கேதீசுக்கு மரண தண்டனை அளித்த காட்டுமிராண்டிகள்

மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் துரோகங்கள் குறையும், துரோகங்கள் தடுக்கப்படும் என்ற வாதம் மரண தண்டனை ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது. புலிகள் நினைத்தபோதெல்லாம் "துரோகிகளுக்கு" மரண தண்டனையை வழங்கி வருகிறார்கள். சுதந்திரமாக வாயைத் திறப்போம் என்பவர்கள் "துரோகங்கள்" என்ற பெயரில் மரணதண்டனை பெறுவோம் என்பது "தெரிந்தும்" நடந்து கொண்டு தான் இருக்கிறது. "துரோகங்கள்" என்றுமே இல்லாத அளவுக்கு வளர்ந்தும் இருக்கிறது. நீலன் திருச்செல்வம், அமிர்தலிங்கம் என்ற நீளும் வரிசையில். கேதீஸ் போன்ற சாத்வீகர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பொழுதும் "துரோகிகளுக்கு" பஞ்சமில்லை. சுதந்திரம் விரும்புபவர்களுக்கு உயிர் மீது எந்தக் கவலையும் இல்லை. இவ்வாறான நிலையில் இப்படிப்பட்ட மரண தண்டனைகள், நீங்கள் நிர்ணயிக்கும் "துரோகங்களை" தடுத்து நிறுத்தும் என்பதோ, "துரோகம்" செய்ய நினைப்பவர்களை தடுக்கும் என்பதோ நகைப்பிற்குரிய வாதமாகத் தான் எனக்கு தெரிகிறது.

இது பழிக்குப் பழி வாங்கும் மனோபாவம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதே சமயத்தில் மரண தண்டனை கூடாது என்பவர்களின் வாதங்களும் சரியாக முன்வைக்கப்படுவதில்லை. அரசாங்கத்திற்கு ஒரு உயிரை எடுக்க உரிமையில்லை என்று கூறும் ரோசாவசந்த் புலிகளைப் பற்றி வாயே திறந்ததில்லை என்பதும், கேதீஸ் கொல்லப்பட்டது அவரது பதிவில் ஒரு அலையைக் கூட ஏற்படுத்தவில்லை என்பதும் அறிந்தது. கெப்பெத்தி கொலாவையில் 60க்கும் மேற்பட்ட அப்பாவி சிறார்களையும் பஸ் பயணிகளையும் அப்பாவி மக்களையும் பலரை குண்டுவீசி தாக்கியதே அது மனிதநாகரிகத்தின் முதிர்ச்சியான நிலையா ? புலிகளின் இந்த தாக்குதலை அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் புலி ஆதரவாளர்களும் ஆதரித்துக் கொண்டு தானே இருக்கின்றன. காட்டுமிராண்டித்தனத்தை கண்டிக்கக்கூட வக்கில்லாத மக்கள் இருக்கும் போது மனித நாகரிகம் இன்னும் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பது தான் தெளிவாகிறது.

மரண தண்டனையை நீக்கினால் மட்டும் நாகரிக முதிர்ச்சி ஒரு புலி இயக்கத்துக்கு வந்து விடுமா ? எத்தனையோ அப்பாவிகள் புலிகளின் அராஜகங்களால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு சத்தமில்லாமல் மரணிக்கும் நிலையில், சட்டங்களை நீக்குவதால் மட்டும் நம்மை மனிதகுல நாகரிகத்திற்கு உயர்த்திக் கொள்ள முடியுமா ?

"ஒரு சமூகத்தின் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் பொழுது, அந்த சமூகம் தன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை, தன்னுடைய எதிர் வன்முறையால் தான் எதிர்க்கும்" என்று ஒரு வாசகம் உண்டு. மரணதண்டனையும் ஒருவன் மீதோ அல்லது ஒரு சமூகம் மீதோ பிரயோகிக்கப்படுவது வன்முறைக்கு ஒப்பானது தான். கருணா போன்றவர்கள் இதிலிருந்து வெளியேறுவதில் ஆச்சரியமென்ன? அவர்கள் புலி முகாம்களை தாக்குவதில் ஆச்சரியமென்ன?

மரண தண்டனை பழிவாங்கும் குரூரமான வெறித்தனம் தானே தவிர நீங்கள் குற்றம் சாட்டும் "துரோகங்களை" தடுத்து விடாது.

-
நன்றி தமிழ் சச்சி

10 மறுமொழிகள்:

Blogger அகரன் மொழிந்தது...

Test

8:47 AM  
Blogger அகரன் மொழிந்தது...

பின்னூட்ட நேர்மைத்தனம் ஒன்று

11:30 AM  
Blogger sooryakumar மொழிந்தது...

தங்கள் கட்டுரை படித்தேன். சும்மா கொமென்ற் அடிக்க விரும்பவில்லை.
சிந்திக்க வைக்கும் தர்க்கம் அதில் உண்டு என்பதில் உடன்படுகிறேன்..ஆனால் இதற்கான சூழல்..இதுவா....
ம்..ம்...
நன்றியுடன்...!

5:44 PM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

நான் புலிகளின் படுகொலைகளை கண்டித்ததில்லை என்று எப்படி அய்யா அறிவை பெற்றீர்கள்? அதுசரி, நீங்கள் என்ன உலகில் நடக்கும் எல்லா மனித உரிமை மீறல்கள், கொலைகளை பற்றிய உங்கள் கண்டனத்தை தெரிவித்துவிட்டு (குறைந்த பட்சம் அதை பற்றி தெரிந்து கொண்டு) கீ போர்டை தொடுகிறீர்களா?

2:04 AM  
Blogger bala மொழிந்தது...

//அதுசரி, நீங்கள் என்ன உலகில் நடக்கும் எல்லா மனித உரிமை மீறல்கள், கொலைகளை பற்றிய உங்கள் கண்டனத்தை தெரிவித்துவிட்டு (குறைந்த பட்சம் அதை பற்றி தெரிந்து கொண்டு) கீ போர்டை தொடுகிறீர்களா//

ரோசாவசந்த் அய்யா,

அப்படி சொல்லிவிட முடியாது..மாவோ செய்த கொலை, போல்போட் செய்த கொலை இதெல்லாம் சமுதாயா மாற்றத்துக்காக செய்யப் பட்ட கொலைகள். அதனால அசுர அங்கீகாரம் பெறுகிறது..

பாலா

6:04 AM  
Blogger அகரன் மொழிந்தது...

உங்களது மௌனமும் பல நேரங்களில் உங்களைப்பற்றி சொல்கிறது

11:43 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

//உங்களது மௌனமும் பல நேரங்களில் உங்களைப்பற்றி சொல்கிறது//

அது சரி, உலகில் நடக்கும் வன்முறைகளில், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓரிரு விஷயங்கள் தவிர, மற்ற எல்லாவற்றிலும் மௌனமாகத்தானே இருக்கிறீர்கள்! அதை வைத்து நீங்களே உங்களை பற்றி சொல்லிக் கொள்ள வேண்டியதுதானே!

(மேலும் நான் தேவையான சந்தர்ப்பம் என்று நினைத்த இடங்களில், எதிர்குரல் கொடுக்க வாய்ப்பு இருந்த இடத்தில்(புலிகள் பற்றி) மௌனமாய் இருந்ததில்லை என்பது என் எழுத்தை தொடர்ந்து படிக்கும் எவருக்கும் தெரியும்.)

10:56 PM  
Blogger bala மொழிந்தது...

//மேலும் நான் தேவையான சந்தர்ப்பம் என்று நினைத்த இடங்களில், எதிர்குரல் கொடுக்க வாய்ப்பு இருந்த இடத்தில்(புலிகள் பற்றி) மௌனமாய் இருந்ததில்லை //

ரோசாவசந்த் அய்யா,

இப்ப தேவையான சந்தர்ப்பம் ஏன் இல்லை என்பதை விளக்கமாக சொன்னால் தங்களுடைய நடுநிலமையப் பத்தி யார் மனதிலும் சந்தேகம் எழாது அய்யா.
இன்னும் ஒரு உண்மைய சொன்னீங்கன்னா நல்லாயிருக்குமய்யா.
புலிகள் அப்பாவி இஸ்லாமியர்களை போட்டு தள்ளுவதை நீங்க ஏன் கண்டுகிறதில்ல.

ஒருவேளை தீவிரவாத இஸ்லாமியர்களை போட்டு தள்ளினாதான் நீங்க அதை கேள்வி கேட்பீர்களோ?

பாலா

5:11 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

புலிகள் இஸ்லாமியர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை கண்டிக்காமலிருக்க என்ன எழவு காரணம் இருக்கிறது!! கண்டிக்க வேண்டிய விஷயம்தான். என் பதிவில் முன்பே எழுதியிருகிறேன். பல பின்னூட்ட சண்டைகளில் எழுதியிருக்கிறேன். நீங்கள் எல்லாம் படிக்கவில்லையே என்று, எல்லா இடத்திலும் 'கண்டிக்கிறேன்' என்று ஆஜர் போட எனக்கு எழுத்து முழு நேரத்தொழில் அல்ல. உதாரணமாக இஸ்ரேலின் எல்ல அராஜகங்களை எதிர்தாலும், உலகின் மிக பெரிய வக்ரமாக இஸ்ரேலை நினைத்தாலும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் போது, ஒரு பதிவு கூட நான் போட்டதில்லை. பதிவு போடுவதற்கும், குரலை ஒலிப்பதற்கும் நான் வைத்திருக்கும் சமன்பாடுகளும், என் வாழ்க்கையில் சாத்தியமாகும் கணங்களை பற்றியும் யாருக்கும் விளக்க முடியாது. அதற்கான அவசியமும் இல்லை. யாருக்காவது என் கருத்தை அறிய விரும்பானால் என்னிடம் வந்து கருத்து கேட்பதை தவிர வேறு என்ன வழி இருக்கிரது? அதை விடுத்து, 'இதை பற்றி ஏன் பேசவில்லை', 'உன் மௌனம உன்னை பற்றி சொல்கிறது' என்று முட்டாள்தனமாய் பேசினால் என்ன பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியும?

புலிகள் என்ற வலதுசாரி பாசிஸ இயக்கத்தை எதிர்த்து ஒரு குரலை அகரா ஒலித்துக் கொண்டிருக்கிறார். அதானால் அவர் எழுதியதற்கு மதிப்பு கொடுத்து இங்கே எழுத வேண்டி வந்தது.

மற்ற படி பாலா, உங்கள் அறிவு சற்று வளர்துள்ளதாக தோன்றும் போது (உதாரணமாக முந்தய பின்னூட்டாத்தில் போல்பாட்டை வைத்து கேட்டது போல் அல்லாமல் இருந்தால்) நிச்சயம் என்னால் பேச முடியும்.

12:04 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

எதிரிகளை விட துரோகிகள் ஆபத்தானவர்கள்.

5:05 AM  

Post a Comment

<< முகப்பு