இலங்கை தலித் மக்களின் அரசியல்

தலித் மக்களுக்கான அரசியல் அறிக்கையும்; அவர்கள் பட்ட படுகின்ற துயர நினைவுகளும்

இலங்கை தலித் மக்களின் அரசியல் சமூகப் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டுக் கழகம் (பிரான்ஸ்)

ஜெர்மனி ஸ்ருட்கார்ட் நகரத்தில் 11,12 ஆகிய இருதினங்களில் இலங்கையர் ஜனநாயக முன்னணியினரால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட அறிக்கை.


உலக மக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் என்பது அரசு, சொத்து, குடும்பம் எனப் பிரிவினைகள் தோன்றியபோதே நிலை பெறத் தொடங்கியதாக நாம் வரலாறுகள் மூலமாக அறிகிறோம். இவ்வாறான சமூக வேறுபாடுகளை பொருளாதார (வர்க்க) வேறுபாடாகவும், பாலியல் வேறுபாடுகளெனவும் இருவகையாகப் பிரிக்கலாம். இந்த வகையில் உலகிலுள்ள பல சமூகங்களுக்கும், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் சமூகங்களுக்குமிடையே அடிப்படை வேறுபாடுகள் உள்ளது. உலக சமூகங்களுக்கிடையேயான பொதுவான வர்க்க, பாலியல் வேறுபாட்டை 'வர்ண சாதிய' அடிப்படையில் மாற்றிய நிகழ்வானது இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் சமூகங்களுக்குள்தான் நிலைத்து நீடிக்கிறது.

பிறவியின் அடிப்படையில் தொழில் என்பது உலகில் எல்லா சமூகங்களுக்குள்ளும் நிலவியதொன்றுதான்.!! ஆனால் ''வர்ணச் சமூகமானது'' தொழிலை பிறவி அடிப்படையில் ஒதுக்கியது மட்டுமல்லாது, அதெற்கென சடங்கு, சம்பிரதாயம் எனும் கோட்பாட்டு நியாயம் வழங்கியதோடு, திருமண உறவுகளையும் சாதிக்குள் முடக்கி அதில் எவ்வித மீறல்களும் நிகழ்ந்து விடாது கட்டிக் காப்பாற்றி வரும் சமூகமாகத் திகழ்வதும் இந்து மத ஆதிக்கம் நிலவும் சமூகங்ளில் மட்டுமே.

புருஷன் என்கிற உடலை நான்காக வகுத்து நான்கு வருணங்கள் படைக்கப்பட்டன எனப் பாப்பனர்கள் வேதம் படைத்தனர். பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு வர்ணங்களில் பார்ப்பனர் மேலானவர் சூத்திரர் கீழானவர் என வரிசைப்படுத்தி அவர்களுக்குரிய தொழிலையும் தொடக்ககால வேத (இருக்கு) மதம் முன்மொழிந்ததென்றாலும் இந்த நான்கு வர்ணங்களும் பிறவியோடு இறுக்கமாகத் தொடர்புப் படுத்தப்படவில்லை. கி. மு 185 க்கு பிறகு பௌத்த சமண மதங்களை வீழ்த்திப் பார்ப்பனர்கள் அரியணை ஏறிய பின்பு உருவாக்கப்பட்ட மனு நீதியில் தான் பிறவியோடு தொழில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் பார்ப்பன- சத்திரியரின் மேலாண்மை உறுதி செய்யப்பட்டது. வருணம் சாதியாக மாறிய கதை இதுதான் என்கிறார் அம்பேத்கர்.

அம்பேத்கரின் இந்திய 'மனு நீதி' யும் வர்ணம் சாதியாக மாறிய கதையின் வளர்ச்சியானது யாழ்ப்பாணத்தில் வேர் ஊன்றியதற்கான ஆதரங்களை ' யாழ்ப்பாண வைபவ மாலை ' எனும் நூலில் காணலாம்.

யாழ்ப்பாண இராச்சியமானது 15 ஆம் நூற்றாண்டில் போத்துக்கேயரின் 40 வருட ஆட்சிக்குப் பிற்பாடு ஒல்லாந்தர் 1658 இல் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சம்பவம் குறித்து ' யாழ்ப்பாண வைபவ மாலையில்' உள்ள கீழ் வரும் செய்யுள் விபரிக்கிறது.

திருமருவு யாழ்ப்பாண நாட்டையாண்ட
சிங்கையாரியன் குலத்தை தீங்கு செய்து
பெருமையுடன் காலயுத்தி யானி மாசம்
பிலிப்பனெனும் பறங்கிக்கிளை யரசை யாண்டு
குருநெறியும் மனுநெறியுமில்லா தாக்கிக்
கொடுமையுடன் நாற்பதாண்டளவும் போக்க
உருமருவு முதயகிரி யிரவுபோல
வுலாந்தேக மன்னவன் வந்துதிப்பன்தானே

யாழ்ப்பாண நாட்டை ஆட்சி புரிந்த மன்னவர்கள் சிங்கையாரியர் (ஆரியர்) குலத்ததைச் சேர்ந்தவர்களென்றும் அவர்கள் குருநெறியும் மநு நீதியும் கொண்ட இந்து மதச் சட்டத்தையே ஆதாரமாகக் கொண்டவர்கள். இவ்வாறான அரசாட்சியை பிலிப்பனெனும் பறங்கியன் கைப்பற்றி 40 வருடங்கள் கொடுமையான ஆட்சி புரிந்தவனென்றும் பிற்பாடு ஒல்லாந்தர்களின் ஆட்சியால் யாழ்ப்பாணம் மீட்கப்பட்டதென்பதாகவும் அச் செய்யுள் உரைக்கிறது. நீதி பரிபாலனத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண இராச்சியத்தில் மனு நீதி பின்பற்றப் படவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலுள்ள செய்யுள்களிலும் காணக்கூடியதாகவே உள்ளது.

ஆரியச்சக்கரவத்தியினர் வம்சத்து யாழ்ப்பாண மன்னர்களை சிங்கையாரியர்; என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண வைபவ மாலையில் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த 9 ஆரியச்சக்கரவத்திகளின் கீழ்வரும் பெயர்கள்; குறிப்பிடப்பட்டுள்ளது.

1. விசய கூழங்கச் சக்கரவத்தி
2. குல சேகர சிங்கையாரியன்
3. விக்கிரம சிங்கையாரியன்
4. விரோதய சிங்கையாரியன்
5. மார்த்தாண்ட சிங்கையாரியன்
6. செயவீர சிங்கையாரியன்
7. குண பூசன சிங்கையாரியன்
8. குண வீர சிங்கையாரியன்
9. கனக சூரிய சிங்கையாரியன்

எனும் பெயர் கொண்ட ஆரிய மன்னர்களாகும்.
யாழ்ப்பாண அரசர்களின் இராசதானி முதலாம் சிங்கையாரியனின் காலத்தில் நல்லூரில் அமைக்கப்பட்டது. அவ்வரசனை செய சிங்கையாரியனென்று கைலாயமாலை குறிப்பிட்டிருக்கிறது. மேலும் நல்லூரில் அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதிச் சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன் முகூர்த்தத்தில் அத்திவாரம் போட்டு நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூங்காவும், பூங்காவின் நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்படைக் கூடமும் உண்டாக்கி, அக்காலத்தில் யமுனா நதித்தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்து விட்டு, நதி மண்டபம், யானைப்பந்தி, குதிரைப்பந்தி, சேனா வீரரிருப்பிடமும் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியுற் பிரமகுல திலகரான செங்காதர ஐயரும,; அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ்செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்கு பாதுகாப்பாக பிள்ளையார் கோவிலையும், மேற்றிசைக்கு வீரகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு சட்டநாதேசுவரர் கோயில், தையல் நாயகியம்மன் கோயில், சாலை விநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ் செய்து வாழ்ந்து வந்தான் முதலாம் சிங்கையாரியன். என மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார்.

இவ்வாறாக இந்திய- இந்துத்துவ மதக் கோட்பாடுகளுடன் தொடர்ந்து வந்த யாழ்பாண இராச்சியமானது, போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களின் மேலாதிக்கத்திற்கு மாற்றமடைந்தது. அக்கால கட்டங்களில் அதிகாரி, முதலியார், இறைசுவதோர், கண்காணி, தலையாரி உடையார், வன்னியனார் என யாழ்ப்பாண ஆரியச் சக்கரவத்திகளால் பதவிப் பெயர்கள் சூட்டப்பட்ட பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினரின் (வெள்ளாள) சமூக மேலாதிக்கத்திற்கு வட-கிழக்கு தமிழர் பிரதேசங்கள் கைமாறியது. இதுவே இந்திய சாதிய படிநிலைக்கும் இலங்கைத் தமிழ் சமூகங்களுக்குமிடையேயான சாதிய படிநிலைக்குமான வித்தியாசங்கள் . சாதிய மேலாதிக்க மனோநிலையில் இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் காணமுடியாது.

சிங்கையாரிய மன்னர்களின் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து இன்றுவரை தமிழ் மகக்களுக்குரிய நீதிபரிபாலன சட்டங்களாக இருப்பது தேசவழமைச் சட்டமாகும். இதில் சமூகரீதியாக நிலவிய சட்டமானது சாதியவழமைச்சட்டமாகும். தேசவழமைச்சட்டத்தை எழுத்து வடிவத்தில் சட்டமாக்கியவர் ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த உடயளள ளைளயஉள என்பவராகும். இவரின் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்து மேற்குறிப்பிட்ட பதவிப்; பெயர்கள் கொண்ட மேலாதிக்கச் சாதியினரான முதலியார்களும், உடையார்களுமே.

சிங்கையாரியர்களால் யாழ்ப்பாணத்தில் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அடிமை குடிமைகளுடன் (தற்போதைய தலித்துகள்) வந்து குடியேற்றப்பட்ட வெள்ளாளர்களாலேயே இந்தியாவில் இறுக்கம் பெற்றிருந்த சாதிய அமைப்பு முறையானது யாழ்ப்பாணத்திலும் கட்டிக் காப்பாற்ரி வந்ததை வரலாற்று குறிப்புகள் மூலமாக நாம் அறிகிறோம். நான்கு வர்ண சாதிகளான பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்படுபவர்களிலிருந்து பள்ளர், பறையர், நளவர், அம்பட்டன், வண்ணான் போன்ற சாதியினர் வர்ணச் சாதிய அமைப்பு முறைக்குள் அடங்காத, தீண்டப்படாத சாதிகளாக யாழ்ப்பாண சாதிய வழமையில் கருதப்பட்டு வந்தனர். இந்த ஐந்து சாதிகளைக் குறிக்கும் அடையாளமாகவே யாழ் குடாநாட்டில் பஞ்சமர் எனும் பெயர் நிலவிவந்தது. பலநூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதிய அமைப்பு முறையானது, சங்கிலயன் தொடங்கி பின்னர் ஆறுமுகநாவலர், சேர் பொன் இராமநாதன், ஜி. ஜி பொன்னம்பலம், அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வரை வளர்க்கப்பட்டு, இன்று தமிழ்த் தேசியம் எனும் பரிமாணம் கொண்டு ஆயுதங்களுடனும் சாதியத் தீண்டாமை மரபு கட்டிக் காப்பாற்ரப்பட்டு வருகிறது. சாதிகளாக பஞ்சமர் சமூகமானது பலவித சமூகக் கொடுமைகளையும், உயிர் இழப்புகளையும் அனுபவித்த வண்ணமாயுள்ளது.

சமூக ரீதியாகப் பேணிவந்த சாதிவழமைச் சட்டத்தை ஐரோப்பியர்கள் கண்டும் காணதவாறும் இருந்து வந்துள்ளனர். யாழ்மேலாதிக்க சமூகத்தின் ஆதரவின் அவசியம் கருதியே ஐரோப்பியர்கள் சாதிவழமைச்சட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லi. இருப்பினும் ஐNhப்பியர்களே வட-கிழக்கு வாழ் தலித் சுமூகங்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான பாதையை திறந்தவர்கள்.இலங்கையில் ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் சாதிப் பாகுபாடும், தீண்டாமை ஒடுக்குமுறையும் வௌ;வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழர்களது சொந்த நாடான இலங்கையில் மட்டுமல்லாது, புலம் பெயர்ந்து வாழும் ஏனைய நாடுகளிலும் தமது புனித மரபுகளை கட்டிக் காப்பாற்றி வருகின்றனர். இந்த சாதியச் சமூகச் சகதிக்குள் வாழ்ந்து கொண்டு!! பேரினவாதம், மனித உரிமை, மனித நேயம், ஜனநாயகம், என்றெல்லாம் பேசிவருகிறோம். இவ்வாறாக இன்று வரை புறனாநூற்றுப் புகழ்பாடும் யாழ்ப்பாண சாதிய இராச்சியத்தில் தலித்துகளுக்கு எதிரான சமூக ஒடுக்கு முறைகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பென்பது நியாயமான முறையில் கடைப்பிடிக்கப்பட வில்லை.

1910 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் சாதியத் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டமானது பல இடையூறுகளுக்கு மத்தியிலும் நடைபெற்று வந்திருக்கிறது. எனவே நாம் இவ்வறிக்கை மூலமாக கடந்த காலங்களில் யாழ்ப்பாண மேலாதிக்க சாதியினரால் அன்றிலிருந்து தலித் மக்கள் பட்ட துயரங்களையும், அதற்கெதிராக அவர்கள் நிகழ்த்திய போராட்டங்களையும் நினைவுறுத்துவதோடு. எதிர்காலத்தில் எமது ஒடுக்கப்பட்ட சமூகமானது யாழ்ப்பாண மேலாதிக்க சமூகத்துடன் சம அந்தஸ்துடன் இணைந்து வாழ்வதற்குரிய, எமக்கான தனித்துவமான அரசியல்; உத்தரவாதங்களை இவ்வறிக்கை மூலமாக சமர்ப்பிக்கின்றோம்.

பல நூறு ஆண்டுகளாக மனிதர்களாகவே மதிக்கப்படாத தலித்துக்கள் 1910 ஆம் ஆண்டிலிருந்தே வடபகுதி தொழிலாளர் சங்கம் மூலம் தமது உரிமைக்காக ஸ்தாபன ரீதியாக போராட முற்பட்டனர். இக்காலப் பகுதியில் ஆங்கிலேய மிசனெரியால் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கல்லூரியில் ஜெகப் காந்தி என்னும் தலித் மாணவன் அக்கல்லூரியில் அனுமதி கேட்டபோது யாழ்ப்பாண உயர் சாதி மாணவர்கள் பாடசாலையை பகிஸ்கரித்து போராட்டம் நடத்தினர். ஜேகப் காந்தியும்; சளைக்காமல் தனது கல்லூரி அனுமதிக்கான போராட்டத்தை நடத்தியதனாலும், அப்பாடசாலையில் அதிபராக நியமிக்கப்பட்டிருந்த ஆங்கிலேய பாதிரியாரின் மனிதாபிமான முன்னெடுப்புமே, ஜெகப் காந்தி அப்பாடசாலையில் யாழ்ப்பாண வரலாற்றில் முதல் தலித் மாணவனாக அனுமதிக்கப்பட்ட நிகழ்வு சாத்தியமானது.

சிறிய சிறிய போராட்டங்களை ஆரம்பித்து படிப்படியாக தலித் மக்களுக்கான விழிப்புணர்ச்சி வளர ஆரம்பித்தது. 1927 ஆம் ஆண்டு யோவே போல் என்பவரால் ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் என்னும் ஸ்தாபனம் அமைக்கப்பட்டு, தலித் மக்கள் மத்தியில் சமூக விடுதலையின் அவசியத்தை உணர்த்துமுகமாக 'ஜன தர்மபோதினி' எனும் பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. 1928 இல் சேர் பொன இராமநாதன் 79 கிராம சங்க பிரதிநிதிகளுடன் சாதி அமைப்பு முறைப் பாடசாலைகள் கொண்டுவர வேண்டும் எனக்கோரி வெள்ளைக்கார தேசாதிபதியிடம் மனுக் கொடுத்து வலியுறுத்தினார். 1929 இல் சாதி வெறியர்களை ஒன்று திரட்டி இந்து மகாசபையின் தலைமையில் கோப்பாய் அரசினர் பயிற்சிச் சாலையை உயர் சாதியினரின் தனி ஸ்தாபனமாக ஆக்குமாறும் தேசாதிபதியிடம் மனுக்கொடுத்தார் இராமநாதன். இவைகளையெல்லாம் எதிர்த்து நின்று யோவேபோல் போன்ற தலித் தலைவர்கள் அம்முயற்சிக்கு எதிராக உறுதியான போராட்டங்களை முன்னெடுத்தனர். 1930 களில் தலித்துக்களின் போராட்டத்திற்கு முகம் கொடுக்கமுடியாத கோழைத்தனத்தால், தலித்துக்கள் கல்விகற்ற 13 பாடசாலைகள் உயர்சாதியினரால் எரிக்கப்பட்டது.

காலம் காலமாக இறந்த தலித்துக்களின் உடல்களை எரிப்பதற்கு உரிமையற்று இருந்த வேளை யாழ்ப்பாண வில்லூண்றி மயானத்தில் தலித் பெண் ஒருவரின் உடல் எரிக்கப்பட வேண்டுமென தலித்துக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் அவ்வுடலை எரிக்க விடாது சாதிவேறியர்கள் தடுத்தனர். அந்நிகழ்வானது பெரும் கலவரமாக தோற்றம் பெற்று அதில் உயர்சாதியினர்pன் துப்பாக்கிச் சூட்டிற்கு முதலி சின்னத்தம்பி என்னும் தலித் இளம் குடும்பஸ்தர் கொல்லப்பட்டு சாதிப்போராட்டக் கலவரத்தில் முதல் தியாகி ஆனார். இச்சம்பவத்தை லண்டன் மகாராணிக்கு தந்தி மூலமாக தெரிவித்து பின்பு மாகாதேசாதிபதியின் அனுமதியுடன் மேற்படி சடலம் எரிக்கப்பட்டது.

1940 ஆம் ஆண்டுக் காலங்களில் தலித் மக்களிடையே பெரும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு யாழ் குடா நாடெங்கும் பல வித ஸ்தாபனங்களை உருவாக்கி தமது போராட்டங்களை விரிவு படுத்தினர். இவைகளில் யாழ்ப்பாண நகரில் மையப் படுத்தப்பட்டு பல தலித் தலைவர்கள் சந்தித்து உறவுளை வலுப்படுத்தவும், போராட்டங்களை வலுப்படுத்தவும் பேர் உதவியாக செயல் பட்டது சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கமாகும்.

இலங்கையில் 1931 இல் சர்வசன வாக்குரிமை அமுலுக்கு வந்தபோது தமிழ்த் தலைவர்களின் பிரரிநிதியாக விளங்கிய சேர் பொன் இராமநாதன் தலித்துகளுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்த வரலாறும் நாம் மறந்து விடக்கூடிய ஒன்றல்ல. 1942இல் சன்மார்க்க ஜக்கிய வாலிபர் சங்கத்தினால் வட இலங்கையில் உள்ள சகல தலித்துக்களின் நலனையும், ஐக்கியத்தையும் கட்டிக்காக்க ஒரு பொதுவான அமைப்பை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்;, 1943 இல் மிகப் பெரும் தலித் மாநாடு கூட்டப்பட்டு அம்மாநாட்டில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் அமைப்பு உருவாக் கப்பட்டு யோவே போல் தலைவராக நியமிக்கப்பட்டார். இம் மகாசபையானது கல்வி வாய்ப்பு, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைத் தெரிவு, உத்தியோக வாய்ப்பு, சீவல் தொழிலாளர்களின் மேம்பாடு போன்றவைகளுடன் பொருளாதார முன்னேற்றம் போன்ற அனைத்திலும் தலித்மக்களின் எதிர்கால வளர்ச்சி குறித்துப் போராடிவந்தது.

இம்மகாசபையின் 1944ம் ஆண்டில் நிகழ்ந்த இரண்டாவது மாநாட்டில் தலித்மக்களின் இன்னல்களையும் ஒடுக்கு முறைகளையும் தீர்ப்பதற்கு ஏதுவாக தலித்துகளுக்கான தனித் தொகுதியை ஒதுக்கியோ, அன்றி நியமனப் பிரதிநிதித்துவம் மூலமான பதவிகளும், யாழ் மாவட்ட மக்கள் விகிதாசாரத்தின்படி 25 வீதமான இடமும், தலித் மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப மக்கள் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டு அத்தீர்மானம் இலங்கை அரசிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 1945இல் நடைபெற்ற மகாசபை மாநாட்டில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு அதற்கான தனி ஆணைக்குழு நியமிக்கக் கோரியும் சகல ஸ்தாபன சபைகளிலும் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடிய வகையில் வட்டாரங்கள் பிரிக்கப்பட வேண்டுமெனவும், கல்விப் பிரச்சனையில் முஸ்லிம் மக்களுக்கு அளித்த விசேச சலுகையை தலித்துகளுக்கும் வழங்க வேண்டுமெனக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1945இல் இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட சோல்பரி ஆணைக்குழு இலங்கை வந்தபோது மகாசபை சார்பில் தலித் மக்கள் பிரச்சனை பேசப்பட வேண்டுமென தீர்மானித்து எடுக்கப்பட்ட முயற்சிகள் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தினால் முறியடிக்கப்பட இருந்தது. சாதிப் பிரச்சனைகள் எதுவும் பெரிதாக நடைபெறவில்லை எனவும், தமிழர்கள் அனைவரும் நாம் ஒற்றுமையாக வாழ்கிறோம் எனவும் சோல்பரி ஆணைக்குழுமுன் பேச முனைந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் நரித்தனத்திற்கு பணிந்து, தயங்கிவிடாமல் மகாசபையானது சோல்பரி ஆணைகுழு முன் உயர் சாதிக் கொடுமைகளை விபரித்தது மட்டுமல்லாது. அக்காலத்தில் கரவெட்டியிலுள்ள கன்பொல்லைக் கிராமத்தில் நிகழ்ந்த சாதிக்கலவர த்தின் அனர்த்தங்களையும் சோல்பரி ஆணைக்குழுவை அழைத்துவந்து நேரில் பார்வையிடவைத்தனர்.

இதனால் ஆத்திரம் கொண்ட உயர் சாதி வெறியர்கள் சோல்பரி ஆணைக்குழு உறுப்பினர்களை கன்பொல்லைக்கு அழைத்துவரக் காரணமாயிருந்த மகாசபை பிரதிநிதிகளான எம்.சி.சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை, டி.ஜேம்ஸ் ஆகியோரை வழி மறித்துத் தாக்கினர். இருப்பினும் அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். மகாசபை மூலம் முன்னெடுக்கப்பட்ட போராட்ட முயற்சிகள் யாவையும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற உயர்சாதி நரியர்கள் தமது சதித்திட்டங்கள் மூலம் சிதைக்க முற்பட்டனர். சோல்பரி ஆணைக் குழுவும்பிற்பாடு தலிதமக்களின் அவல நிலைகளை கவனத்தில் கொள்ளாது, உயர் சாதியினாரால் ;உருவாக்கப்பட்ட தேசவழமைச் சட்டத்திற்குள் தலித்துக்களை கட்டிப்போட்ட நிலைதொடரக் காரணமாகிப்போனது. (அதுவே இன்றும் தொடர்கிறது)

1948இல் சுதந்திரம் என்ற பெயரில் பிரித்தானிய அரசு இலங்கையில் இருந்த முதலாளித்துவத்தின் வாரிசுகளான சிங்கள உயர் வர்க்கத்தினரிடமும், யாழ் உயர் மேலாதிக்க சாதியினரிடமும் அரசியல்-சமூக- அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டுப்போக தொடர்ந்தும் தலித்துக்கள் தங்கள் போராட்டத்தினை இடது சாரி சிந்தனையாளர்களின் கருத்தியலின் நம்பிக்கையில் தமது போராட்டத்தை புதிய நோக்கில் முன்னெடுத்துச் சென்றனர். 1955இல் காணி அமைச்சினால் நிறைவேற்றப்பட்ட குடியேற்றத் திட்டங்களில் தலித்துகளுக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையை மகாசபை உறுப்பினர்கள் காணி அமைச்சரிடம் நேரில் சென்று கையளித்தனர். 1956இல் மகாசபையின் தொடர்ச்சியான போராட்டத்தின் பலனாய் நல்லூர் கந்தசாமி கோவில் நுழைவு அனுமதி தலித் மக்களின் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டது. தொடர்ந்தும் தங்களது தீண்டாமை கொடுமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்து வந்ததை யாழ்ப்பாண உயர்சாதி வெறி உணர்வு கொண்ட ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் கட்சியாகட்டும், எஸ் ஜே வி செல்வநாயத்தின் தலைமையிலான தமிழரசுக் கட்சியாகட்டும் தலித் போராட்ட வளர்ச்சியை சகிக்கமுடியாமல் மகாசபையை பிரிக்கும் சதி முயற்சியிலும் ஈடுபட்டனர். 1957இல் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட எம் பி டி சொய்சா அவர்களுக்கு தமிழரசுக் கட்சியானது கறுப்புக் கொடிகாட்டியும், பறை மேளம் அடித்தும் தமது எதிர்ப்பினைக் காட்டினர். இச்சம்பவமானது மகாசபைக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மகாசபை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் தமிழரசுக் கட்சியின் சதி வலையில் சிக்கி தலித்போராட்டத்தை நிலை குலையச்செய்தனர். இருப்பினும் மகாசபையின் நீண்டகால கோரிக்கையான சமூக-குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் (தீண்டாமை) பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் சட்டமாக்கப்பட்டதுடன் மீண்டும் 1971 இல் இச் சட்டமானது திருத்தமாக்கப்பட்டு அதற்கான தண்டனைகளான அபராதங்களும், சிறைக்காலங்களும் அதிகப்படுத்தப்பட்டது.

தொடர்ந்தும் 1956 தொடக்கம் 1960 வரையிலான மகாசபையின் போராட்டத்தினால் சண்டிலிப்பாய், கரவெட்டி, மட்டுவில், கட்டுவன்புலம், புலோலி, மந்துவில் ஆகிய பகுதிகளில் 19 பாடசாலைகள் தலித்துகளுக்காகவே உருவாக்கப்பட்டன. சிறுபான்மைத்+ தமிழர் மகாசபையின் மூலமாக தீண்டாமைக்கு எதிராகவும் தலித்துக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காகவும் பல போராட்டங்களை நடத்திய போதும் அரச துறைகளில் யாழ் சைவ வேளாள சாதியினரே தலைமைப் பொறுப்புகளில் இருந்து வந்தமையால், நடைமுறையில் தலித்மக்களின் தேவைகள் அதிகம் நிறைவேறமுடியாது போயின இதன் விளைவால் 1967இல் தலித்துக்கள் பௌத்த மதம் மாறுவது என முடிவெடுக்கப்பட்டு பல கிராமங்களில் இருந்து தோழர் யோகரடணம் உட்பட ( புகலிடத்தில் வாழும் தீண்டாமை ஒழிப்புக் களப் போராட்டங்களின் சாட்சிகளில் ஒருவர் ) அனைத்து இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவராக இருந்த வைரமுத்து தலைமையில் நூறு தலித் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு தென் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கன்பொல்லை, கரவெட்டி, புத்தூர், பூநகரி ஆகிய கிராமங்களிலும் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.

1965இல் அருந்ததியர் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், திருவள்ளுவர் மகாசபை போன்ற பல சங்கங்களினால் சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் பொதுஅமைப்பு உருவாக்கப்பட்டு 1966இல் அச்சுவேலியில் ஒரு மாநாட்டையும் நடாத்தியது. அம்மாநாட்டின் இறுதி முடிவாக தலித்மக்கள் யாழ் உயர் சாதிமக்களுக்குள் இரண்டாம்தர மக்களாக கருதும் நிலைப்பாட்டிற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் போது அம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கரஸ் கட்சி பிரதிநிதிகள் அத்தீர்மானத்தின் பிரகாரம் தலித் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தமக்கு மூன்றுமாதம் அவகாசம் தரும்படி கேட்டுக் கொண்டனர். பின்பு அது அவர்களின் இயல்பான சமூக-அரசியல் ஏமாற்று நடவடிக்கைதான் என்பதை காலம் எமக்கு உணர்த்தியது.

சர்வதேச ரீதியில் ஏற்பட்ட இடதுசாரிக் கோட்பாட்டு முரண்பாடுகளின் நிமித்தம் சீனக் கம்யூனிஸ்ட், ரஸ்ய கம்யூனிஸ்ட் எனும் பிளவு நிகழ்ந்த நிலையில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அப்பாதிப்பு நிகழ்ந்தது. அதன் காரணமாய் சீனச் சார்பினர் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை விட்டு விலகினர். இதில் அங்கம் வகித்தவர்களாலேயே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் அமைப்பாளராக கே டானியல் பணியாற்றினார். இதன் முதலாவது மாநாடு 21-10 -1967 இல் யாழ்ப்பாண நகர மண்டபத்தில் அமைந்த சின்னர் கார்த்திகேசு அரங்கில் நடைபெற்றது.சங்கானை தேனீர்க்கடை பரவேசத்தின் போது ஏற்ப்பட்ட கலவரத்தினால் கொல்லப்பட்ட கார்த்திகேசுவே அவராகும்.

1967இல் பொன்னாலைக் கிராமத்திலுள்ள தலித்மக்கள் குடிநீர் பெறுவதற்கு மறுக்கப்பட்டதன் காரணமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சாதி வெறியர்கள் மட்டுமன்றி, அதிகாரிகள் தமிழ் தலைவர்கள் யாவரும் ஒன்றிணைந்து அப்போராட்டத்தை நசுக்க முற்பட்டனர்.இறுதியில் சிறீலங்கா அரசின் தலையீட்டால் குழாய்க் கிணறு அமைத்துக் கொடுத்ததன் ஊடாக அப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. 1967இல் ஆரம்பிக்கப்பட்ட சங்கானைப் போராட்டமானது 1968 வரை பரவலாக வடபகுதி முழுவதும் பரவியது.

1967;இல் ஆரம்பிக்கப்பட்ட சங்கானைப் போராட்டமானது 1968 வரை பரவலாக வடபகுதி முழுவதும்
பரவியது. அதன் விளைவால் நிச்சாமம் எனும் கிராமத்தில் வன்னியன் குமரேசு அவர்கள் சாதி வெறியர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார். இவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட வேளையிலும் பல தலித்துகக்கள் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளான போதும் தொடர்ந்தும் ஊர்வலமாகச் சென்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சங்கானைப் போராட்டத்தின் போது பல்வேறு துன்பங்களை தலித் மக்கள் அனுபவித்த நிலையில், அவர்களின் துன்பத்தில் பங்குகொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணம் வந்துதவியவர்களில் கம்பஹா எம் பி யாயிருந்த எஸ் டி பண்டாரநாயக்கா அவர்களும். தாழ்த்தப்பட்ட தலித் தமிழர்கள் சம்பந்தமான போராட்ட வழக்குகளில் ஆஜராவதற்கு யாழ்ப்பாணத் தமிழ் மேட்டுக்குடிச் சட்டத்தரணிகள் எவருமே(அப்புக்காத்துகள்) உதவ முன்வராத நிலையில் பிரயாணச் செலவை மட்டும் ஏற்று எமது தலித் மக்களுக்காகக யாழ்பாணம் வந்து வழக்குகளை நடத்தியவர்கள் வண்டி சொய்சா, எச் எம் கரவித்;த போன்ற சிங்களச் சட்டத்தரணிகளும் என்பதை இவ்வறிக்கையினூடாக நாம் பெருமையுடன் அழுத்திக் கூறுகின்றோம்.

சாவகச்சேரியில் சாதிவெறியர்கள் தலித்துக்கள் மீது தொடர்ந்தும் தமது தாக்குதலை நிகழ்த்திய வண்ணம் இருந்தனர். இதில் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியினர் திரைமறைவில் இயங்கி வந்தனர் என்றும் தெரியவருகிறது. 1968 இல் மந்துவிலில் நிகழ்ந்த சாதிவெறியர்களின் கொடுமைகளுக்கு எஸ் இரத்தினம் என்பவர் பலியாக்கப்பட்டார். இக்கால கட்டத்தில்தான் தீண்டாமை ஒழிப்புப் போராட்ட செயல் பாடுகளில் ஒன்றான மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பிரவேசப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டமே தமிழ்மக்கள் மத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஆயுதப் போராட்டமாகும். இதில் பங்குகொணடவர் செல்லக்கிளி என்னும் பெண் போராளியாகும. இவர் நாட்டு வெடிகுண்டொன்றை தண்ணீர் குடத்துள் மறைத்து வைத்து கோவிலுள் சென்று அக்குண்டை வெடிக்க வைத்தார்.மூன்று மாதங்களாக தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் அவ்வாலயம் தலித்துக்களுக்காக திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் ஆலயப் பிரவேசப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. அரச அதிகாரிகள், பொலிஸ் நிர்வாகம் போன்ற அரச இயந்திரங்களின் துணையுடன் உயர் சாதியினர் அம்முயற்சியை அடக்க முயன்றனர். இருப்பினும் அவர்களது கடும் கட்டுப்பாடுகளையும் மீறி சின்னையா என்னும் தலித் குடிமகன் ஒருவர் கோவிலுக்குள் புகுந்து உட்காந்து கொண்டார். அவ்வேளை 'அடங்காத் தமிழன்” சுந்தரலிங்கம் தலைமையிலான சாதி வெறிக் குண்டர்கள் சின்னையாவை வெளியேற்றினர். மகாராணிக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தவர், அடங்காத் தமிழன் போன்ற அடைமொழிக்குள் சைவ வேளாளரினால் புகழப்பட்ட சுந்தரலிங்கமே அப்போராட்டத்திற்கு முகம் கொடுக்கமுடியாது போன நிலையும் நிகழ்ந்தது. ஆலயப் பிரவேச போராட்டத்துடன் அக்காலகட்டத்தில் தேநீர்க் கடைப் பிரவேசப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. 1969இல் உடுப்பிட்டித் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மு. சிவசிதம்பரம் அவர்களது காலத்திலும் கோவில் உட்பட அவரது பகுதியிலுள்ள தேநீர்க்கடைகளும்; தலித்துக்காக திறந்து விடப்படவேண்டும் என பல தடவைகள் கோரியும் அவர் அதற்காக எந்த நடவடிக்கை களும் மேற்கொள்ளவில்லை என்கின்ற கசப்பான கறைபடிந்த நிகழ்வுகளை தலித்துக்கள் இன்றும் மறப்பதற்கில்லை. அக்கால கட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமானது தனது தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் பல வெற்றிகளை கண்டுள்ளது.

தலித் மக்கள் தங்களது போராட்டங்களை இடதுசாரிக் கொள்கைகளின் வழிகாட்டுதலிலேயே பின்பற்றி வந்தனர். இதனால் முதலாளித்துவத்தின் கொள்கைகளைக் கொண்ட தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பன வற்றிற்கு தலித் மக்களின் இப்போக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. தமிழ்க் கட்சிகளெல்லாம் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாகி, உயர் சைவ வேளாளர்களின் மன அபிலாசைகளின் வெளிப்பாடாகிய தமிழீழம் என்னும் கோசத்தை முன்வைத்து அதை தமது நலன்களைப் பேணும் முயற்சிக்காக மட்டுமே பயன்படுத்த முனைந்தனர்.

1971இல் தென்மராட்சிப் பகுதியில் பொதுக்குளம் ஒன்றில் குளிக்க முற்பட்டபோது உயர் சாதியினரால் விரட்டப்பட்ட தலித் பிரஜை ஒருவர் பயத்தின் காரணமாக தென்னை மரமொன்றில் ஏறிவிட அத்தென்னை மரத்தையே தறித்து அத்தலித்தை வெட்டிக் கொன்ற கொடூரம் எம்மால் இலகுவில் மறந்து விடக்கூடிய ஒன்றல்ல. தொடர்ந்து 1981 இல் எழுதுமட்டுவாள் கிராமத்தில் தலித்துக்களின் ஜீவன உடைமைகளான ஆடு, மாடு, கோழிகள் வெட்டிக் கொல்லப்பட்டதோடு அக்கிராமத்தை விட்டே விரட்டப்பட்டனர். 1982 இல் புன்னாலைக் கட்டுவன் கிராமமோன்றில் இரண்டு தலித்துக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

1967 தொடக்கம் 1982 வரையான போராட்டத்தில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட தலித்துக்கள் உயர் சாதியினரால் கொலை செய்யப்பட்டனர்.

1. சின்னர் கார்த்திகேசு (சங்கானை)
2. இரத்தினம் (மந்துவில்)
3. வன்னியர் குமரேசு (சங்கானை)
4. மா. சீவரட்ணம் (கன்பொல்லை)
5. க. செல்வராசா (கன்பொல்லை)
6. மு. கந்தையா (கரவெட்டி)
7. அரியரட்ணம் (அச்சுவேலி)
8. நல்லப்பு (சங்கானை)
9. அண்ணாச்சாமி (புன்னாலைக்கட்டுவன்)
10. வையித்தி (சண்டிலிப்பாய்)

இவர்களை அன்றைய அரச இயந்திரத்தின் பொறுப்பிலுள்ள மேட்டுக்குடியினர் பங்கரவாதிகள் எனப் பழி சுமத்தினர். தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உடுப்பிட்டியில் இராஜலிங்கம் என்னும் தலித் ஒருவரை பாரளுமன்ற உறுப்பினராக்கியதன் மூலம் வெளியுலகத்திற்கு சாதியைக் கொடுமைகளை மறைப்பதற்கும், இடது சாரிக் கருத்துக்களை தலித் மக்களிடமிருந்து அகற்றுவதற்கும் வழிவகைகளை மேற்கொண்டனர். ஆனாலும் சாதியச் சமூக உளவியலானது இராஜலிங்கத்தை எவ்வாறு இயக்கியது என்பதை தலித்மக்கள் உணராமலில்லை. கரவெட்டி பிள்ளையார் கோவிலுக்கு மின்சார இணைப்பு ஏற்படுத்தப்பட்டு அதைத் திறந்து வைப்பதற்கு தலித் பாராளுமன்ற உறுப்பினரான இராஜலிங்கத்தையே அழைத்திருந்தனர்!! இருப்பினும் அவரை கோவிலுக்குள் அழைத்து திறப்புவிழாவை நடாத்தாமல் இருக்க மின்சார இணைப்பு தற்காலிகமாக கோவிலுக்கு வெளிப்பகுதியில் இணைப்பு செய்யப்பட்டு அதைத்திறந்து வைக்க அழைக்கப்பட்டவரை கோவிலுக்கு வெளிப்பகுதியிலேயே நின்றே திறந்து வைக்கும்படியான இராஜதந்திரத்தை (!!!) மேற்கொண்டு இராஜலிங்கத்தை அவமானப்படுத்தினர்.

தமிழ் மக்களின் பாரமபரிய பிரதேசங்களில் தலைப்பட்டினமென சொல்லப்படுகிற வட பிரதேசதத்தில் சாதி அமைப்பு முறையின் சின்னங்கள் பலவும் சாட்சிகளாய் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதியில் தெளிவாக தென்பட்டன அதைத் தொடர்ந்த சகாப்தங்களிலும் அவற்றின் அழிவுகள் ஒரேயடியாக மறைந்து போய்விடவில்லை. '' கிராமங்களின் அமைப்பு முறையும் , ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளும், அவர்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் பாதைகளும், அவர்கள் வாழும் நிலங்களும், அவர்களைச் சுற்றியுள்ள பிரதேச நிலங்களின் பெயர்களும் , ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் பெரு ஆலயங்களும், குளங்களும், கிணறுகளும், மடங்களும், வேறுபல சரித்திரச் சின்னங்களும் , கால் நடைகளின் பட்டிக்குறிகளும், வீதிப் பெயர்களும், கிராமப் பெயர்களும், பேசு;சு முiறைகளும், பழக்க வழக்கங்களும், நன்மை தீமை வைபவங்களின் நடைமுறைகளும், மிகவும் தீண்டப்படாதோருடன் தொடர்பு கொள்வதற்காக சங்கடப் படலையோடு கூடிய தலைவாயிலும், (இதுவே நடுவீட்டுக்குள் அண்டக்கூடாது எனும் உயர்சாதி மொழிவழக்கிற்கு காரணமாயுமுள்ளது) அதற்குச் சற்று முன் வரிசையில் சவுக்கண்டியும், தம்மோடு ஒத்த சாதியினரை வரவேற்பதற்கான முறையில் அமைக்கப்பட்ட நால்சார வீடும் நடு முற்றமும் பாரம்பரிய பெருஞ்சாதி மனிதர்களின் சாதி அமைப்பு முறையினை அனுசரித்து அமைந்த ஞாபகச் சின்னங்களாக இருப்பதை தெளிவாக உணர முடியும்.'' தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க வெளியீடு ஒன்றில் டானியல் மேல்வரும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் சார்பில் டானியல் போன்றவர்களால் எழுதப்பெற்ற பிரச்சார நாடகங்கள் மேடையேறிமையும் குறிப்படத்தக்க ஒன்றாகும். அதனுடன் கே. பசுபதி போன்ற கவிஞர்களின் கவிதைகளும் தாழ்த்தப்பட்ட தமிழ்த் தலித்மக்களுக்கு உணர்ச்சியையும் , உத்வேகத்தையும் அளிப்பவையாக விளங்கின. 1980 இல் உருவாக்கப்பட்ட ''கலை இலக்கியப் பெருமன்றம்'' டானியலை அமைப்பாளராக் கொண்டு இயங்கியது. மக்கள் இலக்கியம் என்ற பத்திரிகையும், அதுபோல மலர்விழி, தேன்கூடு, வாகை, தாரகை, முதலிய சஞ்சிகைகளும் சிறுபான்மைத் தலித் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை முன்வைப்பனவாக வெளிவந்தன. இந்த வகையில் இலங்கையில் இன்றும் தலித் மக்களின் உயர் சாதி ஒடுக்கு முறை சார்ந்த மனநிலையை தமது இலக்கியப் படைப்பாற்றல் திறனூடாக அம்பலப்படுத்தி வருபவர்களாக தெணியான், டொமிக் ஜீவா போன்றோர் உள்ளனர்.

1983 க்குப் பின்னர் ஆயுதம் தாங்கிய தனிநாட்டுக்கான யுத்தம் தோற்றுவிக்கப்பட்டதன் நிமித்தம்
அதிலிருந்து பல ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் உருவாகின. அதில் இடதுசாரிச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களும், மிதவாதங் கொண்ட வலதுசாரி இயக்கங்களும் மக்கள் மத்தியில் தமது அரசியல் அபிலாசைகள், கொள்கை கோட்பாடுகளை முன்வைத்து போராட்டங்களை ஆரம்பித்தனர். சமூகச் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமது அடிப்படை வாழ்வியல் உரிமைகளுக்காகவும் போராடி வந்த தலித் மக்கள் மத்தியிலும் சோசலிச தமிழீழ சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன. இடதுசாரிக் கருத்துக்களிலும் அதன் கொள்கைகளிலும் அதீத நம்பிக்கை கொண்ட தலித் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பொதுவுடைமை கருத்துக்கூறும் இயக்கங்களுக்குள் தம்மையும் இணைத்துக் கொண்டனர். இந்தவகையில் நுPசுடுகுஇ நுசுழுளு போன்ற தனிநாட்டுப் பிரிவினை கோரிய இயக்கங்களுடனும் பெருமளவு தலித்துக்கள் முக்கிய போராளிகளாகவும், ஆதரவாளர்களாகவும் மாறியது தவிர்க்க முடியாததாகியது. சோசலிச ஈழத்தை பெறுவதன் மூலமே ஆண்டாண்டு தோறும் கட்டிக் காத்துவரும் தீண்டாமைக் கொடுமையிலிருந்தும் விடுதலை கிடைக்குமென்ற நம்பிக்கையே அதற்கு முக்கிய காரணமாகும்.

தலித்துக்கள் அதிகமானோர் புரட்சி பேசும் இயக்கங்களுக்குள் தம்மை இணைத்துக் கொண்டதை சகிக்க முடியாத யாழ் மேலாதிக்க வாதிகளும், மிதவாத பிற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் நு P சு டு கு என்னும் இயக்கத்ததை ஈழம் பள்ளர் விடுதலை முன்னணி என்பதாக புதிய விளக்கவுரை கொடுத்து வந்தனர். பின்னர் இந்தியக் கைக்கூலிகள் எனும் பெயரிலும் பல நூறு தலித்துக்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். இதில் ஆயுதம் ஏந்திய போராளிகள் மட்டுமல்லாது தலித்துக்களின் உரிமைகளுக்காக உழைத்த சிந்தனையாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இவர்களில் 1985 ஆம் ஆண்டுக் காலங்களில் சங்கானை தெங்குப் பனம் பொருள் உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்க தலைவர் நடேசு என்பவரும் கொலை செய்யப்பட்டார். இவர் வடமாகாண தெ. ப. பொ. உ. வி. கூ. சுங்க சமாசத் தலைவரும் ஆவார். ஊர்காவற்றுறைச் சங்கத் தலைவர் மத்தியாஸ் துPஇ யாழ்ப்பாணச் சங்கத்தைச் சேர்ந்த அப்பையா போன்ற பலர் புலிகளால் கொல்லப்பட்டனர்.

1981 ஆம் ஆண்டு ருNP அரசினால் ஏற்படுத்தப்பட்ட இன அழிப்பு யுத்தத்தின்போது எரிக்கப்பட்ட யாழ் நூல் நிலையம் பின்னர் சந்திரிகா அரசினால் புனரமைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் யாழ் மாநகர சபையின் முதல்வராக இருந்த செல்லன் கந்தையா என்னும் தலித்தால் 05-02-2003 இல் நூல் நிலையத்தை திறப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுத்ததன் பிற்பாடு புலிகளின் மிரட்டல்காரணமாக அந்நிகழ்ச்சி தடுக்கப்பட்டது. இது விடயம் குறித்து 1-03-2003 இல் வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையான னுயுஐடுலு ஆஐசுசுழுசு இற்கு செல்லன் கந்தையா பேட்டி அளிக்கையில் '...நான் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவன். யாழ் நூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனின் பெயர் பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆம், புலிகள் முற்று முழுதாகச் சாதியடிப் படையிலேயே இப்பிரச்சனையை அணுகினார்கள் என நான் நம்புகிறேன்.'' என பேட்டி கொடுத்ததை எவரும் மறந்து விடமுடியாது.

1996 இல் யாழ் மத்திய கல்லூரியின் அதிபரான இராசதுரை அவர்கள் 12-10-2005 அன்று கலாச்சார நிகழ் வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தபோது புலிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். யார் இந்த இராசதுரை? ஏன் கொலை செய்யப்பட்டார்? ஆம் அவர் சிறுபான்மை இனமான தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரின் புனர் நிர்மான முயற்சியினால் யாழ் மத்திய கல்லூரி புனரமைக்கப்பட்டுவந்தது. அவர் மாணவர் மத்தியிலும் சமூகமட்டத்திலும் மதிப்பு மிக்க மனிதராக வருவதை பொறுக்க முடியாத மேலாதிக்க உயர் சாதி மனநிலையே அதிபர் இராசதுரை அவர்கள் கொலை செய்யப் படுவதற்கான அடிப்படைக் காரணமாகும்.

தற்போதும் யாழ் குடாநாட்டில் கொல்லப் படுபவர்களில் நூற்றிற்கு தொண்ணூறு வீதமானோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். 2006 இல் இடம் பெற்ற அல்லைப்பிட்டி படுகொலைகளாகட்டும், கரவெட்டிப் பகுதிகளில் படுகொலை செய்யப் பட்டவர்களாகட்டும், சிகை அலங்காரத் தொழில் புரிவோர்களாகட்டும்,மற்றும் படுகொலை செய்யப்படும் ஆட்டோ சாரதிகளாகட்டும் அனைவருமே தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

இருமரபும் துய்யவந்த சைவ வேளாள மேலாதிக்கத்தின் அடக்கு முறைகளால் தலித் சமூகமானது கல்வி, பொருளாதாரம், மற்றும் சமூக கௌரவங்கள் போன்ற மானிட மதிப்புகள் மறுக்கப்பட்ட சமூகமாகவே யாழ் குடாநாட்டில் இருந்து வந்துள்ளதையும் அதுவே இன்றும் பல்வேறு வடிவங்களிலும், தமிழ்த் தேசியம் எனும் கோர வடிவத்திலும் தொடர்ந்துவருவதையும் நாம் வரலாற்று ஆதாரங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறோம். இன்று ஜேர்மன் இலங்கையர் ஜனநாயக முன்னணியினாரால் நடாத்தப்படும் வட-கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்த கலந்துரையாடலில் வட-கிழக்கில் வாழும் தலித் மக்களுக்கான அரசியல் அதிகார உரிமைகளை பிரத்தியேகமான முறையில் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். தமிழ்த் தேசிய விடுதலை என்னும் பெயரில் தமிழ் மக்களுக்கெனப் பெற்றுக் கொள்ளும்; அரசியல் அதிகாரங்களானது, சமூகப் பலமோ, சமூக மதிப்போ, அடிப்படை மனித உரிமைகளென அனைத்தும் மறுக்கப்படும் தலித் சமூகத்திற்கு எவ்வித உத்தரவாதத்தையும் தந்துவிடாது. கடந்த காலங்களிலிருந்து தலித் மக்களுக்கு எந்த எந்த உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அவைகளினூடாகவே நாம் நிவாரணத்தையும் கோருகிறோம்.

பெயரளவிலேயே சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான சட்ட திட்டங்கள் எமது நாட்டில் நிலவுகிறது. ஆனால் நடைமுறையில் சமூக மேலாதிக்க உணர்வு நிலையின் அடிப்படையில் தலித்துகளுக்கு சமூக நீதி, நியாயங்கள் மறுக்கப்பட்டே வருகின்றது. எனவேதான் அதிகார மையங்களை நோக்கிய அரசியல் ரீதியான உத்தரவாதங்களை நாம் கோருகின்றோம். இப்போதுள்ள வடக்கு மற்றும் கிழக்கு சனத்தொகைப் பரம்பலின் விகிதாசாரத்திற்கு ஏற்புடையதாக சில உத்தரவாதங்களை தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களில் கொண்டிருக்க வேண்டும் என கோருகிறோம்.

சகல மட்டங்களிலுமான அதிகாரங்களில் தலித்துகளுக்கென வட மாகாணத்தில் ஐம்பது வீதமான பிரதிநித்துவங்களையும் கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு இருபத்தைந்து வீதமான பிரதிநி தித்துவங்களையும் உத்தரவாதப்படுத்த வேண்டியது அவசியமாகும். குறைந்த பட்சம் எதிர் வரும் ஐம்பது வருடங்களுக்கு மேற்படி உத்தரவாதம் நடைமுறைப் படுத்தப்படும் பட்சத்தில் மட்டுமே பல நூற்றாண்டுகாலமாக ஒடுக்கப் பட்டுவந்த தலித் சமூகமானது ஏனைய தமிழ் சமூகங்களுடன் சமமாக வைத்து பரிசீலிக்கக்கூடிய நிலைமை ஏற்படும்.

அரசியல் பிரதிநிதித்துவங்களை உத்தரவாதப் படுத்துவதற்கு ஏதுவாக தலித்துகளுக்கு மட்டுமேயான தேர்தல் அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இலங்கை மத்திய ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட தேர்தல்களிலும், தமிழ் மக்களுக்கான சுயாட்சியைக் கொண்ட தேர்தல்களிலும் மேற்படி தேர்தல் ஒதுக்கீடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அரச துறைகள் அனைத்திலும் வழங்கப்படுகின்ற உத்தியோகங்களிலும் தற்போதைய தலித்துக்களின் குடியிருப்பு விகிதாசாரத்திற்கேற்ப ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.
பல நூற்றாண்டு காலமாக எவ்வித மாற்றமுமின்றி (அடிமை முறைச் சட்டம் ஒன்றே நீக்கப்பட்டது. அதுவும் ஆங்கிலேயரின் முயற்சியினால்) வழக்கத்தில் நிலவுகின்ற யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம் நீக்கப்பட்டு புதிதான சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
(அ) தலித்துகளின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஒரு விசேட அணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். இவ் ஆணைக்குழு சமூக பொருளாதாரம், கல்வி, குடியிருப்பு மற்றும் சட்ட ரீதியாக அடையாளம் காணப்படுகின்ற சகல துறை களிலும் தலித்துகளின் சமூக நிலையை ஆய்வு செய்யும் நிலை உருவாகவேண்டும்.
(ஆ) மேற்படி ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் தலித்துக்களாக மட்டுமே இருப்பதோடு மேலும் முஸ்லிம், சிங்கள் பிரஜைகளையும் உள்ளடக்கிய வர்களா அமைதல் வேண்டும்.

தகவலுக்கு உதவிய நூல்கள்

1.. சாதி அமப்பின் தோற்றமும் வளர்ச்சியும் (புதியபூமி வெளியீடு)
2.. டானியலின் எழுத்துக்கள் (கலாநிதி செ.திருநாவுக்கரசு)
3. இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும் (சி.பத்மநாதன்)
4. தலித் அரசியல் (அ.மார்க்ஸ்)
5. யாழ்ப்பாண வைபவ மாலை

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு