மாவீரர்கள் பேசுகிறார்கள்
- சித்திரபுத்திரன்
அன்பான தமிழ் மக்களே!
கொடூரமான யுத்தம் ஒன்றில் அநியாயமாக பலியாகிப்போன எமக்கு மாவீரர்கள் என நாமம் சூட்டி, எமது கல்லறைகளில் ஏறிநின்று எமது நினைவில் தனது பிறந்த நாளை கொண்டாடிக் குதூகலிக்கும் ஒருவனை தேசியத் தலைவராக ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டு வாழும் தமிழ் மக்களாகிய உங்களுடன் எமது உள்ளத்து வேதனைகளை பங்கிட்டுக்கொள்வதே எமது இந்தச் செய்தியின் நோக்கமாகும்.
சிறுவர்களான நாம் இந்த யுத்தத்தில் விருப்புடன் பங்குபற்றி பலியானவர்கள் அல்ல. எம்மில் பலரை பிரபாகரன் தலைமைதாங்கும் புலிகள் இயக்கம், பாடசாலைகளிலும் தெருவிலும் நாம் விளையாடும் இடங்களிலும் ஏன் எமது வீட்டில் எமது பெற்றோர் முன்னிலையில் பிடித்துவந்து கட்டாய ஆயுதப் பயிற்சி அளித்து போர்களத்தில் பலியாக்கியதன் மூலமே நாம் அவர்கள் சொல்லும் மாவீரர்களாக ஆக்கப்பட்டோம்.
புலிகள் இயக்கத்தின் இந்தக் கொடூரமான நரவேட்டைக்கு முன்னாள் எமது ஏழைப் பெற்றோர்களோ, சொந்தச் சகோதரர்களோ சுற்றம் சூழவுள்ளவர்களோ ஏதும் செய்ய முடியாத அபாக்கியசாலிகளாக பேசாமடந்தைகளாக செயலற்ற மனித சடலங்களாக ஆக்கப்பட்டனர். இன்று எமது மரணத்தினால் ஏற்பட்ட லாப நட்டங்களை இயக்கத் தலைமை கணக்குப் பார்த்து மேலும் நரபலிக்கு ஆயத்தமாகும் அதேவேளையில் எமது இரத்த உறவுகள் எமது கல்லறைகளில் தலையை முட்டி மோதி குமுறி வெடிக்கும் காட்சிகள் எமது மனக்கண் முன்னே விரிகின்றன.
அதிகார வெறியும் பேராசையும் கொடூர மனமும் கொண்ட ஒரு தலைவனின் அபிலாசைகளை ப+ர்த்தி செய்வதற்காக நடாத்தப்படும் ஒரு போரில் நாம் பலியாக்கப்பட்டோம். ஆனால் அநியாயமான இப்போர் தமிழ் மக்களான உங்களின் விடுதலைக்கான போர் என நாமகரணம் சூட்டப்பட்டே நடாத்தப்படுகின்றது. உங்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ப+ட்டப்பிள்ளைகளும் கொப்பாட்டப்பிள்ளைகளும் ஏன் கோந்துறு மாந்துறு பிள்ளைகளும் கூட தொடர்ச்சியாக இப்போரில் பலியாவதற்கான திட்டங்களை புலிகள் இயக்கம் தீட்டிக் கைவசம் வைத்திருக்கின்றது. ஆனால் அதுவரையில் எமது இனம் தப்பிப்பிழைக்குமா என்பது சந்தேகமே.
உயிரினில் அரிய மானிடப் பிறப்பையெடுத்து நாம் இப்ப+மியில் பிறந்தோம். எத்தனையோ ஆசைக் கனவுகளுடன் வளர்ந்தோம். எமது வாழ்வில் புலிகள் இயக்கம் யமனாக குறுக்கிட்டது. எமது ஆசைகள் நிராசைகள் ஆகின. வளரும் நாம் முளையில் கிள்ளி எறியப்பட்டோம். பூக்கும் வேளையில் மொட்டுகளில் கருக்கப்பட்டோம். உற்றம் சுற்றம் என்ற கடலில் இருந்து தரையில் தூக்கி வீசப்பட்ட மீனானோம். அந்தகாரத்தில் ஆழ்த்தப்பட்ட ஆவிகளானோம்.
புலிகள் இயக்கத்தில் இருந்த காரணத்தால் எம்மில் சுமார் இருபதினாயிரம் பேருக்கு மாவீரர் என்னும் பட்டத்தை ப+மியில் சூட்டினர். ஆனால் நாம் இப்போழுது வாழ்கின்ற இந்த உலகில் எமக்கு எந்தவித பட்டமும் கிடையாது. நாம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் காரணமாக எமக்கு நாமே கொலைகாரர்கள் என நாமம் சூட்டுவதே பொருத்தமானதாகும்.
ஏனெனில் எம்மால் கொலை செய்யப்பட்ட முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் - அப்பாவிப் பொதுமக்கள், மற்றுக் கருத்துக்கொண்டோர், ஜனநாயகத்தை நேசித்தோர், மாற்று இயக்கப் போராளிகள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் கல்விமான்கள் என்போரும் எமக்கு அண்மையிலேயே உறைகின்றனர். அத்துடன் நாம் ஆயிரக் கணக்கில் கொலைசெய்த முஸ்லீம், சிங்கள மக்கள், கதறித் துடிக்க துடிக்க எம்மால் கொலை செய்யப்பட்ட குழந்தைகள், கற்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள், தொழுகையில் ஈடுபட்ட இறைவிசுவாசிகள் எல்லோரும் எமக்குத் தென்படும் வகையிலேயே வலம் வருகின்றனர்.
ஆனால் அவர்கள் எவருமே எம்மை விரோதிகளாக நோக்கவில்லை. குரோதக் கண்களுடன் பார்க்கவில்லை, கோபக் கனலை வீசவில்லை. புலிகள் தலைமையினால் அநியாயமாக பலியிடப்பட்ட ஆத்மாக்களாகவே அவர்கள் எங்களை நோக்குகின்றனர். தமது துன்பத்தை மறைத்துக்கொண்டு எமக்காக அனுதாபப்படுகின்றனர். எமது தலைமையில் கண்களில் வீசும் கொலைவெறி அவர்களது கண்களில் காணப்படவில்லை. நாம்தான் எமது கடந்தகால செய்கைகளை நினைந்து கூனிக் குறுகின்றோம்.
நாம் இங்கு துயிலும் உலகின் கதவுகள் அடைக்கப்படும் அறிகுறி தென்படுவதாக இல்லை. நாளும் பொழுதும் புதிது புதிதாய் எமது உலகிற்கு ஆட்கள் வந்தவண்ணமே உள்ளனர். ப+மியின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வருகின்றனர். ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா, ருவாண்டா, இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், கொலம்பியா, ரஷ்யா என நாடுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.
இதில் எமது நாட்டிலிருந்து வரும் எண்ணிக்கையில் எமது இயக்கத்தின் பேரால் அனுப்ப்படுவோரின் தொகையே எப்போதும் அதிகமாக இருக்கின்றது. ஆண்டவனின் பல்வகைத் தொழில்களில் அழித்தல் தொழிலை எமது தலைமை விரும்பி எடுத்ததும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்.
வருங்காலத்தில் மேலும் மேலும் ஆட்கள் வருகையில் நாம் இப்பொழுது உறையும் இடத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சம் இப்பொழுதே இங்குள்ள பலருக்கு தொற்றிக்கொண்டுள்ளது. ஏற்கனவே எம்முடையதைப்போன்ற பல உறைவிடங்கள் நிறைந்துவிட்டதாக இங்குள்ளோர் பேசிக்கொள்கின்றனர். எமது இடமும் நிறைந்துவிட்டால் எனிப்போவதற்கு வேறு இடமில்லை என்றும் கூறுகின்றனர்.
ப+மியில் கொலைகள் நிறுத்தப்படாமல் போனால் இனிமேல் வரவுள்ள நீங்கள் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் திரிசங்கு சுவர்கத்திலேயே தங்கவேண்டியேற்படலாம். அது மிகவும் கஷ்டமானது. இதற்கு தீர்வு ஒன்றுதான் உள்ளது.
எண்ணிக்கையில் கூடுதலான பொதுமக்களான நீங்கள் மரணத்தின்பின் நிம்மதியாக உறங்குவதற்கு இடந்தேடி அலைவதைவிட, உங்களை மரணத்துக்குள்ளாக்கும் அந்த ஒரு சிறுதொகை மானிடக்கொல்லிகளான புலித்தலைமையை நீங்கள் ஒன்றுதிரண்டு நின்று மரணிக்கவைப்பதே அது.
எமது பெயரால் நினைவுகூரலை செய்யும் இத்தினத்தில் நீங்கள் எடுக்கவேண்டிய பிரதிக்ஞை இதுதான்.
உங்கள் உயிர்கள் ப+மியிலேயே நிலைக்கட்டும்.
உங்கள் நினைவுகளில் மூழ்கித்தவிக்கும்
மாவீரர்கள்.
1 மறுமொழிகள்:
உண்மையே உனது விலை என்ன?
செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரும் மாண்டவர் புகழ் வாழ்க (கற்பணைதான்)
Post a Comment
<< முகப்பு