தொல்.திருமாவளவனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள தலித் மக்கள் எழுப்பும் கேள்விக்கு உங்கள் பதில் என்ன

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்


திரு. தொல் திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு

தமிழ் நாடு. இந்தியா

அன்புள்ள தலைவர் அவர்கட்கு,

கடந்த பல வருடங்களாக இலங்கைத் தமிழரை உலுக்கி வருகிற அரசியலில் நீங்கள் அக்கறை காட்டிவருவதையும், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ ;நாட்டின் தலித் சமூகத்தின் ஒரு பிரிவின் தலைவராக இருந்து அந்தப் பிரிவு மக்களை சமூக விடுதலையை நோக்கி வீறு நடை போடவைக்கும் முயற்சிகளில் நீங்கள் ஈடுபட்டு வருவதை மனதிற் கொண்டும் யாழ்ப்பாண மாநிலத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் விடுதலைப ;புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் அங்குள்ள தமிழ்ச் சமூகத்திற்கு குறிப்பாக உங்கள் பிரிவைச் சேர்ந்த சமூகத்திற்கு புலிகளினால் செய்யப்பட்ட பெரும் அநீதி ஒன்றை சுட்டிக்காட்டி அதற்கு உங்களிடமிருந்து நியாயம் கேட்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இந்தக் கடிதத்தில் பொதிந்தள்ள செய்தி இரு நபர்களுக்கிடையே எழுந்த தனிப்பட்ட விவகாரமல்ல. பதிலாக புலிகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தையுமஇ; நீங்கள் இலங்கையின் அரசியல் மோதலில் ஒரு பக்கத்தையே பார்த்துஇ அதே பக்கமே உங்கள் புலன்களைத் திசை திருப்பி வைப்பதையும் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் எதிர் காலத்தையும் தமிழ்நாட்டு தலித் மக்கள் விடுதலைப் புலிகள் மீது வைத்திருக்கும் பார்வையையும் கேள்விக்கு உட்படுத்தும் செய்தி இது. இது இதுவரை பத்திரிகைகளிலே அல்லது ஏனைய தொடர்புச் சாதனங்களின் சேவையிலோ தெரிவிக்கப்படாத அல்லது இருட்டடிக்கப்பட்ட ஒன்று. ஆகையால்தான் இச் செய்தியை உங்களுக்கும்இ உங்களுக்குப் பின்னால் தமிழ் நாட்டில் அணிதிரண்டிருப்போருக்கும் தெரிவிப்பதற்காக இந்தக் கடிதத்தை பகிரங்கமாக எழுதுகிறேன்.

இந்தக் கடிதத்தை ஒரு தலித் தலைவரான உங்களுக்கு எழுதுவதற்கு எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று நீங்கள் ஒரு கேள்வியை முன்வைக்கலாம். நீங்கள் முன்வைக்கத் தயங்கினாலும்இ நீங்கள் பாடிவருகிற ஈழத்துப் பரணியின் நாயகரும் அவரைச் சுற்றி ஆலவட்டம் தூக்குவோரும் என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கண்டிப்பாகக் கேட்பார்கள். அதனால் என்னைப் பற்றிய அறிமுகத்தை ஓரிரு வரிகளில் கூறிவிடுகிறேன். நீங்கள் தமிழக சமூகத்தில் தலித்துகளின் ஒரு பகுதியினருக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்காக உறுதிப+ண்டு எவ்வாறு போராட முன்வந்தீர்களோ அதேபோல 1966-1968 இல் பாடசாலை மாணவனாக இருக்கும் போது தீண்டாமைக்கு எதிராக போராடுவதற்காகக் களமிறங்கிஇ உலகின் கவனத்தை ஈர்த்த மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தொடக்கம் பல சைவத் தமிழ் கோவில்களை யாழ்ப்பாணத்தில் பஞ்சமர்களக்கு (தலித்துகளுக்கு) திறந்து வைப்பதற்காக போராடியவர்களுள் நானும் ஒருவன். பின் உயர் கல்வியை முடித்துக் கொண்டுஇ சாதிய ஒடுக்கு முறையின் குறிப்பாக தீண்டாமைக் கொடுமையின் தாக்கத்திலிருந்து தள்ளியிருக்கும் கொழும்பு நகரில் சுதந்திரமாக வேலை செய்து சௌகரியமாக வாழும் வாய்ப்புக் கிடைத்தும்இ யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தேன். யாழ்ப்பாண நிலத்தில் தீண்டாமையின் அழுத்தத்தினால் அடங்கி ஒடுங்கிய சமூகங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிக்கொள்வதற்காக.

அவ்வாறு எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்று: 1984ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள உயர் பாடசாலையில்- அதன் விஞ்ஞான ஆய்வு கூடத்தில-; உங்கள் பிரிவைச் சேர்ந்த நடுத்தர வயது கொண்ட தலித் ஒருவர் ஆய்வுகூட உதவியாளராக வேலை செய்தார். சில நாட்களின் பின்பு ஒடுக்கு முறையாளர் (வெள்ளாள) சமூகத்தைச ;சேர்ந்த அதே வயதுடைய ஒருவர் பிய+னாக புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டார். ஒரு வாரத்திற்குள் புதிதாக சேர்ந்த பிய+னை ஆய்வு கூட உதவியாளராக வேலை செய்ய வைத்துவிட்டு. அந்த தலித் சகோதரனை பிய+னாக பதவி தாழ்த்தியது மட்டுமல்லஇ அந்தப் பாடசாலையில் அவரைஇ கூட்டிக் கழுவுகிற வேலை செய்யுமாறு உத்தரவிட்டார் பாடசாலையின் அதிபா.; இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த அந்த தலித் சகோதரனை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கூட்டிக் கொண்டு வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியிலிருந்து நிவாரணம் பெற்றுத் தருமாறு கேட்டார். இது சம்பந்தமாக கல்வி இலாகா அதிகாரிகளுக்கும் எனக்கும் நடந்த கடுமையான பேச்சு வார்த்தையின் பயனாக அந்தத் தலித் சகோதரனை இன்னொரு பாடசாலைக்கு இடம் மாற்றியதுமஇ; வேலை இழந்த ஒரு மாத காலத்திற்குரிய சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்ததும் தான் அப்போது என்னால் செய்ய முடிந்த உதவி.

ஏன் இவ்வாறான சமரசத்திற்கு நாங்கள் உடன்பட்டோம்? இந்த விவகாரத்தைப் போராட்டமாக்கியிருந்தால் பல தமிழீழ விடுதலை இயக்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியத்திற்கான போராட்டத்தை அன்றைய சிங்கள அரசு, இலகுவாக தமிழர்களைப் பிரித்து அந்தப் போராட்டத்தை நலிவடையச் செய்துவிடும் என்பதனால்தான். தமிழர்களின் ஐக்கியத்தை உடைக்கஇ தமிழர் சமூகத்தின் ஒரு பகுதியான தலித்துகள் சிங்கள இனவாத அரசுக்கு துணைபோகக ;கூடாது என்பதற்காகவே. எவ்வளவு துன்பத்தை அனுபவித்தாலும் தனது இனத்தை எதிரி பிளவுபடுத்த விடக்கூடாது என்ற கொள்கை எங்களுக்கு மாத்திரமல்லஇ எம் மூதாதையர்களுக்கும் இருந்தது. அதனால்தான் போத்துக்கீசரும், ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் இலங்கை நாட்டை ஆக்கிரமித்த போது தலித் மக்கள் அந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாகப் போகவில்லை. பதிலாக இவர்களை அடக்கிவந்த உயர்சாதியினர்தான் அவர்களுக்குத் துணைபோனார்கள்.

சரி. அந்த அதிபரும் அங்கே வேலை செய்த ஆசிரியர்களும் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள்? ஏன் அந்த தலித் சகோதரனை பதவியிறக்கி அவ்வாறு சித்திரவதை செய்தார்கள் என்பதை நீங்கள் இலகுவாக விளங்கிக் கொள்வீர்கள். ஆனால் புலிகளுக்கு வன்னியிலிருந்து சாமரம் வீசும் தலித்துகளுக்கு இவற்றை விளங்கப்படுத்தத்தான் வேண்டும். ஏனெனில் புலிகளின் அன்பு மழையில் இந்தத் தலித்துகள் எல்லாம் ஞானஸ்தானம் பெற்றுஇ சைவ வெள்ளாளத் தமிழர்களாகிவிட்டார்கள்;.

இந்திய அமைதிப் படையின் காலத்திலே புலிகள் பதுங்கி இருந்த போது மக்கள் மத்தியிலே துணிச்சலாக சென்று புலிகளுக்காக பரப்புரை செய்த “செங்கதிர்’’ என்ற தலித் தோழனை கொன்றவர்கள் இந்திய இராணுவமோ இலங்கை இராணுவமோ அல்லது ‘‘ஒட்டுக்குழுக்களோ’’ அல்ல. புலிகள் இயக்கத்துள் ஆதிக்கம் செலுத்தும் சைவ வெள்ளாளர்களே. இது ஒரு பகிரங்கமான வரலாற்றுப் பதிவு. ஆனால் புலிகளுக்கு சாமரம் வீசும் தலித்துகள் இவற்றையெல்லாம் மறந்துவிட்டு பரலோகம் போவதற்கு சிதம்பரத்தில் மூட்டிய தியில் விழுந்த நந்தனைப் போல புலிகள் மூட்டிய கரும்புலித் தீயில் போட்டி போட்டுக் கொண்டு விழுந்துகொண்டிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட பாடசாலையில் அந்த தலித் சகோதரனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போன்று பல நூறு சம்பவங்கள் தமிழீழப் போராட்டம் தொடங்கிய பின் நடந்தள்ளன. தமிழ் ஈழம் கேட்டு போராடிய ஏனைய இயக்கங்கள் பலவீனப்படுத்தப்பட்டு புலிகளால் அழிக்கப்பட்டதற்குரிய காரணங்களில் முக்கியமானது தலித்துகளுக்கு மற்ற இயக்கங்களில் சில முக்கிய இடம் கொடுத்ததே.

1991ம் ஆண்டில் குறிப்பாக இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து வெளியேறிய பின் வடமாகாணம் முழுவதும் புலிகளின் அதிகாரம் மீண்டும் நிறுவப்பட்டது. அந்த நேரத்தில்தான் புலிகள் தங்கள் பாஸிஸ கோரத்தை தலித்துகளுக்கு காட்டுவதற்கு முன்வந்தார்கள்.

தலித் சமூகத்துள்ளும் குறிப்பாக உங்களுடைய பிரிவைச்சேர்ந்த சமூகத்திற்கு எதிராக?

அதுதான் உங்கள் சமூகத்தைச் சேர்ந்த தலித்துகளின் ஒரே ஒரு அமைப்பான திருவள்ளுவர் மகாசபையை இயங்கவிடாமல் தடையுத்தரவு பிறப்பித்துஇ அந்த நிறுவனத்தின் அறிக்கைகள், வைப்புப்பணம், உபகரணங்கள் முதலியவற்றை விடுதலைப் புலிகள் சூறையாடிச் சென்றது, அதுவும் துப்பாக்கிமுனையில்.

தலித் மக்களுக்காக. 1940இன் பிற்பகுதியில் போராட நிறுவப்பட்ட சிறுபான்மை தமிழர் மகாசபைஇ தீண்டாமையைக் கோவில்களிலும் தேநீர்க் கடைகளிலும் வேறு பொது இடங்களிலிருந்தும் அகற்றுவதற்கு போராடிக் கொண்டிருந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஐன இயக்கம் ஆகியன போராட்ட இயக்கங்களாக செயற்பட்டமையால் விடுதலைச் சிறுத்தைகளின் சமூகத்தைச் சார்ந்த யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தலித் பிரிவு மக்களை முன்னேற்றுவதற்கு கல்வியை வழங்கவதுதான் ஒரே வழியெனத் தீர்மானித்து, அந்தத் திட்டத்தை தனது நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் திருவள்ளுவர் மகாசபை. தமது சமூகத்திலுள்ள ஓரளவு வசதியுள்ளவர்களிடமிருந்து நிதியைத் திரட்டி தமது சமூகத்திலுள்ள ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு உதவிவந்தது அந்த நிறுவனம். அதே வேளையில் தமது உரிமைகளுக்கு எந்த வகையான போராட்டத்தையும் நடத்த விரும்பாத அமைப்பு அது. தனித்து நின்று போராடும் வல்லமை அவர்களுக்கு இருக்கவில்லை.

தமிழ்ச் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து மக்களின் ஒரு பிரிவினருக்காக உருவாக்கப்பட்ட அந்த அமைப்பை நீங்கள் தலையில் வைத்து காவித்திரியும் புலிகள் மூடவைத்தார்கள். புலிகளின் கனவாகிய தமிழீழம் ஒன்று அமைவதற்கு முன்பே அவர்களின் எதிர்கால குடிமக்களில் ஒரு பகுதியான தலித்துகளுக்குச் சேவை செய்து வந்த ஒரு சமூக அமைப்பை புலிகள் தடைசெய்ததற்கு அதன் பாஸிஸ இயல்புதான் ஒரே காரணம். இந்நிலையில் அவர்கள் கற்பனை செய்யும் தமிழீழத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கும் மனித உரிமைகளுக்கும் ஐனநாயகத்திற்கும் என்ன நடக்கும்? அவை குழி தோண்டி புதைக்கமாட்டாது என்பதை மறுத்து வாதிட உங்களிடம் ஏதாவது நியாயங்கள் இருக்கின்றனவா? சாதிக் கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய சமூகத்தில் சுதந்திரமாக நின்று ஒரு சாதி ரீதியான ஒரு அரசியல் இயக்கத்தை நீங்கள் நடாத்த இந்திய சமூகம் உங்களுக்கு இடம் அளித்த அளவிற்கு புலிகளின் தமிழீழத்தில் ஒரு சமூக அமைப்பை தலித்துகளுக்காக நடாத்த முடியவில்லை என்றால் புலிகளின் சமூகம் முற்போக்கானதா அல்லது இந்திய சமூகம் முற்போக்கானதா? என்று இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள தலித் மக்கள் எழுப்பும் கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்பதை தயவு செய்து பகிரங்கமாக எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இங்ஙனம்இ

அன்புள்ளஇ

மு.ஏரம்பு

மார்கழி 10இ 2006

4 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

ஆணித்தரமான கேள்விகள்.

பதிவுக்கு நன்றி

4:47 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

தெரியாத பல விசயங்களை அறியத்தந்தமைக்கு நன்றி

5:18 AM  
Blogger மாசிலா மொழிந்தது...

கேள்விகள் நன்றாக புரிகிறது. இருந்தாலும் தகுந்த ஆதாரங்களும், எதிர் வாதங்களும் இல்லாமல்
நீங்கள் கூறியதை முற்றிலும் நம்புவதற்கு தயக்கமாக இருக்கிறது. இலங்கையிலும் சாதி பிரச்சினைகள்
உண்டு என்பதை நான் ஏற்கனவே கேள்விபட்டிருக்கிறேன். இதை ஆமோதிப்பதை போல் உமது பதிவு
இருந்தாலும், மற்ற இலங்கை தமிழ் சகோதரர்களின் எதிர் வாதத்தை வைத்துதான் கொஞ்சமாவது
நிலமையை புரிந்துகொள்ள முடியும் என் நினைக்கிறேன்.

6:29 AM  
Blogger மாசிலா மொழிந்தது...

//வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழர்கள் அங்குள்ள இந்தியத்தமிழர்களை தமிழர்களாகவே மதிப்பதில்லை. ஆனால் நாம்தான் கண்மூடித்தனமாக அவர்களை ஆதரித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையையும் நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.//

இது என்ன பேச்சு?

இந்திய த்மிழர்களுக்கு, பொருளாதார நிபந்தனை காரணமாக, புலம்பெயர்ந்ததின் மன உலைச்சல் கிடையாதா? இவர்களுக்கு நெஞ்சில் ஈரமே கிடையாதா? இவர்களும் தான் ஒரு வகையில் (பொருளாதார கட்டாயத்திற்காக) நாட்டை விட்டு மறைமுகமாக விரட்டப்பட்டார்கள். இவர்களிலும் சாதி, குடும்ப, சமுதாய பிரச்சினைகள் உண்டு.

நீங்கள் நினைப்பது தவறு. உண்மை என்ன என்றால், இவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைகளையே சாமாளிக்க கடினப்போகிறபோது மற்றவர்களுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

6:46 AM  

Post a Comment

<< முகப்பு