ஜனநாயகம் பற்றிப் பேச புலிகளுக்கு அருகதையில்லை
ஜனநாயகம் பற்றிப் பேச புலிகளுக்கு அருகதையில்லை! மன்னிப்புக் கோரிக்கொண்டே முஸ்லிம்களுக்கு கொடுமை ...
ஜனநாயகம் பற்றிப் பேச புலிகளுக்கு அருகதையில்லை! மன்னிப்புக் கோரிக்கொண்டே முஸ்லிம்களுக்கு கொடுமை புரிகின்றனர்!! அமைச்சர் பேரியல் பி.பி.சி.க்கு பேட்டி
புலிகள்; ஜனநாயகத்தைப்பற்றி மிக அதிகமாக பேசுகிறார்கள், ஆனால் அது பற்றிப்பேச அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடித்தவர்கள் அவர்கள்தான். முஸ்லிம்களுக்கும் அது தாயக பூமிதான். ஆனால் விரட்டியடிக்கப்பட்ட அந்த மக்கள் புத்தளத்தில் இன்னும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், விரட்டியடிக்கப்பட்ட அவர்கள் பற்றி புலிகள் யோசித்ததேயில்லை என்று அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் பி.பி.சி தமிழ் சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்.
ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் அரசாங்க தூதுக்குழு சார்பாக கலந்துகொண்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியும், அமைச்சருமான திருமதி பேரியல் அஷ்ரஃப், நடைபெற்ற பேச்சுவார்த்;தை தொடர்பாக, நேற்று பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (பி.பி.சி) தமிழ் சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில்@
பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து விட்டன என்று நான் கூறவில்லை. 20 ஆண்டு காலங்கள் யுத்தம் செய்துவிட்டு திடீரென ஒரு நாள் பேச்சுவார்த்தைக்குச் சென்று அதில் எல்லா முடிவுகளும் எட்டப்பட்டுவிடும் எனக் கூற முடியாது. என்ன காரணங்களுக்காக யுத்தம் நடைபெறுவதாக கூறப்படுகிறதோ அவைகளில் ஒன்றுக்குக்கூட இன்னும் முடிவு காணப்படவில்லை. அந்தவகையில் இவ்வாறு வெளிப்படையாக இரு தரப்பினரும் சந்தித்துப் பேசக்கிடைத்ததையே புரிந்துணர்வை வளர்க்கும் ஒரு செயற்பாடாக கருத வேண்டியுள்ளது.
துரதிஷ்டவசமாக இதைச்செய்தால்தான் தாம் அடுத்த பேச்சுக்கு வருவதாக புலிகள் கூறியமை கவலைதரும் ஒரு விடயமாகும். முகமாலைச் சோதனைச்சாவடியைத் திறக்கவேண்டுமென்று புலிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதைத் திறக்க முடியாததொரு நிலையிலுள்ளனர். ஒரு போதும் அதைத் திறக்க முடியாதென அரசு கூறவில்லை. அடுத்த பேச்சின் போது அதுபற்றி ஆராயலாம் என்றே அரசாங்கம் கூறுகிறது.
என்னதான் எங்களுக்குள் நடந்திருந்தாலும் இனிவரும் காலங்;களில் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்கின்ற நிலைப்பாடுகளோடுதான் இனிவரும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டுமென்பதே இரு தரப்பினருக்கும் தேவையானதொரு விடயமாக இருந்தது.
எது நடந்தாலும் பேச்சுவார்த்தைகளில் இருதரப்பும் பங்குபற்ற வேண்டும். பேச்சுவார்த்தைகளின்றி இந்தப்பிரச்சனையை வெல்ல முடியாது என்பதை 20 ஆண்டுகள் பார்த்துவிட்டோம். புலிகள் தமது தாக்குதலை நிறுத்தினால் முகமாலையை திறக்க அரசு தயாராகவேயுள்ளது.
முகமாலை விடயங்கள் பற்றி அதிகமாக அங்கு பேசப்பட்டபோது முஸ்லிம்களின் பிரச்சனைகள் பற்றிப் பேசக்கிடைக்கவில்லை. ஆனால் அங்கு வந்திருந்த புலிகளின் ருத்ரகுமார் என்பவர் ஜனநாயகம் பற்றி மிக அதிகமாக பேசினார். புலிகள் முன்வைத்திருந்த ~இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையில்| முஸ்லிம்களுக்கு மிக நல்ல வசதிகளை கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். அந்த வேளையில் நான் பேசாமலிருந்திருந்தால் அது எனது சமூகத்துக்கு செய்யும் துரோகமாக அமைந்திருக்கும்.
எனவே நான் புலிகள் தரப்பினரிடம் கூறினேன், நீங்கள் ஜனநாயகத்தைப்பற்றி மிக அதிகமாக பேசுகிறீர்கள். ஆனால் அது பற்றிப்பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடித்தவர்கள் நீங்கள். முஸ்லிம்களுக்கும் அது தாயக பூமிதான். ஆனால் விரட்டியடிக்கப்பட்ட அந்த மக்கள் புத்தளத்தில் இன்னும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பற்றி நீங்கள் யோசித்ததேயில்லை. சரி, அந்த நிகழ்வுகளுக்காக மன்னிப்புக் கேட்பதாக கூறினீர்கள். நாங்களும் மன்னித்தோம். ஆனால் மூதூரில் என்ன செய்தீர்கள்? வடக்கிலிருந்துதான் முஸ்லிம்களை விரட்டியடித்தீர்கள், கிழக்கிலிருந்துமா எங்களை அடித்து விரட்டப்பார்க்கிறீர்கள்? அதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கலாமா?
ஆகவேதான் நான் புலிகளிடம் கூறினேன் ஜனநாயகத்தைப் பற்றிப்பேச உங்களுக்கு எந்தவித அருகதையும் இல்லை. காரணம் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் அப்படியானது. அதிஷ்டவசமாக மூதூர் சம்பவத்தின் போது அங்கு இராணுவம் இருந்தது. இல்லாவிட்டால் அங்கும் முஸ்லிம்களுக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த நிலைதான் ஏற்பட்டிருக்கும். எனவேதான் நான் புலிகளிடம் கூறினேன், நீங்கள் ஜனநாயகத்தைப்பற்றிப் பேசுவதற்கு முன்னர், அதுபற்றிய ஒரு முறைமையை, திட்டத்தைச் செய்து காட்டவேண்டும். ~~முஸ்லிம்களை எவ்வளவு நன்றாக நாம் கவனிக்கிறோம் என்று பாருங்கள். எங்களுக்கு கிடைப்பது போன்ற உரிமைகளையே நாம் அவர்களுக்கும் வழங்குகிறோம்|| என்பதை நீங்கள் செய்து காட்டி நிரூபித்துவிட்டு விட்டுத்தான் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயகம் பற்றி பேச முடியும். அதை விடுத்துவிட்டு, அங்கு செய்கின்ற அநியாயங்களையெல்லாம் செய்துவிட்டு இங்து வந்து ஜனநாயகம் பற்றி பேசுவதே நியாயமற்றதொரு விடயம்.
அதேபோன்றுதான் யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றியும் புலிகள் நிறையவே பேசினார்கள். இந்த ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை இது முஸ்லிம்களுக்கு எந்தவிதமான நன்மைகளையும் வழங்காத ஒரு ஆவணமாகும். எல்லாவிதமான அநியாயங்களையும் செய்துவிட்டு முஸ்லிம்களுடன் சுமூகமாக இருப்பதாக புலிகள் கூறுவது எந்தவிதத்திலும் பொருத்தமானதல்ல. முஸ்லிம்கள் ஒருபோதும் உங்களின் தேவைகளையோ, உரிமைகளையோ மலினப்படுத்தவில்லை என்று புலிகளிடம் கூறினேன் என்றார் அமைச்சர் பேரியல் அஷ்ரப்.
மேலும் அவர் கூறுகையில், முஸ்லிம்கள் உங்களோடு சேர்ந்திருந்தவர்கள்தான், நீங்கள்தான் தேடிச்சென்று ~~நீ முஸ்லிம் நீ வேறானவன்|| என்று கூறினீர்கள். அதனால்தான் இந்ந நிலை உருவானது. உங்களோடு எமக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. எனவே நீங்களும் எங்களை பிரச்சனைப்படுத்த வேண்டாம். ஒற்றுமையாக செயற்படுவதாக இருந்தால், அவ்வாறு இயங்குவோம். அப்படியில்லையென்றால் நீங்கள் உங்கள் பாதையில் செல்லுங்கள், நாம் எமது பாதையில் செல்கிறோம்.
இவைகள்தான் முஸ்லிம்கள் தொடர்பாக புலிகளிடம் நான் கூறிய விடயங்களாகும் என்றார் அமைச்சர் பேரியல்.
புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ் செல்வன் இதுபற்றிக் கூறும் போது, பேரியல் அம்மா மிகவும் உணர்சிவசப்பட்டு பேசினார். அவர் உணர்ச்சிவசப்படுவது நியாயம்தான். நிறையப் பிரச்சனைகள் நடந்துள்ளனதான். நாங்கள் இவைபற்றி பேசவேண்டும் என்றார்.
அதேவேளை தமிழ்செல்வன் இதன்போது, முஸ்லிம்களுக்கு இனி இவ்வாறான பிரச்சனைகள் எதுவும் இடம்பெறாது என்கின்ற உத்தரவாதத்தினையும் தன்னிடம் வழங்கினார் என்றார் அமைச்சர் பேரியல் அஷரப்.
தகவல்: அரச தகவல் திணைக்களம் 03.11.06

2 மறுமொழிகள்:
அகரா அய்யா,
இலங்கை தமிழ் பேசும் இஸ்லாமியர்கள், யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதன் காரணம் என்ன என்பதை சொல்லுங்கய்யா.
பாலா
துரோகம்தான் காரணம், விட்டிருந்தால் யாழ்ப்பாணத்திலும் ஒரு ஜீலை83 கலவரத்தை நடத்தி இருக்கலாம், புலிகள் தடுத்து விட்டார்கள். அந்த ஆத்திரம்தான்.
Post a Comment
<< முகப்பு