புலிகளின் கோரமுகங்கள் 2



முறிந்த பனை நூலிலிருந்து
புலிகளின் கோரமுகங்கள் 2




1986 டிசெம்பர் 14ஆம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எவ் புளட். தமிழீழ இராணுவம் ஆகிய இயக்கங்கள் விடுதலைப் புலிகளாற்
கலைக்கப்பட்டன. வடமாகாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் போரிடாது முகாம்களை விட்டு ஓடியது. துலைவர்கள் பலர்
கைது செய்யப்பட்டு ஆயுதங்கள் வைத்திருக்கிற இடங்களைக் காட்டித்தருமாறு சித்திரவதை செய்யப்பட்டனர்.
இக்கட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய குழுக்களுக்கும் இடையே கண்ணோட்டத்தில் உள்ள பண்பள
விலான வேறுபாடு என்ன என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம். தலைமையின் உத்தரவுகளை கண்மூடித்தனமாக
நிறைவேற்றுவதற்கே விடுதலைப் புலிகள்இயக்க உறுப்பினர்கள் பயிற்றப்பட்டுள்ளார்கள். இலங்கை இராணுவத்தை
எதிர்த்துப் போராடுவதில் விடுதலைப்புலிகள் காட்டிய அதே அளவு துணிவையே ஏனைய குழுக்களிடமும் காட்டினார்
கள் என்பதிற் சந்தேகமில்லை.ஆனாற் சகோதர ஆயுதப் போராட்டக் குழுவுடன் மோதல் ஏற்பட்ட பொழுது ஏனைய
குழுக்கள் ஓரளவு தயக்கமும்கலக்கமும் அடைந்தார்கள். அக்குழுக்களிடம் சகோதரத் தமிழர்களைக் கொல்வதை
யிட்டு அனுதாப உள்ளுணர்வ ஓரளவு இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்களிடையேவிடுதலைப் புலிகளுடன் குருதி
சிந்தும் மோதலுக்குப் போக வேண்டுமா அல்லது வெறுமனே தலைமறைவாகி விடுவதா என்ற பிரச்சனையிற் பிளவு
நிலவியதாக உடுவிலில் அமைந்திருந்த அவர்களது முகாமின் அருகே வசித்த ஒரு அவதானி கூறினார். இந்தப் பிரச்
சனைக்குத் தீர்வுகாண முன்னரே அங்கு வந்ததன் மூலம் ஆயத்தமில்லாத நிலையிலிருந்த அவர்களை விடுதலைப்
புலிகள் பிடித்துவிட்டனர். கலைந்து போவதைத் தவிர வேறு எதையும் செய்ய அவர்களால் முடியவில்லை.

விடுதலைப் புலிகளின் நடத்தை குழப்பமானதாய் இருந்தது. அவர்கள் மாணவர்களுக்கு அனுதாபமாய் இருக்கிறோம்
என்றும் விஜிதரனை கண்டுபிடிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுப்போம் என்று முதலிலேயே கூறியிருக்கலாம்.
அவ்வாறு கூறியிருந்தால் எதிர்ப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால் அவர்கள் ஆணவமான போக்கைக் கடைப்பிடித்தனர்.
எதிர்ப்பிலே இணைந்து கொண்ட பாடசாலை மாணவர்கள் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும்; யாழ்ப்பாண
இந்துக்கல்லூரிக்கு அண்மையிலும் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களால் பயமுறுத்தப்பட்டனர். பின்னர்
நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு மாணவரின் பெயர் விசேடமாகக் குறிப்பிடப்பட்டது. சிரேட்ட விரிவுரையாளருக்கான
பொது அறையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஒரு கூட்டத்திற்கு கிட்டு அழைக்கப்பட்டார். அங்கே அவர்
எமது தளபதி என அறிமுகப்படுத்தப்பட்டார். அங்கே ஏன் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதென எவரும் ஆச்சரியப்படும்
வகையிற் பல்கலைக்கழக உறுப்பினர்கள் மௌனம் சாதித்தனர். ஒரு ஆயுதப்போராட்டக்குழு விஜிதரனைக்
கடத்தியிருக்குமானால் இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் அது உண்மையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
எனக் கிட்டு வாதிட்டார்.

அவர் விடுவிக்கப்படலாம். அதற்கு ஓரளவு காலம் எடுக்கலாம் எனத் தமது நிலைப்பாட்டைக் கூறினார். மேலும்
செல்வபாலா போன்ற துரோகிகள் மாணவர்கள் என்பதற்காகவோ வேறு காரணங்களுக்காகவோ மன்னிக்கப்பட
மாட்டார்கள் எனவுஞ்சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணக் கல்லூரி தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மாணவன்
ஒருவனுக்குக்கு கிட்டுவையும் ஏனைய முக்கிய விடுதலைப் புலி இயக்கத் தலைவர்களையும் கொல்லுமாறு
ஆயுதமும் பணமும் வழங்கப்பட்டிருந்தது என அவர் அங்கு சுட்டிக்காடடினார். விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி
நிறுவனமான ‘நிதர்சனம்’ தொலைக்காட்சியில் சிங்கப்பூர் பாணியில் தோன்றி தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர்
செல்வபாலா சுட்டுக்கொல்லப்பட்டார்.

இறுதியாக உண்ணாவிரதத்தை முடித்துவைப்பதற்கான உடன்பாடு ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் விஜிதரனைத்
தேடிக்கண்டு பிடிப்பதாக உறுதி அளித்தனர். சதிக்கதைகள் பலவற்றைப் போல் விஜிதரன் பற்றிய உண்மையும்
நீண்டகாலத்துக்கு வெளிவராது. பல்கலைக்கழக மாணவரைப் பொறுத்தவரை பொது விவகாரங்களில் அவர்களது
பங்களிப்புத் தற்காலிகமாக முடிவுற்றது. பலவீனங்கட்கும் தவறுகளுக்கு மத்தியிலும் அவர்களது பங்களிப்பு மகத்
தானதொன்று. அவர்களைப் பார்க்கிலும் அதிக அனுபவமும் முதிர்ச்சியும் பெற்றவர்கள் தலைமை தாங்கி நடத்த
வேண்டிய பணிகளைச் செய்யுமாறு அவர்கள் நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.தமிழ் மக்களைப் பொறுத்த வரை இன்னொரு
தீபம் அணைந்துவிட்டது. இப்புதிய போக்குக்குக் கீழ்ப்படிய மறுத்து எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்குத் தலைமைதாங்
கிய விமலேஸ்வரன் என்ற மாணவர் தலைவன் தன் பெறுமதி மிக்க அர்ப்பணிப்பைச் செய்தார். 1988 ஜுலையில்
அவர் கொலை செய்யப்பட்டார்.


1986 ஒக்ரோபரில் அடம்பனில் இலங்கை இராணுவத்துடன் நடந்த சண்டையில் விக்டர் கொல்லப்பட்டார். இச்சண்
டையில் இலங்கை இராணுவத்தினர் பதின்மூவர் கொல்லப்பட்டனர். இருவர் உயிரோடு பிடிக்கப்பட்டனர். விக்டரின்
சடலம் பிடிபட்ட இரண்டு இராணுவத்தினருடனும் ஒன்பது சிறிலங்கா இராணுவத்தின் சடலங்களுடனும் யாழ்ப்பாணம்
கொண்டு வரப்பட்டது.பிடிபட்ட இரு இராணுவத்தினரும் ஒன்பது இராணுவத்தினரின் சடலங்களும் நல்லூர்க் கந்தசாமி
கோவிலுக்கருகிற் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்தவகையான கண்காட்சிகளில் இது முதலாவது கண்காட்
சியாகும். ஆயிரக்கணக்கான மக்கள் அதைப் பார்வையிட்டனர். விக்டரின் இலட்சக்கணக்கான மக்கள் பார்வையிடுவ
தற்காக இராணுவ மரியாதையுடன் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிற்கும் கொண்டு செல்லப்பட்டது. கிட்டு இது தொடர்
பாகக் கூட்டங்களில் உரையாற்றி தமது படிமத்தை கணிசமாக உயர்த்திக் கொண்டார். விக்டர் விடுதலைப் புலிகளின்
ஏனைய தலைவர்களைப் போல் தனது சக போராளிகளுடன் போர்க்களத்தில் நின்றார் என்ற கிட்டுவின் கூற்றுப் பத்
திரிகைகளில பிரசுரிக்கப்பட்டது. அந்தக் கூற்று பிரபாகரனுக்கு நேரடியான அறைகூவலாகக் காணப்பட்டது. அதற்கு
முன்பான பல ஆண்டுகளாகப் பிரபாகரன் சென்னையில் இருந்தார். பிரபாகரன் கிட்டுவை மட்டந்தட்டி விடுவார் என்ற
உணர்வும் பரவலாக நிலவியது. 1987 ஜனவரியில் பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்கு வந்தமை கிட்டுவின்
அபிலாசைகளுடன் ஓரளவு தொடர்புடையதென நம்பப்பட்டது

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு