மட்டக்களப்பில் உக்கிர மோதல்

மட்டக்களப்பில் இராணுவத்திற்கும் புலிகளிற்கும் இடையில் உக்கிர மோதல்

கிழக்கில் மட்டகளப்பில் போர் முன்னரங்க பகுதிகளில் விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்திற்கும் உக்கிர மோதல் இடம்பெறுவதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவத்தினர் யுத்த கலங்களுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி முன்னேறுவதாக விடுதலைபுலிகளின் இராணுவப்பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளதாக.

தற்போது இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதலை நடத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்..

எனினும ஸ்ரீPலங்கா இராணுவ தரப்பு இம் மோதல் குறித்து தெரிவிகையில் விடுதலைப்புலிகளின் வழமையான தாக்குதலிற்கு பதில் தாக்குதலே இராணுவம் மேற்கொவதாக அத்துடன் மாங்கேணி போர் முன்னரங்கப்பகுதிகளில் விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கு மோதல் நடைபெறுவதாக இதில் 7 படையினர் தற்சமயம் காயமந்துள்ளதாக இராணுவ தரப்பு நமது செய்தியாளருக்கு தெரிவித்துள்ளது..

காலை முதல் மட்டகளப்பில் நடைபெறும் மோதலிகளின் போது விமானப்படையினரது உதவியும் பெறப்பட்டுள்ளது. மட்டகளப்பில் விடுதலைப்புகளின் கட்டுபாட்டு பகுதியில் ஸ்ரீலங்கா விமானப்படை கிபிர் ஜெட்கள் குண்டுகள் போட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது...

அத்துடன் புலிகள் தமது போரளிகளுடன் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி முன்னேற முயன்றதாகவும் எனினும் புலிகளின் முன்னகர்வை இராணுவத்தினர் ஆட்டிலறி தாக்குதலால் முறையடித்துள்ளதாகவும் இதனையடுத்தே விமானப்படையினரது உதவி பெறப்பட்டதாக தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. .

பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுக்க 8 ஆயிரம் கண்ணி வெடிகள்!

கிழக்கு மாகாணத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி பொது மக்கள் வெளியேறுவதைத் தடுக்க வௌ;வேறு பிரதேசங்களில் சுமார் 8 ஆயிரம் கண்ணி வெடிகளை புலிகள் புதைத்துள்ளதாக புலிகளின் பயிற்சி முகாமொன்றிலிருந்து தப்பி வந்து படையினரிடம் சரணடைந்துள்ள சிறுவன் ஒருவன் தகவல் தெரிவித்துள்ளான்.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இத்தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,குடும்பத் தலைவர்களையும் சிறுவர்களையும் புலிகள் பலவந்தமாகக் கடத்திச் செல்வதனால் அச்சமடந்துள்ள பொது மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து வெளியேறி படையினரின் கட்டுப்பாடடுப் பிரதேசங்களுக்குச் செல்கின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களில் கிழக்கில் 462 குடும்பங்களைச் சேர்ந்த 2342 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் வாழைச்சேனை விசேட முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு வகைகள் அரசாங்கத்தாலும் தனியார் தொண்டு நிறுவனங்களாலும் வழங்கப்பட்டுவருகின்றன.

கிழக்கில் விடுவிக்கப்படாத பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் பொதுமக்கள் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அங்கிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் முகமாக பணிச்சங்கேணி, ஈச்சிலம்பற்று, மற்றும் கட்டைமுறிப்பு ஆகிய பிரதேசங்களில் 8 ஆயிரம் கண்ணிவெடிகளை புலிகள் புதைத்துள்ளனர். புலிகளின் பயிற்சி முகாம்களில் இருந்து தப்பிவந்தவர்கள் இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்

இதேவேளை, நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து இன்றுவரை புலிகளின் கிழக்கு பயிற்சி முகாமில் இருந்து 61 பேர் தப்பிவந்து படையினரிடம் சரணடைந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தாh

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு