வாகரையில் பலிகடாக்களாக்கப்பட்ட

வாகரையில் பலிகடாக்களாக்கப்பட்ட அப்பாவிப்பொதுமக்கள்

-அர்ச்சுனன்


வாகரையில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவிப்பு
23 உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ICRC,SLMM ஊர்ஜிதம்
புலிகள் முதலில் அகதிமுகாமில் இருந்து தாக்குதல் நிகழத்தியதாக உயிர்தப்பிய பெண் வெளிநாட்டு ஊடகத்திற்கு முறைப்பாடு


அப்பாவி தமிழர்கள் அழிந்து போவது குறித்து எவரும் கவலை கொள்வதாக தெரிய வில்லை, மீண்டும் ஒரு தடவை அகதிகளாக இருந்த அப்பாவி தமிழ் மக்கள் வாகரையில் கொல்லப்பட்டுள்ளார்கள் .மூதூர்,சம்பூர் ,மாவிலாறு மோதல்களின் போது இடம்பெயர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள வாகரை பகுதியில் இரு பாடசாலைகளின் தஞ்சம் கோரியிருந்த மக்கள் அரச படையினரின் மோட்டார் தாக்குதலிலும், எறிகணை தாக்குதலில் சிக்கி துடி துடிக்க இறந்து போயுள்ளார்கள். குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 23இற்கு மேற்பட்ட மக்கள் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக பலியாகியுள்ளானர். மேலும் 125 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 70மக்கள் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு சிலருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சிலர் அரசபடையினரின் உலங்கு வானூர்திகளில் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டார்கள். வாகரையில் இருந்து 15 கிலோமிற்றர் தொலைவில் உள்ள கடற்கரையோர கிராமம் கதிரவெளிக்கு அண்மித்துள்ள விக்கிகினேஸ்வவரா வித்தியாலத்திலும் மற்றும் ஒரு பாடசாலையிலும் அகதிகளாக தங்கியிருந்த மக்களே கொல்லப் பட்டுள்ளார்கள்.

புலிகள் அந்த பாசடாலைகளுக்கு அண்மித்த பிரதேசங்களில் இருந்து மாங்கேணி ,மற்றும் கஜுவத்தை முகாம்கள் மீது மோட்டார் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அதற்கான மறுதாக்குதலையே தாம் மேற்கொண்டதாக படைதரப்பு தெரிவித்துள்ளது. புலிகள் அந்த மக்களை மனிதகேடயங்களாக பாவித்துள்ளார்கள் என அரச இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சமரசிங்க தெவித்துள்ளார். எவ்வகையான தாக்குதலாக இருந்தாலும் கொல்லப்பட்டவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் ஆகும். படை தரப்பு எந்தவகையான காரணங்களை கூறினாலும் போன உயிர்களை அவர்களினால் மீட்டு தரமுடியாது. மக்கள் அழிவது குறித்து எந்தரப்பினரேனும் கவலை கொள்வதாக தெரிவதில்லை. மக்களுக்காக போராடுகிறோம் என புலிகளும் நாட்டை காப்பாற்றுகிறோம் என அரச தரப்பும் கூறுகின்றார்களே தவிர மனித உயிர்கள் அழிவது குறித்து அவர்கள் சிறிதளவேனும் கவலை கொள்வில்லை. புலிகள் மக்கள் மத்தியில் இருந்து தாக்குதலை மேற்கொண்டிருந்தாலும் கூட அரசபடைகள் மறுதாக்குதலை மேற்கொள்ளும் போது அந்த அப்பாவி மக்கள் குறித்து சிந்தித்து இருக்க வேண்டும். புலிகள் அந்த மக்களை மனித கேடயங்களாக பாவித்தார்கள் என கூறி அரச படைகள் மக்களை காக்கும் தமது பொறுப்பில் தப்பித்துக் கொள்ள முடியாது. புலிகள் மக்களை மனித கேடயங்களாக பாவிப்பார்கள் என்பது அரச படையில் இருந்து அப்பாவி தமிழர்கள் வரையில் தெரிந்த விடயமாகும். ஆகையினால் அந்த அம்க்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரச படைகளுக்கு உரியதாகும்.இது போன்ற கவலையீன மான தாக்குதல்களை அரச படைகள் மேற்கொள்வார்களாயின் அப்பாவி தமிழர்கள் யார் ஆதரவு கொடுப்பது. அரச படைகளின் ஒவ்வொரு கவலையீனங்களும் புலிகளுக்கு பலமாகிறது என்பதினை அரச படைகளினால் உணர முடியவில்லை.

யாழ் குடாநாட்டு மக்கள் உணவு பற்றாக்குறையினால் வாடுகின்ற வேளையில் தமது நலன்களை கருத்தில் கொண்டு ஏ9 பாதையினை திறக்கமாட்டோம் என கூறும் அரசும்,அந்த மக்கள் அவலநிலையில் உள்ளது குறித்து கவலை கொள்ளாது வரி பணத்திற்காக முகமாலையின் ஊடாக மட்டுமே உணவு பொருட்கள் அனுப்புவதற்கு அனுமதிபோம் என கூறும் புலிகளும் தமது நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளன. யாழ் குடா நாட்டு மக்களுக்காக கவலை படுவதாக கூறும் புலிகளின் கவலை உண்மையானால் கடல் வழியாக அந்த பொருட்கள் கொண்டு செல்லப்படுவதற்கு அவர்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுமதி வழங்கியிருக்க வேண்டும், இதனை விடுத்து அவர்களுக்கு எழுத்து மூலம் எச்சரித்து விட்டு புலிகள் முதலை கண்ணீர் வடிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். தமிழகத்தில் இருந்து நேரடியாக யாழ்பாணத்திற்கு உணவு கொண்டு செல்வதினை கூட புலிகள் எச்சரித்துள்ளார்கள். மக்கள் பசியிலிருப்பதினையும் ,பலியாவதினையும் கவலை கொள்ளாத புலிகள் அந்த மக்கள் கொல்லப்படும் ஒவ்வொரு தடவையும் அதனை வைத்து அனுதாபம் சம்பாதிக்கவே முயலுகின்றார்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக வடமராட்சி பகுதியில் புலி உறுப்பினர் ஒருவர் கிளைமோர் குண்டினை மிதிவண்டியில் எடுத்து சென்ற வேளை அது தவறி வெடித்ததில் வீதியால் சென்று கொண்டு இருந்த 5 அப்பாவி தமிழ்ர்கள் வெடித்து சிதறி செத்தார்கள். புலி ஆதரவாளர்களும்கும்,அவர்களின் ஊடகங்களுக்கும் அப்பொழுது கவலை வரவில்லை. அந்த உயிர்கள் உயிர்களாக அவர்களுக்கு தெரியவில்லை.

வாகரையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கவலை கொள்வதினை காட்டிலும் அந்த அந்த சம்பவத்தில் அனுதாபம் தேடுவதற்கு புலிகள் முன்கூட்டியே தயாராக இருந்துள்ளார்கள் போல் அவர்களிடம் பிர்ச்சார முறையினை பார்க்கும் பொது தோன்றுகிறது. புலிகளின் ஆங்கில ஆதரவு இணையதளமான தமிழ் நெற் இந்த மோட்டார் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சம்பவம் நடைபெற்ற 8 ஆம் திகதி செய்தி கூறுகையில் 40 உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது என்றும் அதில் 30 உடல்கள் வாகரை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது. சர்வதேச செஞ்சிலுவை சங்க அதிகாரிகளும், போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினரும் சேதம் அடைந்த 120 வீடுகளை பார்வையுற்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. (40 dead bodies have been recovered. Six babies below 6-month were killed, said medical sources stating that 30 dead bodies had been brought to Vaaharai hospital. SLMM officials and the ICRC visited the area where more than 120 houses were severely damaged.) ஆனால் 23உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டதாக போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரும் சர்வதேச செஞஞ்சிலுவை சங்கமும் தமக்கு தெரிவித்தாக அரசாங்க அமைச்சர் ரம்புக்வெல அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்கள் தொகை 125பேர் எனவும் அவர்களில் சிலர் படுகாயம் அடைந்து இருப்பதினால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சர்வதேச செஞ்சிலுவை சங்கமும், போர் நிறுத்த கண்காணிப்புகுழுவினரும் 23உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டதாக கூறும் வேளை 30உடல்கள் வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக புலிகளின் இணையதளமான தமிழ் நெற் தெரிவித்துள்ளது. தமிழ்நெற் கூறுவது உண்மையானால் அந்த 7உடல்களும் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினருக்கும் செஞ்சிலுவை சங்கத்தினருக்கும் ஏன் மறைக்கப்பட்டது? அந்த உடல்கள் யாருடையவை, புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வாகரை வைத்திய சாலையில் இருந்து அந்த உடல்களை மறைத்தவர்கள் யார்? இவைகளை வைத்து பார்க்கும் போது மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலைக்கு அருகாமையில் இருந்து புலிகள் மோட்டார் தாக்குதலை மேற்;கொண்டார்கள் எனவும் மக்களை மனிதகவசங்களாக பயன்படுத்தியுள்ளார்கள் என அரசாங்கம் கூறுவது பொய்யாக இருக்காது என்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகின்றது. மறைக்கப்பட்ட அந்த 7உடல்களும் மக்கள் மத்தியில் இருந்து மோட்டார் தாக்குதலை நிகழ்த்திய புலி உறுப்பினர்களாக இருக்கவேண்டும்.

புலி எனும் பெயரில் நயவஞ்சகமாக நடமாடும் நரிகள்

புலிகள் போன்றதொரு நயவஞ்சகமான அமைப்பினை உலகில் எங்கும் பார்க்க முடியாது. தமது தலைமை உல்லாசமாக வாழ வேண்டும் என்பதற்காக அப்பாவி இளைஞர்களை பலிகடாவாக்கி வந்தார்கள், தற்பொழுது தமது கிழக்கு மாகாண தளபதிகளை காப்பாற்றுவதற்காக வாகரையில் சிக்குண்டிருக்கும் அப்பாவி மக்களை மனித கேடயங்களாக்கி அவர்களின் பின்னால் இருந்து படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் தற்பொழுது மக்கள் அவர்களுடன் ஒத்துழைக்க மறுத்து வருவதினால் புலிகள் திட்டமிட்டே வாகரை மக்களை பழிதீர்த்துள்ளனர். கிளிநொச்சியில் உள்ள வல்லிபுனம் எனும் பகுதியில் பயிற்சிக்கு என மாணவிகளை அழைத்து வந்து அரச படையினரின் விமான தாக்குதலுக்கு எவ்வாறு புலிகள் அவர்களை இலக்காக்கினார்களோ அதே போன்று வாகரை மக்களை மனித கேடயங்களாக்கி அவர்களை படையினரின் தாக்குதலுக்கு புலிகள் இலக்காக்கி உள்ளனர். வாகரையில் மக்கள் மீது புலிகளுக்கு உண்மையாக அக்கறை இருக்குமானால் அவர்கள் விரும்புவது போன்று அவர்களை அரச படையினரின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் செல்வதற்கு அனுமதித்து இருக்கவேண்டும். சர்வதேச சமூகத்திற்கு தம்மை நியாயப்படுத்துவதற்காக குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 23இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ்மக்களை புலிகள் படையினருக்கு பலி கொடுத்துள்ளனர். தமிழ்மக்கள் புகலிடம் தேடியிருந்த இரண்டு பாடசாலைக்கும் அருகாமையில் 10 மீற்றர் தூரத்தில் இருந்து புலிகள் படையினரின் மாங்கேணி, கஜுவத்தை ஆகிய முகாம்கள்மீது மோட்டார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். புலிகளின் மோட்டார் குண்டுகள் வந்த திசையினை ரடார் கருவி மூலம் அளவிட்ட படையினர் அந்த பிரதேசத்தின் மீது மறு தாக்குதலை மேற்கொண்டனர். இரண்டு மணித்தியாலங்களாக படையினர் மேற்கொண்ட மறுதாக்குதலில் அந்த அப்பாவி மக்கள் துடி துடித்து இறந்து போனார்கள். காயப்பட்ட மக்கள் சிலருடன் நான் நேரடியாக தொடர்பு கொண்டதில் புலிகள் அவ்விடத்தில் இருந்து மோட்டார் தாக்குதலை மெற்கொண்டு விட்டு தப்பி சென்றதினை உறுதிப்படுதியுள்ளார்கள். புலி எனும் பெயரில் நரியை விட நயவஞ்சகமாக புலிகள் வாகரையில் நடந்து கொண்டுள்ளனர்.

புலிகள் இவ்வாறு நடந்து கொள்வது இது முதல் தடவை அல்ல. நவாலி தேவாலயத்திற்குள் மக்கள் தஞ்சம் அடைந்திருந்த பொழுது அந்த தேவாலயத்தின் கோபுரத்தில் இருந்து புலிகள் படையினரின் உலங்கு வாலூர்தி மீது கலிபர் ரக பீரங்கி கொண்டு தாக்கிவிட்டு மறைந்து கொண்டார்கள்.பின்னர் படையினர் நடத்திய தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்து இருந்த அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு இருந்தார்கள். இந்திய அமைதி படையினருக்கு எதிரான மோதல்களிலும் இலங்கை அரச படைகளுக்கு எதிரான மோதல்களிலும் அப்பாவி தமிழ் மக்களை தமது கவசங்களாக வைத்து தாக்குதலை புலிகள் நிகழ்த்தியுள்ளனர். இந்திய அமைதி படையினர் யாழ் வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியர்கள் உட்பட பல நோயாளிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பலர் கொல்லப்பட்டார்கள். இதனை புலிகள் இந்திய படையினருக்கு எதிராக பெரும் பிரச்;சாரமாக மேற்கொண்டார்கள். உண்மையில் நடந்தது என்னவெனில் புலிகள் வவத்திய சாலைக்குள் இருந்து இந்திய படையினருக்கு எதிராக தாக்குதல் நிகழ்த்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். தாக்குதல் வந்த திசையினை நோக்கி இந்திய படையினர் தாக்குதல் நிகழ்த்தியதில் வைத்தியர் ,நோயாளிகள் என பலர் கொல்லப்பட்டனர். இது மட்டும் அல்லாது கொக்குவில் இந்துகல்லூரி, புதுக்கோவில், இணுவில் கருணாகரபிள்ளையார் கோவில் ஆகிய இடங்களில் மக்களை அடைக்கலம் கோரியிருக்கையில் அந்த இடங்களின் கட்டிடங்களில் இருந்து இந்திய படையினர் மீது புலிகள் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றிருந்தனர். கொக்குவில் இந்து கல்லூரியில் தங்கியிருந்த மக்கள் இறுதியாக புலிகளை விரட்டும் அளவிற்கு அவர்கள் அந்த மக்களை மனித கேடயங்களாக பயபடுத்தினார்கள். இணுவில் கருணாகர பிள்ளையார் கோவில் கோபுரத்தில் இருந்து புலிகள் இந்திய படையினர் மீது மோட்டார் குண்டுகளை ஏவிவிட்டு தப்பி சென்றனர். இந்திய படையினர் மோட்டார் குண்டுகள் வந்த திசையினை நோக்கி மறுதாக்குதல் மேற்கொண்டவேளை கோவிலுக்குள் இருந்த மக்கள் கூக்குரல் இட்டவாறு அருகில் இருந்த தோட்டங்களுக்குள் சென்று படுத்துகொண்டனர். இவ்விடத்தில் பலர் படுகாயம் அடைந்து இருந்தார்கள். இதே போன்ற ஒரு நயவஞ்சகமான திட்டத்தினை தீட்டி வாகரை மக்களை புலிகள் அநியாயமாக பலி கொடுத்துள்ளார்கள்.

கடந்த வியாழக்கிழமை (02-Nov-2006) விமானப்படையினர் கிளிநொச்சி வைத்திய சாலையினை அண்மித்த பகுதிகள் மீது குண்டுதுதாக்குதலை மேற்கொண்டு இருந்தனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 கொல்லப்பட்டிருந்தார்கள். அத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 500இற்கும் மேற்பட்ட நோயாளிகள் தமது உயிர்களை பாதுகாப்பதற்காக அலறி அடித்துக்கொண்டு ஓடியிருந்தனர். அரச விமானப்படையினர் வைத்தியசாலை மீது குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக புலிகளின் ஊடகங்கள் பிரச்;சாரத்தினை மேற்கொண்டன. சம்பவ இடத்திற்கு சென்ற போர்நிறுத்த கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் அது தொடர்பாக கூறுகையில் விமானப்படையினர் வீசிய குண்டுகள் வைத்தியசாலையினை அண்மித்த பகுதியிலேயே வீழ்ந்ததாகவும் குண்டு வெடித்த அதிர்விலேயே வைத்திய சாலையின் கூரைகளும் யன்னல்களும் சேதமானதாக கூறியுள்ளார்கள். புலிகள் தமது பிரதான ஆயுத கிடங்குகளையும், பீரங்கிகளையும் வைத்தியசாலைக்கு அருகாமையிலே வைத்துள்ளார்கள். வைத்தியசாலைக்கு அருகாமையில் இவைகளை வைத்திருந்தால் படையினரின் விமானத்தாக்குதல்களில் இருந்து அவைற்றினை பாதுகாத்து கொள்ள முடியும் என்ற நயவஞ்சக நோக்கத்திலேயே புலிகள் இவ்வாறு செய்துள்ளனர். மொத்தத்தில் நோயாளிகளை கூட தமது சுயநலத்திற்காக கவசங்களாக பாவிக்கும் கீழ்த்தரமான செயலை புலிகள் செய்து வருகின்றனர்.

சம்பூர், மூதூர் பகுதிகளில் இருந்து வெளியேறி வாகரையில் தங்கியிருந்த மக்கள் பலர் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வருவதற்கு கடும் முயற்;சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் புலிகள் அவர்களை அனுமதிக்கவில்லை. அப்படியிருந்த போது 70பேர் மட்டில் அருகில் இருந்த இராணுவ முகாம்களில் சென்று சரணடைந்தனர். புலிகள் தமது கிராமங்களுக்குள் புகுந்து தற்பொழுது பாதுகாப்பு அரண்களை அமைத்து வருவதினால் தாம் பயத்தில் அங்கிருந்து வெளியேறியதாக அந்த மக்கள் தெரிவித்தனர். தமது கிராமங்களுக்குள் இருந்து புலிகள் படையினரின் முகாம்கள் மீது தாக்குதலை மேற்கொண்டால் படையினரின் மறுதாக்குதலுக்கு தாம் இலக்காகவெண்டிய நிலை உருவாகும் என்ற அச்சம் காரணமாகவே அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி இருந்தனர். சம்பூரை படையினர் கைப்பற்ற முனைந்த பொழுது அந்த பகுதிகளில் இருந்த மக்கள் முன்கூட்டியே வெளியேறியிருந்தனர். இதனால் புலிகளினால் மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தாக்குதலை மேற்கொள்ள முடியாதுபோனது. அரசபடைகளுக்கு புலிகளின் இலக்குகளை தாக்குவது இலகுவாக இருந்த்து. தற்பொழுது வாகரையில் பெருமளவிலான மக்கள் தங்கியிருப்பதினால் படையினருக்கு புலிகளின் இலக்;குகளை தாக்குவது கடினமாக உள்ளது.சம்பூரில் விட்ட தவறினை புலிகள் வாகரையில் விடமாட்டார்கள் என நான் கூறியிருந்தேன். அதே போன்று புலிகள் வாகரை பகுதிகளில் உள்ள மக்களை தமக்கு பாதுகாப்பு கவசங்களாக வைத்துள்ளார்கள். வாகரையில் கொல்லப்பட்ட 23 அப்பாவி மக்களும் படையினரின் பலகுழல் மோட்டார் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் என்ற போதும் இதற்கு பின்னால் புலிகளின் நயவஞ்சக நோக்கம் இருந்துள்ளது என்பது தெளிவாகின்றது. காயம் அடைந்து கொழும்பு வைத்தியசாலைக்கும், மட்டக்களப்பு வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்ட மக்களின் வாக்கு மூலங்கள் புலிகளின் நயவஞ்சக செயலை உறுதிப்படுத்தியுள்ளது.

வாகரை அகதிகள் முகாமில் இருந்து புலிகள் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டதற்கான அடையாளங்கள் இல்லை,போர் நிறுத்த கணகாணிப்பு குழு(ளுடுஆஆ)

வாகரயில் மக்கள் தஞ்சம் கோரியிருந்த பாடசாலைக்கு அருகாமையில் புலிகளின் ஆயுத தளபாடங்கள் இருந்ததிற்கான அடையாளங்கள் இல்லை என போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் பேசாளர் ஹெலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் சம்பவம் இடம் பெற்று சில மணித்தியாலங்களின் பின்னரே தமது கண்காணிப்பாளர்கள் அங்கு சென்றதாக அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ((Sri Lanka monitoring mission Acting Spokeswoman Helen Olafsdotir told the Daily News that none of the civilians fleeing Uncleared area in Vaharai had not complained about military installations close to the IDP camp.”The truce monitors who visited the scene had not seen any sign of military installation close the scene” she added.She said truce monitors visited the scene a few hours after the incident) அத்துடன் வாகரையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மக்கள் எவரும் புலிகள் அங்கு ஆயுத தளபாடங்களை வைத்திருந்தார்கள் என தம்மிடம் முறைப்பாடுகள் செய்யவில்லை என தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த போர் நிறுத்த கண்காணிப்பாணர்கள் புலிகளின் சதிதிட்டங்களை அறிந்து கொள்வதற்கு அவர்களுக்கு இன்னும் சில வருடங்கள் தேவையாகும். மற்றும் ஐரோப்பாவினை போன்று மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை கூறும் சூழல் இல்லை என்பதினை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் உள்ள பாடசாலைகளில் தஞ்சம் அடைந்திருந்த மக்களிடம் சென்று புலிகள் இங்கு இருந்து மோட்டார்களை ஏவினார்களா என கேட்டால் அவர்கள் எப்படி உண்மையினை கூற முடியும் என்பதினை போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மற்றும் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் அங்கு சென்ற கண்காணிப்பு குழுவினருக்கு பாடசாலைக்கு அருகாமையில் இருந்து புலிகள் மோட்டார் தாக்குதலை நிகழ்த்திவிட்டு அங்கிருந்து அங்கிருந்து ஆயுதங்களுடன் வெளியேறுவதற்கு அவர்களுக்கு ஐந்து நிமிடம் போது என்பதினையும் கண்காணிப்பு குழுவினர் புரிந்து கொள்ளவேண்டும்.

புலிகள் பாடசாலைக்கு அருகாமையில் இருந்து மோட்டார் தாக்குதலை மேற்கொண்டதினை உயிர் தப்பிய பெண் வெளிநாட்டு செய்தி ஸ்தாபனத்திற்கு முறைப்பாடு

வாகரை அகதி முகாமில் இருந்து புலிகள் முதலில் தாக்குதலை நிகத்தினார்கள் என வாகரையில் அகதி முகாமில்இருந்து உயிர் தப்பிய பெண் ஒருவர் ஐரோப்பாவினை மையமாக கொண்டு உலகெங்கிலும் இருந்து இயங்கி வரும் ரொயிட்ரேஸ் (Reuters))செய்தி ஸ்தாபனத்தின் நிருபருக்கு முறைப்பாடு செய்துள்ளார். வாகரை முகாமில் இருந்து படையினரின் தாக்குதலில் உயிர் தப்பி தற்பொழுது படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களை ரொயிற்ரேஸ் நிருபர் சென்று சந்தித்த பொழுது புலிகள் முதலில் அகதி முகாமில் இருந்து மோட்டார் தாக்குதலை நிகழ்த்தியாக தெரிவித்துள்ளனர்.அவர்களின் தனது பெயரினை கூற விரும்பாத பெண் ஒருவர் கூறுகையில் முதலில் தாம் தங்கியிருந்த முகாம் அருகில் முதலில் பீரங்கி சுடும் சத்தங்கள் கேட்டது என்றும் உடனே தான் பதுங்கு குழிக்குள் பாய்ந்து கொண்டார் எனவும் அதனை தொடர்ந்து படையினர் தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பித்ததும் பாரிய வெடிச்சத்தம் ஒன்று முகாமில் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். புலிகள் தற்பொழுது தமது கட்டுப்பாட்டில் இருக்கு மக்களை மனித கேடயங்களாக பாவிக்க ஆரம்பித்து இருப்பதினால் கடந்த வெள்ளிக்கிழமை (10-Nov-2006) மன்னாரில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான உயிலங்குளத்தில் வசித்து வந்த 700 மக்கள் மட்டில் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளார்கள் .கடந்த மாதம் மன்னாரில் புலிகளுக்கு படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றவேளை இவர்கள் மடு பகுதியில் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள்.

படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல்களினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கியிருக்கும் அந்த பாவப்பட்ட மக்கள் குறித்து புலிகளும், அரச படையினரும் கவனம் எடுக்கவேண்டும். அந்த மக்களின் பாதுகாப்பினை கவனத்தில் கொண்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.ஒரு வேளை உணவுடன் ஊசலாடிக்கொண்டு இருக்கும் அந்த உயிர்கள் மீது அனுதாபம் காட்டுங்கள், அவர்களை காப்பாற்றுங்கள்.

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

நவாலி தேவாலயத்திற்குள் மக்கள் தஞ்சம் அடைந்திருந்த பொழுது அந்த தேவாலயத்தின் கோபுரத்தில் இருந்து புலிகள் படையினரின் உலங்கு வாலூர்தி மீது கலிபர் ரக பீரங்கி கொண்டு தாக்கிவிட்டு மறைந்து கொண்டார்கள்.

அட.. அப்பிடியே.. அந்த நேரம் அங்கை இடம்பெயந்து வந்து நிண்ட எனக்கு தெரியாமல் அடிச்சிருக்கிறாங்கள்..

8:06 AM  

Post a Comment

<< முகப்பு