிகளாக இருக்கக் கூடிய மரணங்கள் போன்ற மற்றவை கணக்கில் சேர்க்கப்படா விட்டாலும். தகவலுக்காக செய்திக்குறிப்புகளில் விடப்பட்டிருக்கின்றன, வாசகர்கள் அவற்றையும் வாசித்து அறிந்து கொள்ளலாம்,
தை 1
மாசி 2
பங்குனி 3
சித்திரை 5
வைகாசி 12
ஆனி 5
ஆடி 21
ஆவணி 52
புரட்டாதி 20
ஐப்பசி 34
புரட்டாதி 8

மொத்தம் 163புலிகளை மட்டுமே இந்தக் கால கட்டத்தில் புலிகள் மாவீரர்களாக உரிமை கோரியிருக்கிறார்கள், அப்படியாயின் தற்போதைய அறிவித்தலில் வெளிவந்த 818 பேரில் மீதியாக உள்ள 655பேரும் எப்படி இறந்தார்கள் என்பது மர்மமாகவே உள்ளது,

இந்த 655பேரும் இறந்தது பற்றி ஈருடகப் பேச்சாளர் என்ன சொல்லப் போகிறார் சிக்குன்குனியா நோயில் வீரச்சாவு என்று கதை விடப் போகிறாராடூ அல்லது மாவீரர் எண்ணிக்கையைக் கூட்டியது ஆரம்ப வகுப்போடு கல்வியை முடித்துக் கொண்ட ஒரு முட்டாள் என்று திட்டப் போகிறாரோ என்னவோ

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு