சிறுவர்களை சேர்ப்பதை நிறுத்தவில்லை - அலன் றொக்

சிறுவர்களைத் தமது படைகளில் சேர்த்துக் கொள்ளுவதை புலிகள் நிறுத்தவில்லை - அலன் றொக்

சிறுவர்களைத் தமது படைகளில் சேர்த்துக் கொள்ளுவதை நிறுத்துவது தொடர்பாகப் புலிகள் தெரிவித்த வாக்குறுதிகளைப் புலிகள் நிறைவேற்றவில்லை என சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகளின் விஷேட பிரதிநிதி அலன் றொக் தெரிவித்துள்ளார்.



சிறுவர்களைப் படையணிகளில் சேர்த்துக் கொள்வது தொடர்பாகப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளேன். புலிகள் யுனிசெப் அமைப்புடன் சேர்ந்து செயற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். உடனடியாகத் தமது படைகளிலுள்ள சிறுவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் புலிகள் தெரிவித்தனர்.



இதேவேளை, புலிகள் அவர்களது பாரிய உயிர் கொல்லி ஆயுத சாதனங்களைப் பொதுமக்கள் மத்தியில் வைக்க வேண்டாம் எனவும், பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் புலிகளைக் கேட்டுக் கொண்டதாகவும் ஐக்கிய நாடுகளின் விஷேட பிரதிநிதி அலன் றொக் மேலும் தெரிவித்துள்ளார்.



இலங்கையில் வாழும் சிறுவர்கள் அனைத்துத் தரப்பினராலும் பாதிக்கப்படுவதைக் கண்காணிப்பதற்குச் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியம் என தனது விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புவதற்கு முன்னர் நேற்று மாலை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



சிறுவர்கள் சகல தரப்பினர்களாலும் பாதிக்கப்படுவதாகவும், இவ்விடயம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை நடாத்த ஜனாதிபதி தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.epdpnews.com/news-tamil.html#Child14.11.2006

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு