ஏன் ஜெனீவா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது?
ஜெனீவா பேச்சுவார்த்தை – 2 ஏன் தோல்வியில் முடிந்தது.?
ஜெனீவாவுக்கு பேச்சுவார்த்தைக்குச் சென்ற விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக்குழு வெறுங்கையுடன் நாடு திரும்பியது துரதிஷ்டவசமானதே. ஆனால் இதை எதிர்பார்த்த எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. என்னால் அடிக்கடி கூறப்படுவது போல் விடுதலைப் புலிகள் இனப்பிரச்சினைக்கு ஓர் தீர்வு காண்பதில் அக்கறையில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. முதலாவதும் முக்கியமானதும் இனப்பிரச்சினை தீர்ந்து விட்டால் விடுதலைப் புலிகள் என்ன செய்வார்கள்? எங்கே போவார்கள்? என்பது ஒன்று. இரண்டாவதாக தலைவர்களுக்கு இதுவரை காலமும் சர்வதேச சமூகம் வழங்கிவந்த அங்கீகாரம் உலக நாட்டுத் தலைவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் தொடர்ந்து இவர்களை சந்திப்பார்களா? அத்தோடு இன்று அனுபவிக்கும் அதிகாரத்தை தொடர்ந்து அனுபவிப்பார்களா என்பதாகும். விடுதலைப் புலிகள் தலைமை பீடத்திலிருந்து பெரும் அதிகாரத்தைப் பெற்று, பயத்துடன் வாழும் ஏழைத் தமிழ் பொது மக்களை தமது இரும்புப் பிடியில் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் உள்ளுர் தலைவர்கள் தமது அரசர் பாணியிலான பதவிகளை இழக்க சம்மதிப்பார்களா? இத்தகைய சூழ்நிலையில் நாடு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அண்மித்திருக்கும் இவ்வேளையில் இந் நிலையால் பாதிக்கப்படு;ம் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அனைவரும் இப் பேச்சுவார்த்தையை குழப்பவே செய்வார்கள்.
இதுதான் ஜெனீவாவில் நடந்தது. மிகப் பெரியவொரு குழுவோடு அரச தரப்பினர் ஜெனீவா சென்றது அவர்களின் அப்பாவித்தனமா அல்லது அளவுக்கு மீறிய நம்பிக்கையா. விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் யாரோ ஒருவருடைய செலவில் ஒரு உல்லாசப் பிரயாணமே. திரு. சு.ப. தமிழ்ச்செல்வனை நான் குறைகூற மாட்டேன் ஏனெனில் பேச்சுவார்த்தைக்குப் புறப்படுவதற்கு முன் தாம் ஏ-9 பாதை திறப்பது உள்ளிட்ட மனிதாபிமானப் பிரச்சினைகள்பற்றி பேசப்போகிறோம் என்று உண்மையை கூறியிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் எழுத்துமூலமாக ஏ-9 பாதை திறப்பதை பற்றி பேசும்படி திரு சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பணிவான வேண்டுகோளை விடுத்தனர். ஏனெனில் திட்டமிட்டு அரசு யாழ்ப்பாண மக்களை பட்டினிபோட்டு சாகடிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர். ஏ-9 பாதை மூடப்பட்டு இது மூன்றாவது மாதம். மிக முக்கியமான காலகட்டத்தில் இவர்களில் ஒருவர் தன்னும் யாழ்ப்பாணத்தில் இல்லாது தமிழ் நாட்டில் இருந்தனர். பல ஸ்தாபனங்களும் பொதுமக்களும் பல்வேறு பொருள் தட்டுப்பாடுகள் பற்றி அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தவேளை தாம் எதுவித பாதுகாப்பும கொடுக்கமாட்டோம் என விடுதலைப்புலிகள் மிரட்டியிருந்தும்கூட, அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் உதவ விடாது தடுத்தனர். உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்ததையும் பொருட்படுத்தாது உணவுக் கப்பல்களை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்ல முன்வந்த மாலுமிகளுக்கு தமிழ் மக்கள் தலை வணங்க வேண்டும்.
சில உண்மைகளை இருட்டடிப்பு செய்த சில ஊடகங்கள் சர்வதேச சமூகத்தை தப்பான வழிக்கு இட்டுச் செல்ல முடியாது. ஏனெனில் உண்மை நிலையை எடுத்துக்கூறக் கூடிய முகவர்கள் அவர்களிடம் உண்டு. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டுக்கு முழுப் பொறுப்பையும் விடுதலைப் புலிகளே ஏற்க வேண்டும். எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட இன்னொரு விடயம் விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் நியமனம் பெற்ற பல்வேறு கூட்டுறவுச் சங்கத்தலைவர்களில் சிலர் சில பொருட்களை கறுப்புச் சந்தைக்கு அனுப்பியுள்ளனர். நிச்சயமாக கறுப்புச் சந்தை வியாபாரத்தை இவர்களால் கட்டுப்படுத்தியிருக்க முடியும். உண்மையிலேயே மக்களுக்காக விடுதலைப் புலிகள் அனுதாபப்பட்டால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கொடியுடன் கப்பல்கள் யாழ்ப்பாணம் செல்வதை தடுத்திருக்கமாட்டார்கள். ஏ-9 பாதை யாழ்ப்பாணத்துக்குரிய ஒரேயொரு தரைப்பாதை. மிக முக்கியமானதாக இருந்தும் இப்பாதையை எதுவித உரிமையுமின்றி பல ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் மூடி வைத்திருந்தனர். அவ்வேளையில் எத்தனை பெறுமதிமிக்க உயிர்கள் இழக்கப்பட்டன. 44 பிரயாணிகளுடனும், விமானிகளுடனும் மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த விமானம் தகர்க்கப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது. இப்பாதை மூடப்பட்டிருப்பதால் மக்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். ஏ-9 பாதை உடனடியாக திறக்கப்பட வேண்டும் என்பதை மிக விநயத்துடன் வேண்டும் அதேவேளை விடுதலைப் புலிகளும் அப்பாதையில் மக்களுக்கும், பண்டங்களுக்கும் வரி விதிக்கப்படமாட்டாது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.
ஏ-9 பாதையை திறக்கும்படி விடுதலைப் புலிகள் போராடுவது பொது மக்களின் நன்மை கருதியல்ல. சட்ட விரோதமான நியாயப்படுத்த முடியாத கடும் வரிகளை விடுதலைப் புலிகள் விதித்து வந்ததை மக்கள் மூன்று மாதத்துக்குள் மறந்திருக்கமாட்டார்கள். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இவ்வாறு வரி விதிப்பது எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. ஏ-9 வீதியில் விடுதலைப் புலிகளின் சட்டவிரோதமான செயற்பாடுகளை சர்வதேச சமூகம் அறிந்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். விளையாட்டுப் பொருட்கள், சட்டைகள், சேலைகள், சொக்கலட், அப்பிள் பழம் போன்றவற்றைக்கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. சமய சம்பந்தமான சிலைகளுக்குக் கூட வரி விதித்தனர். மேலும் கூறின் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனமும் வரி செலுத்த வேண்டியிருந்தது.
ஒவ்வொரு பிரயாணியும் அவ்வாறே.
புதிய பொருட்கள் அத்தனையும் வரி விதிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
பொருட்கள் ஏற்றிச்செல்லும் அத்தனை வாகனங்களும் ஏ-9 பாதையில் மூன்று இடத்தில் பொருட்களை இறக்கி பரிசோதனையின் பின் மீண்டும் ஏற்ற வைக்கப்பட்டன. அதனால் ஏற்படும் செலவு நுகர்வோர் மீது திணிக்கப்பட்டது. இதனால்தான் யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டவைகளிலும் பார்க்க கூடுதலான விலைக்கு விற்கப்பட்டது. ஏழை விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் த.தே.கூ பா.உறுப்பினர்கள் இந்த விடயத்தை அறிந்திருக்க வேண்டும்.
புதிய,பழைய வாகனங்கள் தொலைக்காட்சி, ரேடியோ போன்றவை ஆடம்பர பொருட்களாக கணிக்கப்பட்டு, கடும் வரிக்கு உள்ளாக்கப்பட்டன.
வெளிநாட்டில் தஞ்சம் கோரியோர் தமது உறவினர்களை சந்திக்க வரும் வேளையில், தாம் குடியேறிய நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு பணம் செலுத்த தவறியவர்களிடமிருந்து கடந்த காலத்துக்குரிய கொடுப்பனவு உட்பட முழுத் தொகையையும் அறவிட்டனர். தவறும் பட்சத்தில் பணம் வழங்கும் வரை கடவுச்சீட்டை வழங்காது தடுத்து வைத்திருந்தனர்.ஏ-9 பாதையை தவிர்த்து விமானம் மூலம் சென்றவர்கள் தம் வீட்டையடைந்து 24 மணித்தியாலயத்திற்குள் விடுதலைப்புலிகளின் வரி அறவிடுவோர் அவர்களிடம் உரிய வரியை அறவிட்டனர்.
தினமும் தம் பணி முடிந்ததும் சேரும் பெரும் தொகையான பணத்தை கோனிப்பைகள் பலவற்றில் நிரப்பி தமது தலைமை காரியாலயத்துக்கு எடுத்துச் சென்றனர். இந்த வாய்ப்பை இழந்தமையே விடுதலைப் புலிகளினதும், த.தே.கூ பா.உ களினதும் பெரும் கவலையாகும். இத்தகைய குற்றச்சாட்டுக்களின் ஒன்றேனும் பா.உ களால் பிரஸ்தாபிக்கப்படவில்லை.
விடுதலைப் புலிகள் வரி எதுவும் அறவிடாது பொருட்கள் எதனையும் எடுத்துச் செல்ல அனுமதித்து ஏ-9 பாதையில் எதுவித ஆட்கடத்தலிலும் ஈடுபடாது முகமாலை பாதுகாப்பு அரண்களை தாக்காது விடுவார்களேயானால் அரசு ஏ-9 பாதையை மூடிவைக்க எதுவித நியாயமுமில்லை. இவற்றை தவிர்ப்பதாக விடுதலைப்புலிகள் பிரகடனப்படுத்தி சில மணி நேரத்துக்குள் அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக் கட்டத்தில் சகிப்புத்தன்மையின் எல்லையையும் மீறி துன்பப்படும் ஏழை மக்கள் மீது விடுதலைப் புலிகள் யதார்த்தத்தை உணர்ந்து அனுதாபம் காட்டும்படியும் வேண்டுகிறேன்.நோர்வே அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது இனப்பிரச்சினை தீர்வு ஐக்கிய இலங்கைக்குள்ளாகவும், ஒஸ்லோ டோக்கியோ ஆகிய பிரகடனங்களின் அடிப்படையில் சமஷ்டி முறையான தீர்வாகவும் அமையவேண்டுமென தனது ஆரம்ப உரையில் கூறியுள்ளார். சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டையே திரு. எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் பிரதிபலித்துள்ளார் என்பது இங்கு தெளிவாகிறது. இதுவே இந்திய அரசின் நிலைப்பாடுமாகும். திருவாளர்கள் கோபால்சுவாமி, நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் இந்தியஅரசியல் சாசனத்தின் கீழ் தமக்கில்லாத அதிகாரத்தை எமக்கு வழங்க வேண்டுமென்று கேட்க முடியாது. ஜெனீவாவின் பேச்சுவார்த்தையின் போது அரச பிரதிநிதிகளும் இதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டில் சாதகமான சில மாற்றங்கள் செய்வதாக தெளிவுபடுத்தினர். ஐ.தே.க யும் ஸ்ரீ.ல.சு.க யும் இனப்பிரச்சினை தீர்வில் உண்மையான அக்கறையை காட்டியுள்ளனரே அன்றி திரு.சு.ப தமிழ்ச்செல்வன் கூறுவது போல் ஐ.தே.க மந்திரி பதவிக்காக அலையவில்லை. விடுதலைப்புலிகள் அரைவேக்காடு சட்டத்தரணிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் ஆலோசனை பெறக்கூடாது. இன்றைய சூழ்நிலையில் மிகப் பொருத்தமான தீர்வு எதுவென்பதை உலகம் முழுவதும் பரவியுள்ள அறிவாளிகள் உள்ளனர். அவர்களின் ஆலோசனையை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும்.
‘எம் மக்கள்’ ‘எம் மக்கள்’ என திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் அழைப்பது போல் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் மீது உண்மையான அன்பிருந்தால் அவர்கள் உடனடியாக பகிரங்கமாக தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். இலங்கையர்கள் தமிழர்களோ, சிங்களவர்களோ, இஸ்லாமியர்களோ அவர்களோடு சர்வதேச சமூகமும் இதை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கும் சமாதானமும் இலங்கையில் நிலைநாட்டப்படும்.
தமிழ்ச்செல்வன் போர் முரசு கொட்டுவதை நிறுத்த வேண்டும்.
வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூட்டணி

0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு