ரவிராஜ் கொலையின் பின்னணி

கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்

- சாணக்கியன்

புலிகள் மீதான சில விமர்சனங்களை ரவிராஜ் இந்திய அரச கொள்கை வகுப்பாளர்களை கடந்த சில மாதங்களுக்கு முன் சந்தித்தபோது வெளிப்படுத்தியதாக வதந்திகள் கசிந்தன.

ஏ-9 பாதை மூடப்பட்டதை அடுத்து அதனை மீண்டும் திறக்கவைக்க புலிகள் மேற்கொண்ட பகீரத பிரயத்தனம் எதுவும் வெற்றி அளிக்காத நிலையில் யாழ்குடா நாட்டுக்குள் ஊடுருவியுள்ள தமது உறுப்பினர்களுக்கு புதிய இராணுவ வளங்களை கொண்டு செல்வதில் ஏற்பட்ட நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் பொட்டமான் தெரிவு செய்த இருவரில் ஒருவர்தான் ரவிராஜ்.

கொலையின் பின் அவரது கொலையில் ஒரு அரசியல் நாடகம் அரங்கேற்ற புலிகளின் தெரிவில் யாழ்பாணத்தில் ஓரளவு பிரபல்யமான முகம் உள்ள ஒருவர் தேவை. அதனால் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களில் பொருத்தமானவரானார் ரவிராஜ்.

மேற்குறித்த புலிகளின் கொலைத்தயாரிப்புகளை அறிந்துகொண்ட பொட்டமானின் தெரிவாக இருந்த மற்றவர் அவசர அவசரமாக பிரித்தானிய பயணத்தை மேற்கொண்டார். அவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். சில மாதங்கள் குடும்பமாக லண்டனில் தங்கி நின்ற அவர் பொழுது போக தமது உறவினர், நண்பர்கள் வீட்டு பிறந்ததின விழாவிலெல்லாம் கலந்து கொண்டார். புலிகள் மீது அவருக்கு இருந்த சந்தேகத்தை லண்டன் நண்பர்கள் சிலரிடம் மிக இரகசியமாக சொல்லியுள்ளார்.

மற்றவர் பிரித்தானியாவில் தங்கியிருந்த வேளைஇ கொழும்பில் இருந்த ரவிராஜ் ''யுத்தத்துக்கு எதிரான சமாதான முன்னணி'' மேற்கொண்ட ஆர்பாட்டங்களில் எல்லாம் கலந்து கொள்ளுமாறு வன்னியில் இருந்து இறுக்கமான உத்தரவு வழங்கப்பட்டதாக அவரது குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர் ஒருவர் தகவல் தந்துள்ளார்.

ரவிராஜ் கொலையின் பின் புலிகள் செய்து முடித்த அரசியல் நாடகம் ஐந்து பாகங்களை கொண்டது.

ரவிராஜின் கொலைக்கு அரசுடன் இணைந்து இயங்கும் தமிழ் குழுக்களை தொடர்பு படுத்தி அரசுக்கு சர்வதேசரீதியாக அவப்பெயரை ஏற்படுத்துவது. 'ஒட்டுக்குழுக்கள்' என்று புலிகளால் அரசியல் சாயம் பூசப்பட்ட மாற்று தமிழ் அமைப்புகள் மீது அக்கொலைப் பழியை சுமத்துவது.

இக்கொலைக்கு பின் கொழும்பில் நிகழ்ந்த அரசுக்கு எதிரான ஆர்பாட்ட ஊர்வலங்களில் அரசியல் குளிர் காய்வதன் மூலம் தெற்கில் புலிகளுக்கு எதிராக முழுமையாக திரும்பியுள்ள அரசியல் இறுக்கத்தில் ஒரு நெகிழ்வுப்போக்கை ஏற்படுத்துவது.

மூன்றாவது கட்டம் ரவிராஜின் இறுதிக் கிரிகைக்கு உடலை யாழ் கொண்டு செல்ல ஏ-9 பாதையை திறக்க அரசைக் கோருவது. அதற்கு அரசு உடன்பட மறுத்தால் அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த கூலிக்கு நெஞ்சு குத்தியழும் கூட்டமைப்புக்கு ‘கொழும்பில் இருந்து கொண்டு குளோரின் தண்ணீர் குடிக்காமல்’ கொஞ்சமேனும் புலிகளுக்கு ஆதரவாக அரசியல் வேலை செய்ய தடிவிடுதல்.

ரவிராஜின் உடலை அவரது சொந்த ஊரான சாவகச்சேரி கொண்டு சென்று இறுதி கிரிகைகளுக்கு அரசியல் முலாம் பூசி யாழ்ப்பாண பாடசாலை, பல்கலைக்கழக மாணவர் மத்தியில் விழுந்துபோய்யுள்ள செல்வாக்கை நிமித்தவும் புலிகளுக்கு எதிராக திரும்பியுள்ள யாழ்ப்பாண பொதுப்புத்தி மனநிலைக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும் பயன்படுத்துவது.

ஐந்தாவது கட்டம் மிக முக்கியமானது. உடலை கொண்டு செல்ல ஏ-9 பாதையை தற்காலிகமாக அரசு திறக்க சம்மதித்திருந்தால் ரவிராஜின் மரண ஊர்வலத்தை கிளிநொச்சியில் நிறுத்தி அதனுடன் யாழ் குடாநாட்டுக்குள் சில முக்கியமான இராணுவ வளங்கல்களை இரகசியமாக கடத்துதல். ரவிராஜின் கொலையின் பின்னரான நாடகத்தில் புலிகள் திட்டமிட்டபடி இப்பகுதியை நடாத்த முடியவில்லை.

முகமாலை முன்னரங்க நிலைகளில் அரச இராணுவம் அண்மையில் செய்துள்ள மாற்றங்கள் குறித்த அடிப்படை தகவல்கள் ஏதுவும் புலிகளிடம் இல்லாதத்தால் அவை பற்றி சிறுசிறு தகவல்களையேனும் பெறுவதற்கு அவர்களுக்கு ஏ-9 ஊடாக தற்காலிகமாகவேனும் ஒரு பயணம் மிக அவசியம் தேவை.

பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு முன் யாழ்ப்பாணத்தில் பெரிய தாக்குதல் ஒன்றுக்கான தயாரிப்புக்கு ரவிராஜின் கொலையும் மரண ஊர்வலத்தையும் இறுதிக்கிரிகைகளையும் பயன்படுத்த நினைத்த பொட்டம்மானின் திட்டத்தின் சில பகுதிகள் அவரது கையை மீறிப்போய்விட்டதென உறுதியாகச் சொல்ல இன்னும் சில வாரங்கள் வேண்டும்.

thenee.com

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு