நவம்பர் 19 தோழர் பத்மநாபா பிறந்த தினம்



தோழர் பத்மநாபா மக்களை முன்னிறுத்திய, அரசியல் தலைமைத்துவத்தை வலியுறுத்திய தலைவராக திகழ்ந்தார். இன்று ஆயுதங்கள் அதிகாரம் செலுத்தும் எமது சமூகத்தில் அன ;றாடம் கொலைகளும், ஆட்கடத்தல்களும் நிகழும் சூழ்நிலையில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் மக்களின் அபிலாசைகளையும் முன்னிறுத்திய தோழர் பத்மநாபா நினைவுக்கூரப்பட வேண்டியவர்.



இத்தகைய தலைவர்களை அழித்தே தமிழ் பாசிசம் இன்றைய அவல நிலையை நோக்கி தமிழ்ச் சமூகத்தை இட்டு வந்திருக்கிறது.

தோழர் பத்மநாபா தேசிய ஒடுக்கு முறைகளில் இருந்து இலங்கையின் தமிழர்கள், முஸ்லீம்கள் விடுவிக்கப் படுவதையும் இலங்கையின் சகல இன மக்களிடையேயும் பரந்த ஐக்கியத்தையும் சர்வதேச அளவில் சுதந்திரம், ஜனநாயகம், சமூக சமத்துவம் ஆகியவற்றுக்காக போராடும் மக்களுடன் நாம் கரம் கோர்த்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இடையறாது வலியுறுத்தி வந்தவர்.

ஆக்கபூர்வமான முறைகளிலேயே அவர் எப்போதும் சிந்தித்தார். மனிதர்களின் சுதந்திரமான நல்வாழ்வு என்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அவர் மறைந்து 16 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வும், பொதுவாகவே இலங்கை மக்களின் வாழ்வு பெரும் நாசத்தினுள் தள்ளப்பட்டுள்ளது.

புலிகள் இந்தச் சமூகத்தில் ஆக் கப்பூர்வமான வழிகளில் சிந்தித்த அத்தனை தலைவர்களையும் போராட்டக்காரர்களையும் கடந்த இரண்டு தசாப்தங்களில் படுகொலை செய்திருக்கிறார்கள். அதன் விளைவு பாரிய வெற்றிடமொன்று எம் சமூகத்தில் உருவாகியுள்ளது.

வடக்கு கிழக்கில் அரசியல் உரிமைகளுக்காக போராடிய சமூகம் இன்று அன்றாட உ ணவுக்கு திண்டாட வேண்டிய நிலைக்கும், மரங்களின் கீழ் வாழவேண்டிய நிலைக்கும், உறவுகளை, உட மைகளை இழந்த நிலை க்கு தள்ளப்பட்டிருக்கிறதென்றால் அதற்குப் பிரதான முதன்மையான காரணம் புலிகளின் பாசிச நடவடிக்கைகளே என்றால் அது மிகையல்ல.

1987இல் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் ஒ ரு அதிகாரப்பகிர்வு கட்டமைப்பு உருவாக்கப்படுவதில் தோழர் பத்மநாபா தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். இன்றைய அவலங்களில் இருந்து பார்க்கையில் அது எத்தகைய தீர்க்கதரிசனமிக்க நடவடிக்கை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நடைமுறை ரீதியாக தாக்கமான தாக சமூகத்துக்கான தனது பங்களிப்பை செய்ய வே ண்டுமென்று கருதியவர் தோழர் பத்மநாபா. ஜனநாயகம், பரந்து பட்ட ஐக்கியம் என்பவற்றை எப்போதும் அவர் ம னதிலிருத்தி செயற்பட்டார்.

எளிமையும் அ ர்ப்பணமும் கொண்ட அவர் போன்ற தலைவர்கள் எமது சமூகத்தில் இன்று காண்பது அரிது. சில மனிதர்களை வரலாறு உருவாக்குகிறது. அவர்கள் ஏனையோரைவிட தீர்க்கதரிசனமிக்கவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் துன்பங்களையும், இன்னல்களையும் ஏன் உயிரை இழக்கும் நிலையைகூட சந்தித்திருக்கிறார்கள். அந்த வகையில் காந்தியடிகளுக்கு என்ன நேர்ந்ததோ, மார்ட்டின் லூதருக்கு என்ன நேர்ந்ததோ, சேகுவேராவுக்கு என்ன நேர்ந்ததோ அன்னை இந்திராகாந்திக்கு என்ன நேர்ந்ததோ அதுவே தோழர் பத்மநாபாவுக்கும் நேர்ந்தது.

தோழர் பத்மநாபாவின் மறைவு குறித்து புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் விடுத்த இரங்கல் செய்தியில் எனது தாயார் இந்திராகாந்தியும், பத்மநாபாவும் ஒரே தினத்திலேயே (நவம்பர் 19) பிறந்திருக்கிறார்கள். ஒரேவிதமான இலட்சியங்களுக்காக போராடி, ஒரே விதமாகவே மரணத்தை சந்தித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

தோழர் பத்மநாபா எமக்கு விட்டுச் சென்ற ஜனநாயகம், ஐக்கியம், சமூக சமத்துவம் ஆகிய உயர்ந்த சமூக விழுமியங்களை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு