அசாம் பயங்கரவாதிகளுக்கு புலிகள் பயிற்சி

http://www.timesnow.tv/Sections/Sports/ULFA-LTTE_link/articleshow/692337.cms

இந்திய அரசாங்கம் கண்டனம் / அசாம் பயங்கரவாதிகளுக்கு புலிகள் பயிற்சி-

பாதுகாப்புச் செயலாளரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை இந்திய அரசாங்கமும் வன்மையாக கண்டித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமது அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியிருப்பதாகவும் இந்தியா தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை அசாம் மாநில பயங்கரவாதிகளுடன் புலிகள் தொடர்பு வைத்திருப்பதாக இந்தியாவின் திரிபுரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான அசாம் விடுதலை இயக்கத்திற்கும் புலிகளுக்குமிடையில் இராணுவத் தொடர்புகள் இருப்பது குறித்து நம்பத்தகுந்த சாட்சிகள் உள்ளதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இந்தியாவின் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் தனியரசை அமைப்பதற்கு. அசாம் விடுதலை அமைப்பு போராடி வருவதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

தமது இராணுவ பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கு அசாம் தீவிரவாதிகள் ஆசியப் பிராந்தியத்தில் பல பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகள் கொண்டிருப்பதாக இந்திய திரிபுரா காவல்துறை பிரிவு தலைவர் தெரிவித்தார்

அசாம் மாநில தீவிரவாதிகளுக்கு ஒரு மாத இராணுவ பயிற்சியை புலிகள் வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு கடல் போக்குவரத்தை மேற்கொள்வதற்கும் அசாம் விடுதலை இயக்கமும் புலிகளும் இணைந்து செயற்படுவதாக அசாமின் திரிபுரா காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

3 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

இந்தியா சீக்கிரம் பிலி பிரபாவுக்கு தனி காட்டாட்சி வாங்கிக்கொடுக்க வேணும்.

நன்றிக்கடனா அசாம்லிருந்து தமிழ்நாடு வரைக்கும் தற்கொலை படை எப்படி பண்றதுன்னு சொல்லித்தருவான். வேலையத்த பெடியன்களுக்கெல்லாம் ஆயுதப்பயிற்சி தருவான்.

சீக்கிரம் சீக்கிரம்

11:30 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

தனிக்காட்டுராசாவா ஆனப்புறம் நேரா யாழ்ப்பாணத்திலேர்ந்து ஆர்ட்லரி, பல்குழல் துப்பாக்கி எல்லாம் பாவிச்சி தமிழ்நாட்டை தாக்க வேண்டியதுதான்..

விஷப்பாம்புக்கு பால் வார்க்கிறார்கள்...

7:25 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

திருப்பி இந்திய ராணுவம் தாக்கினால், வைக்கோ(ல்), திருமா(வு) எல்லாம் குய்யோ முய்யோ என்று கத்த இப்பவே ரெடி

6:55 AM  

Post a Comment

<< முகப்பு