இணைத் தலைமை கூட்டு அறிக்கை

பொதுமக்களுக்கு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி அவர்களைக் காயப்படுத்தும் விதத்தில் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் இருந்து தாக்குதல்களை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது

டோக்கியோ உதவிவழங்குவோர் மாநாட்டின் இணைத் தலைமைத்துவம் விடுத்துள்ள கூட்டு அறிக்கை

டோக்கியோ உதவி வழங்குவோர் மாநாட்டின் இணைத் தலைமைத்துவ நாடுகளான நோர்வே, ஐக்கிய அமெரிக்கக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான 2006 நவம்பர் 21ஆம் திகதி வாஷிங்டனில் நடாத்திய கூட்டத்தைத் தொடர்ந்து பின்வரும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

இலங்கையில் பல உயிர்களைப் பலி கொண்டு, பரவலான மனித உரிமைகள் மீறல்களுக்கு வழிவகுத்திருக்கும் வன் செயல்கள் தீவிரமடைவது பற்றி இணைத் தலைமைத்துவ நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கம் மற்றும் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் வேண்டுமென்றே தொடர்ச்சியாக யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபடுவதை இணைத்தலைமைமத்வதும் கண்டிப்பதோடு, நாட்டின் மோதலைச் சமாதானமாகத் தீர்ப்பதற்கு 2002 ஆண்டு கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்த வரலாற்று ரீதியிலான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு நாம் இரு தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம். நிலையான மற்றும் விடயம் சார்ந்த பேச்சுவார்த்தைகளுக்குத் தம்மை அறுதியாக ஈடுபடுத்துவதனால் மாத்திரமே அதிகரித்து வரும் வன்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை மாற்றியமமைக்க முடியும்.

குறிப்பாக பொதுமக்களுக்கு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி அவர்களைக் காயப்படுத்தும் விதத்தில் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் இருந்து தாக்குதல்களை மேற்கொள்வது பற்றி புலிகளையும், அத்தகைய தாக்கமுறக் கூடிய பிரதேசங்களை நோக்கித் தாக்குதல்களை மேற்கொள்வது பற்றி இலங்கை அரசாங்கத்தையும் இணைத் தலைமைமத்துவம் கண்டிக்கிறது. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்குமாறும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களின் பாதுகாப்புக்காக இராணுவ சூன்ய வலயங்களை அமைக்குமாறும் அவர்கள் இரு தரப்பினரையும் கேட்டுக் கொள்கின்றனர்.

தமது ஆணையை நிறைவேற்றுவதற்காக யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான இரு தரப்பினரின் கடப்பாடு பற்றியும் அவர்கள் நினைவ+ட்டியுள்ளார்கள். நவம்பர் மாதம் 8ஆம் திகதி இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் பற்றி இணைத் தலைமைத்துவ நாடுகள் கவலையடைந்துள்ளன. யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்களின் தீர்மானங்களை மதித்து, ஏ-9 நெடுஞ்சாலையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான தரப்பினரின் பொறுப்புப் பற்றி அவர்கள் ஞாபகமூட்டியுள்ளனர்.

ஒக்டோபர் 28-29ஆம் திகதிகளில் நடைபெற்ற பேச்சுக்கள் பற்றி கவனம் செலுத்திய இணைத் தலைமைத்துவ நாடுகள், ஜெனீவாவில் அரசாங்கம் குறிப்பிட்ட படி புலிகள் அதனை வரவேற்றதற்கேற்ப, யோசனை ஒன்றைப் பெற்றுக் கொண்டதும் நிபந்தனைகள் இன்றி சீரான மற்றும் நிலையான பேச்சுவார்த்தைகள் செயற்பாட்டுக்குத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளுமாறும் தரப்பினரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தரப்பினரிடையே மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு உதவக் கூடிய விதத்தில் அதிகாரப் பகிர்வுக்கு ஏதுவாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்டிசிகளுக்கிடையிலான ஒப்பந்தம் அமைய வேண்டும். அதே வேளையில், ஒப்பந்தம் ஒன்றுக்குக்கான கலந்துரையாடலைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு அடிப்படையாகவுள்ள வடக்கு மற்றும் கிழக்கு பற்றிய குறிப்பான ஏற்பாடுகள் சிதைவுறாமல் பேணப் பட வேண்டும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களை உள்ளிட்ட சகல சமூகங்களினதும் நியாயமான நோக்கங்களும் அபிலாசைகளும் அரசியல் தீர்வொன்றின் அங்கமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

மனித உரிமைகள் பற்றி விசாரிப்பதற்கான சர்வதேச அவதானிப்பாளர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்றை அமைப்பது பற்றிய இலங்கை அரசாங்கத்தின் யோசனையில் அடைந்துள்ள முன்னேற்றத்தை இணைத் தலைமைத்துவ நாடுகள் வரவேற்றுள்ளன. சகல தரப்பினரும் மனித உரிமைகளை தீவிரவமாக மீறி வருவதையும் சிவில் சமூகம், அரசியல் மற்றும் ஊடகத்துறையை பீடித்திருக்கும் பீதியையும் அவர்கள் கண்டித்துள்ளனர். இவற்றின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் தட்டிக் கேட்பார் இல்லாத நிலையை மாற்றுவதற்கும் இவ்வாணைக்குழுவும் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இம்முரண்பாட்டில் பொதுமக்கள் சிக்குண்டுள்ளதோடு, அவர்களைச் சென்றடைய தொண்டு நிறுவனங்களுக்கு முடியாமலிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களை நாம் இனங்கண்டுள்ள அதே வேளையில், சர்வதேச முகவர்கள் எதிர்நோக்கும் மனிதாபிமான பிரவேசத்தைப் பெற முடியாத நிலை பற்றிய சிக்கல்களைத் தீர்ப்பதற்காக மனிதாபினமான உதவி பற்றிய கலந்துரையாடல் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதையும் வரவேற்கிறோம்.

மனிதாபிமான விடயங்களை அரசியலில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துக்காக கடல் மற்றும் தரை வழிகளை உடனடியாக, நிரந்தரமாக மற்றும் நிபந்தனையின்றித் திறந்து விடுமாறும் இரு தரப்பினரையும் இணைத் தலைமைத்துவ நாடுகள் கேட்டுக்கொள்கின்றன. இது தொடர்பான முதல் நடவடிக்கையாக, யாழ்ப்பாணத்துக்கு ஏ-9 நெடுஞ்சாலையினூடாக வாகனத் தொடர் ஒன்றை அனுப்புவதற்கு மற்றும் தமது செயற்றினை நிரூபித்துள்ள சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்கள் தம் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு அவர்கள் உடனடியாகச் செல்வதை அனுமதிப்பதற்கான அரசாங்கத்தின் தயார் நிலையையும் இணைத் தலைமைத்துவ நாடுகள் வரவேற்கின்றன. அத்தகைய முன்னெடுப்புக்களுடன் ஒத்துழைக்குமாறு புலிகளை இணைத் தலைமைத்துவ நாடுகள் வேண்டிக் கொள்கின்றன.

சமாதானச் செயற்பாட்டுக்கு அனுசரணை வழங்குவதற்கான நோர்வேயின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிப்பதில் இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்பக்குழு வழங்கும் பங்களிப்புக்கும் இணைத்தலைமைத்துவ நாடுகள் சர்வதேச சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களுடன் இணைந்து தம் உறுதியான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.



thenee.com

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

ஈழத்தில் உள்ளவர்களின் பட்டினியைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் திரு.
அதில் எழுதியது வரவில்லை. அதனால் இங்கே பதிகிறேன்.

கருத்து சுதந்திரத்துக்காக அனுமதியுங்கள்.

இந்திய ராணுவமே வெளியே போ. சிங்களர்களும் நாங்களும் சகோதரர்கள் அடித்துக்கொள்வோம். சேர்ந்துகொள்வோம் என்று அறிக்கை விட்டு சிங்கள பிரேமதாஸாவிடமிருந்து கோடிக்கணக்கில் வாங்கி இந்திய ராணுவத்தை அடித்தார்களே. அந்த கோடிகளில் சில பாக்கியிருக்கும். அவற்றிலிருந்து சாப்பாடு போடச்சொல்லுங்கள்.

அப்பாவி மக்களின் மத்தியிலிருந்து இந்திய ராணுவத்தை சுட்டு பல்லாயிரம் வீரர்களை கொன்று. ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களை மிருகங்களாக்கி, அப்படி மிருகத்தனமாக நடந்த ராணுவ வீரர்களை வைத்து இந்தியாவுக்கு எதிராக இன்றும் பிரச்சாரம் செய்ய பல கோடிகளை செலவழிக்கும் புலிகளுக்கு அந்த கோடிகளில் சிலவற்றை கொடுத்து சாப்பாடு வாங்கிப்போட முடியாதா?

ஏன் போரை ஆரம்பித்து ஏ9ஐ மூட வைத்ததே புலிகள்தானே? உங்களது குற்றம் சாட்டும் விரல்கள் ஒருமுறையேனும் புலிகளை நோக்கி நீளட்டும்.

கோடிக்கணக்கில் அயல்நாட்டிலிருக்கும் தமிழர்களை சுரண்டி அவர்களது பணத்தை கொண்டு ராணுவ தளவாடங்கள் வாங்கும் புலிகளுக்கு அந்த கோடிகளில் சிலவற்றை கொடுத்து தமிழர்களுக்கு சாப்பாடு வாங்கிப்போட முடியாதா?

மக்களை பட்டினி போட்டு, மக்களை பிச்சை எடுக்க வைத்து, அவர்களது அழிவில் தன்னை நிலை நிறுத்துக்கொள்ள முனையும் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்துங்கள்.

5:40 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

//ஏன் போரை ஆரம்பித்து ஏ9ஐ மூட வைத்ததே புலிகள்தானே? உங்களது குற்றம் சாட்டும் விரல்கள் ஒருமுறையேனும் புலிகளை நோக்கி நீளட்டும்.//

ஒரு முறையேனும்...?

நடக்கக்கூடிய காரியமா?

5:33 AM  

Post a Comment

<< முகப்பு