ஜெயலலிதா அளித்த பேட்டி
சோனியா எனக்கு எதிரியல்ல: ஜெயலலிதா பரபரப்பு பேட்டி
சென்னை: ""சோனியா எனக்கு எதிரியல்ல; அவரை நான் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை,'' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.
சென்னையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் ஜெயலலிதா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் கருணாநிதி ரெடிமேட் ஆடைகளை போல அவராகவே கேள்வி பதில் தயாரித்து ரெடிமேட் பேட்டி கொடுத்து வருகிறார். இந்த பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். நானும் உங்களை (நிருபர்கள்) சந்திக்காமல் இருந்தால் அதாவது பேட்டி தராமல் இருந்தால் உங்களுக்கு பேட்டி எடுக்கும் பழக்கம் போய்விடும் என்பதால் உங்களுக்கு உதவுவதற்காக நான் பேட்டி தருகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா சிரித்துக் கொண்டே கூறினார்.
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு ஜெயலலிதா அளித்த பதில் விவரம்:
* டில்லிக்கு தாங்கள் சென்ற போது புதிய அணி உருவாகும் என்று சொன்னீர்களே? புதிய அணி எந்த நிலையில் <உள்ளது?
அதற்கான சூழ்நிலை இப் போதைக்கு இல்லை. நேரம் வரும் போது அறிவிப்பேன்.
* பார்லிமென்ட்டில் எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொள்ள சோனியாவுக்கு அழைப்பு விடுத்தும் அவர் ஏன் கலந்துக் கொள்ள வில்லை?
எனக்கு யாரும் எதிரி அல்ல. நான் யாருக்கும் எதிரியல்ல. சிலர் என்னை எதிரியாக நினைத்துக் கொண்டால் அது என்னுடைய தவறு அல்ல.
*சோனியாவை வெளிநாட்டு பெண்மணி என்று விமர்சித்ததற்காக வருத்தப்படுகிறேன் என்று மத்திய அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளாரே?
என்னைப் பொறுத்தவரை நாட்டின் பிரதமராக சோனியா வருவதை தான் எதிர்த்தேன். சோனியாவை நான் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. இப்போது சோனியாவை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா இருக்கிறார். அவரை அக்கட்சி தலைவராக ஏற்றுக் கொண்டது உட்கட்சி விவகாரம்.
*அப்சலுக்கு விதிக்கப்பட்ட துõக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவது குறித்து தங்கள் கருத்து?
துõக்குத் தண்டனை சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பு. அந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டை கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரமில்லை.
*ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏன்?
சி.பி.ஐ., மிகவும் சிரமப்பட்டு ராஜிவ் கொலை வழக்கை விசாரித்தனர். அவர்களின் விசாரணைக்கு எனது ஆட்சிக்காலத்தில் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது. தனி நீதிபதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத் தோம். மாநில அரசு காவல் துறையுடன் சி.பி.ஐ., விசாரித்தது. கோர்ட் விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கிய பிறகும் அதை நிறைவேற்றாமல் இருப்பது ஏன் என்பது தான் எனக்கு புரியவில்லை.
இந்த மாதிரி இந்தியாவை தவிர உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்க வாய்ப்பு கிடையாது. எனது அரசு, மற்றும் சி.பி.ஐ., காவல் துறையை முட்டாளாக்கி விட்டார்கள் என்று தான் அர்த்தம்.
* உ.பி., மாநில தேர்தலுக்கு தாங்கள் பிரசாரம் மேற்கொள்வீர்களா?
முலாயம்சிங், அமர்சிங் இருவரும் என்னிடம் பிரசாரத்திற்கு வரும்படி கேட்டுக் கொண்டனர். நானும் பிரசாரத்திற்கு செல்வேன்.
* சோனியாவை...?
திரும்ப திரும்ப குறிப்பிட்ட ஒருவரை பற்றி கேள்விகளை கேட்காதீர்கள். வேறு கேள்வியை கேளுங்கள்.
ஸ்ரீரங்கம் கோவில் முன் ஈ.வெ.ரா., சிலை வைக்க அனுமதித்ததால் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
தீயையும், பஞ்சையும் பக்கத்தில் வைத்துக் கொண்ட பிறகு தீ பற்றிக் கொள்ளாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முடியாத காரியம். அறிவுடையவர்கள், சாதுரியமானவர்கள், விவேகமானவர்கள் தீயையும், பஞ்சையும் வேறு இடத்தில் தான் வைப்பார்கள். சிலை வைக்க எத்தனையோ இடங்கள் உள்ளன. அங்கெல்லாம் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.
* உங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோ மீண்டும் ஈழப் பிரச்னையை ஆதரித்து பேசுகிறாரே?
கூட்டணியில் இருப்பதால் அவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்வதாக அர்த்தமல்ல. மத்தியில் காங்கிரஸ் கட்சியை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கவில்லையா. எங்களை பொறுத்தவரையில் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். இலங்கை தமிழர்களின் முழு உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் கண்ணியத்தோடு வாழ்க்கை நடத்த இலங்கை அரசு வசதி செய்து தரவேண்டும். அது தான் அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு. பயங்கரவாதம் எந்த ரூபத்திலும் வந்தாலும் அ.தி.மு.க., எதிர்க்கும்.
* ரவுடி "பங்க்' குமார் சுட்டுக் கொல்லப்பட்டதில் தி.மு.க., எங்களுக்கு நம்பிக்கை துரோம் செய்து விட்டதாக பா.ம.க.,வினர் கூறி யுள்ளார்களே?
மைனாரிட்டி தி.மு.க., அரசில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் பொறுப்பு வகித்திருக்கும் முதல்வரிடம் தான் கேட்க வேண்டும்.
* சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் இலவசமாக மூன்றரை லட்சம் காஸ் இணைப்பு தருவதாக ஆளுங்கட்சி அறிவித்துள்ளதே?
மக்களை ஏமாற்றுகிற வெத்து வேட்டு அறிவிப்பு. மக்களை ஏமாற்றுகிற மற்றொரு நாடகம். மூன்றரை லட்சம் சிலிண்டர்கள் எங்கிருந்து வரும் என்று நீங்கள் கருணாநிதியிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
கருணாநிதியின் துரோகம் ஜெயலலிதா ஆவேசம் : ""முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு முதல்வர் கருணாநிதி துரோகம் செய்து விட்டார்'' என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதா அளித்த பேட்டி:
*முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வரும் 18ம் தேதி இரு மாநில அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதே?
கேரள முதல்வரும், தமிழக முதல்வரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது. இரு முதல்வர்களும் மட்டும் தான் பேச வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. அமைச்சர்கள் பேச வேண்டும் என்று உத்தரவிடவில்லை. முதல்வர்கள் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு கேரள முதல்வர் ஒத்துழைப்பு தரவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் முதல்வர் கருணாநிதி சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், கோர்ட் உத்தரவிடாத செயலை செய்து மக்களை ஏமாற்றுகிறார். பிரச்னைக்கு தீர்வு காண கருணாநிதி விரும்பவில்லை. தங்களுடைய அரசியல் லாபத்திற்காக மீண்டும் தமிழகத்திற்கு துரோகம் விளைவிக்கிறார். பராசுரனும் தேவையில்லாத கருத்துக்களை சொல்லியுள்ளார். அணையை பலப்படுத்த தமிழக அரசு செய்யும் மராமத்து பணிகளை செய்யவிடாமல் கேரள அரசு தடுக்கிறது என்று பராசுரன் கூறியுள்ளார். எனது ஆட்சியில் அணையில் மராமத்து பணிகள் செய்து முடிக்கப்பட்டன. மத்திய அரசின் நீர்வள அதிகாரிகள் அணையை பார்வையிட்டு சான்றிதழ் கொடுத்த பின்னர் தான் அணையை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு