நரபலி நரகாசுரனின் மாவீரர் கௌண்டிங்

நரபலி நரகாசுரனின் மாவீரர் கௌண்டிங் மீண்டும் ஆரம்பம்.




கொழும்பில் தற்கொலைக்குண்டு வெடிப்பு

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலர் ராஜபக்ஷாவின் சகோதரர் தற்கொலைத் தாக்குதலில் உயிர் தப்பினார்
தகவல். பி.பி.சி


இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய சகோதர்களில் ஒருவருமாகிய கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்கள் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டதென்று சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ஒன்றில் இருந்து நூலிழையில் காயங்களேதுமின்றித் தப்பியிருக்கிறார்.

ஆனாலும் இந்தத் தாக்குதலில் இதுவரை ஒருவர் பலியாகியிருப்பதாகவும் பாதுகாப்புப் படையினர் உட்பட மேலும் 14 பேர் காயங்களிற்கு உள்ளாகியிருப்பதாகவும் இராணுவ வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இன்று காலை சுமார் 10.40 மணியளவில் இவர் சென்றுகொண்டிருந்த வாகனத் தொடரணி மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த கொழும்புஇ தர்மபால மாவத்தைப் பகுதியிலுள்ள பித்தளை சந்திக்கருகிலுள்ள சைகை விளக்குகளிற்கு அண்மையில் சென்று கொண்டிருந்தபோதே தற்கொலைக் குண்டுதாரி சென்றதாகக் கருதப்படும் முச்சக்கர வண்டி மோதியிருப்பதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷ பயணித்துக் கொண்டிருந்த குண்டுதுளைக்காத வாகனம் தப்பியபோதும் அவரிற்குப் பாதுகாப்பிற்காகச் சென்றுகொண்டிருந்த ஏனைய வாகனங்கள் சில சிக்குண்டு கடுமையான சேதத்திற்குள்ளாகியிருக்கிறன.

அப்பகுதியால் பயணித்துக் கொண்டிருந்த சிவிலியன்களின் வாகனங்கள் சிலவும் இந்த தாக்குதலில் சிக்கி எரிந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு சில நூறு மீற்றர்கள் தொலைவில் இடம்பெற்ற இந்தத்தாக்குதலில் உயிர்தப்பிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷ நேரடியாகவே அலரிமாளிகை சென்று ஜானாதிபதியைச் சந்தித்தித்து கட்டித் தழுவியிருக்கிறார். அவரது மேலாடையில் இரத்தக்கறைகள் படிந்திருந்த காரணத்தினால் அவருடைய வாகனத்தில் சென்ற சிலரும் காயமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டனர்.

இதேவேளை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் விடுதலைப் புலிகள் இவ்வாறான கோழைத்தனமான காட்டுமிராண்டித் தாக்குதல்களிற்குப் பேர்போனவர்கள் என்றும் ஆனால் இந்தத் தாக்குதலினால் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு சமாதான முயற்சியில் உண்டான அர்ப்பணிப்பில் எவ்வித தாக்கங்களும் மாறுதல்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

நவீன பொல்பொட் பிறந்த நாள்
கார்த்திகை26

இன்று ஈழத்திற்கு நாசத்தின் அவதாரமாய் நரகாசுரன் தமிழ் மண்ணில் வந்துதித்த நாள்.
எண்ணைச்சட்டிக்குள் இருந்து தமிழ் மக்களை எரிதணலுக்குள் தள்ள சூரசங்காரன் பிறந்தநாள்.
எங்கோ முகாமுக்குள் இருந்த இராணுவத்தை தமிழன் வீட்டு வாசல்களில் நிறுத்தி தனது
குடும்பத்தை பாதுகாப்பாய் வாழவைத்துவிட்டு அரூபியாய் வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒரு சுயநல வாதி பிறந்தநாள்.
தமிழ் மக்களின் அழிவிலே விளம்பரம் தேடும் அரக்கன் பிறந்தநாள்.
தமிழீழம் விடுதலை என்றெல்லாம் பினாத்திக்கொண்டு தமிழ் மக்களை அவலத்தில் வைத்துக்

; கொண்டிருக்கும் அராஜகவாதி பிறந்த நாள்.

பாசிசத்தின் பிறந்தநாள்
வாழவேண்டிய பிள்ளைகளை மனித வெடிகுண்டுகளாக்கிஅவர்கள் சதைத்துண்டங்களை
தெருவெங்கும் சிதற வைக்கும்
இரத்த வெறியன் பிறந்த நாள்.
பொல்பொட் தமிழ் மண்ணில் மீண்டும் உருவெடுத்த நாள்.
சிறுவர்களை சடலங்களாக்கி அவர்கள் கல்லறைகள் மீது தனது பிறந்தநாள் விழா கொண்டாடும்
ஒரு சாவிரும்பி பிறந்தநாள்.
பசுமையாய் இருந்த சுடுகாடக்கிக் கொண்டிருக்கும் ஒரு சுடலைமாடன் பிறந்த நாள்.
தமிழ் மண்ணில் கல்விமான்களையும் அறிவாளிகளையும் கொன்றொழித்துக் கொண்டிருக்கும்
படிப்பறிவு அறவேயற்ற அறிவிலி பிறந்த நாள்.
சமதானத்தின் எதிரி வஞ்சகமாய் நடித்தே கொல்லும் நயவஞ்சகன் பிறந்த நாள்.
உலகெங்குமில்லாத சர்வாதிகாரி பிறந்தநாள்
கூட்டுச்சேர்ந்தே குழிபறிக்கும் ஒரு சகுனியின் பிறந்தநாள்.
இந்த நாசகாசுரன் அழியும் நாள் தமிழ் மக்களின் அமைதியின் ஆரம்பநாள்.

12:55 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

Punch line post

7:10 AM  

Post a Comment

<< முகப்பு