தமிழக மீனவர்களின் ஆதரவை இழந்துள்ள புலிகள்

-வித்தி

வழக்கம் போலவே பழ. நெடுமாறன் அவர்களின் மற்றுமொரு ஈழ ஆதரவுப் போராட்டம் எதுவித பலனும் இல்லாமல் முற்றுப்பெற்றிருக்கின்றது.யாழ்ப்பாணத்தில் மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியிருப்பதாக பூச்சாண்டி காட்டிக்கொண்டு அவர் நடாத்திய போராட்டம் அவரையறியாமலே ஒரு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது.நெடுமாறன் ஐயாவை ஈழத்தமிழர்கள் அறிந்த அளவிற்கு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மக்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.இந்திரா காந்தி காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்த நெடுமாறன், பின்னர் தீவிர தமிழ்த் தேசிய பற்றாளராக மாறினார்.புலிகளின் தலைவர் பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்து வரும் நெடுமாறன், தமிழகத்தில் புலிகளுக்கு தேவையான அலுவல்களைக் கவனித்துவரும் ஒரு புலிப் பினாமியாகவே அண்மைக்காலத்தில் செயற்பட்டுவருகின்றார்.

தமிழகத்தில் புலிப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக இவருக்கு புலிகளிடமிருந்து போய்ச் சேரும் பெருந்தொகைப்பணத்திற்கு புலிகளுக்கு கணக்குக்காட்டுவதற்காகவே இவர் அவ்வப்போது சில போராட்டங்களை நடாத்தவேண்டிய நிலையில் இருக்கிறார்.யாழ்ப்பாணத்தில் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்வதாகவும், அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவுமாறும் அவர் விடுத்த அழைப்பை ஏற்று தமிழகத்திலுள்ள மக்கள் உணவுப்பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் அனுப்பிவைத்தனர்.சுமார் கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் வந்து சேர்ந்தாலும், அதனைப் பொறுப்பேற்று அனுப்பிவைக்க சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் முன்வரவில்லை.அதனை அனுப்பிவைக்க சில லட்சம் ரூபாவை செலவிட யாரும் முன்வராததே முக்கிய காரணம்.இந்திய மத்திய அரசும் அவரது சுய ரூபம் தெரிந்திருந்ததால் அந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் தானே படகுகளில் அவற்றை எடுத்துச் செல்லப்போவதாக அறிவித்த நெடுமாறன், அதற்கான பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டிருந்தார்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வதென்றால், அந்தந்த நாடுகளின் குடியகல்வு, குடிவரவு சட்டங்களை கருத்தில் எடுத்தாகவேண்டும்.இலங்கைக்கு ஒருவர் இந்தியாவிலிருந்து செல்வதென்றால் இந்திய குடியகல்வு அதிகாரிகளின் அனுமதியைப் பெறவேண்டும். அவ்வாறு பெறாமல் சென்றாலேயே பொலிசார் கைதுசெய்து விடுவார்கள். இது எல்லாம் நெடுமாறன் ஐயாவுக்கு தெரியாததல்ல.இதற்கு முன்னரும் இதுபோன்ற படகுப்பயணம் ஒன்றை அவர் மேற்கொள்ள, சில நூறு மீட்டர் சென்றதும் பொலிசார் கைது செய்தனர்.இப்போதும் அப்படித்தான் கைதுசெய்வார்கள் என்றே பலரும் நினைத்திருந்தனர்.ஆனால், பொருட்களை எடுத்துச் செல்வதற்கு மீனவர்கள் தமது படகுகளைக் கொடுக்க முன்வராததாலேயே இந்த பயணத்தை ரத்துச்செய்ததாக நெடுமாறன் ஐயா அறிவித்திருப்பதுதான் ஒரு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது.

தமிழகத்தில் மீனவர்கள் புலிகளின் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டதாலேயே இன்று ஈழதத்மிழர்களுக்கு உதவ முன்வரவில்லை என்பதை நெடுமாறன் ஐயா வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்.அது மாத்திரமன்றி, நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசிய ஆதரவாளர்களின் ஆதரவுத்தளமான தமிழக மீனவ சமுதாயத்தின் அதரவுத்தளத்தையும் அவர்கள் இழந்துவிட்டது இப்போது தெரியவந்திருக்கின்றது.படகுப்பயணத்திற்கு இத்தனை முன்னெற்பாடுகளைச் செய்திருந்த நெடுமாறன் அவர்கள், படகுகளை ஏற்பாடு செய்யாமல்தான் இருந்திருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கின்றது.இவையெல்லாவற்றையும் பார்க்கின்றபோது, சிறிலங்கா படையினர் தெரிவித்திருப்பதுபோல, சிறிலங்கா கடற்படையினரின் கவனத்தை பாக்குநீரிணைப்பக்கம் திருப்பிவிட்டு, அடுத்த பக்கத்தால் புலிகள் ஆயுதக்கப்பலை கொண்டுபோய் சேர்க்க எடுத்த முயற்சியே இது என்ற கூற்றிலும் உண்மையிருக்கலாம்.

கே.பி. கைதா? காட்டிக்கொடுப்பா? சதியா? சரணடைவா?

- ரகு தயாளினி

புலிகள் இயக்கத்தின் சர்வதேச மட்டத்திலான மிக முக்கிய புள்ளியாக கருதப்பட்ட கே.பி. என அழைக்கப்பட்ட கே. பத்மநாதன், தாய்லாந்தின் பாங்கொக் பொலீசாரினால் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி முதலிலும், ‘இன்டர்போல்’ என அழைக்கப்படும் சர்வதேசப் பொலீசாரே அவரை கைது செய்திருப்பதாக என்ற செய்தி; தற்போதும் வெளியாகி பரபரப்பை அதிகரித்திருக்கிறன. ஆனால், கே.பி கைது செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை பாங்கொக் பொலீசாரோ அல்லது இன்டர்போலோ உத்தியோக பூர்வமாக எதுவும் கூறவில்லை எனவும் குழப்பங்கள் நிலவுகின்றன.

கடந்த 10ம் திகதி திங்கட்கிழமை மாலை தாய்லாந்தின் பல உள்ளுர் ஊடகங்கள் உட்பட, சில சர்வதேச ஊடகங்களும் கே.பி.யின் கைது தொடர்பாக செய்திகளை வெளியிட்டன. உடனடியாகவே இலங்கை மற்றும் இந்திய பாதுகாப்புத் துறைகள் தாய்லாந்து அரசை தொடர்பு கொண்டு கே.பி.யை தம்மிடம் தரும்படி கேட்டுக் கொண்டபோது ‘தாம் கே.பி.யைப் பிடிக்கவில்லை’ என பாங்கொக் பொலீசார் கை கழுவி விட்டுள்ளனர். இன்டர்போலும் தாம் பிடிக்கவில்லை என மறுத்துள்ளமை தற்போது சகல மட்டத்திலும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவ்விடயம் தொடர்பான உண்மை மிக விரைவில் வெளிவந்துதான் ஆக வேண்டும்.

கே.பி. பிடிக்கப்பட்டாரா? இல்லையா? என்பது இன்னும் முழுமையாக ஊர்ஜிதப் படுத்தப்படாத நிலையில், அவர் பிடிபட்டுள்ளார் என்னும் இக்கட்டுரையாளரின் நிலைப்பாட்டிலிருந்தே இக்கட்டுரை வரையப்படுகின்றது. கே.பி. சாதாரணமானவரல்ல, பயங்கர கில்லாடி, சர்வதேச பயங்கரவாதி, மிகப் பிரபலமானவர்;, உலக மட்டத்தில் அறிமுகமானவர். ஆனால் அவலம் யாதெனில், அவரை பிடித்திருந்தால் அதைப் பகிரங்கப் படுத்தும்படியோ விடுதலை செய்யும்படியோ உரிமையுடன் கேட்பதற்கு உலகில் எவரும் இல்லை என்பதுதான். சர்வதேச ரீதியாக புலிகள் பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தப்பட்டுளளதால், புலிகளால்கூட அவரை விடுவிப்பதற்கு எதுவுமே செய்ய முடியாதென்பதே மிகப் பெரும் அவலம்.

தாய்லாந்தைப் பொறுத்தவரை கே.பி என்ற நபர் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் எவ்விதத்திலும் கேந்திர முக்கியத்துவமற்றவர். எனவே கே.பி.யை பிடித்த சுவடே தெரியாமலே, அவரை மிகவும் அவசியப்படும் இந்தியாவிடமோ அல்லது சர்வதேச பொலீசாரிடமோ, ஏன் அமெரிக்க பாதுகாப்பு பிரிவினரிடமே கையளித்துவிட்டு தமக்கு இதில் சம்பந்தமே இல்லாததுபோல் கைகழுவி விடுவதற்கான வாய்ப்புகள் கூட அதிகமாக உண்டு. கே.பி பிடிபடவில்லை என்றோ, பிடிபட்டுவிட்டார் என்றோ சொல்லமுடியாத இக்கட்டான நிலையில் புலிகள் இருப்பதால் இந்த விடயம் சிலகாலத்திற்கு மர்மமாகவே இருக்கலாம்.

சாத்தியப்பாடுகளும் சந்தேகங்களும்

இவ்வளவு காலமும் இல்லாது, தற்போது புலிகளுக்கு கே.பி.யின் சேவை மிகவும் தேவைப்படும் இக்கட்டான கால கட்டத்தில் அவர் பிடிபட்டிருப்தானது பல்வேறு கேள்விகளை பல்வேறு கோணங்களில் இருந்து எழுப்பிவிட்டுள்ளது. இக்கேள்விகளின் அடிப்படையில் அவர் பிடிபட்டது தொடர்பாக பல்வேறு சாத்தியப்பாடுகள் தற்போது அலசப்படும் அதேவேளை, இச்சாத்திப்பாடுகள் தொடர்பாக சந்தேகங்களும் கிளப்பப்படுகின்றன. ஆனால் இச்சாத்தியப்பாடுகள் அனைத்தையும் நான்கு பிரதான பிரிவாகப் பிரிக்கலாம். அவையாவன,

கைது
காட்டிக் கொடுப்பு
உள்வீட்டுச் சதி
திட்டமிட்டவகையிலான சரணடைவு
முதலாவதாக அவர் கைது செய்யப்பட்டாரென்று எடுத்துக்கொண்டால் - தற்போது சர்வதேச ரீதியாக புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவும், புலிகள் இயக்கத்திற்கும் சர்வதேச இஸ்லாமிய இயக்க தீவிரவாத இயக்கங்களுக்குமிடையே ஆயுத பரிமாற்ற தொடர்புகள் இருப்பது பற்ற்pயும் செய்திகள் வெளிவந்துள்ள நிலைமையில், கே.பி.யை போன்ற சர்வதேச மட்டத்தில் ஆயுதம் கடத்தும் முக்கியமான நபரை பிடிக்க வேண்டும் என்ற சர்வதேச பாதுகாப்பு பிரிவினரின் தீவிர தேடுதல் முயற்சியால் இவர் கைதுசெய்யப் பட்டிருக்கலாம்.

(கடந்த வருடம் அமெரிக்காவில் புலிகளுக்காக ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக கைதுசெய்யப் பட்டவர்களிடமும் அமெரிக்க பாதுகாப்பு பிரிவினர் குறிப்பாக கே.பி. தொடர்பான விபரங்களையே முக்கியமாக கேட்டறிய முயற்சித்துள்ளனர். இலண்டனில் கே.பி. யின் மிக நெருங்கிய உறவினர்களின் சிலரின் நடமாட்டங்கள், தொலைபேசி தொடர்புகள் அண்மைக்காலமாக பிரித்தானிய இரகசியப் பொலீஸ் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன.)

அப்படியானால்:

தமது சர்வதேச வலைப்பின்னலின் அதி முக்கிய நபரான கே.பி.யை பாதுகாக்கும் முயற்சியில் புலிகள் தோற்றுப்போய் விட்டார்களா? அல்லது அவர் பிடிபடமாட்டார் என்னும் நம்பிக்கையில் மெத்தனப் போக்காக இருந்து விட்டார்களா?

புலிகள் இயக்க தலைமையைப் பொறுத்தவரை கே.பி.யின் பணி மிகவும் மகத்தானது என்பது மட்டுமல்ல. அவர் பிடிபட்டால் அவரூடாக வெளிடப்படக்கூடிய இரகசிய தகவல்கள் புலிகளின் அத்திவாரத்தையே ஆட்டிவிடக் கூடியன. அப்டியான ஒருவர் பிடிபடுவதை புலிகள் இயகத் தலைமை, குறிப்பாக பிரபாகரன் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப் போவதில்லை.

எனவே, அவரைப் பாதுகாப்பதற்கான சகல முயற்சிகளையும் புலிகளின் தலைமை நிட்சயமாக எடுத்திருக்கம். அப்படி முடியாதவிடத்து எப்பாடுபட்டாவது அவரை வன்னிக்கு கொண்டுவந்து தற்போதைய நிலைமைகள் தணிந்து தமக்கு சாதகமான சூழல் வரும்வரை அவரைப் பாதுகாத்திருக்கும். அப்படியானால் ஏன் அது செய்யப்படவில்லை?

கே.பி. அதிகமாக நடமாடும் நாடுகளாக தாய்லாந்து, கம்போடியா, பர்மா என்பன வெளிப்படையாக தெரிந்திருந்தும் கே.பி ஏன் அங்கு நின்றார்? புலிகளின் உலக வலைப்பின்னலைப் பொறுத்தவரை ஒரு தனி நபரை, அதுவும் மிக முக்கியமான ஒருவரை மறைத்து வைக்க முடியாத அளவுக்கு அவர்கள் இருக்கிறார்கள் என்பதை யாராலும் நம்ப முடியாது.

அல்லது, தான் மிக ஆபத்தான நிலைமையில் இருப்பது தெரிந்தும், தற்போது இலங்கையில் யுத்த முனையில் இலங்கை அரசாங்கத்தை மிஞ்சுவதற்கான அவசர ஆயுதக் கொள்வனவு செய்யும் அவசரப் பணியில் கே.பி. ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம். ஏனெனில் அடுத்த மாவீரர் தினத்திற்கு முன்னர் புலிகள் பாரிய தாக்குதல் எதையாவது செய்தாக வேண்டும். அதற்கு உகந்ததான ஆயுதங்கள் அவசரமாக புலிகளுக்கு தேவைப்படுகின்றது. அவ்வாறான அவசர பணியில் ஈடுபட்டபொழுது கவனயீனமாக மாட்டிக் கொண்டிருக்கலாம்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க ஏற்கனவே ஊடகங்களில் கிளப்பிவிடப்பட்ட, “பிடிபடும்போது கே.பி.யின் கையில் சயனைற் குப்பி இருக்கவில்லையா”? என்பது போன்ற அப்பாவித்தனமான, ஆனால் நியாயமான சந்தேகங்கள் இந்த முதல் சாத்தியப்பாடு தொடர்பாக எழுப்பப்படுகின்றன.

இரண்டாவதாக அவர் காட்டிக்கொடுக்கப்பட்டாரென்று எடுத்துக்கொண்டால்- என்றுமில்லாதவாறு அண்மைக்காலங்களில் அமெரிக்கா, பிரான்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் புலிகளின் முக்கிய நபர்கள், அதிலும் குறிப்பாக ஆயுதம் கொள்வனவு முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்ப்பட்டனர். அவர்கள் ஏதோ ஒரு வகையில் நிட்சயமாக கே.பி.யின் தொடர்பு வலையத்திற்குள் உள்ளவர்களாகவே இருந்திருப்பர். எனவே கடுமையான விசாரணைகளின்போது அவர்கள் வெளிநாட்டு பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவல்களின்போது, தமக்குத் தெரிந்த கே.பியின் கேந்திரமான் மறைவிடங்களை காட்டிக் கொடுத்திருக்கலாம்.

அப்படியானால்,

பல நாடுகளில் தனது தொடர்பு வலையத்திற்குள் உள்ள நபர்கள் கைது செய்ப்பட்ட பின்னரும் கே.பி. தனது தற்பாதுகாப்பிற்கான உரிய எச்சரிக்கை எடுக்காமல் இருந்தாரா? இருந்திருப்பாரா? அப்டியானால் ஏன் எடுக்கவில்லை?. அவ்வாறான எச்சரிக்கையை, அவர் எடுக்காவிட்டாலும் புலிகள் இயக்க தலைமை ஏன் எடுக்கவில்லை? எடுத்திருக்காது? என்ற சந்தேகங்கள் இந்த இரண்டாவது சாத்தியப்பாட்டைச் சற்றி எழுப்பப்படுகின்றன.

மூன்றாவதாக உள்வீட்டுச் சதியென்று எடுத்துக்கொண்டால் – இயக்கதிற்குள்ளிருந்து சதி செய்வது என்பது புலிகள் இயக்க தலைமையோடு ஒட்டிப பிறந்த இரட்டைக் குழந்தை என்பது யாவரும் அறிந்ததே. இக்குணாம்சம் தமிழ் சமூகம் அவ்வியக்கத் தலைமைக்கு அள்ளிக் கொடுத்த சீதனம் என்று சொன்னாலும் தகும். எனவே கே.பி.யின் கைதிலும் உட்சதி காரணமாயிருக்கலாம் என்பதும் ஒரு முக்கிய சாத்தியப்படாகவே கருதப்படுகின்றது.

இந்த உட்சதியும் கூட இரண்டு திசைகளிலிருந்து நடந்திருக்கலாம் என்னும் விவாதம், தற்போது புலம் பெயர்ந்த புலித்தளப் பிரதேசத்தங்களில் நடப்பதுதான் இன்னும் சுவாரசியமானது.

தற்போது பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் எதிராக இருக்கும் “சூசை ஆதரவுப் பிரிவினரால்” இச்சதி மேற்கொள்ப்படடிருக்கலாம்.

- அல்லது, அண்மைய முரண்பாடுகளாலும் இயக்கத் தலைமையின் தற்போதைய தவறான கையாளுகைகளினால் அதிருப்தியடைந்து, கடந்த வருடத்தில் தனது பணியை சரிவரச் செய்யாமல் ஒதுங்கிப்போக முற்பட்ட கே.பியை பொட்டம்மானின் உத்தரவின்பேரில் பிரபாகரன் ஆதரவுப் பிரிவினரே காட்டிக் கொடுத்திருக்கலாம்.

இங்கு முக்கியமான விடயம் யாதெனில், இந்த இரண்டு விதமான வாதங்களும் புலிகளோடு நெருக்கமான உறவை வைத்து அவர்களின் குணங்குறிகளை நன்கு அறிந்து உறவாடுபவர்களாலேயே முன்வைக்கப்படுவதாகும். அதாவது புலி ஆதரவாளாகளின் உள்வட்டாரப் பேச்சு என்றும் கூறலாம். புலிகளைப்பற்றி வெளியே இருந்து செய்யப்படும் வியாக்கியானங்களைவிட அவர்களின் உள்வட்டாரப் பேச்சுக்களை அவதானிப்பதால் அவர்களை மிகச் சரியாக எடை போடலாம்.

சரி… உள்வீட்டுச் சதியின் இவ்விரு திசைகளின் பின்னணியைப் பார்த்தால்,

அண்மைக் காலமாக புலிகள் இயக்கத்துக்குள் தலைமை மட்டத்தில் ஏற்பட்டு வரும் உட்பூசல் காரணமாக சிலர் ஒழிக்கப்பட்டும், பலர் ஓரங்கட்டப்பட்டும் வருகின்றனர். அதனால் பலர் ஒதுங்கியோடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த வரிசையில் இறுதியாக நிகழ்தப்பட்ட ஒழிப்பு முயற்சியே கடற் புலிகளின் தளபதி ‘சூசை’ என்கின்ற சிவநேசன்.

சூசையிடமிருந்து பறிக்கப்பட்ட கடற்புலிகள் பிரிவு, தற்போது பிரபாகரனின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கான நோக்கம் பலரும் அறிந்ததே. அதில் முக்கியமானது, மிகவும் இக்கட்டான இன்றைய கட்டத்தில், பிரபாகரன் வன்னியை விட்டுத் தப்பி ஓடவேண்டி நேரிடின், சூசையின் கட்டுப்பாட்டிலிருக்கும் கடற்புலிப் பிரிவை நம்பி பிரபாகரன் கடலில் இறங்குவாரா என்ற கேள்விக்கு இடமேயில்லை.

அவ்வாறு அவர் நம்பாமைக்கும் புலிகளின் உட்சதிக் கலாச்சாரமே காரணமாகும். எனவே அப்பிரிவு சூசையிடமிருந்து பறிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி சூசை சகல விதத்திலும் முடமாக்கப்பட்டுவிட்டாh.; அவரின் முக்கிய ஆதரவாளர்கள் பல்வேறு வழிகளில் ஒழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளிவந்தவண்ணமுள்ளன. இந்த ஒழிப்பும் ஓரங்கட்டலும் மிகக் கவனமாக திட்டமிடப்பட்ட கட்டம் கட்டமாக செய்யப்பட்டு வருவதாகவே புலிகளின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(சூசை தொடர்பாக பிரபாகரன், பொட்டம்மான் மற்றும் அவர்களது ஆதரவுப் பிரிவினர் இவ்வளவு தூரம் அச்சப்படுவதற்கான காரணம் என்ன? அதில் உண்மை இருக்கின்றதா? இது தொடர்பான விரிவான கட்டுரை சில முக்கியமான ஆவண ஆதாரங்களுடன் அடுத்துவரும் நாட்களில் இக்கட்டுரையாளரால் தேனீ இணைய தளத்தில் வெளியிடப்படும்.)

நான்காவதாக திட்டமிட்டவகையிலான சரணடைவு என்று எடுத்துக்கொண்டால்- இயக்கத் தலைமை மீத ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை, அதிருப்தி காரணமாக பாதுகாப்பு கருதி வன்னிக்கு செல்ல விரும்பாத நிலையிலும், சர்வதேச ரீதியாக தற்போது நிலவும் பயங்கரவாத எதிர்ப்பு தட்ப வெப்ப சூழ் நிலையில் தான் பிடிபடுவது தவிர்க்க முடியாது என்ற நிலையில் தானாகவே முன்வந்து பாங்கொக் பொலீசாரின் மூலம் சர்வதேசப் பொலீசாரிடம் சரணடைந்திருக்கலாம். மிக இரகசியமாக நடத்தப்பட்ட இந்த ‘சரணடைவு’ விடயம் எப்படியோ ஊடகங்களுக்கு கசிந்திருக்கலாம். ‘கே.பி. கைது’ என ஊடகங்களில் வெளிவந்ததால் சங்கடமடைந்த தாய்லாந்து பொலீசார் உடனடியாக மறுப்புத் தெரிவித்திப்பதற்கான வாய்ப்பிருக்கலாம்.

அப்டியானால் இங்குப் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

- தானாகவே முன்வந்து சரணடையும் அளவுக்கு கே.பி.க்கு இயக்கத் தலைமையுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் என்ன?

- தானாகவே முன்வந்த சரணடைவதால் கே.பி.க்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?
அண்மைக் காலத்தில் புலிகள் இயக்கத்திற்கு ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி என்றால் அது கிழக்கு மாகாணம் புலிகளை விட்டுப் பிரிந்ததுதான். பொட்டம்மான் என்னும் ஒரு தனிநபரின் அதிகார வெறிக்காக தீனி போடப்போய், பிரபாகரன் செய்து கொண்ட மாபெரும் தவறு என்பதை பகிரங்கமாக இல்லாவிடினும் அந்தரங்கமாக புலிகள் இயக்கத்தின் பல மட்டங்களும் கடந்த சில வருடங்களாக ஏற்றுக்கொள்ளுகின்றன.

அதனால்தான் சூசைக்கும் பொட்டு அம்மானுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டு அது பாரிய அளவில் வெடிக்கு முன்னரே, புலிகளின் சர்வதேசத்தளமானது சிங்கப்பூருக்கு ஓடோடிவந்து பெரு முயற்சியெடுத்து நிலைமையை சமாதானப்படுத்தியது. அந்த முயற்சியில் ஈடுபட்டவர்களில் கே.பி.யும் முக்கியமானவர்.

சூசை சிங்கப்பூரிலிருந்து திரும்பிச் சென்றதும் சூசை மீது அதிக அழுத்தமிடும் செயற்பாடுகளில் இருந்து பொட்டு அம்மான் விலக்கி வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் சூசையின் சகல நடவடிக்கைகளும் மிகக் கவனமாக பொட்டு அம்மானால் கவனிக்கப்பட்டு வந்தன. அதன் பின்னரே சரியான சந்தர்ப்பம் பார்த்து சூசை குறிவைக்கப்பட்டு வீழ்த்தபட்டார். சூசை வீழ்த்தப்பட்ட சம்பவமே கே.பி.யின் சரணடைவு தொடர்பான முடிவுக்கு உடனடிக் காரணமாகக் கூறப்படுகின்றது.

கடற்புலிகள் பிரிவிற்கும், கடல் மார்க்கமாக நடத்தப்படும் புலிகளின் ஆயுதக் கடத்தல் வலைப் பின்னலுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்திருக்கும் என்பது இயல்பானதே. அந்த வகையில் கே.பி.யும் சூசையும் மிக நெருக்கமாக பணியாற்றியவர்களே. அதற்கு மேலதிகமாக, சூசைக்கும் கே.பி.க்கும் உள்ள தொப்புள் கொடி உறவு அவர்கள் இருவரினதும் சாதியாகும். இருவரும் கரையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுவும் வல்வெட்டித்துறைக்கு வெளியேயான கரையார்கள் என்பதும் முக்கியமாகும்.

சூசை பொலிகண்டியைச் சேர்ந்தவர், கே.பி. மயிலிட்டியைச் சேர்ந்தவர். பிரபாகரன், கடல் மற்றும் சர்வதேச ரீதியான முக்கிய பிரிவுகளை இவர்களிடம் நம்பிக்கையாக கையளித்தமைக்கு காரணமும் இதுவேயாகும். வல்வெட்டித்துறைக் கரையாருக்கு நிகராகவும், தலைமைக்கு விசுவாசமாகவும் தம்மாலும் செயற்பட முடியும் என நிரூபிப்பதற்காகவே கே.பி.யும் சூசையும் நீண்ட காலம் கடுமையாக உழைத்தவர்கள்.

(புலிகள் அமைப்பிற்குள் ஆரம்பம் முதலே சாதி எந்தளவு முக்கிய பாத்திரம் வகித்துள்ளத என்பதன் அடிப்படையிலேயே இந்த சாதி விடயம் இக்கட்டுரையாளரால் இங்கு தர்க்கத்திற்கு எடுக்கப்படுகின்றது என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்ளல் அவசியமாகும்)

ஆனால் அண்மைக் காலமாக சர்வதேச மட்டத்தில் புலிகளின் நிதி மூலதனத்தை கையாழும் ஏகபோக உரிமை புங்குடுதீவு வெள்ளாளரிடம் ஒப்படைக்கப்படடிருப்பது வெளிப்படையான இரகசியம். தற்போது வெளிநாடுகளில் “புங்குடுதீவு சங்கம் என்றால், அது புலிச்சங்கம்” என்னும் அளவுக்கு நிலைமை உறுதியாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடாபாக வல்லவெட்டித்துறைக் கரையார் கடுப்படையவில்லையா என ஒர வல்வெட்டித்துறை முன்னாள் டெலோ ஆதரவாளரை வினவியபோது அவர் சுருக்கமாக இப்படிக்கூறினார்.