புலிகளினால் நிர்க்கதியான ஐந்து சிறிய பெண்பிள்ளைகள்.

புலிகளினால் நிர்க்கதியான ஐந்து சிறிய பெண்பிள்ளைகள்.

தாய் புற்றுநோயால் மரணம். தந்தை புலிகளினால் சுட்டுக்கொலை. ஆதரவற்ற நிலையில் ஐந்து பெண் பிள்ளைகள்


வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அரச ஊழியரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்றுக் காலை 6.30 மணியளவில் உடுப்பிட்டி சந்தை வீதியிலுள்ள இவரது வீட்டிற்குச் சென்றபுலிகள் இவரை சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை காலை 6.30 மணியளவில் உடுப்பிட்டி, சந்தை ஒழுங்கை, தட்டாதெருவில் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர் யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தரான பரமசோதி ஆனந்தகுமார் (வயது 47) என்பவராவார். வீட்டில் தொலைத் தொடர்பு நிலையம் நடாத்தி வரும், ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தையான இவர், தனது வீட்டிலிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் சென்ற புலிகள் தொலைபேசி எடுக்க வேண்டுமெனக் கூறி இவரது வீட்டிற்குள் சென்ற பின் இவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இவரது சடலம் பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் மரண பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொண்டமானாறு, காட்டுப்புலம், தயாளன் கடை ஒழுங்கையைச் சேர்ந்த புலிகள் இயக்க உள்ளுர் பொறுப்பளரான இசைவீரன் அல்லது மாமா என அழைக்கப்படும் இரத்தினம் பூபாலன் என்பவரும் மற்றும் காட்டுப்புலம், மணியம் கடையடியைச் சேர்ந்த கலை என்ற புலி உறுப்பினருமே இவரைச் சுட்டுக் கொன்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவரது மனைவி கடந்த வருடம் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். தற்போது இவரது ஐந்து சிறிய பெண் பிள்ளைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு