குடாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்கள்

குடாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்களை அனுப்புவதற்கு ஏற்பாடுகள்

இந்தியக்கப்பல்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் புலிகளிடம் இருந்து எதிர்பார்க்கத்தேவையில்லை.

குடாநாட்டிலுள்ள 6இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பட்டினி அவலத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அந்த மக்களுக்கு மிக அதிகளவில் தேவைப்படும் அரிசி சீனி குழந்தைகளுக்கான பால் மா உணவுப் பொருட்களை வழங்குவதற்கு இந்தியா முன்வந்திருக்கிறது என பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் அருகிலுள்ள தமிழ்நாட்டிலிருந்து இந்த உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு வசதி செய்து கொடுக்க இந்தியா ஆயத்தமாக இருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாகவும்இந்த விடயம் தொடர்பாக இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் கொழும்புக்குத் தெரியப்படுத்தி அதன் அனுமதியுடன் தமிழ் வர்த்தகர்களூடாக அரிசி சீனி குழந்தைகளுக்கான உணவு வகைகளை அனுப்ப உள்ளதாகவும் அறியவருகிறது. அரிசி சீனி குழந்தைகளுக்கான உணவு ஆகியவற்றை விநியோகிக்கும் இந்தியாவின் தீர்மானத்திற்கு குடாநாட்டிலுள்ள வர்த்தகர்கள் இலங்கை அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.

புலிகள் ஏ9 பாதை திறப்பை முன்வைத்து கப்பல் போக்குவரத்துக்கு உத்தரவாதம் எனத் தெரிவித்ததையடுத்து இந்தியாவிலிருந்து பொருட்களை இந்தியக்கப்பல்கள் மூலம் தருவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்திய உணவுக்கப்பல்களை புலிகள் தாக்குவார்களாயின் அதன் விளைவுகள் வேறுவிதமாக இருக்கக்கூடும்.

யாழ்ப்பாணத்திற்கு இந்தியப் பொருட்கள் எப்போது அனுப்பப்படும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை .ஏ-9 வீதியை திறக்குமாறு விடுதலைப்புலிகள் உட்பட பல தரப்பிலிருந்தும் வலியுறுத்தல்கள் விடுக்கப்படுகின்ற போதிலும் அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமூடாக பொருள் விநியோகத்தை கொழும்பு மேற்கொண்டுள்ள போதிலும் அது குடாநாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை. இந்த விடயம் குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் கவலை தெரிவித்திருக்கிறது. அதிகரித்துச் செல்லும் வன்முறைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஏ-9 வீதி மூடியதால் ஏற்பட்ட உணவு விநியோகத்தடை அவர்களின் நெருக்கடியை மேலும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. ஏ-9 வீதியை மூடியதால் யாழ். குடாநாட்டிலுள்ள தமிழ் மக்களே மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதை சகலருமே ஏற்றுக் கொள்கின்றனர். புலிகள் கடந்த வருட இறுதியில் ஆரம்பித்த யுத்தத்தின் பலாபலன்களை மக்கள் அனுபவிக்கத்தொடங்கியுள்ளனர்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு