புலிகளின் கோரமுகங்கள் 1



முறிந்த பனை நூலிலிருந்து
புலிகளின் கோரமுகங்கள்




1986 நொவம்பர் மாதத்தில் இரு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த நடந்தன. அவை அடிப்படைச் சுதந்திரத்தை மீறுவதற்கு எதிராக யாழப்பாணத்திலே மக்கள் எதிர்ப்பைக் கிளப்பிய இறுதியான இரு நிகழ்வாகும். இது1980 களின் ஆரம்பத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்த மக்கள் எதிர்ப்பு போன்றதன்று. அது பெருமளவில் உற்சாகத்தை காட்டுகின்ற முற்போக்கு இயக்கமாயிருந்தது.இப்போதையது பெரும்பாலும் பின்னணிப் பாதுகாப்பு நடவடிக்கையாக இருந்தது. அந்த எதிர்ப்பு முடிவுற்றதும் அதன் தலைவர்கள் தலைமறைவாகவோ அல்லது வெளிநாட்டுக்குச் செல்லவோ வெண்டியிருந்தது தலைவர்கள் பலரும் சமூகத்தின் கிழ்மட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான சாதாரண பெண்களும் அவசியமானதும் மூத்தவர்கள் செய்வதற்குப் பினவாங்கியதுமான ஒன்றைச் செய்வதில் அரியதொரு துணிவைக்காட்டினார்கள். இவ்விருநிகழ்வகளும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி நடந்தவையாகும்.

அருணகிரிநாதன் விஜிதரன் என்பவர் யாழப்பாணப்பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு வர்த்தகத்துறை மாணவர். 1986 நொவம்பர் நாலாம் திகதி அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து காணாமல் போகும் வரை அவரைப்பற்றி பொதுவாக யாருக்கும் தெரியாது. விஜிதரன் ஏன் கடத்தப்பட வேண்டுமென்பது பொதுவான கேள்வியாய் இருந்தது.

அவர் அரசியல் ஈடுபாடில்லாத கேளிக்கைப் போக்கான சாதாரண மாணவன். இந்த அம்சமே அவரைக்கடத்தியது பற்றிச் சில சந்தேகங்களை எழுப்பியது. அவர் முக்கியமான ஒருவரைச் சிறிது பாதிக்கின்றதும் மாணவர்கள் எவரும் அது பற்றி கூறவிரும்பாததுமான கருத்துக்களைக் கூறினாராஃஇவை பற்றிய உண்மையை நாம் என்றுமே அறியாமல் போகலாம்.


மாணவர்களால் செயற்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் எவரையும் குற்றஞ்சாட்டவில்லை. அவர்கள் எவரையும் குற்றஞ்சாட்டவில்லை. அவர்கள் யாழ்ப்பாணத்திலே மக்களின் பாதுகாப்புக்காக அங்கு செயற்படுகின்ற நான்கு ஆயுதப்போராட்டக் குழுக்களே பொறுப்பெனப் பொதுவாகக் கூறினர். மேலும் அவர்கள் எல்லாவிடங்களிலும் பாதுகாப்பு அரண்களைக் கொண்டிருப்பதால் அவர்களுக்குத் தெரியாது ஒருவர் மறைந்து போவது கடினமானதாகும்;.

தூம் ஏற்றுக்கொண்ட கடமையை நிறைவேற்றி விஜதரனைக் கொண்டு வருமாறு ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாணவர்கள் பயங்கொண்டதுடன் எந்தவொரு ஆயுதப்போராட்டக் குழுக்களுடனும் மோதும் நிலையிலும் இருக்கவில்லை.ஆயுதப்போராட்டக் குழுக்களுடன் இதுவிடயமாகப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் மாணவர்கள் இந்தவிடயத்தைப் பகிரங்கப்படுத்துவதில் மிகவும் அவசரப்பட்டு விட்டார்கள் என்ற உணர்வை வெளியிட்டார். மறுபுறத்தில் மாணவர்கள் தாம் மௌனமாகஇருந்தால் மாணவர்கள் மறைந்து போகும் சந்தர்ப்பம் அதிகரிக்கும் என உணர்ந்தனர். ஒரு திருப்திகரமான பதில் கிடைக்காததால் நொவம்பர் 9ம் திகதி மாணவர்கள் உண்ணாவிரத இயக்கத்தை ஆரம்பித்தனர். அந்த இயக்கத்திற் பல்கலைக்கழக நிருவாகக் கட்டிடத்துக்கு முன்னால் தற்காலிக கிடுகுக் கொட்டகையில் ஆண்களும் பெண்களுமாக ஆறுபேர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். அடுத்த பத்து நாட்களும் அக்கால நிகழ்வுகள் பற்றித் தமது உணர்வுகளை அடக்கி வைத்திருந்த எல்லோரதும் கவனத்தையும் ஈர்க்கும் நிலையமாகப் பல்கலைக்கழகம் மாறியது.

உண்ணாவிரதமிருந்த தம்மை இணைத்துக்கொண்ட ஒரு முக்கியமான மக்கள்குழு விN~சமாகப் பாi~யூரைச்சேர்ந்த பெண்களாவர். வேறொரு சம்பவத்தில் எட்வர்ட் என்பவர் கொல்லப்பட்டது தொடர்பாகவே அப்பெண்கள்உண்ணாவிரதத்திற் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. பாi~யூர் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து கடற்கரை ஓரமாக கிழக்கே மூன்று மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு மீன்பிடிக்கிராமமாகும். இங்குள்ள மக்கள் எல்லோருமே கத்தோலிக்கர்கள். அவர்கள் இயல்பாகவே தம்மைத்தாக்குபவர்களை ஒன்று சேர்ந்து எதிர்க்கும் இயல்புடையவர்கள்.

எட்வர்ட் என்பவர் சவூதி அரேபியாவிலிருந்து வந்தவர்.அவரது குடும்பம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானதெனக் கூறப்பட்டது. அவர்கள் தமது அயலவர்களுடன் ஏற்பட்ட ஏற்பட்ட காணித்தகராறு விடயமாக தமது பங்குக் குருவானவரைக் கலந்தாலோசித்தனர். அது திருப்தி அளிக்காததால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரியாலைப் பொறுப்பாளர் மலரவனை அழைத்தனர். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது எட்வர்ட்டின் தாயார் மலரவனைப் புண்படுத்தும் வார்த்தைகளை கூறிவிட்டார் எனக் கூறப்பட்டது. அதைக்கேட்ட மலரவன் அவரைத் தாக்குவதற்காக கையை உயர்த்தினார். அதைப்பாhத்த எட்வர்ட் மலரவனை அடித்தார்.

அதன் பின்னர் எட்வர்ட் அரியாலை முகாமுக்கு விசாரணைக்காக வருமாறு கேட்கப்பட்டார். என்ன நடக்குமோ எனப் பயந்த எட்வர்ட் பாi~யூர் பங்குக் குருவானவருடன் தொடர்பு கொண்டார். பங்குக் குருவானவர் முகாமுக்குச் சென்று எட்வர்ட் சிறு விசாரணையின் பின் விடுதலை செய்யப்படுவார் அவருக்கு எதுவித ஊறும் விளைவிக்கப்பட மாட்டாது என்ற உறுதி மொழியைப் பெற்றார். பங்குக் குருவானவர் எட்வர்டுடன் முகாமுக்குச் சென்று காத்திருந்தார். எட்வர்ட் உள்ளே கொண்டு செல்லப்பட்டார். இருபது நிமிடங்களின் பின்னர் எட்வர்ட் இறந்துவிட்டதாக பங்குக் குருவானவருக்கு கூறப்பட்டது. அதைக்கேட்ட குருவானவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எட்வர்ட்டின் உடலைப் பார்க்கச் சென்றவர்கள் அவரது உடலில் எந்தவொரு எலும்பும் உடையாமல் விடப்படவில்லை எனக் கூறினார். ஆதன் பின்னர் யாழ்ப்பாண விடயங்கள் வழமைக்கு மாறான நிலைக்குத் திரும்பின. பாi~யூர் அந்தோனியார் கோயில் முன்றலிற் பெண்கள் பெருந்தொகையினராகத் திரண்டு கையால் எழுதிய சுலோகங்களைத் தாங்கிய வண்ணம் பல நாட்களாக இக்கொலைக்கு எதிராக தம் எதிர்ப்பைக் காட்டினர்

________________________________________________________________________________________________________________________________________________________________
1984ம் ஆண்டிலும் 1985ம ஆணடின் முற்பகுதியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயமாக விட்டுச்சென்ற இடைவெளியை பிரசைகள் குழுக்கள் நிரப்பின. இப்பிரசைகள் குழுக்கள் பிரதானமாகக் கொடுமைகளை எதிர்ப்பவர் களையும் ஆயுதப்போராட்ட குழுக்களைச் சேராதவர்களையும் கொண்டு அமைக்கப்பட்டன. இராணுவத்தின் கொடுமைகள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதும் இராணுவத்திடமும் அரசாங்கத்திடமும் மக்கள் கருத்துக்களை எடுத்துரைப்பதும் அவர்களது பணிகளாகும்.

தடுத்து வைக்கப்பட்டடிருந்த அனேக இளைஞர்கள் சார்பாக பிரதிநிதித்துவம் செய்வது அவர்களது பணிகளில் ஒன்றாயிருந்தத. பிரசைகள் குழுக்கள் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களதும் தூதுவரகங்களதும் மதிப்பைப் பெற்றன. யாழ்ப்பாண பிரசைகள் குழுவின் முக்கிய உறுப்பினரும் பரி .யோவான் கல்லூரியின் அதிபருமான திரு ஆனந்தராஜா போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளாற் கொல்லப்பட்டமை நம்பிக்கைச்சூழ்நிலைக்கு கொடுக்கப்பட்ட முதல் பலியாகும்.

அநேகர் தாம் இன்னும் ஜனநாயக உரிமைகள் உடையவர்கள் என்ற நம்பிக்கையிற் செயற்பட்டார்கள். பரி யோவான் கல்லூரியின் சிரேட்டமாணவர்கள் எங்கும் சென்று அனுதாபச் சுவரொட்டிகளை ஒட்டினர் ஒரு பத்திரிகை அசிரியர் தனது ஆசிரியர் தலையங்கத்தில் இந்தக்கொலை பற்றிக்கேள்வி எழுப்பியதால் கடத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டார். ஒரு நாள் துக்கம் அனு~;டிக்குமாறு பாடசாலைகளுக்கு வேண்டுகோள் விடுத்த யாழ்ப்பாணம் பிரசைகள் குழுவினரைச் சந்தித்துப் பேசியவர்களின் தொனி பயமுறுத்துவதாயிருந்ததென்பது தெளிவாயிருந்தது தெளிவு.

திரு ஆனந்தராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டு அற்பமானது.அதாவது போர் நிறுத்தச் சூழ்நிலையின் நம்பிக்கையில் அவர் யாழ்ப்பாணப் பாடசாலைகளுக்கும் இராணுவத்திற்கமிடையே ஒரு கிறிக்கட் விளையாட்டுப் போட்டியை ஒழுங்கபடுத்தியதாகும். இது நடந்து ஏறத்தாழ பதினைந்து மாதங்களுக்குப்பின் போரின் மத்தியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இலங்கை இராணுவத்தின் அதிகாரிகளுடன் சினேகபூர்வமாக காட்சியளித்தார்கள். மக்கள் மத்தியில் இராணுவ அதிகாரி கொத்தலா வல இதன்மூலம் மிகவும் பிரபலமானார்;.

இதற்குச் சிறிது முன்னர் முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபர் திரு ஞானச்சந்திரன் கொலை செய்யப்பட்டார். ஒரு துண்டுப்;பிரசுரத்தில் அவருக்கெதிராக பதினாறு குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மிகப்படித்த ஒருவர் அக்கொலையை நியாயப்படுத்துவதற்கு பின்வரும் அசாதாரண கதையைகூறினார். 1985ம் ஆண்டில் முல்லைத்தீவு மக்கள் இலங்கை இராணுவ நடவடிக்கைகளினால் இடர்மிகுந்த காலத்தை அனுபவிக்க நேர்ந்தது. ராஜீவ்காந்தி முல்லைத்தீவுப் பிரச்சனைகளையிட்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவுக்குத் தொலைபேசிமூலம் எதிhப்புத்தெரிவித்தார். ஜனாதிபதி ஜயவர்த்தன அத்தகைய பிரச்சனைகள் அங்கு இருக்கவில்லையென மறுத்து தனது மறுப்புக்கு ஆதரவாக அந்த இடத்திலுள்ளவர்களுடன் நேரடிடியாக தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசியை முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஞானச்சந்திரனுக்கு இணைத்துவிட்டார்.அரசாங்க அதிபர் ஜனாதிபதி கூறியவற்றை உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டது. மேலும் போராளிகள் இதை எவ்வாறு அறிந்தாhகள் என்று கேட்கப்பட்டபோது இதைக்கூறியவர் தொலைபேசிக்கட்டுப்பாட்டுத்தாபனத்திலிருந்து ஊழியர் ஒருவர் ஒட்டுக்கேட்டு விடுதலைப்புலிகளுக்கு அறிவித்திருக்கவெண்டுமென்று உறுதியாகச்சொன்னார்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு