ஜனநாயக,அகிம்சைவாதிகளின் மரணங்கள்

ஜனநாயக,அகிம்சைவாதிகளின் மரணங்கள் பயங்கரவாதிகளின் மாமனிதர் பட்டங்களால் களங்கப்படுத்தப்படுகின்றன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை.

[ஞாயிற்றுக்கிழமை, 12-11-2006, 03:02 GMT]

ஜனநாயக மரபுகளில் நம்பிக்கை கொண்டு அவ்வழியில் மக்களால் நேசிக்கப்பட்டு அகிம்சைவழியில் தம்மின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த ஜனநாயகவாதிகளினதும் அகிம்சைவாதிகளினதும் மரணங்கள் பங்கரவாதிகளினால் வழங்கப்படும் மாமனிதர் பட்டங்களால் கொச்சைப்படுத்தப்படுகின்றன.

யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக அகிம்சைப் பாசறையில் வளர்க்கப்பட்டவரும் அவ்வழிகளில் நம்பிக்கை கொண்டவருமான மரணித்த நடராஜா ரவிராஜ் அவர்களுக்கு பிரபாகரன் எனும் இரத்த தாகம் பிடித்த பயங்கரவாதியினால் மாமனிதர் பட்டம் வழங்கப்பட்டமை வேதனைகளும் வேடிக்கைகளும் நிறைந்ததாகும்.

சாத்தான் வேதம் ஓதுவதைப் போல ஜனநாயகவாதிகளுக்கும், அகிம்சைவாதிகளுக்கும் மாமனிதர் பட்டம் வழங்க பயங்கரவாதிகளுக்கு என்ன அருகதை உண்டு.

ஜனாநாயகத்தைத் தம் துப்பாக்கி முனைகளில் சிறைபிடித்துக்கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணையும், அதில் நம்பிக்கை கொண்டவர்களையும் மாற்றுக் கருத்துடையவர்களையும் கொன்று குவித்து ஆயுத அடக்குமுறையில் மக்களை வைத்திருக்கும் இப் பயங்கரவாதிகளின் குறுகிய லாபங்களுக்காக மாமனிதர் பட்டங்கள் விலைபோவது வேதனையளிக்கின்றது.

தமிழ் மக்களின் புனிதம் மிக்க உரிமைப் போராட்டத்தை தனிமனித அதிகார மோகத்திற்காகவும், சுகபோக வாழ்விற்காகவும் கொச்சைப்படுத்தி பயங்கரவாதப் போராட்டமாக மாற்றிய பிரபாகரனும் அவரின் கூட்டமும் ஜனநாயகவாதிகளுக்கும், அகிம்சைவாதிகளுக்கும் கௌரவப் பட்டங்கள் வழங்குமளவிற்கு பயங்கரவாதிகளின் நிலைகளை உயர்த்திய குணாம்சங்கள் என்ன என்பது புரியவில்லை.

தேனீரை வாங்கிக் குடித்துவிட்டு அச்சுவை மறைவதற்கிடையில் அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் சுட்டுக் கொன்றுவிட்டு தமிழினத்திற்கும் தமிழனின் விருந்தோம்பலுக்கும் துரோகமிழைத்தவர்கள் இன்று அந் ஜனநாயகவாதிகளினால் வளர்க்கப்பட்ட ஜனநாயகவாதி ஒருவருக்கு மாமனிதர் பட்டம் வழங்கி ஜனநாயகவாதிகளின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் மாசு கற்பித்துள்ளனர்.

இவை மட்டுமா! யாழ் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், கேதீஸ்வரன் லோகநாதன், ராஜன் சத்தியமூர்த்தி, கிங்ஸ்லி இராசநாயகம், மேயர் செழியன் பேரின்பநாயகம் என்று தன்னினத்திற்காக ஜனநாயகம், அகிம்சை வழியில் போராடிய தலைவர்களைக் கொன்றது மட்டுமல்லாமல் பிரேமதாசா, காமினி திசாநாயக்க போன்ற சகோதர இன அரசியல்த் தலைவர்களையும் கொன்று பயங்கரவாதத்தை வியாபித்தவர்கள் இப்போது ஒரு ஜனநாயகவாதியின் மரணத்திற்கு நீலிக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாகவுள்ளது.

இதனையும் தாண்டி தமிழ் மக்களின் துன்பங்களிலும், துயரங்களிலும் தோள்கொடுத்த பாரத மண்ணின் அம் மக்களால் நேசிக்கப்பட் பெரும் தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை மனித வெடிகுண்டின் மூலம் படுகொலை செய்து பயங்கரவாதத்தை இலங்கையின் எல்லைகளுக்கு அப்பாலும் ஏற்றுமதி செய்த பயங்கரவாதிகள் இப்போது ஜனநாயகவாதிகளுக்கு அனுதாபம் தெரிவிக்கின்றனர்.


எம் மக்கள் தம் உரிமைகளுடன் அச்சமற்று வாழ்வதற்கு இன்று பெரும் தடையாகவுள்ளது இப்பயங்கரவாதிகள்தான் என்பதை எம் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இன்றைய நெருக்கடியான நிலையில் குறுகிய லாபம் சம்பாதிப்பதற்காகவே மறைந்த ரவிராஜ் அவர்களுக்கு மாமனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்கறிவர்.


ரவிராஜின் மறைவு தமிழினத்தினால் ஈடுசெய்ய முடியாது. அவரின் அர்ப்பணிப்பும் தியாகமும் தமிழின வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.


ஆனாலும் அவரின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் பயங்கரவாதிகளின் மாமனிதர் பட்டம் களங்கப்படுத்துகின்றது என்பதைத்தான் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

பிணங்களின் மீதான அரசியல், தமிழ்நாட்டு மக்களாகிய எங்களுக்கு வழக்கமான ஒன்றுதான்.'மாமனிதர் பட்டங்கள்' மூலம் அங்கும் ஆரம்பித்துவிட்டதா?

4:49 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

foolish arguements! you must be a black sheep!

6:46 AM  

Post a Comment

<< முகப்பு