விரைவில் A15 பாதை திறப்பு?

விரைவில் வாகரைக்கான ஏ-15 பாதை திறப்பு?

(அடியான்)


யாழ்ப்பாணத்திற்கான ஏ9 பாதை, மற்றும் வாகரைக்கான ஏ-15 ஆகிய பாதைகள் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் திறக்கப்பட வேண்டும் என்பதே புலிகளின் நிலைப்பாடாகும். இதையே சென்றவாரம் வன்னி சென்றிருந்த நோர்வேக்கான தூதுவர்களிடமிமும் தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.

தற்போது வாகரைக்கான ஏ-15 பாதையை அரசாங்கம் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விரைவில் திறந்து விடக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. ஏனென்றால் எந்த விலைகொடுத்தாவது புலிகள் தற்போது கிழக்கில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகுதிகளை கைப்பற்ற அரசாங்கம் பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படி கிழக்கு அரசாங்கத்தின் கட்டுபாட்டிற்குள் வந்தால் ஏ-15 பாதையை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லையே.

வாகரை, ஈச்சிலம்பற்று, கதிரவெளி போன்ற இடங்களில் நடைபெறும் தாக்குதல் பற்றி அரசாங்கம் பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்ளாத போதிலும் அவர்கள் ஏற்கனவே பல கிலோ மீட்டர்கள் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவி இருப்பதாகவே அறிய முடிகிறது. அரசாங்கம் நில ஆக்கிரமிப்புச் சமரில் ஈடுபட்டுள்ளது என புலிசார்பு ஊடகங்கள் சொல்வதிலிருந்தே தங்கள் பகுதிகளை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். அவ்வப்போது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என்று அவை சொல்லிக் கொள்வதாலோ, அல்லது இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை பல மடங்கு கூட்டிச் செல்வதாலோ புலிகள் வெல்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல. தாங்கள் இராணுவத்தின் உடல்களை கைப்பற்றியிருப்பதாகவும், ஒரு ராணுவ வீரரை உயிருடன் பிடித்திருப்பதாகவும் சொல்வதும் ஒருவேலை உண்மையாக இருக்கலாம். ஆனால் இதுபற்றிய புகைப்படங்கள் இன்னும் புலிகளின் ஊடகங்களில் வெளியாகவில்லை.

கிழக்கில் அரச படைகளுடன் தங்களால் ஈடுகொடுக்க முடியாது என்பதை சம்ப+ர் தாக்குதலின்போதே புலிகள் உணர்ந்திருப்பார்கள். அதனால்தானோ என்னவே கிழக்கின் முக்கிய தளபதிகள் பலர் ஏற்கனவே வன்னி சென்று விட்டனர். சம்ப+ரில் தாக்குதல் நi;டபெற்றபோது களநிலவரம் சம்பந்தமாக எழிலன் தான் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இப்போது அவரையும் காணவில்லை. எல்லாவற்றுக்கும் இளந்திரையன்தான் பதிலளிக்கிறார்.

புலிகளை அரசாங்கம் கிழக்கில் வெற்றி கொண்டால் அதையும் அடுத்த மாவீரர் உரையின்போது தாங்கள் தந்திரோபாயமாக பின்வாங்கியதாகவே பிரபாகரன் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

தை பிறக்குமுன் கிழக்கு மக்களுக்கு வழியும், புலிகளுக்கு வலியும்தான் பிறக்கும்போல் தெரிகிறது

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு