யாழ்ப்பாணம் புலிகள் கிளேமோர் தாக்குதல்

யாழ்ப்பாணம் புதிய பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் புலிகள் கிளேமோர் தாக்குதல் குழந்தை உட்பட நான்கு பொதுமக்கள் பலி இருவர் படுகாயம்; நகர் வெறிச்சோட்டம்

யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற புலிகளின் கிளேமோர் தாக்குதலில் குழந்தை உட்பட நான்கு பொது மக்கள் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.யாழ். மீன்சந்தை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த கிளேமோர் குண்டே வெடித்துள்ளது. கிளேமோர் குண்டு வெடித்ததில் இரு பொது மக்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். நான்கு பொது மக்கள் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் குழந்தையொன்றும் வயோதிபப் பெண் ஒருவரும் மேலதிக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இராணுவ வாகனம் ஒன்று அந்த இடத்தைக் கடந்து சென்றபோது கிளைமோர் வெடித்தது என்று முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப்பகுதியில் கிளைமோர் வெடித்த போது அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அதில் சிக்க நேர்ந்தது.குண்டுச் சிதறல்களால் தாக்குண்டு மரணமான இரு ஆண்களின் சடலங்கள் அவ்விடத்தில் காணப்பட்டன. பின்னர் அவை யாழ். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. படுகாயங்களுடன் வைத் தியசாலைக்கு எடுத்துவரப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவரும் சிறுமி ஒருத்தியும் அங்கு பின்னர் உயிரிழந்தனர். காயங்களுடன் ஆண் ஒருவரும் மற்றொரு சிறுமியும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் காயமடைந்தார் என்று ஒரு தகவல் தெரிவித்தது.யாழ். நீதிவான் ரி.விக்னராஜா சம்பவம் நடந்த பகுதியைப் பார்வையிட்டார்.சந்தடி மிகுந்து காணப்பட்ட யாழ். நகரப் பகுதி இந்தச் சம்பவத்தில் அல்லோல கல்லோலப் பட்டு அடங்கியது. கடைகள் மூடப்பட்டு நகரிலிருந்து மக்கள் வெளியேறினர்.உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் பெயர் விவரங்கள் உடனடியாகத் தெரிய வரவில்லை

படையினர் சம்பவ இடத்தில் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.தூர இடங்களுக்கான போக்குவரத்துக்களும் பிற்பகலுடன் தடைப்பட்டமையினால் நகருக்கு வந்திருந்த மக்கள் வீடு திரும்ப முடியாது நிர்க்கதிக்குள்ளாகியிருந்தனர்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு