கருத்து வலிமையானது என்பதற்கு ஆனந்தசங்கரி அவர்கள் சாட்சி

வெடிகுண்டுகளையும், துப்பாக்கிளையும் ,பீரங்கிகளையும,; தற்கொலைக்குண்டுகளையும் விட கருத்து வலிமையானது என்பதற்கு ஆனந்தசங்கரி அவர்கள் சாட்சி


ஆனந்தசங்கரி அவர்களுக்கு ஐ.நா-யுனெஸ்கோவின் மன்ஜித்சிங் விருது கிடைத்திருப்பது தமிழ் ஜனநாயக சத்திகளுக்கு கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும் . இந்த விருது கிடைத்ததையிட்டு தமிழர் ஜனநாயக அரங்கத்தில் உற்சாகவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது . இது தமிழர்களின் ஜனநாயகத்திற்கும் சமாதானத்திற்குமான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியின் முதற்படி எனலாம.; இது உலகளாவிய ஒரு அங்கீகாரம் . நெல்சன்மண்டெலா தென்னாபிரிக்க நிறவெறிக்கெதிரான போராட்டதில் கால்நூற்றாண்டுகாலம் சிறையிருந்தபோது அவருக்கு கியூபாவின் தலைவர் பிடல் கஸ்ட்ரோ அவரது குடும்பத்தினரிடம் விருது வழங்கினார்.

2002 இல் இவ்விருது மியன்மாரின் ஜனநாயகக் குரலும் தற்போது மியன்மாரில் இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக்காவலில் வைக்கபட்டிருக்கும் அங்சாங்சுகி அவர்களுக்கு யுனஸ்கோ விருது வழங்கப்பட்டது. வங்காளதேசத்தில் பெண்களுக்கெதிரான மத அடிப்படைவாதம் பற்றி தனது எழுத்துக்களினூடாக கேள்வியெழுப்பிய தஸ்லீமாநஸ்ரின் அவர்களுக்கு இவ்விருது(யுனஸ்கோவிருது) 2004 இல் வழங்கப்பட்டது .

இப்போது தமிழர்விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவருடைய நடமாடும் உரிமையும் தமிழ் பாசிச வாதிகளால் தடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவிதத்தில் தற்கொலைக்குண்டுதாரிகளும் பிஸ்டல் குழுவினரும் அவரைச் சிறை வைத்திருக்கிறார்கள். நிறவெறி ஜனநாயக விரோத அரசுகள் அவை அரசுகளாக இருந்த படியால் தமது இருட்டான அந்தகாரங்களில் நெல்சன் மண்டெலாவையும் ,அங்சாங்சுகியையும் சிறைவைக்க முடிந்தது . ஒரு பாசிச அதிகாரக்கட்டமைப்பை வன்னியில் நிறுவியிருப்பவர்கள் தமது பயங்கரவாதத்தினூடாக இந்த ஜனநாயக குரல்களை அழித்தொழிக்க முனைகிறார்கள். தாம் பெரிதும் நேசித்த கிளிநொச்சி மக்களிடம் செல்லமுடியவில்லை, வன்னி மக்களைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் இரும்புத் திரை அகலவேண்டும் என்று ஆனந்தசங்கரி ஓயாது குரல் கொடுத்து வருபவர். ஆனந்தசங்கரி அவர்களின் இக்கூற்று தொடர்பாக கடந்த வருட புலிகளின் லண்டன் மாவீரர் தினக் களியாட்ட நிகழ்சியில் பாலசிங்கம் ஆனந்தசங்கரியை தமது சித்திரவதைக்கூடங்களில் தள்ளவும் முடியவில்லை, கொல்லவும் முடியவில்லை என்ற வெறுப்பில் ஏளனமும் ,வஞ்சகமும், வக்கிரமும்,காழ்ப்புணர்வும்; தொனிக்கப் பேசும் போது அவர் தாராளமாக வன்னிக்குச் செல்லாம், அங்கு பொட்டம்மான் ஹோட்டல் வைத்து நடத்துவதாக குறிப்பிட்டாh.; அத்தோடு சங்கரி அவர்களை ஆரத்தழுவவவேண்டும் போல் இருக்கிறது என்று தமது தற்கொலை குண்டுப்பெருமையையும் இயம்பினார். இங்கு ஹோட்டல் என்பது சித்திரவதைக் கூடத்தையே, என்பதை சொல்லத்தேiவையில்லை . சங்கரி அவர்களை- அந்த முதுபெரும் தலைவரை படுகொலை செய்வதற்கு புலிகளின் தறn;காலைக்குண்டுதாரிகள் நாயாய் -பேயாhய் அலைகின்றன. வன்னிச் சித்திரவதை கூடத்தில் தள்ள முடியாதா என இந்த கொலைமிருகம் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு கனவு காணுகிறது . ஆனால் நகரிக உலக சமுதாயம் அவருக்கு விருது கொடுத்திருக்கிறது. அஹிம்சைக்கும் சகிப்புத்தள்மைக்கும் விருது வழங்கிக் கௌரவித்திருக்கிறது. ஆனால் அந்தக்கொலை மிருகத்திற்கு தமிழ் ஊடகங்களும் காட்டுமிராண்டித்தமிழர்களும் வாழ்த்துப்பா இசைக்கின்றனா.;

புலிகள் உலகளாவிய அளவில் தமிழர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டத்தையே பெற்றுக் கொடுத்திருக்கிறது. தற்போது உலகளாவிய அளவில் தமிழர்களின் கௌரவம் சங்கரி அவர்களால் தான் ஓரளவேனும் சரிசெய்யப்பட்டிருக்கிறது. ஒருபாடசாலை ஆசிரியராக, கிராமச்சங்கத்தலைவராக ,பட்டினசபைத்தலைவராக பாராளுமன்ற அங்கத்தவராக அவருக்கு பலபரிமாணங்கள் உண்டு . இளம் ஆனந்தசங்கரி இடதுசாரி அரசியலிலேயே முதலில் பிரவேசித்தார். பல்வேறு பாதைகளினூடாக தேடல் மிக்கமனிதனாக அவர் கடந்த 60 ஆண்டு அரசியல் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். ஒரு சாமானிய மக்களுடன்நேரடியாகத் தொடர்புபட்ட அவர்களுடன் ஐக்கியமான அரசியல் வாதியாகவே காணப்பட்டார். குறிப்பாக பச்சிலைப்பள்ளி கிளிநொச்சி; குச்சொழுங்கைகளும் மனிதர்களும் அவருக்கு அறிமுகமாவை. அவருடைய பிரதேச அபிவிருத்திப்பணிகளால் உருவானவற்றை ஈவிரக்கமற்றயுத்தம் காவு கொண்டாலும் இன்னும் அவரின் பணியின் அழுத்தமான சாட்சியங்கள் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேசங்களில் இருக்கின்றன. அவர் றத்மலானை இந்துகல்லூரியில் ஆசிரியராக இருந்தபோது இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு அவர்களை வரவேற்;க விமானநிலையதிற்கு தனது பாடசாலைப்பிள்ளைகளை அழைத்துச் சென்றதை- அவரை அருகிலிவைத்து பார்த்தவன் நான் என்று அடிக்கடி கூறுவார். அதனைக் கூறும்போது அவரது முகம் பிரகாசமடையும் . காந்தியடிகளின் சிறிய அளவிலான உருவச்சிலை அவரது மேசையில் எப்போதும் காட்சியளிக்கும் .

எங்களது அங்சாங்சுகி இப்போது ஆனந்தசங்கரி அவர்கள் தான் .சராசரி தமிழர்கள் தாம் நினைப்பதை சொல்ல முடியவில்லை இவ்விடத்தில் தமிழ் மக்களின் மனச்சாட்சியின் குரலாக நின்று கொண்டிருப்பவர் ஆனந்தசங்கரி அவர்கள். தமிழ் பாசிசத்தின் கோட்டை கொத்தளங்களை அந்த மனிதர் தமது தார்மீக வலிமையால் அசைத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஹோலியாத்தும் டேவிட்டும் கதையில் கொடிய ஹோலியாத்தை நிலை தடுமாறவைத்த சின்ன டேவிட். அவர் பிரளயத்தினூடாக எம்மை வாக்களிக்கப் பட்டபூமிக்கு எம்மை வழிநடத்திச் செல்கிறார்.

அவருக்கு எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள.;

நன்றி: தமிழ்நிய+ஸ்வெப

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு