போர்க்கால நடைமுறைகள் குறித்து விளக்கமளிப்பு.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உயர் மட்டப் பிரதிநிதிகளினால் tmvp யின் போராளிகளுக்கு மனித உரிமைகள், போர்க்கால நடைமுறைகள் குறித்து விளக்கமளிப்பு.


[வெள்ளிக்கிழமை, 08-12-2006, 09:05 GMT]



சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உயர்மட்ட பிரதிநிதிகள் மனித உரிமைகள், போர்க்கால நடைமுறைகள், ஏனைய பொது விடயங்கள் தொடர்பாக tmvp போராளிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று நேற்று காலை 10.30 மணியளவில் அக்கரைப்பற்று அரசியல் செயலகத்தில் இடம் பெற்றது. சுமார் இரண்டரை மணி நேரம் இடம் பெற்ற இச்செயலமர்வில் tmvp பல போராளிகள் கலந்து கொண்டனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவும் இணைந்து ஒழுங்கு செய்த இச்செயலமர்வு மிகுந்த பயனுள்ளதாகவும் சினேக பூர்வமாக அமைந்ததாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான செயலமர்வு ஒன்றை ஒழுங்கு செய்ததற்கு தமது நன்றிகளையும், பராட்டுக்களையும் தெரிவித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தொடர்ந்தும் இது போன்ற செயலமர்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இச்செயலமர்வில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க சார்பாக அம்பாறை மாவட்ட வதிவியல் பிரதிநிதி எழிலி அவர்களும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வட-கிழக்கு பிரச்சாரப் பொறுப்பாளர் மோகன் அவர்களும் கலந்து கொண்டனர்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு