சிறுவர்களை யுத்தகளத்தில் பலிகொடுக்கும் புலிகள்

மனிதாபிமானம் பேசிக்கொண்டே சிறுவர்களை யுத்தகளத்தில் பலிகொடுக்கும் புலிகள்! தப்பி வந்தோர் கூறும் கதை


சிறுவர்களை படையில் சேர்ப்பது, அவர்களை ஆயுதம் ஏந்த வைப்பது, யுத்த களங்களில் போரிட வைப்பது என்பதெல்லாம் பாரிய அத்துமீறலென ஐக்கிய நாடுகள் சபை முதல், அனைத்து சமூக ஆர்வம் கொண்ட நிறுவனங்களும் சொல்லிக் கொள்ளும் விடயமாகும்.


இலங்கை பொலிஸ் மற்றும் முப்படைகளைப் பொறுத்தவரை, ஒருவர் இதில் இணைந்து கொள்வதற்கான அடிப்படைத் தகைமைகளில் ஒன்று அவர் 18 வயதினைப் பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும் என்பதாகும். ஆக சிறுவர்களையோ பராயமடையாதவர்களையோ இலங்கை அரசு தமது பாதுகாப்புப் படைகளில் இணைத்துக் கொள்வதில்லை. இது அனேகமாக உலகிலுள்ள ஜனநாயக நாடுகள் அனைத்தினதும் நடைமுறையாகும்.


ஆனால் புலிகள் இயக்கத்தின் படையணிகளில் மிக அதிகமாக சிறுவர்களே செயற்பட்டுவருகின்றனர். இது தொடர்பாக யுனிசெப் உட்பட பல்வேறு சர்வதேச ஸ்தாபனங்கள் புலிகளை பல முறை குற்றம் சாட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறுவர்களை படைகளில் சேர்க்கக் கூடாது என்கின்ற சர்வதேச அழுத்தங்களுக்கு அமைய, புலிகள் தமது படையில் சிறுவர்களை சேர்ப்பதில்லை என்றும் இணைந்துள்ளவர்களை விடுவிப்பதாகவும் பலமுறை தெரிவித்திருந்தனர். ஆனால் புலிகள் அவ்வாறு நடந்துகொள்ளவேயில்லை.

புலிகளைப்பொறுத்தவரை அவர்கள் தமது குற்றவியல் செயற்பாடுகள் எதனையும் இதுவரை நேரடியாக ஏற்றுக்கொண்டதுமில்லை, அவர்களுக்கு சாதகங்களை வழங்காத உத்தரவாதங்களை கடைப்பிடித்ததுமில்லை. இது வரலாறு!

தமது இயக்கத்தில் உள்ள சிறுவர்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்டே புலிகள் சிறுவர்களை தமது படையணியில் பலாத்காரமாக இணைத்துக்கொண்டு வருகின்றனர். நேற்று (29ம் திகதி) நிறைவடைந்த ஜெனீவா பேச்சுவாரத்தைகளில் கூட சிறுவர்களை படையணிகளில் சேர்க்கக்கூடாது என்கின்ற விடயத்தை அரச தரப்பினர் பிரதானப்படுத்தி தமது பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலில் இணைக்க வேண்டுமென்று வற்புறுத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் கடந்த புதன்கிழமை 25ம் திகதி ஐந்து சிறுவர்கள் உட்பட ஏழு புலிகள்இயக்க உறுப்பினர்கள் சேருநுவர கல்லாறு பொலிஸ் வீதிச் சோதனைச்சாவடியில் சரணடைந்துள்ளனர். இவர்களில் சிலர் 15மற்றும் 17வயதினைக் கொண்டவர்களாவர். புலிகளின் கதிரவெளி முகாமிலிருந்தே இவர்கள் தப்பிவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தர்க்கீகன் என்பவர் தப்பித்து வந்தவர்களில் ஒருவர். 15வயது இவருக்கு. உயர்தரம் கற்றுக் கொண்டிருந்த தர்க்கீகனின் பாடசாலைக்கு வந்த புலிகள் தர்கீகன் உட்பட நான்கு மாணவர்களை கடத்திச் சென்றனர். தர்க்கீகன் புலிகள் இயக்கத்தில் இணையுமாறு வற்புறுத்தப்பட்டார். கடத்தப்பட்ட மாணவர்களுக்கு பலாத்காரமாக ஆயுதப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆனாலும் தர்கீகன் இப்போது புலிகளிடமிருந்து தப்பித்து வந்துவிட்டார். ~~எனக்கு சண்டை பிடிக்கவில்லை|| என்று அழுத்திக் கூறும் தர்கீகன் ~~நான் தொடர்ந்து படிக்கவேணும்|| என்கிறார்.

சரணடைந்த சிறுவர்களில் ஒருவரான திலகனின் கதையும் கண்ணீராலானது. ~~நான் கட்டபறிச்சான் விவேகானந்தர் வித்தியாலயத்தில் ஆண்டு 10 படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பாடசாலைக்கு போகும் வழியில் புலிகள் என்னை பலாத்காரமாக கடத்தி கதிரவெளி முகாமுக்கு கொண்டுசென்றனர். தப்பிக்க எவ்வளவோ முயன்றேன் அவர்கள் என்னை சங்கிலியால் கட்டிவைத்து அடித்தார்கள்.

எனக்கு ஒரு சகோதரி இருக்கிறார். நான் வீட்டுக்கு போக வேண்டுமென்று கடத்தியவர்களிடம் கூறியபோது என்னை சித்திரவதை செய்தார்கள். அவர்களின் கொடுமையை என்னால் இனித்தாங்க முடியாது, எப்படியோ தப்பித்து வந்துவிட்டேன். அங்கே 85 பேருக்கு ஆயுப்பயிற்சி வழங்கினார்கள். அதில் 35 பேர் எனக்கு முன்னரேயே தப்பி ஓடிவிட்டார்கள். எனது குடும்பத்தை நான்தான் பார்க்கவேணும்|| என்றார் அந்த சிறுவன் திலகன்.

இவ்வாறு ஒவ்வொருவரின் கதையும் புலிகளால் சிதைக்கப்பட்டவை.

சம்பூருக்கு படையினர் வந்தபோது, தன் சகோதரியுடன் அகதி முகாமில் தங்கியிருந்தவர் காந்திகணேஷன். அங்கு வந்த புலி உறுப்பினர்கள் மிக பலாத்காரமாக காந்திகணேஷனை கதிரவெளி முகாமுக்கு கடத்திச் சென்றுள்ளனர். ~~என்னை அவர்கள் அடித்தார்கள். அந்தக்கொடுமைகளை தாங்கமுடியாது. தப்பித்து வந்துவிட்டேன்|| என்று கூறும் காந்திகணேஷன் பொலிஸாரிம் சரணடைந்தவர்களில் மற்றுமொருவர்.

தினுஷ், அன்பழகன், செல்வராஜா ஹரீஸ்ஹரன், ப்ரனாஷ் ஆகியோர் சரணடைந்தவர்களில் ஏனையோர்களாவர்.

4 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

தமிழ் பதிவாளர்களில் ஹிப்போகிரசி படு கேவலமாக இருக்கிறது.

7:13 AM  
Blogger மாசிலா மொழிந்தது...

அடப்பாவமே, பரிதாபமாக இருக்கிறதே அச்சிறுசுகளின் முகங்களை பார்க்கையில். இவ்விள வயதிலேயே வாழ்க்கையை பறிகொடுத்துவிட்டு அனாதையாக இருக்கிறார்களே. தமிழரினத்தை முழுதும் அழிப்பதென புலிகள் முடிவு செய்துவிட்டார்களா? என்ன இது அநியாயம்? இதை கேட்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் இவ்வுலகில் யாருக்குமே தைரியம், உரிமை இல்லையா? எப்போதுதான் முடியும் இந்த கோராமை? இலங்கை அரசும் இவ்விடயத்தில் கண்ணை மூடிக்கொண்டுவிட்டதா? எப்படியாவது எல்லோரும் வேருடன் அழிந்துபோவீர் என?
இவ்வுலகில் வாழ்வதற்கே வெட்கமாக இருக்கிறது. அநியாயங்களை தொடர்ந்து வேடிக்கை பார்த்து தடுத்து நிறுத்த ஏதும் செய்ய முடியாத கோழை மனிதாக வெட்கத்தில் வாழ வேண்டியதாய் இருக்கிறது. என்ன செய்வது, யாரிடம் எதைச்சொல்வது என்று புரியவில்லை.
தலை குனிகிறேன். அச்சிறுவர்களுக்கு குறைந்த பட்சம் எனது அனுதாபத்தையாவது தெரிவித்து கொள்கிறேன்.
தைரியமாக நிமிர்ந்து எதற்கும் யாருக்கும் வலைந்து கொடுக்காமல் உரிமையுடன் நல்வாழ்க்கை வாழ்த்துகிறேன்.

என்னால் வேறென்ன செய்ய முடியும்?
இந்திய அரசாவது...?

8:12 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

ஆடுகள் நனையுதென்று ஒநாயொன்று அழுவுது.

12:36 PM  
Blogger bala மொழிந்தது...

//ஆடுகள் நனையுதென்று ஒநாயொன்று அழுவுது//

அனானி அய்யா,

சரி, ஒநாயொன்றோடு சேர்ந்து புலிகளும் அழுதா நல்லது.

பாலா

9:42 PM  

Post a Comment

<< முகப்பு