பாலா அண்ணையின் இழப்பு தமிழ்மக்களைப் பாதிக்குமா?

பிரபாகரனின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் இழப்பு தமிழ் மக்களைப்பாதிக்குமா கேட்டால் இல்லை என்பது தான் நிஜமான பதில். பாலசிங்கத்தால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது என்று யாராவது கூற முடியுமா?

பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் என்று கூறப்பட்டாலும் பிரபாகரனுக்குக் கீழ்ப்படிந்தே பாலசிங்கம் வாழ்ந்தார். பிரபாகரனின் மனிதப் படுகொலைகளை நிறுத்தச்சொல்லி பாலசிங்கத்தால் பிரபாகரனுக்கு ஆலோசனை சொல்ல முடியவில்லை. பாலசிங்கம் சிறந்த அரசியல் ஆலோசகராகவும் பிரபாகரன் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கும் பக்குவம் கொண்ட சிறந்த போராட்டத் லைவனாகவும் இருந்திருந்தால் புலி இயக்கத்திற்கு பயங்கரவாதி பட்டம் கிடைத்திருக்குமா? பாலாஅண்ணை நான் சொல்லுவதைத்
தான் நீ சொல்ல வேண்டும் என்று பிரபாகரனால் எச்சரிக்கப்பட்டவர் பாலசிங்கம். மாற்று இயக்கங்கள் அழிக்கப்பட்டபோது அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டபோது குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என்று பாரமல் பிரபாகரனால் அழிக்கப்பட்டபோது பாலசிங்கம் எப்படிப்பட்ட ஆலோசனையை பிரபாகரனுக்குக் கூறினார். லண்டனில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பாலசிங்கத்தின் பேச்சுக்கள் எவ்வளவு அசிங்கமாக ஆபாசமாக வக்கிரமானதாக பெண்களை இழிவு படுத்துவதாக இருந்தது என்ற அவரது பேச்சினைக் கேட்டவர்களுக்குத் தெரியும். ஆனந்தசங்கரி ஐயாவைக் காட்டுங்கோ அவரை ஒருக்காக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சவேணும்.

அவர் கிளிநொச்சிக்குப் போகலாம். பொட்டம்மான் பைவ் ஸ்ரார் ஹொட்டல் கட்டி வைத்திருக்கிறார். அங்கு போனால் நல்லா சாப்பிடலாம் என்று வக்கிரமாகப் பேசி விசிலடிச்சான் விசர்க்கூட்டத்தை மகிழ்வித்தவர். பிரபாகரன் இந்தியப்படையுடன் போரை ஆரம்பித்தபோது பிரபாகரனுக்க விசர் என்று கூறிக்கொண்டு வள்ளமேறி இந்தியாவிற்கு ஓடியவர்.
பாலாண்ணைக்கு தேசத்தின் குரல் என்ற பட்டம் புலித்தலைவர் பங்கருக்குள் இருந்து கொண்டு வழங்கியிருக்கிருக்கிறாராம். இறந்த பிறகு பட்டம் கொடுப்பது ஒன்று மட்டும் தான் புலித்தலைவருக்குத் தெரிந்த விசயம். தமிழ் மக்களை மனதாரர நேசித்து தமிழ் மண்ணிலேயே வாழ்ந்தவர்கள் பலர் புலிகளால் கொல்லப்பட்டார்கள். லண்டனில் வசித்த ராஜினி திராணகம தனது வெளிநாட்டு வாழ்க்கையை ஓதுக்கித்தள்ளி விட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சேவை செய்து கொண்டிருந்தார். புலிகளால் கொல்லப்பட்ட கல்விமான்கள் நீலன் திருச்செல்வம் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் சிவபாலன் ஆனந்தராஜா ஞானச்சந்திரன் பஞசலிங்கம் இராசதுரை சிவகடாட்சம் என்று புலிகளால் கொல்லப்பட்டவர்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட ஈனஇரக்கமற்ற கொலைகாரன் பிரபாகரனின் ஆலோசகர் என்று கூறப்படுபவரை தமிழ் மக்களை நேசித்தவர் என்று கூறுபவர்கள் முட்டாள்கள். தனது சுயலாபங்களுக்காகத்தான் பாலசிங்கம் பிரபாகரன் பின்னால் நின்றவர் என்பதுதான் உண்மை பிரபாகரன் என்கின்ற இரத்தக் காட்டேரிக்கு இவர் ஆலோசகர் என்றால் இவரின் இழப்பால் தமிழ் மக்களுக்கு எந்த நடமுமில்லை.

அதற்காக நாம் ஒருவரின் மரணத்தில் மகிழ்பவர்களுமல்ல.

http://www.eelanaasam.com/

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு