மக்களை வருத்துகின்ற எந்த அமைப்பும்

போராட்டம் என்கிற பெயரில் மக்களை வருத்துகின்ற எந்த அமைப்பும் வெற்றி பெற்றதில்லை.

-அர்ச்சனன்


அரச தலைவர்களையும் இராணுவ தளபதிகளையும் கொல்வதின் மூலம் தமிழ்ஈழப்போராட்டம் போராட்டம் வெற்றிபெறும் என்பதினை தமது போராளிகளும் ஆதரவாளர்களும் நம்பவேண்டும் என்பதற்காகவும் அவர்களை திருப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் புலிகள் இவ்வகையான தாக்குதல்களை நடத்தி வருகின்றார்கள்.

கடந்த காலங்களில் புலிகளினால் பல இராணுவ தளபதிகளும், ஜனாதிபதியும், அரச தலைவர்களும், அமைச்சர்களும் கொல்லப்பட்டார்கள் .

இருந்த போதிலும் அந்த வெற்றிடங்களை அவர்களை விட பல மானவர்களும், திறமையானவர்களும் நிரப்பி கொண்டார்கள்.

தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களை பாதுகாப்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் இவ்வேளையில் ஏனைய தமிழ் பிரதேசங்களை மீட்பது மிக மிக கடினமானது என்பது புலிகளுக்கு புரிந்த விடயமே ஆகும்.

இருந்த போதிலும் தமது போராளிகளின் மனோபலத்தினை உயர் நிலையில் வைப்பதற்கும் அரச தலைவர்களை மிரட்டி வைப்பதற்கும் இவ்வகையான தாக்குதல்கள் புலிகளுக்கு தேவைப்படுகிறது.

தன்னை ஒரு சமாதான விரும்பியாக உலகிற்கு காண்பித்துகொண்டு இருந்த ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக தேர்வானால் தம்மால் தொடர்ந்து யுத்தத்தினை நடத்த முடியாது என்பதினாலும், மற்றும் யுத்தம் இல்லாத ஒரு சூழ்நிலையில் சர்வதேச அனுதாபம் கிடைக்காது என்பதினாலும் புலிகள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வட கிழக்கு மக்களை மிரட்டி அவர்களை வாக்களிக்காது தடுத்து இருந்தார்கள்.

அவர்கள் திட்டம் இட்டவகையில் ரணில் தோற்கடிக்கப்பட்டு கடும் போக்காளர் என வர்ணிக்கப்பட்டு இருக்கும் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக தேர்வானார்.

ஆனால் புலிகள் எதிர்பார்த்தமைக்கு எதிர் மாறாக அவர்களுக்கு சர்வதேச அணுதாபம் கிடைப்பதற்கு மாறாக அவர்கள் மீதான தடைகளே விதிக்கப்பட்டன.

மேலும் கிழக்கிலும் வடக்கிலும் மக்களை மனித கேடயங்களாக பாவித்து அவர்களின் இறப்புகளில் அனுதாபம் தேட புலிகள் முற்பட்டார்கள்.

அரச தலைவர்கள் புலிகளை காட்டிலும் தமது பிரச்சாரங்களை சர்வதேச நாடுகள் மத்தியில் ராஜதந்திரமாக மேற்கொண்டமையினால் புலிகளின் தந்திரங்கள் கோடிட்டு காட்டப்பட்டன.

வாய்புக்களை தவறவிட்டு வன்முறையினை காதலிக்கும் புலிகள்

விடுதலை போராட்டம் என்பது கடும் யுத்தம் புரிவதினால் மட்டுமோ அல்லது உயிர்களை தியாகம் செய்வதினால் மட்டுமோ கிடைத்துவிட போவதில்லை.

உலக ஆதிக்க சக்திகளின் ஆதரவுகளையும் அனுதாபத்தினை பெறமுடியாது போனால் அதில் வெற்றி காணமுடியாது என்பதினை புலிகள் உணரவில்லை.

அதனை உணரவைக்க விரும்பும் சக்திகளை புலிகள் எதிரிகளாகவே கருதினார்கள்.தமக்கு கிடைத்த வாய்புக்களை உரிய முறையில் பாவிப்பதற்கும், அதனை தங்க வைத்துகொள்வதற்கு ராஜதந்திர நகர்வுகள் அவசியம் என்பதினை அவர்களினால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை.

இவைகள் அவசியம் என்பதினையும் புலிகள் எப்பொழுதுமே புரிந்து கொண்டதில்லை. பணத்தினாலும் வன்முறையினாலும் எல்லாவற்றையும் வென்று விடலாம என புலிகள் தப்புக்கணக்கு போட்டு வந்துள்ளார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்ததின் மூலம் முதல் தடவையாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் சட்டபூர்வமாக இணைக்கப்பட்டு அது நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டது.

இந்திய படையினருடன் புலிகள் மோதலை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பத்;தினை தொலைத்தார்கள்.

1998ஆம் ஆண்டு புலிகள் தலதா மாளிகை மீது வாகன வெடிகுண்டு தாக்குதல் மேற்கொண்டதினை அடுத்து அவர்களை பயங்கரவாத இயக்கமாக இலங்கை அரசு தடை செய்தது.

2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாதான போது நீக்கப்பட்டது இந்த தடையானது நீக்கப்பட்டது.

நோர்வேயின் உதவியினால் புலிகளை தமிழ் மக்களின் பிரநிதிகளாக ஐரோப்பிய ஒன்றியமும் உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டு அவர்களுடன் பேசுக்களை நிகழ்த்தினார்கள்.

உலக நாட்டு ராஜதந்திரிகள் சமாதான விரும்பிகள் என பலரும் வட கிழக்கு பகுதிகளுக்கு சென்று புலிகளின் தலைவர்களுடன் பேச்சுக்களை நிகழ்த்;தினார்கள்.

இவர்கள் அப்பகுதிகளுக்கு செல்வதற்கான அனுமதியினை இலங்கை அரசு பெரும் தன்மையுடன் வழங்கியும் இருந்தது. இலங்கைக்கு அண்மையில் இருக்கும் உலகின் முதல் தர ஜனாநாயக நாடான இந்தியாவின் முன்னாள் தலைவரை புலிகள் தற்கொலை தாக்குதல் மூலம் திட்டமிட்டு கொலை செய்த பின்னரும் சர்வதேச சமூகம் புலிகளை மன்னித்து ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றுவதற்கு வாய்ப்பளித்தது.

அதனையும் புலிகள் புரிந்து கொள்ளவில்லை. யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தனதின் பின்னர் புலி போராளிகள் தங்களது வீடுகளுக்கு சென்று வருவதற்கும் அரசியல் பணிகளை மேற்கொள்வதற்குமாக அரச கட்டுப்பாட்டு பகுதிளுக்கு ஆயுதங்கள் இல்லாது சென்று வர அனுமதிக்கப்பட்டார்கள்.

இவ்வாறாக ஜனநாயக பண்புகளை பேணுவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பினை அவர்களினால் புரிந்து கொள்ள முடியாமல் போனது. அந்த வாயப்பினை பயன்படுத்தி மக்களின் மனதுகளை வென்றெடுப்பதற்கு பதிலாக அவர்களின் உயிர்களை எடுத்துவந்தார்கள்.

மாற்றுக்கருத்துடையவர்களை எதிரிகளாக பார்த்து அவர்களை கொலைசெய்வதற்கே அந்த வாய்ப்பினை பயன்படுதினார்கள். மனித வெடிகுண்டுகளை ஆயுதமாக பாவிப்பதும் அரசியல் தலைவர்களை கொலைசெய்வதும் நவநாகரீக உலகத்தில் கடைப்பிடிக்கப்படும் உன்னதமான பண்புகள் அல்ல என்பதினை சர்வதேச சமூகம் புலிகளுக்கு கூறி அவர்கள் மீது பயண தடையினை வித்தித்தது.

அதனை புரிந்து கொள்ள முடியாது புலிகள் அவர்களையும் எதிரிகளாக பார்க்க முற்பட்டார்கள்.

இதனைவிட ஆச்சரியம் என்னவெனில் ஐரோப்பாவில் வாழும் புலி ஆதரவாளர்களும் இதனை தமக்கு சவாலாக எடுத்து கொண்டார்கள் .

25நாடுகளை அங்கமாக கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது பயண தடைவித்தித்த பொழுது அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்பதினை ஆராய்வதினை காட்டிலும் ஐரோப்பிய ஒன்றியம் மீது அவர்கள் பிழைகாண முற்பட்டதினை என்னால் நம்ப முடியவில்லை.

இவர்கள் மட்டும் அப்பொழுது புலிகளுக்கு அறிவுரை கூறி அவர்களை திருத்த முற்பட்டு இருப்பார்களாயின் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையினை இல்லாது செய்திருக்க முடியும்.

புலிகள் மீது ஐரோப்பிய ஒன்ரியம் தடைவித்தித்த பின்னரும் ஜெனிவா பேச்சுக்களுக்கு அந்த நாடுகள் ஆதரவு கொடுத்தன.

இரண்டு ஜெனிவா பேச்சுக்களிலும் தாம் கூறுவதினை மற்றவர்கள் கேட்கவேண்டுமென புலிகள் நினைத்தார்களே தவிர மற்றவர்களின் கருத்துக்களை கேட்பதற்கு அவர்கள் தயாராக இருந்திருக்கவில்லை.

முதல்பேச்சில் கருணாவின் ஆயுதங்களை களையுமாறு கேட்டார்கள், இரண்டாவது பேச்சில் ஏ9பாதையினை திறக்குமாறு கேட்டார்கள்.

இரண்டிலும் இனத்தின் நலனை காட்டிலும் இயக்க நலன்களே இருந்தன.

வடபகுதிமக்கள் உணவில்லாது வாடுகின்றார்கள் அவர்களுக்கு உணவு செல்வதற்கு பாதையினை திறவுங்கள் என்றார்கள்.

அரசு மறுத்ததும் அந்த மக்கள் குறித்த கவலை புலிகளுக்கு இல்லாது போய்விட்டது.

இதே போன்று சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகள் வணங்கும் பணத்தினை பங்கு போடுவதற்காக பொதுகட்டமைப்பினை (P.வுழஅpள) உருவாக்குமாறு கேட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்த போதும் நீதி மன்ற உத்தரவினால் அது முடியாமல் போனது.

அது முடியாமல் போனதும் புலிகள் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து பின்னர் கவலை கொள்ளவே இல்லை.

மேற்கூறப்பட்ட இரண்டு சம்பவங்களிலும் வருவாயினை மட்டுமே புலிகள் இலக்காக கொண்டிருந்தார்கள்.

தமக்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் கிடைத்த அங்கீகாரங்களை எல்லாம் அதன் மகத்துவமும் தேவையும் தெரியாது அநியாயமாக துலைத்து கொண்டார்கள்.

டிசம்பர் மாதம் முதலாம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோற்றபாயே ராஜபக்சே அவர்களை கொலை செய்வதற்கான தற்கொலை தாக்குதலை புலிகள் நிகழ்த்தியதின் மூலம் கிடப்பில் கிடந்த பயங்கரவாத தடைசட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம் புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் ,அனுதாபம் காட்டுபவர்கள், அவர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளுபவர்கள் மீது சட்ட வடிக்கை எடுக்க முடியும் என்பதோடு விசாரணை இன்றி நீண்ட காலம் தடுப்பு காவலில் வைக்கவும் முடியும்.

அரசு பயங்கரவாத தடைசட்டத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதே தவிர புலிகளை தடைசெய்யவில்லை. இது நடைபெறாது தடுப்பது புலிகளின் கைகளிலேயே உள்ளது.

புலிகள் மீது தடையினை அரசு கொண்டுவருமானால் அதன் பின்னர் நோர்வே தரப்பினர் வன்னிக்கு செல்லவோ அல்லது அவர்களுடன் பேச்சுக்களை நடத்த முடியாது போய்விடும்.

இதனை புலிகளும் புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாத தடைசட்டமானது பயங்கர வாதிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டமே ஆகும.

; ஆகவே அது சாதாரண தமிழ் மக்களை பாதிக்கும் வகையில் ஒரு போதும் இருக்காது என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார் ().

தமிழ் மக்களின் தலமையினை வலுக்கட்டாயமாக தமது கையில் எடுத்து கொண்ட புலிகள் தமிழ் மக்கள் அமைதியாக வாழுவதற்கு கிடைத்த வாய்புக்களை தவறவிட்டமைக்கு புலம் பெயர்ந்து வாழுகின்ற ஈழத்தமிழர்களே பிரதான காரணமாகும். புலிகளின் தவறான போக்கினை கண்டிக்காது அவர்களின் வன்முறையினை ஊக்குவித்தமையே அவர்களை இவ்வாறு வன்முறையினை தொடர்ந்து மேற்கொள்ள வைத்தது.

மகாபாரதத்தில் ராஜதந்திர உத்தியின் மூலமே பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது என்பதினை புலிகள் உணரவேண்டும் என சுவாமிஜி ரவிசங்கர் அவர்கள் சென்னையில் உயர் நீதிமன்றத்தில் உள்ள அரங்கில் சொற்பொழிவு நிகழ்த்தும் பொழுது தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரைநிகழ்த்துகையில் “ விடுதலைபுலிகள் காட்டில் தங்கி போர்புரிகின்றனர். இதற்காக தங்களை வருத்திகொள்ளுகின்றனர். அதேசமயம் ,அவர்களை சார்ந்த மக்கள் வருந்துவதினைப் பற்றி கவலைப்படவில்லை. உலக நாடுகள் அனைத்தும் விடுதலைபுலிகள் இயக்கத்தினை தீவிர இயக்கமாக கருதுகிறது, அதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனை கருத்தில் கொண்டு அமைதி பேச்சுவார்த்தையில் அவர்கள் பங்கேற்க வேண்டும ;.ஈராக் ஜனாதிபதிக்கு என்ன கதி ஏற்பட்டுள்ளது என்பதினை விடுதலை புலிகள் மனதில் வைத்து கொள்ளவேண்டும்” இவ்வாறு சுவாமிஜி தமிழகத்தில் வழங்கறிஞர்கள் மத்தியில் உரை நிகழ்த்;தும் போது தெரிவித்துள்ளார்.

இவர் அண்மையில் இரகசிய பயணம் ஒன்றினை வன்னிக்கு மேற்கொண்டு புலிகளின் தலைவரை சந்தித்து விட்டு வந்தாக இந்திய இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.

புலிகள் தமக்கு கிடைத்த அங்கீகாரங்களையும்,அரிய வாய்ப்புக்களையும் எவ்வாறு தவறவிட்டார்கள் என்பதினை ஐரோப்பாவில் வாழும் புலி ஆதரவு புத்திஜீவி ஒருவருக்கு வரிசையாக நான் எடுத்து விளக்கினேன், உங்களுக்கே இவைகள் புரியுமென்றால் 20வருடங்களுக்கு மேலாக ஆயிரக்கணக்கான போராளிகளை வழி நடத்தி போராட்டத்தினை நிகழ்த்தும் தேசிய தலைவருக்கு இது புரியாதா? என என்னை பார்த்து கேட்டார். தேசிய தலைவருக்கு இன்னமும் எப்படி இது புரியவில்லை என்பதுதான் எனக்கு புரியவில்லை என்றேன், எனது பதில் அவருக்கு வியப்பினை கொடுத்திருக்கவேண்டும் ஆகையினால் என்னை வியப்பாக பார்த்தார்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு