ரவிராஜ் கொலை - புலிகளை நோக்கி நீளும் விரல்கள்

ரவிராஜ் கொலை - புலிகளை நோக்கி நீளும் விரல்கள்

- எஸ். பாலச்சந்திரன்


தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ந. ரவிராஜ் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலதரப்பினராலும் வன்மையாக கண்டிக்கப்பட்டு வருகின்றது. ஜனநாயக ரீதியியல் செயல்பட்டு வந்த ரவிராஜ் கொலை செய்யப்பட்டது நிச்சயமாக ஜனநாயக விரோத சக்திகளின் கைங்கரியமாகத்தான் இருக்கமுடியும்.

இக்கொலையை எத்தரப்பினர் செய்திருப்பார்கள் என்ற விவாதம் பரவலாக நடைபெற்று வருகின்றது. வழக்கம்போலவே இக்கொலைக்கான பொறுப்பும் அரசாங்கத்தின் மீதும் புலிகளுக்கு எதிரான குழுக்கள் மீதும் போடப்பட்டு சர்வதேச ரீதியாக பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

ரவிராஜின் ப+தவுடலை ஏ9 சாலைய+டாக கிளிநொச்சி கொண்டுசென்று அரசியல் ஆதாயம் தேட புலிகள் மேற்கொண்ட திரைமறைவு முயற்சி கைகூடாமல் போய்விட்டது. என்றாலும் அறிக்கைகள் விடுத்ததன் மூலமும் அவசர அவசரமாக பிரபாகரன் ரவிராஜூக்கு மாமனிதர் பட்டம் வழங்கியதன் மூலமும் தமக்கும் இக்கொலைக்கும் சம்பந்தம் இல்லை என காட்டுவதற்கு புலிகள் படாதபாடுபட்டுள்ளனர்.

சீறும்படை என்றொரு படை இக்கொலைக்கும் தமிழ் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கும் உரிமை கோரியுள்ளதாகவும், அக்குழு கருணா அணியினரைச் சார்ந்தது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அது உண்மையானால் அப்படை ஏன் முன்னாள் அம்பாறை மாவட்ட தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அ. சந்திரநேரு, திருமலை மக்கள் குழுத் தலைவர் கே.விக்கினேஸ்வரன் ஆகியோரின் கொலைகளுக்கு உரிமைகோரவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

அதேநேரத்தில் கருணா தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் ரவிராஜின் கொலையை வன்மையாக கண்டித்ததுடன் அவருக்கு தமது இறுதி அஞ்சலியையும் செலுத்தியுள்ளது. அப்படியானால் இக்கொலையை புரிந்தது யார்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் இக்கொலையை அரசாங்கத்துடன் தொடர்புடையோரே செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மறுபக்கத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக போட்டியிட ஆவல்கொண்டிருக்கும் எஸ்.பி.திஸநாயக்கா, தமிழ் மக்களின் வாக்குகளை கவருவதற்காக அண்மைக் காலங்களில் எடுத்துவரும் நடவடிக்கைகளில் ஒன்றாக இக்கொலையை கருணா குழுவல்ல, அரசாங்கமே நேரடியாக செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இன்னொரு பக்கத்தில் மேற்கத்திய ஏகாதிபத்திய பணத்தில் என்.ஜீ.ஓ நடாத்திவரும் குமார்ரூபசிங்கவும் அரசாங்கமே இக்கொலையைச் செய்துள்ளதாக குற்றம் சாட்டியதுடன் ரவிராஜின் ப+தவுடலை வைத்து தனது என்.ஜீ.ஓ வியாபாரத்தை கனகச்சிதமாகச் செய்துள்ளார்.

ஆனால் கொழும்பில் உள்ள நடுநிலைமையான நோக்கர்களின் கருத்துப்படி அரசாங்கமோ கருணா குழுவினரோ புலிகளின் ஆதரவாளர்களைக் கொல்வதாக இருந்தால் புலிகளால் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கஜேந்திரன், பத்மினி போன்றோரையோ அல்லது கூட்டமைப்பின் தலைவரான ஆர். சம்பந்தனையோ விடுத்து வெளிப்படையாக புலிகளையும்கூட விமர்சித்துவரும் ரவிராஜை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரவிராஜ் மிகவும் உணர்ச்சி வசப்படுபவரும் வெளிப்படையாக பேசுபவரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவர் அரசாங்கத்தை கர்ணகடூரமாக விமர்சிப்பது போல அல்லாவிடினும் புலிகளையும் அவ்வப்போது வெளிப்படையாக விமர்சித்து வந்தள்ளார். இருப்பினும் அண்மையில் அவர் புலித்தலைவர் பிரபாகரனின் குடும்பத்தைப்பற்றி செய்துள்ள ஒரு விமர்சனம் புலிகளின் பார்வையிலும் பாணியிலும் மன்னிக்கமுடியாத ஒரு குற்றமாகும். ரவிராஜ் அக்டோபர் 14ம் திகதி ஏசியன் றிபிய+ன் (யுளயைn வசiடிரநெ) இணையத்தளத்திற்கு கொடுத்த பேட்டியொன்றில் யாழ்ப்பாணத்தில் சாதாரண தமிழ்ப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக முடியாமல் உணவுக்காக கிய+வில் நின்று தவிக்கையில் பிரபாகரனின் பிள்ளைகள் உட்பட வசதியுள்ள தமிழ் குடும்பங்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் பாதுகாப்பாகவும் வசதியாகவும் கல்வி கற்று வருகின்றனர் என்று சற்று காட்டமாக விமர்சித்திருந்தார்.

ரவிராஜின் இந்தக் கருத்தால் புலிகளின் தலைமை மிகவும் கொதிப்படைந்துபோயிருந்ததாக கூறப்படுகின்றது. அவரது உயிருக்கு புலிகளால் ஆபத்து ஏதும் ஏற்படலாம் என அவரது நெருங்கிய நண்பர்கள் அவரை எச்சரித்திருந்ததாகவும் தெரியவருகின்றது. ஏனெனில் புலிகளின் தலைவரை சாடமாடையாக குறைகூறியவர்கள் கூட புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் உயிருடன் விட்டுவைக்கப்பட்டது கிடையாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் திருமதி சரோஜினி யோகேஸ்வரன் ஒரு பத்திரிகைப் பேட்டியின்போhது அல்பிரட் துரையப்பாவை சுட்டுவிட்டு வந்த பிரபாகரனுக்கு தாம் தேனீர் தயாரித்து வழங்கியதாகவும் அப்படியிருக்க தனது கணவர் யோகேஸ்வரனை (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) ஏன் அவர் கொலை செய்வித்தார் எனத் தெரியவில்லை என தெரிவித்ததற்காக சில நாட்களிலேயே சரோஜினி புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதேபோல அல்பிரட் துரையப்பாவின் கொலை சம்பந்தமாக தனது கடமையின் நிமித்தம் பிரபாகரனையும் ஏனைய குற்றவாளிகளையும் கைது செய்வதற்காக தேடிய காரணத்திற்காக பொலிஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரம்பிள்ளை பிற்காலத்தில் பிடித்துச் செல்லப்பட்டு சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி 1987ல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்னர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து ஒப்பந்தத்தை ஏற்கும்படி சற்று பயமுறுத்தல் பாணியில் மிரட்டியதற்காகவே பின்னர் பிரபாகரனின் உத்தரவுக்கு இணங்க படுகொலை செய்யப்பட்டார்.

இப்படியாக பொதுமக்கள் உட்பட மாற்று அரசியல் கருத்துள்ள எத்தனையோபேர் பிரபாகரனையோ புலிகளின் ஏனைய தலைவர்களையோ விமர்சித்ததற்காக புலிகளால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்ட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இப்படியான ஒரு சூழலில் ரவிராஜ் நேரடியாகவே பிரபாகரனின் பிள்ளைகள் சம்பந்தமாக கருத்துத் தெரிவித்தது பிரபாகரனால் எக்காரணம் கொண்டும் மன்னிக்கமுடியாத குற்றமாக இருப்பதுடன் அதிஉயர் தண்டனைக்கும் உரியதாகும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் எத்தனை கோணங்களில் இருந்து பார்த்தாலும் புலிகளைத் தவிர ரவிராஜை கொலை செய்யவேண்டிய தேவை யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை. எவ்வளவுதான் கொலை காரர்கள் தமது செயலை மூடிமறைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளிவருவது தவிர்க்க முடியாதது.

எது எப்படியிருந்தாலும் ரவிராஜின் கொலையின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவது அரசாங்த்தின் தலையான பொறுப்பாகும் அப்போதுதான் அரசியல் நோக்கம் கொண்ட இவ்வாறான கொலைகளின் பின்னால் ஒழிந்திருக்கும் சூத்திரதாரிகள் யார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு