யாழ்ப்பாணத்தில் உண்மையில் என்ன நடக்கிறது?

'பொய் வேண்டுமானால் புலிபினாமிகளை வெல்லும்"

யாழ்ப்பாணத்தில் உண்மையில் என்ன நடக்கிறது?
புலி ஊடகங்கள் பொய்யையே கக்கி வெளிநாடுகளில் அவர்களால் வாடகைக்கு எடுத்து வைத்திருக்கின்ற யாழ் புலிகளுக்கு அவர்கள் சொல்லும் கதை உண்மையாக இருக்கலாம். ஆனால் யாழ்ப்பாணத்தில் நடக்கும் உண்மை நிலமையை மற்றைய யாழ் குடாநாட்டு தமிழர்களும் அறிந்து கொள்ளவேண்டுமல்லவா? முதலில் ஒருவிடயத்தை பார்போம்

2002 ஆண்டு புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முன்பு யாழப்பாணத்தில் நாளாந்தம் கொலைகள் நடந்ததா? நீங்கள் கேள்விப்பட்டீர்களா? இல்லை. 2002 இல் இருந்துதான் கொலைகள் தொடங்குகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்ததின் பிரகாரம்

துணை இராணுவ குழுக்களின் ஆயுதங்கள் களையப்படவேண்டும்
புலிகளை அரசகட்டுபாட்டுக்குள் அரசியல் நடவடிக்கைக்கு அனுமதியளித்தல்
இதைவிட நல்ல அம்சங்கள் உள்ளடக்கபட்டதாக இந்த புரிந்துணர்வு ஓப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது என்பது உண்மையே அதில் முக்கியமாக புலிகள் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறான எந்த ஓர்செயல்களையும் செய்ய கூடாது. என்பது போன்ற சரத்துக்கள் உள்ளடக்க பட்டிருந்தன. கையெழுத்து போட்ட தலைவருக்கு அந்த ஓப்பந்தத்தில் என்ன இருக்கு என்றோ அதைவாசித்து விளங்ககூடிய அறிவோ இல்லை சும்மா கூட்டிகொண்டுவந்து இருத்தி கையெழுத்து போட்டதுதானே! தலைவரின் தகுதியே இப்படியென்றால் பிறகு அவரின் தொண்டர்கள் எப்படியிருப்பார்கள்.

முதல் முதல்வேலையாக புலிகள் செய்தது துணை இராணுவகுழுக்களின் ஆயுதங்களை களைந்தது. யாழ்பாணத்தில் ஆக இருந்தது ஈ.பி.டீ.பி என்ற இயக்கம் மட்டும்தான். அவைகளின்ர ஆயுதத்தை மட்டும்தான் புலிகள் அரசாங்கத்தை கொண்டு களைந்தது. பாசையூர்காரர், கரையூர்காரர்களின் ஆயுதத்தை (வீச்சரு வாள், மாடுவெட்டுகிற கத்தி, இன்னும் பல) யாராலும் களைய முடியாது. இவ்வளவு ஆயுதம் வைத்திருக்கும் புலிகாரர் இன்னும் கூட அவர்களின் பிரதேசத்துக்குள் நுளையமுடியாது. அதுவேற கதை.

ஈ.பி.டீ.பி யிடம் ஆயுதங்கள் களைந்தவுடன் புலிகாரர் செய்த வேலை அந்த இயக்கத்தினரை (பொம்பிளை, ஆம்பிளை) எனப்பாராமல் போட்டுதள்ளினதுதான். (ஏனெனில் தமிழீழ தேசிய பயங்கரவாதி பிரபாகரனை தலைவராக ஏற்றுகொள்ளாதவர்கள் எல்லோரும் துரோகிகள்.) ஈ.பி.டி.பியும் பிரபாகரனை ஏகத்தலைவராக ஏற்றுகொண்டு இயங்கியிருந்தால் அவையல் துரோகிகளாக செத்து இருக்கமாட்டினம். அவையளை வெளிநாட்டில் உள்ள புலிபினாமிகளும் துரோகிகளாக பார்காமல் சகோதரங்களாக பார்திருப்பார்கள்.
வன்னியில் இருந்து கொஞ்சபேர் அரசியல் நடவடிக்கைகளுக்காக யாழ்பாணத்துக்குள் உள்ளிட்டினம் அதிலிருந்துதான் யாழ்பாணத்தின் கலாசாரம் சீரளியதொடங்குகிறது. புலிக்கு ஆரசியல் என்றாலே என்னஎன்று தெரியாது இதில்லென்ன அரசியல் நடவடிக்கை அதுகளுக்கு தெரிந்தது எல்லாம் அரிசி கடத்திறது, ஆட்களை கடத்திறது, ஆயுதம்கடத்துவது, கப்பம் வாங்கிறது, பிள்ளை கடத்திறது. இப்படியான நடவடிக்கைகளைதான் அவையள் ஆரம்பித்தவையல்.
ஊருக்குள் சண்டியன் வந்தால் ஊருக்குள் உள்ளவர்கள் கொஞ்சபேர் சண்டியனுடன் சேர்வது போல் புலிபொடியல் யாழ்குடாநாட்டுக்குள் வந்தவுடன் அங்கே வேலைவெட்டியில்லாமல் இருந்த கொஞ்சபேர், பள்ளிகூட பொடியல், ஓதுக்கபட்ட மக்கள், காடைகள், வறுமை வாழ்கைக்கு கீழ் வாழ்ந்துகொண்ருந்தவர்கள், வியாரிகள் இப்படி எல்லாவகையினரிலும் கொஞ்பேர் சேர்ந்து அவர்களின் முகவர்களாகிவிட்டார்கள்.
முக்கியகுறிப்பு.- நல்லகுடும்பத்தினரே, நல்லவசதியுள்ளவர்களோ, நல்ல படித்தவர்களோ தங்களையோ, தங்களுடைய பிள்ளைகளையோ இவர்களுடன் இணைத்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

முகவர்களின் முதல்வேலை வன்னியிலிருந்து வந்தவர்களுக்கு வீடுபிடித்து கொடுத்தது இரண்டாவதாக தங்களை சுற்றியுள்ளவர்களுக்கும், முக்கியமாக அவர்களுக்கு எதிரானவர்களுக்கும் தாங்கள்தான் இந்தசமுதாயத்தில் முக்கியமானவர்கள் இனி தங்களைகேட்டுதான் எதையுமே செய்யவேண்டும்.. என்ற ஓர் நிலைபாட்டை தோற்றுவித்தார்கள். பிறகென்ன அவர்கள் வைத்ததுதான் யாழ்குடாநாட்டில் சட்டமாக்கப்பட்டது.

2002இலிருந்து 2006ஆம் ஆண்டு மட்டும் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஓழுங்காகத்தான் கடைபிடித்தது. யாழ்குடா நாடு முழுமையாக புலிகளுக்கு திறந்துவிடபபட்டது. ஆமிகாரர்கள் முழுமையாக அவர்களின் முகாம்புகளிற்குள் முடக்கப்பட்டார்கள். அதற்கு பதிலாக புலிகள் யாழ்ப்பாணத்தில் புதிதுபுதிதாக அலுவலகங்கள் திறந்தார்கள். தங்களுடைய பஞ்சாயத்து நடவடிக்கையிலிருந்து பணம் சேர்க்கும் வேலையையும் முழுமூச்சாக ஈடுபட்டார்கள். நான் மேல் குறிபிட்ட முகவர்கள் அவர்களுக்கு முழுநேர ஊழியர்கள் ஆனார்கள். தனிமனித வருமானத்திலிருந்து வியாபார ஸ்தாபனங்களிலிருந்து, அரச அலுவலகங்களில் இருந்து எல்லாருமே புலிகாடையர்களுக்கு கப்பம் கட்டவேண்டிய கட்டாய நிலகை;கு உள்ளானார்கள.;. வீட்டில் சாப்பிடக் காசு இருக்கோ இல்லையோ அவர்களுக்கு படியளக்கவேண்டும் என்றாகிவிட்டது வாழ்கை.

அவைகளின் வரிசட்டங்கள் என்பது உலகத்திலேயே புதிமையான சட்டங்கள். உதாரணங்கள்-

வெத்திலை கடைகாரரிடம் போய் கேப்பினம். ஐயா! உங்களுக்கு ஓருநாளைக்கு எவ்வளவு வியாபாரம் நடக்கும். அதுதம்பி என்னசெய்றது? தம்பி அதைவைத்துதான் வாழ்க்கையை ஓட்டி கொண்ருக்கிறன். ஏன் தம்பி கேக்கிறீங்க? உங்களுக்கு ஓரு நாளைக்கு 150ருபாய் வருமானம் வருது நீங்க எங்களுக்கு 50ருhய் கட்டவேண்டும். அது வந்து தம்பி. முடிஞ்சா கொண்டுவந்து கட்டுங்க எல்லாவிட்டால் கடையை மூடுங்க. போய்கொண்டேயிருப்பினம்…...

ஒரு வீட்டுக்கு போயினம் அக்கா,அக்கா

அக்கா வருகிறா. வணக்கம் அக்கா. நீங்க யாரு? முகவர் முந்திக்கொள்கிறார். இவைதானக்கா விடுதலைப்புலிகளின் வருமானவரித்துறையில் வேலைசெய்கிறவர்கள். என்னவேனும் இவையளுக்கு புலிகாரர் சொல்லுகிறார். அக்கா உங்கட வீட்டில இரண்டு மோட்டபைக்கு நிக்குது அதில ஒன்றை நீங்கள் எங்களுக்கு தரவேண்டும். அல்லாவிடில் உங்கட பொடியனை எங்கட இயக்கத்துக்கு வேலைசெய்யவிடவேண்டும். அக்கா வாயடைத்து போகிறா பிறகு என்ன அவைக்கு மோட்டபைக் ஓன்றை கொடுத்து அனுப்பியதுதான். இப்படி யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு கதையுண்டு. இந்ததுன்பங்களில்லிருந்து எப்பொழுது விடுதலையடைவோம் என்று இருந்தமக்கள் இப்பொழுது வீறுகொண்டு எழுந்துவிட்டார்கள். இந்தவகையான மக்கள்தான் இன்று கொல்லப்படுகிறார்கள். ஆனால் வன்னிபுலிகள் இப்படி அம்போ என்று தங்களை ஓருநாள் விட்டுவிட்டு ஓடுவார்கள் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அதைவிட தங்களை சனம் ஓர் காலத்தில் சந்தியில் வைத்து அடித்தே கொல்லும் (இன்றைக்கு நாளாந்தம் கொலை செய்யபடுபவர்கள் இவர்கள்தான்) என்று நினைத்திருக்க மாட்டார்கள் புலி ஊடகங்களில் இனம்தெரியாதவர்களாள் யாழ்ப்பாணத்தில் அங்க கொல்லப்பட்டார்கள், இஞ்சகொல்பட்டார்கள் என்று பிரசுரிக்கப்படுபவர்கள் எல்லோரும் மக்களால் இனம்காணப்பட்டு வைத்திருந்து இப்பொழுது கொல்லப்படுகிறார்கள். அதுதான் உண்மை.

பாம்பு மாதிரி ஞாபகம் வைத்திருந்து மக்கள் இப்பொழுது பழிவாங்குகிறார்கள்

வன்னிப்புலிகள் யாழ்குடா நாட்டில் இருக்கும்பொழுது ஆமிகாரன் கவசவகனம் ஒன்றில் போகும்பொழுது தெரியாதனமாய் பள்ளி கூடத்து மாணவி ஓன்று மோதியதில் அப்பெண் இறந்து விட்டாள் இச்சம்பவம் தற்செயலாக நடந்த சம்பவம், இதைப்போல் புலிகொடி ஏற்றவிடாமல் ஆமிகாரர் தடுத்த சம்பவங்கள், மாணவர்களை கூட்டம் போடவிடாமல் தடுத்த சம்பவங்கள், என பலசம்பவஙகள் நடந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் சங்கிலியன்படை, எல்லாளன் படை, எழுச்சிபடை, மக்கள்படை என்ற பலபடைகள் எல்லாம் துள்ளிகுதித்து ஆர்ப்பாட்டம் பஸ்கரிப்பு செய்தவர்கள் இன்றைக்கு நாளந்தம் பல படுகொலைகள் நடக்கின்றன. கட்டிபோட்டு கண்ணை கூடதோண்டுகிறாகள் இப்படியெல்லாம் நடக்கின்றபொழுதில்

மேலே குறிபிட்ட கள்ளபடைகள் எங்கேபோய்விட்டார்கள்?

பகுத்தறிவுள்ள தமிழா கொஞ்சம் சிந்தித்துபார்! (புலிக்காரரை விடுங்கள் ஐந்தறிவு படைத்ததுகள்)

நான்சொன்ன கள்ளப்படைகள்தான் இன்று கொல்லபட்டு கொண்டுருப்பவர்கள் இவர்கள் மூலம்தான் புலிகள் யாழ்ப்;பாணத்தில் கப்பம் வாங்கியது கப்பம் கொடுக்காதவர்களை காட்டிகொடுத்து கொலைசெய்தது, வாகனங்கள் கடத்த உதவியது பிள்ளை பிடித்துகொடுத்தது, அநியாயவரி அறவிடுவது போன்ற அவர்களின் எல்லாவிதமான கேடுகெட்ட செயல்களுக்கு துணைபோனவர்கள் . அதனால்தான் இவர்களின் சாவை தட்டிகேட்பதற்கு ஓருவரும் உதவிக்கு போகிறார்களில்லை. புலிகளை பொறுத்தவரையில் இவர்களை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள். பிழைப்பு முடிந்தவுடன் இவர்களை கைவிட்டு, விட்டு இவர்களின் கொலையை மற்ற இயக்கத்தினரின் மேல்பழியை போட்டுவிட்டு போய்விட்டார்கள். அததான் உண்மை.

2002 ஆண்டு ரணில் பிரபா புரிந்துணர்வு ஓப்பந்தமானது கப்பத்தின் அடிப்படையில் செய்யபட்டதாகும். அவாவது ஏ9பாதையினூடாக வந்தவருமானம் யாழ்குடாநாட்டு மக்களிடம் வாங்கிய வரி, கப்பம், போன்றவற்றின் மூலம்கிடைக்கபெற்ற பணத்தின் ஓருபகுதி ரணிலுக்கு கப்பமாக கட்டப்பட்டது. இந்தவருமானத்தை ரணில் பெறுவதற்கு யாழ்குடா நாட்டு மக்களை புலிக்கு விற்றதற்கு சமமாகும். இன்று ஏ9பாiதையை மூடியவுடன் புலியின் பிழைப்பு போய்விட்டது. இன்றைக்கும் புலிகள் ரணிலைவிரும்புகிறார்கள். புலியைபொறுத்தவரை பிழைப்புக்காய் எதையும்செய்வார்கள். 30வீதமான தமிழீழம் அழிந்து விட்டது இருக்கும் கொஞ்ச ஈழத்தையும் நாஙகள் காப்பாற்றவேண்டும். தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்றமாதிரி ஒவ்வெரு தமிழனும் சிந்திக்கவேண்டும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு