தமிழ் பாசிசத்தின் இருப்பு

தமிழ் பாசிசத்தின் இருப்பு என்பது தமிழ் சமூகத்தின் சிதைவு என்பதன் பிரிக்க முடியாத அங்கம்

இலங்கையில் மிக அவசரமாக உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய, முடிவு கட்டப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன. அவை உள்ளுர், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இராஜதந்திர வட்டாரங்களிலும் கடுமையான அதிருப்தி நிலைமைகளை தோற்றுவித்துள்ளன.

இந்த நாட்டில் அனைத்து மக்களினதும் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். முதலாவதாக நாளும் பொழுதும் நிகழும் கொலைகள் உடனடியாகவே முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஏன்? எதற்கு? என்ற விவஸ்தையில்லாமல் எப்போது வேண்டுமானாலும் யாரையும் படுகொலை செய்யலாம் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்துச் சென்றால் இலங்கையில் மனித உரிமை, ஜனநாயகம் தொடர்பான எஞ்சியுள்ள பெறுமானங்களும் தீர்ந்துவிடும்.

கடந்த கால்நூற்றாண்டுகளில் இத்தகைய மனித உரிமை மீறல்கள் அடிக்கடி எழுந்தன. 1980 களின் பிற்பகுதியில் அவ்வாறானதொரு நிலை காணப்பட்டது.

1994 இற்குப் பின்னர் நிலைமை ஓரளவு சீரடைந்தது எனினும் அண்மைக்காலத்தில் படுகொலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

ஆனால் வடக்கு கிழக்கை பொறுத்தவரை படுகொலைகளின் வரலாறு பிரத்தியேகமான தன்மை கொண்டது. தமிழர்கள் மத்தியிலும் ஏன் சக சமூகங்கள் மத்தியிலும் படுகொலை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதில் புலிகளுக்கு பெரும் பங்குண்டு. தந்திக்கம்ப மரண தண்டனைகள், வீதிN;யார படுகொலைகள், சித்திரவதைகள், கூரிய ஆயுதங்களை பாவித்து கொலை செய்தல், பார்சல் குண்டு, நஞ்சுவைத்து கொலை செய்தல், தண்ணீரில் மூழ்கடித்து சாகடித்தல், உயிரிருடன் நெருப்பில் இடல், தற்கொலை குண்டுதாரி என பல படுகொலை விகாரங்கள் எமது சமூகத்தில் புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனை புலிகள் நேரடியாகவும் அவர்களிடமிருந்து பிரதி பண்ணி வேறு வேறு ஆட்களும் படுகொலைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதேவேளை 1979 பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்து ஜே.ஆர் ஜெவர்த்தனா நீதிக்குப் புறம்பான கொலைகளை சமூகத்தினுள் வடக்கு கிழக்கில் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த கொலை விகாரங்கள் ஒன்றையொன்று மேவியும் ஒன்றோடொன்று கலந்தும் ஒன்று மற்றொன்றாகவும் செயற்பட்டிருக்கின்றன. இதன் சிதைவியக்கம் இன்று இந்த நாட்டில் மனித உயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குரியாக்கியுள்ளது.

மனித உரிமைகள் என்றால் என்ன என்று புதிய தலைமுறையினருக்கு தெரியாதவொரு சூழ்நிலை, விளங்காதவொரு சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழர் வரலாற்றில் நவ காட்டுமிராண்டி காலம் எனலாம்.

அண்மையில் வவுனியாவில் விவசாய கல்லூரியைச் சார்ந்த ஐந்து மாணவர்கள் கிளேமோர் கண்ணிவெடிச் சம்பவத்தை தொடர்ந்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

படையினருக்கு புலிகள் கண்ணிவெடி வைத்ததில் ஐந்து படையினர் கொல்லப்பட்டு இரண்டு பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இடையில் அகப்பட்டு வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் உயிரிழந்ததாக படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் விவசாய கல்லூரிக்குள் நுழைந்த படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் மாணவர்கள் உயிரிழந்ததாக யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவிக்கின்றது.

இது இவ்வாறிருக்க இங்கு குறித்துரைக்கப்பட வேண்டிய முக்கியமான விடயமொன்றிருக்கிறது.

நாம் இதனையொரு கேள்வியாக எழுப்புவோமானால் புலிகளுக்கு மக்களின் உயிர்மீதும் அவர்களின் பட்டினி வாழ்வின் மீதும் அக்கறை இருக்கிறதா? கரிசனை இருக்கிறதா? என்றால் அது அப்படியில்லை அது இவற்றுக்கு விரோதமாகத்தான் இருந்திருக்கிறது. இருந்து வந்திருக்கிறது என்பதற்கு பல நூறு உதாரணங்கள் இருக்கின்றன. புலிகள் அநேகமாக பொது மக்கள் புழங்கும் இடங்களிலிருந்தே தாக்குதல்களை நடத்துவார்கள். தாங்கள் நடத்தும் தாக்குதல்களின் பிரதி விளைவுகள் தமிழ் மக்கள் மீது நிகழவேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கூடாக தமிழ் மக்கள் தவிர்க்க முடியாமல் தங்களை சார்ந்து நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்குமென அவர்கள் நினைக்கிறார்கள். தங்களை அண்டி பிழைப்பவர்களாக தமிழர்கள் இருப்பதற்கான நவ பாசிச இராணுவ, அரசியல் வழிமுறையையே புலிகள் பின்பற்றுகிறார்கள். இது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த சமூகத்தின் மரணத்தை நோக்கிய பயணமாகும். சமூகத்தை அழித்து தன்னை தக்க வைத்துக் கொள்ளும் பாசிச முறைமைகளையே புலிகள் கடந்த இரண்டு தசாப்தங்களில் பின்பற்றி வந்திருக்கிறார்கள். தமிழர்கள் சுயாதீனமான ஒரு சமூகமாக வளர்ச்சி பெறுவதை புலிகள் அனுமதிக்கப் போவதில்லை. மாறாக தமிழர்களின் வாழ்வை ஒரு சிதைவியக்கமாக புலிகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாசிசத்திற்கேயான பிரத்தியேக குணாம்சத்துடன் சகோதர சமூகங்களான முஸ்லீம்கள், சிங்களவர் மீதும், தமிழர்களுக்கு ஆபத்தில் உதவ வந்த நட்பு நாடான பாரதத்தின் படையினர் மீதும், அதன் இளந்தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் மீதும் அவர்கள் கொலை வெறித்தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கிறார்கள் வடக்கு கிழக்கை இணைத்து உருவாக்கிய அரசியல் நிர்வாக கட்டமைப்பை சீர்குலைப்பதில் முன்னோடிகளாக இருந்தவர்களும் இவர்களே.

உதாரணமாக உலக தராதரத்திலான எந்த விடுதலை இயக்கமும் தான் எந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடுகின்றதோ அதன் சுபிட்சமான, சுதந்திரமான எதிர்காலத்திற்கு தன்னை அர்ப்பணிக்கும். மனித உயிர்களின் பெறுமதி, ஜனநாயக விழுமியங்களை உயர்நிலையில் பேணும். ஆனால் இங்கு தலைகீழான நிலைமையே காணப்படுகிறது.

உண்மையில் புலிகளுக்கு மக்கள் மீது அக்கறையிருந்தால் இன்று இந்த நாட்டின் பிரதான வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உணவும், மருந்தும், அத்தியாவசியப் பொருட்களும் சென்று சேர்வதற்கு அது எவ்வழியேயாயினும் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் புலிகள் அவ்வாறில்லை.

கடல் மார்க்கமாகவோ, வான் மார்க்கமாகவோ, தரை மார்க்கமாகவோ கொஞ்சமேனும் மக்கள் தமது உயிர் மூச்சை காப்பாற்றுவதற்கான சந்தர்ப்பங்களை மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் ஆதரிப்பார்கள். ஆனால் மக்களின் நலன்களை புலிகளின் குறுகிய இராணுவ அகங்கார நலன்களுக்காக பணயம் வைத்திருக்கிறார்கள். இத்ததையவர்களின் கையில் தமிழ் மக்களின் தலைவிதி செல்லுமானால் எஞ்சியுள்ள தமிழர்களும் அழி;ந்து போவதைத் தவிர வேறு மார்க்கமில்லை.

புலிகள் அகதிகள் மத்தியில் இருந்து அல்லது அவர்கள் வாழும் இடங்களுக்கு அருகில் இருந்து குண்டுத்தாக்குதல்களை நிகழ்த்துவதன் மூலம் மக்கள் மீது அதன் பிரதிவிளைவாக குண்டு விழ வேண்டுமென்று மனசார எதிர்பார்க்கிறார்கள்.

கெப்பிட்டிகொலாவ, ஹபரண தாக்குதல்கள் மூலம் புலிகள் எதிர்பார்த்தது அதன் பிரதி விளைவுகள் தமிழர்கள் மீது நேர வேண்டுமென்பதே.

இதேபோன்ற தாக்குதல்களை புலிகள் எதிர்காலத்தில் தீவிரப்படுத்துவார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை. தமது இருப்பை இத்தகைய குரூர மக்கள் விரோத வழிகளிலேயே புலிகள் நிலைநிறுத்த முயல்கிறார்கள்.

தமிழ் பாசிசத்தின் இருப்பு என்பது தமிழ் சமூகத்தின் சிதைவு என்பதன் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கிறது. இந்த விடயம் தமிழ் மக்களுக்கு புரிய வேண்டும். சர்வதேச சமூகத்துக்குப் புரிய வேண்டும்.

அதேவேளை புலிகளையும் அவர்களால் அடிமைப்படுத்தப் பட்டிருக்கும் அவர்களின் சதிவலையில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களையும் வேறாக தெளிவாக பிரித்துணரும் பக்குவம் அரசுக்கும் வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக சக்திகளை, மனித உரிமை சக்திகளை, பலப்படுத்தும் விடயத்தில் முதலும் முக்கியமுமாக சர்வதேச சமூகம் அக்கறை செலுத்த வேண்டும்.

சமாதானத்துக்கான முன் முயற்சிகள் நடைபெற வேண்டும். அதேவேளை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதுதான் சமாதான முயற்சி என்ற குழப்பத்திலும் ஆழ்ந்துவிடக்கூடாது.

இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்கள், முஸ்லீம் மக்கள், மலையக மக்கள், வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனைத்து பிரிவினரும் ஐக்கிய இலங்கைக்குள் சுயமரியாதை கௌரவத்துடன் தமது தனித்துவங்களுடன் ஐக்கியமாக வாழ்வதற்கான உறுதியான அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த நாடு இனங்களின் மோதல் களமாக மாறி சின்னாபின்னப்பட்டு சீரழிந்து கிடக்கிறது. மக்கள் சமூகங்களின் உரிமைகளை அங்கீகரிப்பதன் ஊடாகவே, உறுதிப்படுத்துவதன் ஊடாகவே உண்மையான ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியும்.

அதிகாரப் பகிர்வும் பன்மைத்துவமும் ஜனநாயக மனித உரிமைகளும் நிலை நிறுத்துவதற்கான ஆயுதங்களே இங்கு முதன்மையானவை. அவற்றினூடாகவே மக்களை வெல்லலாம். உயிர்கொல்லி ஆயுதங்களால் இந்த நாட்டில் சிதைவியக்கமே தொடர்ந்து நிகழும்.

தேங்கிய குட்டையாக இல்லாமல் பீறிட்டு பாயும் அருவி போன்ற சிந்தனை வேண்டும். அதற்கு மனதில் உறுதியும் வார்த்தையில் தெளிவும் வேண்டும்.

அகதித்தமிழன்

நன்றி: தமிழ்நிய+ஸ்வெப்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு