ஜெயலலிதா அளித்த பேட்டி

சோனியா எனக்கு எதிரியல்ல: ஜெயலலிதா பரபரப்பு பேட்டி

சென்னை: ""சோனியா எனக்கு எதிரியல்ல; அவரை நான் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை,'' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.

சென்னையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் ஜெயலலிதா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

முதல்வர் கருணாநிதி ரெடிமேட் ஆடைகளை போல அவராகவே கேள்வி பதில் தயாரித்து ரெடிமேட் பேட்டி கொடுத்து வருகிறார். இந்த பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். நானும் உங்களை (நிருபர்கள்) சந்திக்காமல் இருந்தால் அதாவது பேட்டி தராமல் இருந்தால் உங்களுக்கு பேட்டி எடுக்கும் பழக்கம் போய்விடும் என்பதால் உங்களுக்கு உதவுவதற்காக நான் பேட்டி தருகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா சிரித்துக் கொண்டே கூறினார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு ஜெயலலிதா அளித்த பதில் விவரம்:

* டில்லிக்கு தாங்கள் சென்ற போது புதிய அணி உருவாகும் என்று சொன்னீர்களே? புதிய அணி எந்த நிலையில் <உள்ளது?

அதற்கான சூழ்நிலை இப் போதைக்கு இல்லை. நேரம் வரும் போது அறிவிப்பேன்.

* பார்லிமென்ட்டில் எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொள்ள சோனியாவுக்கு அழைப்பு விடுத்தும் அவர் ஏன் கலந்துக் கொள்ள வில்லை?


எனக்கு யாரும் எதிரி அல்ல. நான் யாருக்கும் எதிரியல்ல. சிலர் என்னை எதிரியாக நினைத்துக் கொண்டால் அது என்னுடைய தவறு அல்ல.

*சோனியாவை வெளிநாட்டு பெண்மணி என்று விமர்சித்ததற்காக வருத்தப்படுகிறேன் என்று மத்திய அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளாரே?

என்னைப் பொறுத்தவரை நாட்டின் பிரதமராக சோனியா வருவதை தான் எதிர்த்தேன். சோனியாவை நான் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. இப்போது சோனியாவை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா இருக்கிறார். அவரை அக்கட்சி தலைவராக ஏற்றுக் கொண்டது உட்கட்சி விவகாரம்.

*அப்சலுக்கு விதிக்கப்பட்ட துõக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவது குறித்து தங்கள் கருத்து?

துõக்குத் தண்டனை சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பு. அந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டை கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரமில்லை.

*ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏன்?

சி.பி.ஐ., மிகவும் சிரமப்பட்டு ராஜிவ் கொலை வழக்கை விசாரித்தனர். அவர்களின் விசாரணைக்கு எனது ஆட்சிக்காலத்தில் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது. தனி நீதிபதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத் தோம். மாநில அரசு காவல் துறையுடன் சி.பி.ஐ., விசாரித்தது. கோர்ட் விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கிய பிறகும் அதை நிறைவேற்றாமல் இருப்பது ஏன் என்பது தான் எனக்கு புரியவில்லை.

இந்த மாதிரி இந்தியாவை தவிர உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்க வாய்ப்பு கிடையாது. எனது அரசு, மற்றும் சி.பி.ஐ., காவல் துறையை முட்டாளாக்கி விட்டார்கள் என்று தான் அர்த்தம்.

* உ.பி., மாநில தேர்தலுக்கு தாங்கள் பிரசாரம் மேற்கொள்வீர்களா?

முலாயம்சிங், அமர்சிங் இருவரும் என்னிடம் பிரசாரத்திற்கு வரும்படி கேட்டுக் கொண்டனர். நானும் பிரசாரத்திற்கு செல்வேன்.

* சோனியாவை...?

திரும்ப திரும்ப குறிப்பிட்ட ஒருவரை பற்றி கேள்விகளை கேட்காதீர்கள். வேறு கேள்வியை கேளுங்கள்.

ஸ்ரீரங்கம் கோவில் முன் ஈ.வெ.ரா., சிலை வைக்க அனுமதித்ததால் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்களா?

தீயையும், பஞ்சையும் பக்கத்தில் வைத்துக் கொண்ட பிறகு தீ பற்றிக் கொள்ளாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முடியாத காரியம். அறிவுடையவர்கள், சாதுரியமானவர்கள், விவேகமானவர்கள் தீயையும், பஞ்சையும் வேறு இடத்தில் தான் வைப்பார்கள். சிலை வைக்க எத்தனையோ இடங்கள் உள்ளன. அங்கெல்லாம் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.

* உங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோ மீண்டும் ஈழப் பிரச்னையை ஆதரித்து பேசுகிறாரே?

கூட்டணியில் இருப்பதால் அவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்வதாக அர்த்தமல்ல. மத்தியில் காங்கிரஸ் கட்சியை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கவில்லையா. எங்களை பொறுத்தவரையில் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். இலங்கை தமிழர்களின் முழு உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் கண்ணியத்தோடு வாழ்க்கை நடத்த இலங்கை அரசு வசதி செய்து தரவேண்டும். அது தான் அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு. பயங்கரவாதம் எந்த ரூபத்திலும் வந்தாலும் அ.தி.மு.க., எதிர்க்கும்.

* ரவுடி "பங்க்' குமார் சுட்டுக் கொல்லப்பட்டதில் தி.மு.க., எங்களுக்கு நம்பிக்கை துரோம் செய்து விட்டதாக பா.ம.க.,வினர் கூறி யுள்ளார்களே?

மைனாரிட்டி தி.மு.க., அரசில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் பொறுப்பு வகித்திருக்கும் முதல்வரிடம் தான் கேட்க வேண்டும்.

* சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் இலவசமாக மூன்றரை லட்சம் காஸ் இணைப்பு தருவதாக ஆளுங்கட்சி அறிவித்துள்ளதே?

மக்களை ஏமாற்றுகிற வெத்து வேட்டு அறிவிப்பு. மக்களை ஏமாற்றுகிற மற்றொரு நாடகம். மூன்றரை லட்சம் சிலிண்டர்கள் எங்கிருந்து வரும் என்று நீங்கள் கருணாநிதியிடம் தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

கருணாநிதியின் துரோகம் ஜெயலலிதா ஆவேசம் : ""முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு முதல்வர் கருணாநிதி துரோகம் செய்து விட்டார்'' என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா அளித்த பேட்டி:

*முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வரும் 18ம் தேதி இரு மாநில அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதே?

கேரள முதல்வரும், தமிழக முதல்வரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது. இரு முதல்வர்களும் மட்டும் தான் பேச வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. அமைச்சர்கள் பேச வேண்டும் என்று உத்தரவிடவில்லை. முதல்வர்கள் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு கேரள முதல்வர் ஒத்துழைப்பு தரவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் முதல்வர் கருணாநிதி சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், கோர்ட் உத்தரவிடாத செயலை செய்து மக்களை ஏமாற்றுகிறார். பிரச்னைக்கு தீர்வு காண கருணாநிதி விரும்பவில்லை. தங்களுடைய அரசியல் லாபத்திற்காக மீண்டும் தமிழகத்திற்கு துரோகம் விளைவிக்கிறார். பராசுரனும் தேவையில்லாத கருத்துக்களை சொல்லியுள்ளார். அணையை பலப்படுத்த தமிழக அரசு செய்யும் மராமத்து பணிகளை செய்யவிடாமல் கேரள அரசு தடுக்கிறது என்று பராசுரன் கூறியுள்ளார். எனது ஆட்சியில் அணையில் மராமத்து பணிகள் செய்து முடிக்கப்பட்டன. மத்திய அரசின் நீர்வள அதிகாரிகள் அணையை பார்வையிட்டு சான்றிதழ் கொடுத்த பின்னர் தான் அணையை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு-ஜே.வி.பி.

தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் குதிக்க முஸ்தீபு அரசாங்கத்துக்கு இரண்டுநாள் காலக்கெடு

இலங்கையில் தமது நாளாந்த அடிப்படைச் சம்பளத்தினை ரூபாய் 135ரூபாவில் இருந்து 250 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமெனக்கோரி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் முழுமையான வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 14 வது நாளாகவும் தொடர்கிறது.

தோட்டத் தொழிலாளர்கள் தமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை தமது தொழிற்சங்கப் போராட்டம் தொடருமென கூறிவரும் அதேவேளை இன்று இவர்களின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றினை நடாத்தினர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரி முன்னெடுக்கப்படுகின்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜே.வி.பி.க்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளன. தொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு நாள் காலக்கெடுவை இந்ததொழிற்சங்கங்கள் விதித்துள்ளதுடன் மீறும் பட்சத்தில் பொதுச் சேவைகள் நாடளாவிய ரீதியில் ஸ்தம்பிதம் அடையும் என்றும் எச்சரித்துள்ளன.

.தேசிய தொழிற்சங்கங்களில் சம்மேளனத்தின் மேற்படி தீர்மானம் தேசிய நூலக ஆவணாக்கல் கேட்போர் கூடத்தில் நேற்று நடைப்பெற்ற விசேட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் முதலாளிமார் சம்மேளனத்துடன் கைச்சாத்திடாத பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன.

தேசிய தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்றே அனுப்பி வைக்கப்பட்டது.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் முழுமையான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தந்துவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.இந்தக் கடிதத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தினை அரசியல் பகடைக்காயாக இருகட்சிகளும் பாவிக்கிறார்கள் என்ற விமர்சனங்களிற்கு இடமளிக்காது இணைந்து புதிய முயற்சியில் ஈடுபட்டு தொழிலாளர்களிற்கான நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமென சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதன் பின்னர் இன்று கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவர் ஆர். யோகராஜன் அவர்களும் துணைத்தலைவர் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் அவர்களும் சந்திரசேகரனின் கடிதத்தினைத் தொடர்ந்து மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுகளில் உடனடியாக ஈடுபடவிருப்பதாகத் தெரிவித்தனர்.

போராட்டம் தீவிரமடைகிறது

ஆரம்பத்தில் சம்பளவு உயர்வு கோரி மெதுவாக வேலைசெய்யும் போராட்டதில் ஈடுபட்ட சுமார் 4 லட்சம் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தமது கோரிகைகள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே இந்த முழுமையான வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். இதனால் மலையகம் முழுவதும் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளது என்பதுடன் இலங்கையின் தேயிலை உற்பத்தியும் முற்றாக நிறுத்தப்பட்டிருக்கிறது. மலையகமெங்கிலுமுள்ள தேயிலை உற்பத்தித் தொழிற்சாலைகள் அனைத்தும் இழுத்து முடப்பட்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகளும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும்

விடுதலைப்புலிகளும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும்

Editorials
LTTE, with an ISI mark

As the proverb goes, your enemy’s enemy is your friend. Pakistan’s Inter-Services Intelligence (ISI) and Sri Lanka’s Liberation Tigers of Tamil Eelam (LTTE), both of which don’t see India as a friend, have now reportedly joined hands to target the coastal zone in Gujarat.

This bourgeoning co-operation among forces inimical to Indian interests is not a new development. The Nepali Maoists are reported to have had links with Indian Maoist extremists, and following the disarming of the former, there are fears that the weapons may find their way to the latter.

The ISI, of course, is an old hand at the art of making such tie-ups with all kinds of extremist and terrorist groups in the neighbourhood. Many cross-border terrorist outfits which operate out of Pakistani territory are said to have been trained and funded by the organisation. An arrangement with the LTTE is of immense mutual value. The Tigers provide the expertise in maritime operations, while the ISI has funds and arms at its disposal.

These funds are critical at a time the LTTE is engaged in a war with the Sri Lankan defence forces. Further, after the US and several other countries banned it as an international terrorist group, one of its primary sources of funds — Tamil supporters settled in western countries — has dried up.

For the ISI, the sensitive Gujarat coast — which forms one-third of India’s coastline and has been a hive of commercial activity of late following the rise in investment in the state — is a soft target.

Reports indicate that several ports in the Jamnagar area, such as Sika and Salaya are being targeted. There are also plans to smuggle arms through the difficult terrain to sleeper cells of militant organisations in the state. Besides several ports and gigantic petrochemical complexes, the coastal zone also has some strategic interests that are vulnerable to terrorist activity.

But the real target, of course, would be the state’s rapid pace of economic development. A few calculated strikes could make the state an unsafe destination for investment, which fits in with the emergent terrorist policy of undermining India’s economic development.

All of which calls for newer thinking on strategies to tackle terrorism. In a vast country like India, there will always be open and easy targets, but areas such as the coast of Gujarat require more surveillance and patrolling to tackle this double menace.

சமூகப் புற்றுநோயை வளர்த்துவிட்ட பாலசிங்கம்

சமூகப் புற்றுநோயை வளர்த்துவிட்டு உடல் புற்றுநோயால் மாண்டுபோன பாலசிங்கம்

- எஸ். மனோரஞ்சன்


"However, when compared to the vast ocean of the collective tragedy faced by my people, my illness is merely a pebble," -Anton Balasingham-



-எவ்வாறாயினும், எனது மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த பெரும் அவலங்களொடு ஒப்பிடுகையில் எனது நோயானது ஒரு வெறும் துரும்பென்றே சொல்ல வேண்டும். - -அன்ரன் பாலசிங்கம்-

ஒரு மாதத்திற்கு முன்னர்; பாலசிங்கம் கடும் சுகயீனமுற்றிருப்பதாக அறிந்து அவரைப் பார்க்கச் சென்ற தமிழ் நெற் ரிப்போட்டர் ஒருவரிடம் பாலசிங்கம் கூறியதாக அந்த இணையத்தளம் நவம்பர் 22ம் திகதி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதுமட்டுமன்றி பாலசிங்கத்திற்கு ஏற்பட்டிருந்த புற்று நோயைப்பற்றியும் அவ் இணையத்தளம் பினவருமாறு எழுதியிருந்தது.

Mr. Anton Balasingham, theoretician and political advisor of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) has been diagnosed with bile duct cancer (cholangiocarcinoma), a rare and aggressive malignancy of the biliary system. The cancer is in an advanced stage and has spread to his liver, lungs, abdomen and bones,

இந்தமோசமான புற்றுநோய் மிக அரிதாகவே வரக்கூடியதென்றும், இந்தப் புற்றுநோயால் அவரது உடலின் மிக முக்கிய பாகங்களான ஈரல், நுரையீரல். வயிற்றுப் பகுதி மற்றும் எலும்பு மச்சைகள் என்பன பாதிக்கப் பட்டிருந்ததாகவுமே இச்செய்தியின் சாராம்சம் குறிப்பிட்டிருந்தது.

பாலசிங்கத்தின் இழப்பு வேறெல்லாரையும் விட வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கே பேரிழப்பாக தெரியும் என்பதில் ஐயமில்லை. ஆனால் புலிகளின் அரசியலை எதிர்ப்பவர்களும் அவரின் இழப்பால் சற்று கவலைப்பட்டுதான் ஆகவேண்டும். காரணம் புலிகளின் பிரதம பேச்சாளரும் மதியுரைஞருமாக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் அடிக்கடி வெளியே உதிர்த்துவிடும் கருத்துக்களால் புலிகளுக்கு ஏற்பட்ட அவமானங்களும் இடைஞ்சல்களும் பலரும் அறிந்ததே.

புலிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் அவ்வாறான கருத்துக்களை அவர் ஏன் எதிர்க்கின்றார் என்று பலரும் தலையைச் சொறிந்து கொண்டனர். ஆனால், பாலசிங்கம் அவற்றை அறியாமல் செய்யவில்லை, அறிந்து வேண்டுமென்றேதான் செய்கின்றார் என்பதுதான் பாலசிங்கத்தை நன்கு அறிந்த பல முன்னாள் புலி ஆதரவாளர்களின் கருத்தாகும்.

தனது புற்றுநோய் பற்றியும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அவலம் பற்றியும் அவர் நோய்ப் படுக்கையில் இருந்து இறுதியாக வெளியிட்ட கருத்துப்பற்றி பிரான்சிலும் கனடாவிலும் வசிக்கும் இரு முன்னாள் தீவிர புலி ஆதரவாளர்கள் என்னிடம் பேசும்போது இப்படிக் கருத்துக்கூறினர்.

-பாலா அண்ணை அந்தக் கதைக்குள்ளையும் ஒரு முக்கிய விசயத்தை நாசூக்;காகச் சொல்ல வருகிறார். அதாவது தமிழ் மக்களைப் பிடித்து ஆட்டுவிக்கும் புலி அரசியல் என்னும் புற்றுநோயும் அதனால் தமிழர்கள் பட்டுவரும் அளவில்லா துன்பங்களுடனும் பார்க்கும்போது தனக்கு பிடித்திருக்கும் நோய் சர்வ சாதாரணமானது - என்பதைத்தான் பாலா அண்ணா கூற முற்படுகின்றார் என்றனர். அவ்விருவரினதம் கருத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தமை எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

பாலசிங்கத்துடன் மிக நெருக்கமாக பழகியவர்களுக்கு அவரின் மனவோட்டம் நன்றாகப் புரிந்திருந்தது. அதேபோலத்தான் பாலசிங்கத்துக்குத்தான் பிரபாகரனின் மனவோட்டமும் மிக நன்றாகப் புரிந்திருந்தது. பிரபாகரனின் சிந்தனைப் போக்கைப்பற்றி பாலசிங்கம் அடிக்கடி பல்வேறு விதமாக பல்வேறு தொனிகளில் கருத்துக்களை வெளியிட்டிருப்பது அவருடன் நெருக்கமானவர்களுக்கே தெரியும்.

பாலசிங்கத்தோடு நீண்டகாலத் தொடர்புகளைக் கொண்டிருந்த முன்னாள் புலி ஆதரவாளர் ஒருவருடன் பேசும்போது, இந்த முடியரசனிட்ட இருந்தும் வெடியரசனிட்ட இருந்தும் தமிழ் சனத்துக்கு இனி விமோசனமில்லை நானாவது கெதியா உவங்களிட்டையிருந்து கழரவேணும் என்றாராம் பாலசிங்கம்.

யார் பாலா அண்ணை முடியரசன்;? யார் வெடியரசன்? என்று மற்றவர் வினவ...

என்னடாப்பா முடியரசனைத் தெரியாதே. அதுதான் எங்கட கட்டைக் குத்தியன்;. வெடியரசன் தான் உந்த நாசமாய்ப்போவான் பொட்டன். அட.. தம்பி இவன் முடியரசனை திருத்தினாலும் திருத்தலாம்போல கிடக்கு. ஆனால் அந்த வெடியரசனோடயெல்லா ஒண்டும் செய்ய ஏலாமக் கிடக்கு. அவன் சுட்டுத்தள்ள நான் எல்லா உலகத்துக்க பதில் சொல்வேணும். இது இந்த முடியரசன் கட்டைக் குத்தியனுக்கும் இது விளங்குதில்லை. அவனுக்கு ஏதாவது சொல்லப்போனா...

ஒண்டுக்கும் யோசியாதையுங்கொ பாலா அண்ணை...எல்லாம் சரிவரும்.. எண்டுபோட்டு ஹீ..ஹீ..என்டு இளிக்கிறான் அந்த மூதேசி... நாய்... என்று பாலா அண்ணை அரை மணித்தியாலமாக தொலைபேசியிலை பொரிந்து தள்ளினராம்.

அன்று பாலா அண்ணை தொலைபேசியில கதைச்சதை அப்பிடியே ரெக்கோட்; பண்ணி வன்னிக்கு அனுப்பினால் அதோட பாலா அண்ணையிட கதை சரியாப் போயிருக்கும். என்றார், அந்த முன்னாள் புலி ஆதரவாளர் என்னிடம். பாலா அண்ணையொடு மிக நெருக்கமாகப் பழகியவர்கள் பலரிடமும் கடந்த காலங்களில் அவர் கூறியவற்றை அவர்கள் இரகசியமாக வைத்திருந்த நல்ல காரியத்தால்தான், பாலா அண்ணை இவ்வளவு காலமும் உயிரோடு இருந்தார் என்று சொன்னாலும் தப்பில்லைதான்.

மற்றொரு சம்பவம்

1990ல் இருந்து 1994வரை யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு பிரேமதாசா அரசு அனுமதி வழங்குவதை நிறுத்தியிருந்தது. ஆனாலும் பல பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தின் கண்களில் மண்ணைத் தூவிவட்டு அங்கு சென்றுவந்தனர். அவ்வாறு சென்ற ஒரு இந்திய தமிழ் பத்திரிகையாளருக்கும் பாலசிங்கத்திற்கும் நடந்த உரையாடல் மிக சுவாரசியமானது.

பாலசிங்கம் இந்தியாவில் இருந்த காலத்திலேயே அப்பத்திரிகையாளரை பாலசிங்கத்திற்கு நன்கு அறிமுகமாதலால் அப்பத்திரிகையாளருக்கு பாலசிங்கத்தின் வீட்டில் இராப்போசன விருந்து வழங்கப்பட்டது. அங்கும் வழமைபோல் பாலசிங்கம் தனது பிளாக் அன்ட் வைற் விஸ்கியை உடைத்துப் பரிமாறினார். பாலா அண்ணருக்கு ஓரிரு சுற்று விஸ்கி தாராளமாக உள்ளே இறங்கியதும் பத்திரிகையாளர்; பாலசிங்கத்திடம் இப்படிக் கேட்டார்.

ஆமா இப்பிடியே தொடர்ந்து யுத்தத்தை புடிச்சிக்கிட்டிருந்து ஒங்க தலைவர்; என்னதான் பண்ணப்போறாரு..மக்கள்தானே அதிகமா அழிஞ்சு போறாங்க...எனக்குன்னா ஓங்க தலைவரு என்னா சிந்திக்கிறாரன்னெ புரியமாட்டேங்குது.. என்றார்.

உடனே பாலா அண்ணர்; இடை மறித்து அடேயப்பா...அவர் மற்றவைக்குத்தான் தலைவர் எனக்கொண்டும் தலைவரில்லை நானில்லாட்டி இம்மட்டுக்கு அவர் எப்பவோ சரி. அதைவிடு... என்ன சொன்னீர் உமக்கு அவர் என்ன யோசிக்கிறார் என்றே விளங்க இல்லையோ..? அடே தம்பி... அவனோட 15 வருசத்துக்கு; மேல ஒண்டா இருக்கிற எனக்கே அவன் எந்த நேரம் என்ன செய்வான் எண்டு விளங்குதில்லை. உனக்கென்ணென்டு விளங்கிறது? என்றாராம்.

அதில்லீங்க மிஸ்டர்; பாலா... இந்தியாவையும் எதிர்த்துக்கிட்டு... உலக நாடுகளிட்டையும் கெட்ட பேர்; எடுத்திக்கிட:டு எப்பிடி ஒரு போராட்டம் வெற்றி பெறப்போவுது. யாராவது ஒருத்தரோட நட்பா இருக்க வேணாமா? என்றார் பத்திரிகையாளர்.

அட நீர் ஒண்டப்பா... காட்ட மிருகங்களை பற்றி படிச்சிருக்கிறீரா? எல்லா மிருகமும் ஏதாவது ஒன்றுடன் சேர்ந்துதான் வாழும். இந்தப் புலி இருக்குதே அது மட்டும் எப்பவும் தனியாத்தான் வாழ்க்கை நடத்தும். அதவேறந்த மிருகத்தையும் நம்பாது. அதை நம்பி வேறெந்த மிருகமும் கிட்டவும் வராது. அதமாதிரித்தான் இவங்களும்...என்றார் பாலசிங்கம்.

அப்பிடீன்னா இவங்கள நம்பி யார்தான் உதவி பண்ணப் போறாங்க. இந்தப் போராட்டம் என்னாகிறது? என்ற கேட்டார் பத்திரிகையாளர்.

இவங்களை நானே நம்பிறதில்லை...வேற யார் நம்புவான் சொல்லு பாப்பம். அட தம்பி நாங்கள் பிரேமதாசாவோட கதைச்சுக் கொண்டிருக்கிறம். அவரோட போய் கதைக்கச் சொன்னவனும் இவன்தான்.ஆனால் நாங்கள் முக்கியமான 6,7 பேர் அங்க கொழும்பில நிக்கையிக்க இவன் சண்டையை துவக்கி விட்டிட்டான். அண்டைக்கு அமைச்சர் ஹமீட் இல்லாட்டி நாங்கள் துலைஞ்சிருப்பம். இவனை நம்பேலாது தம்பி... என்று பாலசிங்கம் சொல்வதை பரிதாபமாக கேட்டவிட்டு அந்த பத்திரிகையாளர் திரும்பி வந்தார்.

இதெல்லாம் எதைக் காட்டுகின்றது? பாலசிங்கம் ஒன்றும் விளங்காமல் புலிகளோடும் பிரபாகரனோடும் இருந்தவரல்ல. நன்றாக எல்லாவற்றையம் தெரிந்து கொண்டு புலிகளின் சகல நாசகார அரசியலுக்கும் துணைபோனதுடன் அந்த நாசகார அரசியலை நியாயப்படுத்தி வந்தவர் என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். ஆகவே தமிழ் சமுகத்தைப் பீடித்திருக்கும் புலி அரசியல் என்னும் சமூகப் புற்றுநோயினால் தமிழ் மக்கள் படும் அவஸ்தைக்கு அவரும் பிரதான காரணகர்த்தாவாகும்.

பாலசிங்கம் பற்றி பழைய கதையொன்று

பாலா அண்ணர் என்கின்ற பாலசிங்கம் மதியுரைஞர் என்ற இந்த நிலைக்கு உயருவதற்குள் சந்தித்த சோதனைகள் பல. அவர் ஒரு சிறுநீரகத்தை இழந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் யாவரும் அறிந்த சோதனை@ அறியாத சோதனைகள் பல. அவற்றில் சில மிகச் சுவாரசியமானவை.

1985ம் ஆண்டு சென்னை வடபழனியில் ENLF என்று அழைக்கப்படும் ஈழதேசிய விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் திம்புப் பேச்சு வார்த்தைகளுக்கு போவதற்கு சில நாட்களுக்கு முன் இது நடந்தது. ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்களையும் இலங்கை அரசையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர இந்தியா முயன்று, இறுதியில் திம்பு மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கு போவதா விடுவதா என்பதில் ஆயுதமேந்திய தலைவர்களுக்குள் இழுபறி நடந்தது.

இச் சம்பவம் நடந்த அன்று திம்பு மாநாட்டுக்கு போவது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு நான்கு இயக்க தலைவர்களும் அங்கு கூட சம்மதித்து இருந்தனர். சிறீ சபாரத்தினம், பாலகுமார், பத்மநாபா ஆகிய மூவரும் தத்தமது இயக்கங்களின் முடிவுகளுடன் வந்திருந்தனர். அவர்கள் மூவரும் திம்பு பேச்சுக்கு போவது ~சரி| என்ற முடிவுடன் வந்திருந்தனர். அங்கிள் பாலாவும் தம்பி பிரபாகரனும் சற்று நேரம் தாமதித்தே அங்கு வந்தனர்.

எல்லோரும் அவரின் முடிவை சொல்லும்படி கேட்டனர். தம்பி பிரபாகரன் கூறியது இதுதான் நான் இப்பொழுதுதான் எனது பிள்ளையின் தலையில் (சார்ள்ஸ் அன்ரனி) பிஸ்டலை வைத்து சத்தியம் பண்ணிவிட்டு வருகிறேன். எனக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இல்லை. நான் இந்த மாநாட்டுக்கு வரப்போவது இல்லை. என்ற முடிவை சொன்னார். உடனே சிறீ சபாரத்தினமும் தம்பி போகா விட்டால் நானும் போகப்போவது இல்லை என்றார். இதைச் சொன்னதும் சகலருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

அடுத்ததாக பத்மநாபாவும், தம்பியும் சிறியும் போகாவிட்டால் நானும் போகவில்லை என்றவுடன் பாலகுமார் சற்று கொதித்துப் போனார். அவர் சிறீ சபாரத்தினத்தையும் பத்மநாபாவையும் நோக்கி பொறுப்பு இல்லாமல் பேசாதீர்கள். நீங்கள் இருவரும் இவ்வளவு நேரமும் போவதாகவே தீர்மானித்தீர்கள், இப்போது உங்கள் நிலையை மாற்றிக் கொள்கிறீர்கள். போகாவிட்டால் வரும் விளைவு உங்களுக்கு தெரியுமா? என்று இரைய ஆரம்பித்தார்.

தொடர்ந்து சகலரும் தம்பி பிரபாகரனுக்கு நிலைமையை விளக்கி, அவரை சம்மதிக்க வைக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார்கள். இப்போது பாலா அண்ணர் பேசத் தொடங்கினார். தம்பி, இவையள் எல்லாரும் சொல்லுறதைப் பார்த்தால் நாங்கள் போகாமல் விடுவது சரியில்லை. நாங்கள் எல்லாருமாக திம்புவுக்கு போய் சில கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துவிட்டு வருவோம் என மதியுரை வழங்க முயற்சித்தார்.

உடனே வெகுண்டெழுந்த தம்பி பாலா அண்ணை தயவு செய்து வாயை மூடிக்கொண்டு இருங்N;கா என்ர தீர்மானத்தை சொல்லத்தான் உங்களை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன். இங்கே வந்து நீங்கள் நினைத்ததை பேச முடியாது. உங்களைப்போல எத்தனை பேரையும் நான் விலைக்கு வாங்குவேன். என்று கண்களில் கோபம் கொப்பளிக்க கர்ச்சித்தார். தம்பியின் கை அவரை அறியாமலே இடுப்பை நோக்கி போய்வந்ததை அவதானித்த பாலசிங்கம் ஒருமுறை வெலவெலத்துப் போனாராம்.

அசடு வழிய பத்மநாபாவையும் சிறீ சபாரட்ணத்தையும் பாலகுமாரையும் பார்த்த பாலா அண்ணர் நாய்க்குட்டிபோல் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார். மறுநாள் பாலா அண்ணரைக் கதைத்து சமாதானப் படுத்தி மீண்டும் சகலரும் ஒற்றுமையாக திம்பு பேச்சு வார்த்தைக்கு போகும் விடயத்தை மேற்கொள்வதற்காக பத்மநாபா பாலசிங்கத்தைச் சந்திக்க சென்றார். கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் சென்னையில் ஒரு தொங்கலிலிருந்த கோடாம்பாக்கத்திலிருந்து மறு தொங்கலிலிருந்த அடையாறை நோக்கி தன் சக தோழர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் போய்ச் சேர்ந்தார் பத்மநாபா.

பாலா அண்ணரும் ஆன்டி அடேலும் பத்மநாபாவை இன்முகத்தோடு வரவேற்றனர். அங்கிள் பாலா வழமைபோல் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க தனக்கு பிடித்தமான கறுப்பு வெள்ளை நாய்க்குட்டி போட்ட விஸ்கியை சுவைத்த வண்ணம் வாரும் நாபா உம்மட்ட கதைக்க வேண்டும் எண்டுதான் இருக்கிறன் என்று பீடிகையோடு உமக்கும் ஒரு பியர் தரட்டே என்றார். புத்மநாபா அதை மறுத்ததுடன் சொல்லுங்கோ அண்ணை என்று பாலசிங்கத்தின் கதையை கேட்க ஆரம்பித்தார்.

Bloody uneducated Barbarian என்று எடுத்த எடுப்பிலெயே பெரும் தொனியில் ஆரம்பித்த பாலா அண்ணர் மூதேசிக்குத் தமிழும் ஒழுங்காகத் தெரியாது, இங்கிலீசும் தெரியாது, இங்கிலிஸ் தெரிஞ்சவனையும் பக்கத்தில வைச்சிருக்கத் தெரியாது, நாலு அரசியல் விசயம் தெரியாது... விசரன் எதுக்கு எடுத்தாலும் பிஸ்டலை தூக்கிறது. இவனோட எப்பிடித் தம்பி எப்படிக் காலந்தள்ளுறது? என்று வானத்திற்கும் ப+மிக்கும் குதிக்கத் தொடங்கினார் பாலா அண்ணை.

அனரறி அடேலும் பத்மநாபாவும் எவ்வளவோ சொல்லியும் பாலா அண்ணரை கட்டுப்படுத்த முடியவில்லை. விடு என்னை! இந்த மோடனையும் அவனுடைய இயக்கத்தையும் துலைத்துக் கட்டிட்டு வாறன் என்ற கணக்கில பாலா அண்ணர் உருத்ர தாண்டவத்தில் நின்றாராம். பின்னர் இரண்டு கிளாஸ் விஸ்கியை தொண்டைக்குள் வார்த்து வாய் நாற்றத்தை பத்மநாபாவின் முகத்துக்கு நேரே ஊதிய பின்னர்தான் அங்கிள் பாலா சாந்தி அடைந்தார், என்ற உண்மை முதலில் தம்பி பிரபாகரனுக்கு உடனே தெரியவில்லையாம். ஆனால் அங்கு பாலா அண்ணருக்கும் அடேல் அனரிக்கும் தெரியாமல் அவர் வீட்டில் உளவுக்காக விடப்படடிருந்த சிறுவன் மூலமாகவும் அவரது வீட்டில் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒட்டுக் கேட்கும்; கருவிகள் மூலமும் தம்பிக்கு விபரம் தெரிந்துபோய் விட்டதாம் என்று பின்னர்தான் பாலா அண்ணருக்கே தெரியுமாம்.

இவற்றிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியது என்ன? மற்றவர்களுக்கு காட்டுவதற்கு பாலா அண்ணை என்ன துள்ளுத் துள்ளினாலும் பிரபாகரன் என்னும் கொலைகாரப் பேர்வழிக்கு முன்னால் அவர்; நக்கிப் பிழைக்கும் நாய்தான். தனது பதவி என்னும் எலும்புத் துண்டுக்காக எல்லாம் தெரிந்துகொண்டும்; ஒரு கொலைகாரக் கும்பலோடு கூடிவாழந்து, தமிழ் சமூகத்தில் இருந்த கொஞ்சநஞ்ச நல்ல அம்சங்களையும் கருவறுத்த குற்றவாளிதான் பாலசிங்கம். அதற்குமேல் வேறொன்றுமில்லை.

பிரபாகரனின் தாளத்திற்கே ஆடிய பாலசிங்கம்

இந்த வருடத் தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவாhத்தைக்கு சென்ற பாலசிங்கம் இப்படிக் கூறினார். We will kill. That is our job...... புலிகள் அமைப்புக்குள் உள்ள மிதவாதியாக பாலசிங்கத்தைக் கருதிய நோர்வே உட்பட பலருக்கும்கூட இது பேரதிர்ச்சியாக இருந்திருக்கலாம். பாலசிங்கத்தின் இந்த தெருச்சண்டித்தனப் பேச்சும் குணமும்தான் பாலசிங்கத்தின் உண்மையான முகம் என்பது பலருக்குத் தெரியாது. அதுதான் அவரை இவ்வளவு காலமும் பிரபாகரனோடும் அவரின் புலிக்குணத்தோடும் சேர்ந்திருக்கவும் வைத்தது. ஒருவரை சீண்டிவிட்டால்தான் அவரின் உண்மையான குணம் வெளிப்படும் என்பார்களே அதுபோலத்தான். பாலசிங்கத்தை சற்று சீண்டி விட்டால் அவர் தன் சுய உருவத்தைக் காட்டி நிற்பார்.

பாலசிங்கத்தின் மரணம் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு பாரிய இழப்பு என்று நோர்வேயும் ஏனைய பலரும் கூறியிருப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பாலசிங்கம் உண்மையிலேயே புலிகள் அமைப்புக்குள்ளிருந்த மென்போக்காளர் அல்லது மிதவாதிதானா? அவர் உயிருடன் இருந்திருந்தால் பிரபாகரனையும் புலிகள் இயக்கத்தையும் அர்த்தமுள்ள சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவைத்திருக்க முடிந்திருக்குமா? என்னும் கேள்விகளெல்லாம் ஒன்றும் விடைகாணப்பட முடியாதவைகள் அல்ல.

கடந்த காலங்களில் பிரபாகரனும் புலிகள் இயக்கமும் மேற்கொண்ட எந்தவொரு மோசமானதும் தவறானதுமான செய்கையையும் பாலசிங்கத்தால் மதியுரைஞர் என்ற வகையில் நிறுத்திவிடவோ தடுத்துவிடவோ முடியவில்லை. காரணம் பிரபாகரன் பாலசிங்கத்தை கேட்டு எதுவும் செய்வதுமில்லை அவருக்கு சொல்லிவிட்டு எதுவும் செய்வதுமில்லை. செய்து முடித்ததன் பின்னர் அதை நியாயப் படுத்துவதும், அதற்கு அர்த்தம் கற்பிப்பதும், அதற்கு வெள்ளைச் சாயம் பூசுவதும் மட்டும்தான் பால சிங்கத்தின் மதியுரைஞர் பணி. அதற்கு மேல் வேறொன்றுமில்லை.

ஆகவே பாலசிங்கத்தின் மரணம் என்பது நோர்வேயைப் பொறுத்தவரையும், தமிழ் மக்களை புலிகளின் கைகளில் காவுகொடுத்து பிரச்சினையைத் தீர்;க்க வகை செய்பவர்களுக்கும் பேரிழப்பாகத் தெரியலாம். ஆனால் தமிழரின் விமோசனத்திற்கான பாதையில் புலிகளும் அவர்களின் அரசியல் ஆதிக்கமும் தோற்கடிக்கபடும் அவசியத்துடன் நோக்கும்போது, பாலசிங்கத்தின் மரணம் இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு பெரும் வரப்பிரசாதமே.

தனது பதவிக்காகவும் புகழுக்காகவுமே பாலசிங்கம் சகலதையும் செய்தார். எந்தவொரு கட்டத்திலும் பிரபாகரனையோ புலிகளின் அரசியலையோ விமர்சிக்கும் நோக்கம் அவருக்கு இருக்கவும் இல்லை அதற்கான முதுகெலும்பும் அவருக்கு இருந்ததில்லை. சாதாரண தமிழில் சொன்னால் பாலசிங்கம் ஒரு நசிஞ்ச கள்ளன். பிரபாகரனின் தாளத்திற்கு ஆடி தனது பதவியை தக்க வைத்துக் கொண்டதே அவரது 30 வருட தமிழ் அரசியல் பணி. மதியுரைஞரின் விதி தமிழ் மக்களுக்கு விமோசனமா அல்லது சர்வநாசமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும.

பாலசிங்கம் எப்போதுமே பிரபாகரனின் ஆதிக்கத்தின் கீழ் மட்டும்தான் இருந்தாரா? அல்லது அவரை ஆட்டுவித்த வேறு சில சக்திகள் இருந்தனவா? அவர்களின் தேவைகளுக்கேற்றபடியும் பாலசிங்கம் ஆடினாரா. புலிகள் இயக்கத்தை ஆட்டுவிக்க முயற்சித்தாரா? அதனால்தான் பிரபாகரனை வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருந்தாரா? போன்ற கேள்விகளும் கடந்த காலத்தில் அவ்வப்போது எழுப்பப்பட்டன. இதுதொடர்பான விடயங்களை மற்றுமொரு கட்டுரையில் பார்ப்போம்.

from http://www.thenee.com/html/161206.html

பாலா அண்ணையின் இழப்பு தமிழ்மக்களைப் பாதிக்குமா?

பிரபாகரனின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் இழப்பு தமிழ் மக்களைப்பாதிக்குமா கேட்டால் இல்லை என்பது தான் நிஜமான பதில். பாலசிங்கத்தால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது என்று யாராவது கூற முடியுமா?

பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் என்று கூறப்பட்டாலும் பிரபாகரனுக்குக் கீழ்ப்படிந்தே பாலசிங்கம் வாழ்ந்தார். பிரபாகரனின் மனிதப் படுகொலைகளை நிறுத்தச்சொல்லி பாலசிங்கத்தால் பிரபாகரனுக்கு ஆலோசனை சொல்ல முடியவில்லை. பாலசிங்கம் சிறந்த அரசியல் ஆலோசகராகவும் பிரபாகரன் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கும் பக்குவம் கொண்ட சிறந்த போராட்டத் லைவனாகவும் இருந்திருந்தால் புலி இயக்கத்திற்கு பயங்கரவாதி பட்டம் கிடைத்திருக்குமா? பாலாஅண்ணை நான் சொல்லுவதைத்
தான் நீ சொல்ல வேண்டும் என்று பிரபாகரனால் எச்சரிக்கப்பட்டவர் பாலசிங்கம். மாற்று இயக்கங்கள் அழிக்கப்பட்டபோது அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டபோது குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என்று பாரமல் பிரபாகரனால் அழிக்கப்பட்டபோது பாலசிங்கம் எப்படிப்பட்ட ஆலோசனையை பிரபாகரனுக்குக் கூறினார். லண்டனில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பாலசிங்கத்தின் பேச்சுக்கள் எவ்வளவு அசிங்கமாக ஆபாசமாக வக்கிரமானதாக பெண்களை இழிவு படுத்துவதாக இருந்தது என்ற அவரது பேச்சினைக் கேட்டவர்களுக்குத் தெரியும். ஆனந்தசங்கரி ஐயாவைக் காட்டுங்கோ அவரை ஒருக்காக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சவேணும்.

அவர் கிளிநொச்சிக்குப் போகலாம். பொட்டம்மான் பைவ் ஸ்ரார் ஹொட்டல் கட்டி வைத்திருக்கிறார். அங்கு போனால் நல்லா சாப்பிடலாம் என்று வக்கிரமாகப் பேசி விசிலடிச்சான் விசர்க்கூட்டத்தை மகிழ்வித்தவர். பிரபாகரன் இந்தியப்படையுடன் போரை ஆரம்பித்தபோது பிரபாகரனுக்க விசர் என்று கூறிக்கொண்டு வள்ளமேறி இந்தியாவிற்கு ஓடியவர்.
பாலாண்ணைக்கு தேசத்தின் குரல் என்ற பட்டம் புலித்தலைவர் பங்கருக்குள் இருந்து கொண்டு வழங்கியிருக்கிருக்கிறாராம். இறந்த பிறகு பட்டம் கொடுப்பது ஒன்று மட்டும் தான் புலித்தலைவருக்குத் தெரிந்த விசயம். தமிழ் மக்களை மனதாரர நேசித்து தமிழ் மண்ணிலேயே வாழ்ந்தவர்கள் பலர் புலிகளால் கொல்லப்பட்டார்கள். லண்டனில் வசித்த ராஜினி திராணகம தனது வெளிநாட்டு வாழ்க்கையை ஓதுக்கித்தள்ளி விட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சேவை செய்து கொண்டிருந்தார். புலிகளால் கொல்லப்பட்ட கல்விமான்கள் நீலன் திருச்செல்வம் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் சிவபாலன் ஆனந்தராஜா ஞானச்சந்திரன் பஞசலிங்கம் இராசதுரை சிவகடாட்சம் என்று புலிகளால் கொல்லப்பட்டவர்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட ஈனஇரக்கமற்ற கொலைகாரன் பிரபாகரனின் ஆலோசகர் என்று கூறப்படுபவரை தமிழ் மக்களை நேசித்தவர் என்று கூறுபவர்கள் முட்டாள்கள். தனது சுயலாபங்களுக்காகத்தான் பாலசிங்கம் பிரபாகரன் பின்னால் நின்றவர் என்பதுதான் உண்மை பிரபாகரன் என்கின்ற இரத்தக் காட்டேரிக்கு இவர் ஆலோசகர் என்றால் இவரின் இழப்பால் தமிழ் மக்களுக்கு எந்த நடமுமில்லை.

அதற்காக நாம் ஒருவரின் மரணத்தில் மகிழ்பவர்களுமல்ல.

http://www.eelanaasam.com/

தமிழனின் தலையெழுத்து புழுகன் சூனா.பானாவின் கையில்

ஏ-9 சூனா.பானா வின் கோலுக்குச் சமன்.
யாழ்ப்பாணத் தமிழனின் தலையெழுத்து புழுகன் சூனா.பானாவின் கையில்


Demo crazy in Kilinochi :-கிழம்பரிதி

அரசாங்கம் நானூறு லொறிகளில் உணவுப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பத் தயார்.

ஆனால் சூனா.பானா மறுப்பு. மக்களை அரசாங்கம் பட்டிணி போடுகிறது என்று நீலிக்கண்ணீர்வடிக்கும் வேலுப்பிள்ளையின் மகனும். சுப்பன் பரமுவின் மகனும் தமிழ் மக்களின் அன்றாடவாழ்க்கைக்கு மிகவும் இடையூறாக உள்ளார்கள். மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்ப இரண்டு கிரிமினல்களை கெஞ்சக்கூட முடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளார்கள். புழுகன் சூனா.பானாவின் சுயருபத்தை தமிழ் மக்கள் உணரவேண்டும். துப்பாக்கிகள் மட்டும் இல்லை யேல் சூனா.பானா தன்னுடைய கோலைத் தூக்கிக்கொண்டு ஓடக்கூட முடியாது. இடுப்பில் பிஸ்ரல் இன்றி வேலுப்பிள்ளையின் மகனுக்கு தனது பிறந்த நாளுரையைக்கூட வாசிக்க முடியவில்லை. புலிகள் கட்டாயக் கொட்டன் பயிற்சி கொடுத்த தமிழ் மக்கள் கொட்டன்களுடன் காத்திருக்கிறார்கள். இராணுவத்தை அடிக்கவல்ல. புலிகளின் துப்பாக்கிகள் செயலிழக்கும் பட்சத்தில் தமிழ் மக்களின் விளக்குமாறுகளும் கொட்டன்களும் இயங்கும் .சூனா.பானாவோ வேலுப்பிள்ளையின் மகனோ வேறு எந்த நாட்டில் கூட சென்று வாழ முடியாது.

தமிழ் மக்கள் பொறுமையின் விளிம்பில் இருக்கிறார்கள். சூனா. பானா சிரித்துக் கொண்டே தனது கோலைப் பிடித்துக் கொண்டே ஓட வேண்டிய நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வடக்கு கிழக்கு வேலுப்பிள்ளையின் மகனுக்கோ சூனா. பானாவிற்கோ முதிசமா? தமிழ்மக்களின் கப்பத்தில் உப்பி வீங்கிக் கொண்டிருக்கும் வேலுப்பிள்ளையின் மகன் தமிழ்மக்களிற்குச் செல்லும் உணவைத் தடுத்து பட்டிணி போடுவது நியாயமா?

பயங்கரவாதத்துடன் நெருங்கிய பெயர் அன்ரன் பாலசிங்கம்

கொலைகளையும் வன்முறைகளையும் நியாயப்படுத்திய ஒரு மனிதனின் மரணம் மக்களின் இழப்பாகக் கொள்ள முடியாது

-சத்திரியன்


இந்த நாட்டில் பயங்கரவாதத்துடன் மிகவும் நெருங்கிய பிரபலமான பெயர் தான் அன்ரன் பாலசிங்கம் என்பது. அரசாங்கத்திற்கும் புலிகள் அமைப்புக்குமிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் இயக்கத்தின் அரசியல் நியாயவாதி என்ற பெயரில் அறிமுகமான அன்ரன் பாலசிங்கம் தற்போது சுமார் 43வருடங்களுக்கு முன் ஸ்ரீலங்காவிலிருந்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்பாளராக சேர்ந்து பணி புரிந்தவர். அப்பொழுது இவருடைய பெயர் எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்பதாகும். பிற்காலத்தில் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று இவர் இங்கிலாந்தில் குடியேறிய பின்னரே எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்ற தனது சொந்தப் பெயரை அன்ரன் பாலசிங்கம் என மாற்றியமைத்துக் கொண்டு புலிகள் இயக்கத்தின் நியாயவாதியாக எவ்வாறு மாறினார் என்பது பற்றி எவரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

பிரித்தானிய தூதரகம் கொள்ளுப்பிட்டிக்கு 1963 ஆம் ஆண்டில் மாற்றப்பட்ட பின்னரே எஸ்.பி. ஸ்ரனிஸ்லொஸ் என்னும் பெயரில் ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்பாளராக இந்த அன்ரன் பாலசிங்கம் நியமிக்கப்பட்டார். இவர் வீரகேசரி செய்திப் பத்திரிகையின் செயலகத்திலிருந்து தான் இவ்வாறு பிரிட்டிஷ் தூதரக சேவையில் சேர்ந்துள்ளார். பின்னர் 1972ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வசிப்பதற்காக சென்றார். பாலசிங்கம் எந்தவித விசாப் பிரச்சினையுமின்றி பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்தார். அதன்பின்பு அவர் லண்டனிலுள்ள south bank சர்வகலாசாலையில் படித்தார். அவர் அங்கு தனது கலாநிதிப் பட்டத்திற்கான கட்டுரையாகத் Theory of man என்ற கட்டுரையைச் சமர்ப்பித்தார். இந்தக்கட்டுரைக்காக அவருக்கு கலாநிதிப்பட்டம் கிடைத்தது பற்றி எதுவித தகவலும் இல்லை. லண்டனில் வாழ்ந்த தமிழ் இளைஞர்களுடனான தொடர்பில் பாலசிங்கம் Tamilnations self determination என்ற ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டார். அந்த ஆங்கிலப் புத்தகத்தை அடியொற்றியே அன்று வெளிவந்த சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி; என்ற புத்தகம் வெளிவந்தது. அந்தப் புத்தகத்தை இலங்கைக்கு கொண்டுவர உதவியவர் கிருஷ்ணனாகும் . கிருஷ்ணனுக்கு அன்றைய தமிழர்விடுதலைக் கூட்டணியின் கொழம்புக்கிளைச் செயலாளராக இருந்த உமாமகேஸ்வரனோடு தொடர்புகள் இருந்தது. உமாமகேஸ்வரனே அன்று புலி இயக்கத்தின் சர்வதேசத் தொடர்புகளுக்குப் பொறுப்பாக இருந்தவராகும். சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி புத்தகம் வெளிவந்த பிறகு திரு உமாமகேஸ்வரன பாலசிங்கத்தை ஒரு தடவை இந்தியாவுக்கு வரும்படி கேட்டிருந்ததோடு அவரது பயணத்துக்கான விமானப் பயணச்சீட்டையும் அனுப்பியிருந்தார்

80களில் புலிகளிலிருந்து உமாமகேஸ்வரன் வெளியேறி புளொட் இயக்கத்தை ஆரம்பித்திருந்தார். உமாமகேஸ்வரன் பிரபாகரன் பிளவு பற்றித்தெரியாத பாலசிங்கம் உமாமகேஸ்வரனைச் சந்திக்கச் சென்றிருந்தார். சென்னைக்கு வந்திருந்த பாலசிங்கம் ஏற்கனவே உமாமகேஸ்வரன் கொடுத்த விலாசத்திற்குச் சென்றபொழுது அங்கே உமாமகேஸ்வரன் இருக்கவில்லை. பிரபாகரன்தான்; இருந்தார். பிரபாகரனுடனான சந்திப்பின் பின் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக மாறிய பாலசிங்கம் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தையும் நியாயப்படுத்தி வந்தார்.

நியாயப்படுத்தமுடியாத புலிகளின் கொடுரம் நிறைந்த கிறுக்குத்தனத்தை நியாயப்படுத்துவதற்கு பாலசிங்கம் தனது வாழ்நாள் முழுவதும் போராடி வந்திருக்கிறார். ஆனால் நிலமைகளின் பரிணாம வளர்ச்சியில் புலிகளுக்கு எந்தவொரு விடயமும் சாதகமாக பின்னர் சாதகமாக அமையவில்லை. சர்வதேச அபிப்பிராயம் புலிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் பொழுது பதில் சொல்லவேண்டிய பாலசிங்கம் மரணத்தினூடாக தப்பிச்சென்றுள்ளார். புலி போன்ற ஒரு பாசிச அமைப்பின் அரசியல் ஆலோசகராக தனது வாழ்நாளின் பின்பகுதியில் இருந்ததை தவிர தமிழ்மக்களுக்காக பாலசிங்கம் எந்தக்காலகட்டத்திலும் கவலை கொண்டவரல்ல.மாவீரர் தின உரைகளின் போது பாலசிங்கம் பேசிய பேச்சுக்கள் அருவருக்கத்தக்கவை. கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவை. விசில் அடிக்கின்ற கும்பல்களை அவர் ரசித்தார். இந்தக் கும்பல்கள் எந்தவிதத்திலும் சிந்திக்கும் நோக்கில் அவர் உரை நிகழ்த்தியதில்லை. இந்தக்கும்பல்கள்தான் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்ற சக்திகளாக புலம்பெயர்நாடுகளில் இருந்து வருகின்றன. எல்லாவிதமான பலவீனங்களையும் புலிகள் அமைப்பிற்கு சாதகமாக பயன்படுத்துவதில் அரசியல் நாணயத்தில் மிகவும் பலவீனப்பட்டுப்போன பாலசிங்கம் இறுதியாக புலிகள் அமைப்பை சர்வதே அளவில் பயங்கரவாத அமைப்பாக பல நாடுகள் தடைகளை விதித்தபோது எதுவும் செய்ய முடியாத நிலையில் லண்டனில் இறுதிக்காலத்தில் வாழ்ந்தார். புலிகள் அமைப்பு ஒவ்வொரு தடவையும் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது தனது கொள்கைகளில் இருந்து குத்துக்கரணம் அடித்துக்கொண்டதற்கும் பாலசிங்கத்தின் ஆலோசனைகளே முக்கிய காரணமாக அமைந்தன. பொய்களையும் வீராப்புகளையும் புலிகளின் அரசியலுக்கு முலதனமாக இட்ட பாலசிங்கம் இறுதியில் சர்வதேச அபிப்பிராயங்களில் இருந்து பலிகளை காப்பாற்ற முடியாமல் திணறிப்போனார். புலிகளோடு வாழ்ந்த ஒவ்வொரு காலகட்டங்களிலும் புதிய புதிய தவறுகளை பாலசிங்கம் செய்து கொண்டிருந்தார். வன்னியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் தமது தவறுகளை துன்பியல் சம்பவங்களாக பாலசிங்கம் புலிகளுக்காக மன்னிப்புக் கேட்ட பின்னரும் புலிகள் தமது வன்முறைகளை விடவில்லை.

புலிகளின் இன்றைய வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது. ஒரு பாசிச அமைப்பின் அழிவு இராணுவ அழிவினூடாக துரிதப்படுத்தப்படும். வடக்கிலும் கிழக்கிலும் ஒரு இராணுவ வெற்றியை ஏற்படுத்த முடியாத பலவீனமான ஒரு அமைப்பாக புலிகள் தேய்ந்து போயுள்ளார்கள். புலிகளின் கடந்தகால தந்திரோபாயங்கள் காலாவதியாகி விட்டன. புலிகளின் வீழ்ச்சியிலிருந்து புலிகளைப் பாதுகாப்பதற்கு இனி யாரும் முன்வரப்போவதில்லை. விடுதலையின் பெயரால் கொலைகளையும் வன்முறைகளையும் நியாயப்படுத்திய ஒரு மனிதனின் மரணம் மக்களின் இழப்பாகக் கொள்ள முடியாது. பாலசிங்கத்தின் மரணமும் இதுபோன்றதுதான்.

இளையதம்பி இரத்தினசபாபதி அவர்கள் மறைவு

தமிழர்கள் மத்தியில் மாற்று அரசியலின் முன்னோடிகளில் ஒருவர்

ஈழத்தமிழர் சமூகத்தில் இளையதம்பி இரத்தினசபாபதி அவர்கள் மாற்று அரசியலின் முன்னோடிகளில் ஒருவா.; ;தமிழர்களின் போராட்டம் என்பது குறுந்தேசியவாதமாக அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரவினரை அணிதிரட்டியதாகவும், சர்வதேச விடுதலை இயக்கங்கள், சோசலிசமுகாமின் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்றும் அவர் கருதியிருந்தார். தேசியஒடுக்குமுறைக்கெதிரான போராட்டமாக மாத்திரமல்லாமல் சோசலிசத்தை நோக்கியதாக இப்போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதை அவர் வலியுறுத்தி நின்றார்.அதன் பொருட்டு அவர் கருதிய ஈழப்புரட்;;சி அமைப்பின் ஸ்தாபகரானார்.

அவர் மலையகத்தோட்டத்தொழிலாளர்கள், வடக்கு- கிழக்கில் தொழிலாளர் விவசாயிகள் அணிதிரட்டப்படவேண்டும். அவர்கள் தான் தலைமையேற்க வேண்டும் என்பதும் அவரது கருத்தாக இருந்தது. 'பருத்தித்துறைமுதல் பதுளைவரை மன்னார் முதல் மட்டக்களப்பு வரை பொத்துவில் அடங்கலான பிரதேசத்தில் சமத்துவ சமதர்ம ஈழத்தை நிலைநாட்டுவோம,; நாம் ஈழவர் நமது மொழி தமிழ், நமது நாடு ஈழம"; இக்கோசம் இன்று பொருத்தப்;பாடில்லாததும் யதார்த்தத்திற்கும் முரண் என்பதுமே உண்மையாகும் என்பது வரலாற்றால் உணர்த்தப்பட்டுள்ளது. இந்த சுலோகத்தில் பிற்காலகட்டத்தில் இரட்ணசபாபதி அவர்கள் நம்பிக்கை உடையவராக இருந்திருக்கமாட்டார் . ஆனால் சாதாரணமக்களின் அரசியல் பொருளாதார உரிமைகள் தொடர்பான அவரது கரிசனை இங்கு கவனத்திற்குரியது. பாலஸ்தீனவிடுதலைக்கான பிரபலமுன்னணியின் பாசறையில் தோழர் பத்மநாபா உட்பட சகதோழர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டவர் . உலகளாவிய ஒடுக்குமுறைக்கெதிரான விடுதலை இயக்கங்கள், சோசலிசநாடுகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்தியா இவற்றில் அவர் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

மக்களை அணிதிரட்டி முன்னெடுத்துச் செல்லவேண்டிய அரசியல் பற்றி அவர் வலியுறுத்தியருந்திருக்கிறார். ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பூட்டானிலும் இந்தியாவிலும் நடைபெற்றபேச்சுவார்த்தைகளில் பங்கு பற்றியருக்கிறார். 'ஈழவர் இடர்தீர" என்று பின்னர் தர்க்கீகம் வெளியீடாக வந்த கைநூலில் ரட்ணசபாபதி அவர்களின் கருத்துக்களை நாம் அவதானிக்கமுடியும். தமிழ் குறுந்தேசியவெறியினுள் சிக்கி விடாமல் மாற்று பாதை ஒன்று உருவாகுவத்தில் திரு இரட்ணசபாபதி அவர்கள் தனது ஆரம்பநாட்களில் 1970களின் நடுப்பகுதி தொடக்கம் 1970களின் இறுதிவரை பங்களித்திருக்கிறார். மக்களை முன்னிறுத்திய அரசியலையே அப்போது அவர் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவருடைய கனவுகள் பல சந்தர்ப்பங்களில் நிராசையாகவும் போயின. ஆனால் புதிய பரம்பரை ஒன்றின் உருவாகத்தில் அவரது பங்களிப்பும் இருக்கிறது எனலாம். இணுவிலைப்பிறப்பிடமாகக் கொண்ட இரத்தினசபாபதி அவர்கள் தனது இறுதிநாள்வரை உற்றம் சுற்றம் என்று பாராது சமூகம் நன்றாக இருக்கவேண்டும் என்று கருதி வாழ்ந்து தன்னையே உருக்குலைத்து மறைந்த மனிதர் அவரது மரணமும் இறுதியாக லண்டனில் உள்ள முதியோர் இல்லத்திலேயே நிகழ்ந்தது.தோழர் இரத்தினசபாபதி அவர்களின் வாழ்வும் மரணமும்

ஈழத்தமிழர் சமூகத்தில் சமூக சாதக நிலைக்கருத்துருவாக்கத்தில் எத்தகைய சவால்களையும் புறக்கணிப்புக்களையும் சந்திக்கவேண்டும் என்பதை உணர்த்தி நிற்கிறது.

நன்றி: தமிழ்நிய+ஸ்வெப்

கிளிநொச்சியில் மனித வெடிகுண்டுகள் தினம்

கிளிநொச்சியில் மனித வெடிகுண்டுகள் தினம்
சூனா.பானா சிறப்புரை


மிக மோசமான மனித உரிமை மீறல்கள் புரியப்படும்போதும் அனைத்துலக சமூகம் அமைதியே காத்து வருகின்றது:

சிரிச்சு சிரிச்சு சொன்னார் சூனா.பானா டோய்!
கோ.வாலுசாமி

உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சு. கொலைகாரனே மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுகின்றான். தன்னிலை மறந்து பேசுறதிலை சூனா.பானாவை மிஞ்ச உலகிலை யாருமில்லை.கிளிநொச்சியிலை மனித உரிமைகள் நாள் நிகழ்ச்சி நடந்ததாம். அதிலை கொலைகளைச் செய்து போட்டு சிரிச்சுக் கொண்டே மழுப்பிப் பொய் சொல்லுறதுக்குப் பேர் போன சூனா.பானா மனித உரிமைகள் நாள் நிகழ்விலை உரையாற்றினாராம். மனித உரிமைகள் நாள் நடக்கிறஇடம் கிளிநொச்சி உரையாற்றுகிறவர் சூனா.பானா. எங்கை போய் முட்ட. நிகழ்ச்சி சிலவேளை பாலசிங்கண்ணை சொன்ன கிளிநொச்சியிலை இருக்கிற பொட்டம்மானின்ரை ஹொட்டலிலைநடந்திருக்குமோ?

சுப்பன். பரமன்ரை மோனுக்கு இருண்டது விடிஞ்சது தெரியாது. அது மட்டுமில்லை மனித உரிமை மீறல்களை அனைத்துலக சமூகம் அமைதி காத்து வருகுதாம். சூனா.பானா ஒண்டைமட்டும் அறிய வேணும். அனைத்துலக சமூகம் கண்ணை மூடிக்கொண்டிருந்தா சூனா.பானாவின்ரை இயக்கத்தை பயங்கரவாதிகளெண்டு முத்திரை குத்தி தடை செய்திருக்குமே?

ஆர் மனித உரிமை மீறல்களை செய்கிறதெண்டு சர்வதேச சமூகத்திற்கு வடிவாத் தெரியும்.

சூனா.பானா எந்த லோகத்திலை இருந்து பேசுகிறாரோ தெரியேல்லை. சர்வதேச சமூகம் எதுக்கு புலியை பான்ட் பண்ணின தெண்டதை சூன.பானா அறிஞ்சு போட்டுக் கதைக்கவேணும். சிறுவர்களை கடத்தி யுத்தத்திலை ஈடுபடுத்திறதும் கர்ப்பிணிப்பெண்ணை மனித வெடிகுண்டாக அனுப்பிறதிலையும் உலகத்திலை நீங்கள் தான் நம்பர் வண்ணுங்கோ சூனா.பானா சர்வதேச சமூகம் வன்னியிலை இருக்கிற பொட்டம்மானின்ரை சித்திரவதை முகாமுகளையும்பாக்க ஆசைப்படுகிது. சூனா.பானா ஓருக்கா சர்வதேச சமூகத்தை கூட்டிக்கொண்டு காட்டினால் அவைக்கு இன்னும் உதவியாகவல்லோ இருக்கும். உங்கடை இருண்ட வன்னியை கனபேர்பாக்க ஆசைப்படகினம் ஒருக்கா ஓப்பிண் பண்ணுங்கோ.

மனித உரிமைகள் தினம் எண்டதுக்குப் பதிலா மனித வெடிகுண்டுகள் தினம் எண்டு கொண்டாடினால் உங்களுக்குப் பொருத்தமாயிருக்கும். பின்லாடனும் தன்ரை பிரதிநிதிகளை அனுப்பிவைப்பார்.





கோ.வாலுசாமி

புலிகளின் கோரமுகங்கள் 2



முறிந்த பனை நூலிலிருந்து
புலிகளின் கோரமுகங்கள் 2




1986 டிசெம்பர் 14ஆம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எவ் புளட். தமிழீழ இராணுவம் ஆகிய இயக்கங்கள் விடுதலைப் புலிகளாற்
கலைக்கப்பட்டன. வடமாகாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் போரிடாது முகாம்களை விட்டு ஓடியது. துலைவர்கள் பலர்
கைது செய்யப்பட்டு ஆயுதங்கள் வைத்திருக்கிற இடங்களைக் காட்டித்தருமாறு சித்திரவதை செய்யப்பட்டனர்.
இக்கட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய குழுக்களுக்கும் இடையே கண்ணோட்டத்தில் உள்ள பண்பள
விலான வேறுபாடு என்ன என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம். தலைமையின் உத்தரவுகளை கண்மூடித்தனமாக
நிறைவேற்றுவதற்கே விடுதலைப் புலிகள்இயக்க உறுப்பினர்கள் பயிற்றப்பட்டுள்ளார்கள். இலங்கை இராணுவத்தை
எதிர்த்துப் போராடுவதில் விடுதலைப்புலிகள் காட்டிய அதே அளவு துணிவையே ஏனைய குழுக்களிடமும் காட்டினார்
கள் என்பதிற் சந்தேகமில்லை.ஆனாற் சகோதர ஆயுதப் போராட்டக் குழுவுடன் மோதல் ஏற்பட்ட பொழுது ஏனைய
குழுக்கள் ஓரளவு தயக்கமும்கலக்கமும் அடைந்தார்கள். அக்குழுக்களிடம் சகோதரத் தமிழர்களைக் கொல்வதை
யிட்டு அனுதாப உள்ளுணர்வ ஓரளவு இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்களிடையேவிடுதலைப் புலிகளுடன் குருதி
சிந்தும் மோதலுக்குப் போக வேண்டுமா அல்லது வெறுமனே தலைமறைவாகி விடுவதா என்ற பிரச்சனையிற் பிளவு
நிலவியதாக உடுவிலில் அமைந்திருந்த அவர்களது முகாமின் அருகே வசித்த ஒரு அவதானி கூறினார். இந்தப் பிரச்
சனைக்குத் தீர்வுகாண முன்னரே அங்கு வந்ததன் மூலம் ஆயத்தமில்லாத நிலையிலிருந்த அவர்களை விடுதலைப்
புலிகள் பிடித்துவிட்டனர். கலைந்து போவதைத் தவிர வேறு எதையும் செய்ய அவர்களால் முடியவில்லை.

விடுதலைப் புலிகளின் நடத்தை குழப்பமானதாய் இருந்தது. அவர்கள் மாணவர்களுக்கு அனுதாபமாய் இருக்கிறோம்
என்றும் விஜிதரனை கண்டுபிடிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுப்போம் என்று முதலிலேயே கூறியிருக்கலாம்.
அவ்வாறு கூறியிருந்தால் எதிர்ப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால் அவர்கள் ஆணவமான போக்கைக் கடைப்பிடித்தனர்.
எதிர்ப்பிலே இணைந்து கொண்ட பாடசாலை மாணவர்கள் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும்; யாழ்ப்பாண
இந்துக்கல்லூரிக்கு அண்மையிலும் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களால் பயமுறுத்தப்பட்டனர். பின்னர்
நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு மாணவரின் பெயர் விசேடமாகக் குறிப்பிடப்பட்டது. சிரேட்ட விரிவுரையாளருக்கான
பொது அறையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஒரு கூட்டத்திற்கு கிட்டு அழைக்கப்பட்டார். அங்கே அவர்
எமது தளபதி என அறிமுகப்படுத்தப்பட்டார். அங்கே ஏன் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதென எவரும் ஆச்சரியப்படும்
வகையிற் பல்கலைக்கழக உறுப்பினர்கள் மௌனம் சாதித்தனர். ஒரு ஆயுதப்போராட்டக்குழு விஜிதரனைக்
கடத்தியிருக்குமானால் இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் அது உண்மையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
எனக் கிட்டு வாதிட்டார்.

அவர் விடுவிக்கப்படலாம். அதற்கு ஓரளவு காலம் எடுக்கலாம் எனத் தமது நிலைப்பாட்டைக் கூறினார். மேலும்
செல்வபாலா போன்ற துரோகிகள் மாணவர்கள் என்பதற்காகவோ வேறு காரணங்களுக்காகவோ மன்னிக்கப்பட
மாட்டார்கள் எனவுஞ்சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணக் கல்லூரி தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மாணவன்
ஒருவனுக்குக்கு கிட்டுவையும் ஏனைய முக்கிய விடுதலைப் புலி இயக்கத் தலைவர்களையும் கொல்லுமாறு
ஆயுதமும் பணமும் வழங்கப்பட்டிருந்தது என அவர் அங்கு சுட்டிக்காடடினார். விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி
நிறுவனமான ‘நிதர்சனம்’ தொலைக்காட்சியில் சிங்கப்பூர் பாணியில் தோன்றி தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர்
செல்வபாலா சுட்டுக்கொல்லப்பட்டார்.

இறுதியாக உண்ணாவிரதத்தை முடித்துவைப்பதற்கான உடன்பாடு ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் விஜிதரனைத்
தேடிக்கண்டு பிடிப்பதாக உறுதி அளித்தனர். சதிக்கதைகள் பலவற்றைப் போல் விஜிதரன் பற்றிய உண்மையும்
நீண்டகாலத்துக்கு வெளிவராது. பல்கலைக்கழக மாணவரைப் பொறுத்தவரை பொது விவகாரங்களில் அவர்களது
பங்களிப்புத் தற்காலிகமாக முடிவுற்றது. பலவீனங்கட்கும் தவறுகளுக்கு மத்தியிலும் அவர்களது பங்களிப்பு மகத்
தானதொன்று. அவர்களைப் பார்க்கிலும் அதிக அனுபவமும் முதிர்ச்சியும் பெற்றவர்கள் தலைமை தாங்கி நடத்த
வேண்டிய பணிகளைச் செய்யுமாறு அவர்கள் நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.தமிழ் மக்களைப் பொறுத்த வரை இன்னொரு
தீபம் அணைந்துவிட்டது. இப்புதிய போக்குக்குக் கீழ்ப்படிய மறுத்து எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்குத் தலைமைதாங்
கிய விமலேஸ்வரன் என்ற மாணவர் தலைவன் தன் பெறுமதி மிக்க அர்ப்பணிப்பைச் செய்தார். 1988 ஜுலையில்
அவர் கொலை செய்யப்பட்டார்.


1986 ஒக்ரோபரில் அடம்பனில் இலங்கை இராணுவத்துடன் நடந்த சண்டையில் விக்டர் கொல்லப்பட்டார். இச்சண்
டையில் இலங்கை இராணுவத்தினர் பதின்மூவர் கொல்லப்பட்டனர். இருவர் உயிரோடு பிடிக்கப்பட்டனர். விக்டரின்
சடலம் பிடிபட்ட இரண்டு இராணுவத்தினருடனும் ஒன்பது சிறிலங்கா இராணுவத்தின் சடலங்களுடனும் யாழ்ப்பாணம்
கொண்டு வரப்பட்டது.பிடிபட்ட இரு இராணுவத்தினரும் ஒன்பது இராணுவத்தினரின் சடலங்களும் நல்லூர்க் கந்தசாமி
கோவிலுக்கருகிற் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்தவகையான கண்காட்சிகளில் இது முதலாவது கண்காட்
சியாகும். ஆயிரக்கணக்கான மக்கள் அதைப் பார்வையிட்டனர். விக்டரின் இலட்சக்கணக்கான மக்கள் பார்வையிடுவ
தற்காக இராணுவ மரியாதையுடன் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிற்கும் கொண்டு செல்லப்பட்டது. கிட்டு இது தொடர்
பாகக் கூட்டங்களில் உரையாற்றி தமது படிமத்தை கணிசமாக உயர்த்திக் கொண்டார். விக்டர் விடுதலைப் புலிகளின்
ஏனைய தலைவர்களைப் போல் தனது சக போராளிகளுடன் போர்க்களத்தில் நின்றார் என்ற கிட்டுவின் கூற்றுப் பத்
திரிகைகளில பிரசுரிக்கப்பட்டது. அந்தக் கூற்று பிரபாகரனுக்கு நேரடியான அறைகூவலாகக் காணப்பட்டது. அதற்கு
முன்பான பல ஆண்டுகளாகப் பிரபாகரன் சென்னையில் இருந்தார். பிரபாகரன் கிட்டுவை மட்டந்தட்டி விடுவார் என்ற
உணர்வும் பரவலாக நிலவியது. 1987 ஜனவரியில் பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்கு வந்தமை கிட்டுவின்
அபிலாசைகளுடன் ஓரளவு தொடர்புடையதென நம்பப்பட்டது

புலிகளினால் நிர்க்கதியான ஐந்து சிறிய பெண்பிள்ளைகள்.

புலிகளினால் நிர்க்கதியான ஐந்து சிறிய பெண்பிள்ளைகள்.

தாய் புற்றுநோயால் மரணம். தந்தை புலிகளினால் சுட்டுக்கொலை. ஆதரவற்ற நிலையில் ஐந்து பெண் பிள்ளைகள்


வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அரச ஊழியரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்றுக் காலை 6.30 மணியளவில் உடுப்பிட்டி சந்தை வீதியிலுள்ள இவரது வீட்டிற்குச் சென்றபுலிகள் இவரை சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை காலை 6.30 மணியளவில் உடுப்பிட்டி, சந்தை ஒழுங்கை, தட்டாதெருவில் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர் யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தரான பரமசோதி ஆனந்தகுமார் (வயது 47) என்பவராவார். வீட்டில் தொலைத் தொடர்பு நிலையம் நடாத்தி வரும், ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தையான இவர், தனது வீட்டிலிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் சென்ற புலிகள் தொலைபேசி எடுக்க வேண்டுமெனக் கூறி இவரது வீட்டிற்குள் சென்ற பின் இவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இவரது சடலம் பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் மரண பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொண்டமானாறு, காட்டுப்புலம், தயாளன் கடை ஒழுங்கையைச் சேர்ந்த புலிகள் இயக்க உள்ளுர் பொறுப்பளரான இசைவீரன் அல்லது மாமா என அழைக்கப்படும் இரத்தினம் பூபாலன் என்பவரும் மற்றும் காட்டுப்புலம், மணியம் கடையடியைச் சேர்ந்த கலை என்ற புலி உறுப்பினருமே இவரைச் சுட்டுக் கொன்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவரது மனைவி கடந்த வருடம் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். தற்போது இவரது ஐந்து சிறிய பெண் பிள்ளைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் அரசகட்டுப்பகுதிக்கு

யுத்தம் காரணமாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசகட்டுப்பகுதிக்கு வந்தடைந்துள்ளனர்.

புலிகளால் அவர்களின் பாதுகாப்புக்காக மனித கேடயமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தவர்களும் வாகரைப் பிரதேசத்தில் வசித்து வந்தவர்களுமான பெருந்தொகையான தமிழ் மக்கள் தற்போது அங்கிருந்து வெளியேறி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள பனிச்சங்கேணி பிரதேசத்திலுள்ள காவலரண் ஊடாக மட்டக்களப்பு அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளதாக இராணுவப் பாதுகாப்புத்துறை அறிவிப்பாளர் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு குறித்த வாகரைப் பிரதேசத்திலிருந்து 3500 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் பனிச்சங்கேணி இராணுவ காவலரணை வந்தடைந்து அங்கிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுள்ளனர்.

மேற்படி வாகரைப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தரைமார்க்கமாகவும் கடல் மார்க்கமாகப் படகுகளிலும் இவ்வாறு தப்பியோடி வந்துள்ளதாக பாதுகாப்புத்தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புலிகளின் கண்காணிப்பிலிருந்து தப்பிவந்துள்ள தமிழ் மக்கள் இராணுவத்தினருக்குக் கூறியுள்ள தகவல்களுக்கேற்ப வாகரைக்கும் கதிரவெளி பிரதேசங்களுக்கு இடையேயுள்ள பகுதிகளில் வாழுகின்ற சுமார் 10000 சாதாரண பொதுமக்களாகிய தமிழர்களை புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் பலாத்காரமாக அப்பிரதேசங்களில் தடுத்து வைத்திருப்பதாகவும் புலிகள் இயக்கத்தினர் தமக்குப் பாதுகாப்பாக மனித கேடயங்களாகவே அந்த மக்களை அப்பகுதிகளில் வன்முறையாகத் தடுத்து வைத்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேசமயம் இலங்கையின் கிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரைப் பிரதேசத்திலிருந்து ஆயிரம் பேர் வரை வெளியேறி வெலிக்கந்தைப் பகுதியை அடைந்திருப்பதாக இலங்கை இராணுவம் மற்றும் ஐ நா வின் அகதிகள் மறுவாழ்விற்கான அமைப்பை மேற்கோள் காட்டி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். புண்ணியமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறார்..

அவ்வாறு வந்தவர்களை பேருந்துகள் மூலம் வாழைச்சேனைப் பகுதிக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் கூறினார். வாழைச்சேனையிலுள்ள முகாம்கள் அல்லது அங்குள்ள பாடசாலைகளில் அவர்கள் இன்றும் நாளையும் பராமரிக்கப்பட்டு பின்னர் வேறு இடங்களுக்கு நிரந்தரமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்கள் எவ்வாறு வந்தார்கள் என்கிற தகவல்கள் தம்மிடம் இல்லை என்றாலும் ஏ-15 பாதை வழியாக வராமல் வேறு பாதை மூலமாகத்தான் வந்துள்ளார்கள் எனவும் புண்ணியமூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர் தொடர்ந்து போராட்டம்

ரயில் வீதி, மறியல், சத்தியாக்கிரகம், கடையடைப்பு, கொடும்பாவி எரிப்பு


மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டம் நேற்று திங்கட்கிழமை ஏழாவது நாளாக தொடர்ந்தும் இடம் பெற்ற அதேவேளை ரயில் மறியல் போராட்டம் வீதிமறியல் போராட்டம் ஆர்ப்பாட்டப்பேரணி சத்தியாக்கிரகப் போராட்டம் கடையடைப்பு கொடும்பாவி எரிப்பு என்பனவும் இடம் பெற்றுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து காணப்பட்டதுடன் வீதிகளில் இறங்கி கோஷங்களையும் எழுப்பினர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட சில தொழிற் சங்கங்களின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்டு தொழிற்சங்க பேதங்களை மறந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் சம்பளவுயர்வு போராட்டங்களை நிறுத்துவதற்கு தோட்டத் தலைவர்களுக்கு பணம் கொடுத்தும் போராட்டத்தை இடை நிறுத்த முயற்சித்த வேளையிலும் அது பயனளிக்க முடியாதளவிற்கு அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சம்பளவுயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சகல சர்வமதத் தலைவர்களும் தங்களது ஆதரவை வழங்கியுள்ளதுடன் வர்த்தகர்களும் தங்களது கடைகளை மூடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை

பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பளவுயர்வை வலியுறுத்தி நேற்று ஏழாவது நாளாகவும் தலவாக்கலை நகரில் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தியுள்ளதோடு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தோட்டத் தொழிலாளர்களின் சாத்வீக போராட்டத்திற்கும் வாழ்வாதார போராட்டத்திற்கும் அரசியல் பேதங்களுக்கப்பால் சர்வமத தலைவர்களும் ஆதரவு வழங்கி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் உட்பட பல தொழிற்சங்க தலைவர்கள் தொழிலாளர்கள் என பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் வெயிலிலும் நகர மத்தியில் திரண்டு நின்றனர்.

ஜனாதிபதி அவர்களே எமது சம்பள உயர்வு போராட்டத்தில் தலையிட்டு தீர்வை வழங்குங்கள்'இனியும் ஏமாற மாட்டோம்' 300 ரூபா உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும்' தொழிலாளியை அடகு வைக்காதே தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' கடைசிவரை போராடுவோம்' போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் தலையிலே கறுப்புப்பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் மறியல் போராட்டம்

தலவாக்கலை புகையிரத வீதியில் மறியல் போராட்டத்தை மேற்கொண்டனர். இதனால் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதம் சுமார் அரைமணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டு தாமதமாகவே புறப்பட்டது. தலவாக்கலை நகர சுற்றுவட்டத்தில் இருந்து சர்வமத தலைவர்களுடன் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களும் பஸ்தரிப்பு நிலையம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.

அதேவேளை புகையிரத நிலையத்திற்கருகில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் அமைச்சர் சந்திரசேகரன் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தொழிலாளர்கள் மீண்டும் ஊர்வலமாக நகர மத்தியில் வந்து வீதி மறியல் போராட்டத்தை மேற்கொண்டு சுமார் 30 நிமிடங்களுக்கு வாகனங்கள் செல்லவிடாது நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இரத்தினபுரி

சம்பள உயர்வு கோரி மலையகத்தில் பல பகுதிகளிலுள்ள தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சில நகரங்களில் கடையடைப்பு இடம் பெற்றது.இரத்தினபுரி கேகாலை மாவட்டத்தில் சகல தோட்டத் தொழிலாளர்களும் தொடர்ந்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு வருகின்றனர். இம் மாவட்டத்திலுள்ள சில தோட்டங்களில் ஆர்ப்பாட்டங்களும் கொடும்பாவி எரிப்பு சம்பவங்களும் ஆங்காங்கே இடம் பெற்று வருகின்றன.

நேற்றுக் காலை 10 மணி தொடக்கம் தொடர்ந்து 2 மணித்தியாலங்கள் இரத்தினபுரி ரில்ஹேன தோட்ட பகுதியைச் சேர்ந்த சுமார் 1500 தொழிலாளர்கள் மாபெரும் எதிர்ப்பு ஊர்வலமொன்றிலீடுபட்டனர். தோட்ட தொழிற்சாலையிலிருந்து ஊர்வலமாக சென்று இரத்தினபுரி - பெல்மதுளை பிரதான வீதியில் கனேகம சந்தி வரை தமது போராட்டத்தினை மேற்கொண்டனர்.

பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்திலீடுபட பொலிஸார் அனுமதி வழங்க மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் தமது போராட்டத்தினை தோட்ட வீதிகளுடன் மட்டுமே மட்டுப்படுத்திக் கொண்டனர்.

உடனடியாக சம்பளத்தை வழங்கு'தொழிற்சங்கமே மௌனம் சாய்க்காதே' தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு அடிமையில்லை' போன்ற பதாகைகளையும் ஏந்திய வண்ணம் போராட்டத்தினை நடத்தினர். இதேவேளை காவத்தை நீலேகம தோட்டப் பகுதியிலும் நேற்று இவ்வாறான ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இறக்குவானை மாரத்தென்ன பலாங்கொடை நிவித்திகலை தோட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்றன.

அகதிகள் பொதுத்தேர்வு எழுத இலங்கை ஏற்பாடு

பிரபாகரனுக்கு அஞ்சி தமிழ்நாடு வந்த அகதிகள் இலங்கை அரசின் பொதுத்தேர்வு எழுத இலங்கை அரசு ஏற்பாடு

ஆகாயப் புழுகர்களை வென்ற பிரபா-ஞ்சப் புழுகு

ஆகாயப் புழுகர்களை வென்ற பிரபா-ஞ்சப்- புழுகு

பொய்யாமொழி தண்டாயுதபாணி (நன்றி தாயகம்)


புலிகளின் முட்டாள்தனமான செயற்பாடுகளுக்கு எல்லாம் அரசியல் விளக்கம் கொடுக்கும் அரசியல் ஆய்வாளர்களின் புழுகு பற்றி அண்டப் புழுகர்களை வென்ற ஆகாயப் புழுகர்கள் என மேதகு கியூறியஸ் ஜி தாயகத்தில் எழுதியிருந்தார்,

கடந்த வாரம் ஒரு நாள் தற்செயலாக புலிகளின் உத்தியோகப்பற்றர்ற கனடிய வானொலியில் இவ்வாறான ஒரு ஆகாயப் புழுகுசித்தனான ஆய்வாளர் ஒருவரின் ஆய்வு ஒன்றை குவியம் என்ற பெயரில் மெய்சிலிர்க்க வைக்கும் பின்னண்p இசையுடன் கேட்டு இன்புற நேரிட்டது, சமாதான காலத்தில் புலிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றியும் தற்போதைய தாக்குதல்கள் பற்றியும் விளாசித் தள்ளிய அந்த ஆய்வு வழமை போல. புலிகளின் சாகசங்கள் பற்றிய புழுகுகளுடன், வெளிநாடுகளில் வெளிநாட்டமைச்சர்களுக்குரிய மரியாதைகளுடன் 13நாடுகளில் புலிகள் அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய தீரமும் சிங்கள அரசின் பிரசாரங்களை புலிகள் முறியடித்த சாதனையும் சொல்லி, பின்னால் அதற்கு முரணாக அந்த நாடுகள் புலிகளைத் தடை செய்ததையும் வெட்கமில்லாமல் சொல்லி. சம்பூர். முதூர் என தற்போதைய யுத்தத்தில் பின்வாங்கியதை ராஜதந்திரம் என்றும் புழுகி, ஏதோ கேட்பவன் எல்லாம் புலிகளின் ஆதரவாளர்கள் போல காதில் பூவுடன் அலைவதாக நினைத்துக் கொண்டு ஒரே விளாசல்,

அட, இதெல்லாம் வழமையான. காது புளிக்கும் புழுகு தானே என்று நீவிர் புறந் தள்ளக் கூடும், பின்னால் தானே இருக்கிறது பெருங் குண்டு,

புலிகள் சிங்கள அரசின் இந்தத் தந்திரங்களை உண்ர்ந்து கொண்டு தற்போது தனியான அரச அமைப்பு ஒன்றை. அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும். கட்டி எழுப்பியுள்ளார் களாம், ஆனால் ஏன் அவர்கள் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தவில்லை என்ற கேள்வியையும் எழுப்பி. அதற்கான பதிலையும் வழியையும் குவியம் புழுகிக் குவித்தது, அதாவது, அரசைப் பிரகடனப்படுத்தினால் அதை நடத்திச் செல்வதற்கான பொருளாதாரப் பலம் இல்லையாம்? ஆகையால். வெளிநாட்டுத் தமிழர்கள் புலிகளின் கையைப் பலப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளும் மர்ம இசைப் பின்னண்pயுமாக குவியம் கரைந்தது,

ம், காசைக் கொடுத்தால் எல்லாம் சரி,? மிச்சத்தை தம்பி பார்த்துக் கொள்ளுவார்,?

இது மாவீரர் தினத்திற்கு முன்னைய தின ஒலிபரப்பு, இந்த ஆகாயப் புழுகை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு இன்னொரு பிரபஞ்சப் புழுகு, அதுதான் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, மாவீரர் தின உரை?

ஆகா, ஏதோ ஜோர்ஜ் புஷ் ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் நிலைமை பற்றி உரை நிகழ்த்தப் போவது போல, முழு உலகுமே தலைவரின் உரையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்று புலிகளின் ஊடகங்கள் புலி வருது என்று கட்டியங் கூறிப் புழுகித் தள்ள, தலைவர் யுத்தம் என்று கூறினாலும். சமாதானம் என்று கூறினாலும் தமிழ் மக்களும் சர்வதேச சமுகமும் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்ற அற்புதமான ஆசிரியர் தலையங்கங்கள் மறுபுறத்தில் தலையைச் சுத்த, இரத்த வெறி பிடித்து அலையும் பிணந் தின்னிக் கழுகுகள் போல வெளிநாட்டுத் தமிழர்கள் தலைவர் யுத்தப் பிரகடனம் செய்யப் போகிறார் என்று காத்திருக்க,

புலம் பெயர்ந்த தமிழினத்தின் இரத்த வெறியை அப்போது தான் காண முடிந்தது, யுத்தத்தின் அழிவுகள் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல். ஏதோ தமிழ்ச் சினிமாக் கதாநாயகனின் அரிவாளால் இரத்தம் சீற வெட்டிச் சரிக்கப்படும் வில்லர்களைப் பார்த்துக் கை தட்டி விசிலடிப்பது போல, தலைவர் யுத்தப் பிரகடனம் செய்யப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்த கூட்டத்தை என்ன செய்ய.

கைவிடப்பட்ட காதலியின் வாழ்வு அஸ்தமித்து விட்டது என்பதை சிம்போலிக்காகக் காட்ட. சூரிய அஸ்தமனத்தைக் காட்டும் தமிழ்ப் பட டைரக்டர்களின் கற்பனாவளம் போன்று, சூரியனின் கதிர்கள் நாலா பக்கமும் சிதறும் பின்னண்pத் திரை முன்னால். உலகெங்கும் வாழும் தமிழர்களின் உயிரும் வாழ்வும் தன் கையில் என்பதை சிம்போலிக்காக காட்டிக் கொண்டு, நம் சூரியதேவன், வஞ்சகமில்லாமல். தன் ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்ய, உலகமெங்கும் தடைகளைச் சுத்துவதற்காக வௌவேறு பெயர்களில் இறுதி நேர அறிவிப்புகளுடன் நடத்தப்பட்ட மாவீரர் தினங்களில் கூடியிருந்த ரசிகப் பெருமக்களின் விசிலடிகளுக்கும் மத்தியில். சார்ள்ஸ் டிகோல் தொப்பியும். நஞ்சுண்ணாக் கண்டனாய் கழுத்தில் தொங்கிய புனித நச்சுக் குப்பியும். இன்டலக்சுவல் லுக் அடிக்கும் கண்ண்hடியுமாக, ஜொர்ஜ் புஷ்ஷின் State of the Union உரை நிகழ்த்தும் பேருரைக் குறுமேடை போன்ற ஒன்றின் முன்னால், முகபாவனைகளோ. குரலில் ஏற்ற இறக்கமோ இல்லாமல். திருவிழாவில் தூங்கி வழியும் பக்த கோடிகளுக்குப் பாராயணம் படித்த பாங்கில் நிகழ்த்திய உரை கண்டு தமிழ்கூறு நல்லுலகம் புல்லரித்துப் பேருவகை கொண்டது,

தலைவர் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் விடயத்தை இரண்டு விடயங்கள் முலம் அறிந்து கொள்ளலாம், முதலாவது, தலைவரின் மாவீரர் தினத்தில் வரும் அறிவிப்புகள் குறித்து எதிர்பார்த்துக் காத்திருப்பதாக தமிழ்ச்செல்வன் அளித்த Nபட்டிகள்,

ஒரு அமைப்பின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் குறைந்த பட்சம் தினசரி தன் தலைவருடன் தொடர்பில் இருக்க வேண்டியவர், அத்துடன் மாவீரர் தின உரை பற்றி அரசியல் பிரிவுத் தலைவருடன் கருத்துப் பரிமாறாமல் உரை நிகழ்த்தவும் முடியாது, தமிழ்ச்செல்வனுக்குக் கூட தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்பது தெரியாமல் இருக்கும் நிலைமை என்றால்,

அடுத்தது, தலைவர் உரை நிகழ்த்தும் போது தளபதிகள். தொண்டர்கள். சமுக மற்றும் மதத்தலைவர்கள். மக்கள் என்று பல்வேறு தரப்பினரும், முடிந்தால் நோர்வேப் பிரதிநிதிகளும், கலந்து கொண்டு கரகோஷம் செய்யும் போது தான் அதற்கு ஒரு உயிர்த் தன்மை இருக்கும், எங்கோ அடையாளம் குறிப்பிடப்படாத இடத்தில். தனிமையில் இருந்து State of the Union பந்தாவுடன் உரை நிகழ்த்தும் போது, மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருப்பதாகக் கருதாமல் என்னவென்பது

சர்வதேச அரசியல் போக்கு பற்றிய யதார்த்த நிலையிலிருந்து விடுபட்டு. தன்னுடைய உலகத்தில் வாழும் ஒரு மனிதனுடைய நிலை தான் தலைவருடையது, எமது அரசியல் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலக நாடுகளையும் சர்வதேச சமுகத்தையும் அன்போடு வேண்டும் தலைவர். அதற்கு ஓரிரு நாட்களுக்குள்ளேயே கொழும்பில் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதை, யதார்த்தத்திலிருந்து விடுபட்டிருப்பதாக நினைக்காமல் வேறு எப்படிக் கருத முடியும்

நீதியின் வழி நடக்கும் நோர்வே புலிகளை அடிக்கடி பிணை எடுத்து விடுவதால். புலிகள் பற்றிப் பிடித்திருக்கும் ஒரே துரும்பு நோர்வே மட்டும் தான், ஐரோப்பிய சமுகத்தின் தடை முதல் பல்nவறு சம்பவங்களில் புலிகளைக் காவாந்து பண்ண நோர்வே எடுத்த முயற்சிகளுக்கு நன்றியுண்ர்வுடன் இருப்பது நல்லது தான்,

இது ஒருபுறமிருக்க, சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமேயில்லாத ஒருவரின் வார்த்தைகளுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதின் அர்த்தம் இதுவரைக்கும் பொய்யாமொழிக்குப் புரிந்ததில்லை, வழமை போல, மாவீரர் தின உரையில் வரும் ஓரிரு பகுதிகளைப் பொறுக்கி எடுத்து சர்வதேச ஊடகங்கள் தலையங்கம் எழுதும், ஆனால், வரிகளுக்கு இடையில் வாசிப்பவர்களுக்கு மட்டுமே தலைவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியும்,

இம்முறையும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் னநகரnஉவ என்ற வார்த்தையே சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது, இந்த போர்முனைப்புச் செயற்பாட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்து போய் கிடக்கிறது என்பது தான் தலைவர் கூறியது, இந்த ஒரு வரியின் மொழிபெயர்ப்புத் தான் சர்வதேச ஊடகங்களின் கண்களுக்குத் தென்பட்டது,

ஆனால் ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப் போன தாளாகி உருக்குலைந்து கிடக்கிறது என்ற தலைவரின் அடுத்த வரியை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாமல் திணறியதாலோ என்னவோ. ஆங்கில மொழிபெயர்ப்பில் தமிழ்நெட் அந்த வசனத்தை வெளியிடவில்லை, இல்லாவிட்டால் அதையும் சர்வதேச ஊடகங்கள் மகிழ்ச்சியுடன் மறுபிரசுரம் செய்திருக்கும், சர்வதேசமுகமும் தலைவரின் உரையில் விஞ்சி நின்ற கவிநயம் பற்றியும் எஞ்சி நின்ற பொருள் நயம் பற்றியும் கண்டு மெய் சிலிர்த்திருக்கும், (நம் பைந்தமிழ் மொழிக்கு தலைவர் ஈந்தளித்தருளிய முளையம் என்ற வார்த்தைக்கான கருத்தை ஆங்கில மொழிபெயர்ப்பில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை)

சென்ற ஆண்டு உரையில் மகிந்த நடைமுறை யதார்த்தவாதி என்று சிலாகித்து அவருக்கு அவகாசம் கொடுத்ததாகக் கூறிய உரை முடிந்து சில வாரங்களுக்குள்ளேயே பொங்கி எழும் மக்கள் படை கண்ணிவெடித் தாக்குதல்களை ஆரம்பித்தது அறிந்ததே, தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அது மக்களின் எழுச்சி என்றும் புலிகள் வேண்டுமானால் தங்கள் ஆதரவாளர்களை ஏமாற்றிக் கொள்ளலாம், ஆனால். சர்வதேசமும் அதை நம்பும் என்று எதிர்பார்க்கும் புலிகளின் முட்டாள்தனத்தை சர்வதேச சமுகம் புரிந்து கொள்ளாமலா இருக்கும்

எனவே. உரையில் சமாதான வழியை விட்டு விலக மாட்டோம் என்று சொன்னாலோ. அல்லது யுத்தப் பிரகடனம் செய்தாலோ அதைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்ளத் Nதவையில்லை, ஏனெனில், புலிகள் சொல்வதற்கும் அவர்களின் செயலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை,

சமாதானம் பேசுவதாகச் சொல்லிக் கொண்ட நேரத்திலும் புலிகள் தங்கள் எதிரிகளை, அரசில் அமைச்சராக இருந்த கதிர்காமர் வரைக்கும், கொலை செய்து கொண்டு தான் இருந்தார்கள், சிங்கள அரசாங்கம் தீர்வைத் தராது என்று தமிழர்களுக்குச் சொல்லிக் கொண்டே யுத்தத்திற்கான தயாரிப்புகளில் தான் புலிகள் கவனமாக இருந்தார்கள், விடுதலைப் பாதையைத் திசை திருப்பி. வழியில் பொறிகள் வைத்து சமாதான சதிவலைக்குள் சிக்க வைத்து காலத்தால் மோசம் செய்து சமாதான மாயைக்குள் தள்ளி அழித்தொழிப்பது தான்ழூ வரலாறு காட்டிய வழியாக கருதும் புலிகள் உண்மையில் சமாதான முயற்சி முலம் தீர்வு அடைய முடியும் என்று உண்மையான இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே, நாம் அமைதி காத்த ஆறு ஆண்டு காலத்திலே சமாதான நடவடிக்கைகளில் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொண்டோம் என்று புலன் பெயர்ந்த தமிழரை வேண்டுமானால். சந்தேகம் இல்லாமல் எந்தக் காலமும் சுத்தலாம், ஆனால். எல்லாரையும் எல்லாக் காலமும் சுத்த முடியாது,

தலைவர் கையெழுத்து வைத்த சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே புலிகளுக்கு அக்கறை இருக்கவில்லை, இதற்குள் வாசிக்கின்ற இந்த உரையில் மட்டும் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது

முக்கியமாக. இந்த உரை யாரை நோக்கி நிகழ்த்தப்பட்டது என்பது முக்கியமானது, இது நிச்சயமாக. வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களை நோக்கி நிகழ்த்தப்பட்டது அல்ல, இன்று தலைவர் கூறும் தமிழ் மக்களின் நிலைமை அவர்கள் நாளாந்தம் அனுபவித்து வருகின்ற ஒன்று தான், அதைத் தலைவர் சொல்லித் தான் அவர்கள் அறிய வேண்டும் என்றும் இல்லை, அவர்களை நோக்கியதாக இருந்தால். அவர்களின் அன்றாட அவலங்களைப் போக்குவதற்கான வழிகள் பற்றிக் கூறப்பட்டிருக்கும்,

சர்வதேச சமுகம் நோக்கியதுமல்ல இந்த உரை, முழுப் பூசண்pக்காயை சோற்றில் மறைக்கும் பொய்களை விழுங்கிக் கொள்ள சர்வதேச சமுகம் ஒன்றும் முட்டாள்க் கூட்டமும் அல்ல, இந்தச் சர்வதேச ச்முகத்தை நோக்கியதாக இருந்தால். அவர்களின் எண்ணப் போக்கை மாற்றுவதற்கான அரசியல் வழி முறைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும், வெறுமனே சிங்கள அரசைக் குற்றம் சாட்டும் புலிகளின் பிரசாரம் அங்கே அவியாது,

முழுக்க முழுக்க இது புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் புலிகளின் விடுதலை வேள்வியின் தர்மகர்த்தாக்களும் போர்த்திருவிழாவின் உபயகாரர்களும் நோக்கிய உரை தான்,

யானை பார்த்த குருடர்கள் போல, தங்கள் சிற்றறிவுக்கு எட்டிய விதத்தில் தலைவரின் உரையை விளங்கிக் கொள்ளும் வெளிநாடு வாழ் தமிழ்க் குடிமாக்களுக்கு. வழமை போல, தலைவரின் உரையை வக்கிரமான நகைச்சுவையுடன் தமிழில் மொழிபெயர்த்துத் தர, பெருங்குடிமகனான மது உரைஞர் தற்போது மரணப் படுக்கையில் உள்ளதால், பரிதவித்துப் போன நெஞ்சுகளில் பால் வார்க்க, தமிழ்கூறு நல்லுலகில் குறைவில்லாமல் புழுத்துப் போயிருக்கும் புழுகுசித்தர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள், வள்ளுவன் குறளுக்கு பொருள் எழுதிய பாங்கில். பொழிப்பும் மொழிபெயர்ப்பும் அவரவர் புத்திக்கு எட்டிய விதத்தில் ஓகோ என்று நடக்கிறது, சிங்களத்தின் முகத்திரையைக் கிழித்து அம்பலப்படுத்திய தலைவரின் தீரம் முதல். தனது இராணுவ நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்தி எதிரிக்கு முன்னெச்சரிக்கை வழங்காமல் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க நினைக்கும் தலைவரின் சாதுரியம் வரைக்கும் இவர்கள் புகழ்ந்து தள்ளியாயிற்று,

முடிவாக யுத்தப் பிரகடனம் செய்வதற்கும் போதிய ஆட்பலம் முன்பு போல இல்லை, விமானக் குண்டு வீச்சை வெல்வதற்கு. விமானப்படையும் இல்லை, தமிழீழப் பிரகடனம் செய்வதற்கும் அரசியல் முதிர்ச்சியோ. சர்வதேச ஆதரவோ இல்லை, சமாதானப் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் அக்கறை காட்டாததால். அதிலும் தொங்கிக் கொர்டிருக்க முடியாத நிலை, சர்வதேச அழுத்தம் காரணமாக, சமாதான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம் என முடிவாகச் சொல்லவும் முடியாத திரிசங்கு சொர்க்க நிலையில். எப்போதோ முடிவு செய்யப்பட்ட தமிழீழம் தான் முடிவு என்பதை மீண்டும் ஒரு தடவை உச்சாடனம் செய்ததை. தலைவர் அந்த மாதிரிக் குடுத்திருக்கிறார் என்று புலம் பெயர்ந்த தமிழர்கள் மகிழ்ச்சிக் கடலில் முக்குளித்துப் போயிருக்கிறாhர்கள்,

அப்படி என்ன தான் தலைவர் புதிதாகச் சொல்லியிருக்கிறார் வழமை போல. எதிரியின் காய் நகர்த்தல்களை முறியடிக்கும் தங்கள் புத்திசாதுரியத்தை விதந்தும். முழுப் பழியையும் எதிரி மேல் சுமத்தியும். அரசின் அராஜகங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் சர்வதேச சமுகத்தைக் குறை கூறியும். மாவீரர்களின் துணையுடன் தமிழீழம் வெல்லப்படும் என்றும் முடிகின்ற ஒரு உரையைத் தலைவர் தான் வாசிக்க வேண்டும் என்று விதி ஏன் இருக்கிறது? இதைத் தானே. புகலிடத்து ஊடகங்களில் புழுத்துப் போயிருக்கும் ஆய்வாளர்கள் காலாகாலமாகச் செய்து கொண்டு வருகிறார்கள்,

காசு தேவையென்றால் நேரடியாகக் கேட்க வேண்டியது தானே, அதற்கேன் இந்த சுற்றி வளைப்பு எல்லாம்

தன்னுடைய பிள்ளைகளை இரத்த வாடையே படாமல் வெளிநாடுகளிற்கு அனுப்பி படிப்பித்துக் கொண்டு. ஏழைகளின் பிள்ளைகளைப் பலவந்தமாய் பிடித்து வந்து மாவீரர்களாக்கும் தலைவர் அவர்களை இறந்தும் வாழ்கிறார்கள் என்று புகழ வேண்டியது காலத்தின் கட்டாயம், இவ்வாறான தியாகங்களால் தான் தலைவரும் அவர் தம் மார்புமிகு தளபதிகளும் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளில் படிப்பித்து ஒப்பேற்றும் நிலையில் யாழ் பல்கலைக்கழகம் புலிகளின் புணணியத்தில் மூடப்பட்டுக் கிடப்பது பற்றி மூச்சே இல்லை,

அரசாங்கம் பற்றிப் புலிகள் கூறும் பல குற்றச்சாட்டுக்களில் உண்மை இருந்தாலும். அதே குற்றச்சாட்டுக்கள் புலிகள் மீது சுமத்தப்பட்டால். அவர்களும் அதே அளவு குற்றவாளிகள் என்பதை மறைத்துக் கொண்டு, மற்றவர்களை மட்டும் குற்றம் சாட்டும் புலிகளின் பாரம்பரியத்திலிருந்து விலகாமல், மக்களை உரிமைகளை மறுத்து திறந்த சிறைச்சாலைக்குள் அரசு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டும் உரை. வன்னியில் மக்கள் சிறையில் வாழ்வதையும் வடக்கில் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையான வாக்குரிமையைக் கூட அனுபவிக்க முடியாமல் புலிகளின் அடக்குமுறைக்குள் வாழ்வதையும் கச்சிதமாக மறைத்து விடுகிறது,

தலைவர் குற்றம் சாட்டும் அரசின் விமானக் குண்டுவீச்சு உட்பட்ட தாக்குதல்கள் எல்லாம் மாவிலாறில் தொடங்கிய அதிர்ச்சி வைத்தியத்தின் திருவிளையாடல் என்பதை உரை மறந்து விடுகிறது, திருநெல்வேலிக் குண்டுத்தாக்குதலால் எழுந்த கலவரத்தை தமிழர் இன அழிப்பு என்று பிரசாரம் செய்தது போல, தமிழர் காலியில் தாக்கப்பட்டது பற்றிக் கூறும் தலைவர் காலியில் கடற்படை முகாம் மீதான தாக்குதல் முயற்சி வரைக்கும் அங்கு தமிழர்கள் பிரச்சனையின்றி இருந்தார்கள் என்ற உண்மையை மறைக்கிறது,

எமது விடுதலை இயக்கமும் சரி. எமது மக்களும் சரி. என்றுமே போரை விரும்பியதில்லை, வன்முறைப் பாதையை விரும்பியதில்லை, நாம் சமாதானத்தையே விரும்புகிறோம், சமாதான வழிமுறை தழுவி. அமைதி வழியில் எமது மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க நாம் என்றுமே தயங்கியதில்லை என்ற மகத்தான உண்மையை நம்புபவர்கள் யாராவது எஞ்சியிருந்தால். அகிம்சை வழியில் வென்றெடுப்பதாகக் கூறிய தலைவர்களை துரோகிகளாக்கி மண்டையில் போட்ட வரலாறை தலைவருக்கு ஞாபகப்படுத்துவது நல்லது,

கருணாவின் பிரச்சனையை உள்வீட்டுப் பிரச்சனை என்று கூறி பின்னால் அழிக்க முடியாமல் போன கையாலாகாத் தனத்தை மறைத்து ஒட்டுக் குழுக்களை சந்திரிகா அரசு அரங்கேற்றியதாகக் குற்றம் சாட்டும் அதே நேரம். அதே சந்திரிகா அரசு தான் புலிகள் கடல் மூலமாகவும் அரச கட்டுப்பாட்டுப் பகுதி ஊடாகவும் கருணா அணியினரை அழிப்பதற்கு சென்ற போது கண்டு கொள்ளாமல் இருந்தது என்பதை மறந்து விடுகிறது, அன்று சந்திரிகா அரசு புலிகளின் அந்த நகர்வைத் தடுத்து நிறுத்தியிருந்தால் இன்று நிலைமை புலிகளுக்கு இன்னமும் மோசமாக இருந்திருக்கும், கருணா குழுவின் பிரிவிற்கும் அவர்கள் அரசின் அனுசரணையுடன் புலிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு புலிகளின் அரசியல் பண்pகளை இடைநிறுத்த நிர்ப்பந்தித்ததற்கும் புலிகளே காரணம், இந்திய இராணுவத்தின் நிர்ப்பந்தத்தில் புலிகள் பிரேமதாசாவில் காலில் வீழ்ந்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் உண்டு

இந்த துணைக்குழுக்களால் அறிவுஜீவிகள். அரசியல்வாதிகள். ஆதரவாளர்கள். பத்திரிகையாளர்கள். போராளிகள். அப்பாவிப் பொதுமக்கள் எனப் பலரும் கொல்லப்பட்டனர் என்று கூறும் தலைவர் புலிகள் அவ்வாறு யாரையும் தாங்கள் கொல்லவில்லை என்று மறுப்பாரா இந்த ஆயுதக் குழுக்களின் அராஜகத்தால் தமிழர் தாயகம் வன்முறைக் களமாக மாறியது என்று குமுறும் தலைவர் வடக்கு கிழக்கில் தினசரி கொன்று குவிக்கும் அந்த இனந் தெரியாத நபர்கள் மற்றும் கொன்று தள்ளும் எல்லாளன் படை எல்லாம் யார் என்பதைக் கண்டுபிடித்து தமிழ் மக்களுக்குத் தெரிவிப்பாரா

தூர நோக்குடைய எதிர்காலப் போரியல் திட்டங்களுக்கு அமைவாக மாவிலாற்றிலும் சம்பூரிலும் நாம் மேற்கொர்ட தந்திரோபாயப் பின்வாங்கலை முன்னரே நிகழ்த்தியிருந்தால் போராளிகள். பொதுமக்கள் என்ற பெரும் பேரழிவைத் தடுத்திருக்கலாமே? முன்னேறி வரும் இராணுவத்தைத் தடுத்து நிறுத்தும் புலிகளின் தாக்குதல் பற்றி புலிகள் ஊடகங்களும் இராணுவப் பேச்சாளரும் விளாசித் தள்ளியதை யாரும் தலைவருக்குச் சொல்லவில்லையா முடியாத போது சீ, சீ, இந்தப் பழம் புளிக்கும் என்றால் எப்படி?

இந்த விடுதலைப் பாதையில் சென்று. சுதந்திரத் தமிழீழத்தனியரசை நிறுவுவது என இன்றைய நாளில் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம் என்று கூறினாலும். இது வரை காலமும். சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்திலும் கூட. தமிழீழத் தாயகம் தானே தமது தாகம் என்று புலிகள் கூறி வந்தார்கள்,

இதற்குள். தேர்தல் வந்தால் வெட்கமின்றி யாருடனும் கூட்டு வைக்கத் தயாராக இருக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கு நன்றியும் தெரிவித்து. உலகத்தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் வேண்டி நிற்பதாகவும். அவர்கள் தங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறும்ழூ உரை வேண்டி நிற்கிறது,

வேலிசண்டையில் வெட்டுக் கொத்துக்கு உள்ளாகி கோடேறி வழக்காடிய வீரப்பரம்பரை ஒருபுறமிருக்க, வேலிச் சண்டைகளில் அடுத்த வீட்டானை எதிர் கொள்ளப் பயந்து. தெருச் சண்டியர்களுக்கு பணம் கொடுத்து காரியம் சாதிக்க முயன்ற படித்த யாழ்ப்பாண்pகள் போல, இன்றும் பண்த்தைக் கொடுத்து ஈழம் பெறலாம் என்ற கனவில் பலர் உள்ளதை, மாவீரர் தினத் தொலைக்காட்சி நிகழ்வில் காண முடிந்தது, மாவீரர் கல்லறை போன்ற ஒன்றை வரிசையாக நின்று பூ வைத்து தொட்டுக் கும்பிடும் பாமரர்கள் இருக்கும் வரைக்கும் விடுதலை வியாபாரம் குறைவில்லாமல் ஓகோ என்று நடக்கும் என்பதில் சந்nதகமேயில்லை, இந்த கூத்துக்கள் எல்லாம் தமிழ்த்தேசியம் புதிய காற்றைச் சுவாசித்து புதிதாகச் சிந்திக்க மறுக்கிறது என்பதையே காட்டி நிற்கிறது,

வெளிநாட்டுத் தமிழர்கள் பணத்தைக் கொடுத்து விட்டு தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து விசிலடித்து மகிழலாம், 85ம் ஆண்டு முதல் ஏவுகணை வாங்க என்று சேர்க்கத் தொடங்கிய பண்ம் இன்னும் சேர்த்து முடியவில்லை, சேர்த்த பணத்தில் ஏவுகணை வாங்கப்பட்டதோ என்னவோ. பலர் மார்க்கம் நகரில் வீடு வாங்கியிருக்கிறாhர்கள்,

ஆனால், இன்று வடக்கிலும் கிழக்கிலும் அன்றாட உணவுக்கு கூட தட்டுப்பாடு உள்ள நிலையில் பரிதவித்து நிற்கும் மக்களுக்கு புலிகளின் இந்த தமிழீழம் தான் ஒரே தீர்வு விடயம் அடிவயிற்றில் இடி விழுந்த கதை தான், மத்தளம் போல இரண்டு பக்கமும் இடி வாங்கிக் கொண்டிருக்கும் மக்கள் பட்டினி கிடந்து இறந்தாலும் பரவாயில்லை. தமிழீழம் காண்போம் என்று சபதமிட்டால். எல்லோருமே அவர்களின் முன்னால் தலை வணங்க முடியும்,

குறைந்த பட்சம் இராணுவப் பேச்சாளரின் கண்டி வீதியைத் திறக்காவிட்டால் திறக்க வைப்போம் என்ற சவடாலை நிறைவேற்றினால் கூடப் பரவாயில்லை, அவர்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்காமல். வெளிநாட்டில் தங்கள் பிள்ளைகளை வசதியாகப் படிப்பித்துக் கொண்டு விடுமுறைகளில் விலாசம் காட்டச் செல்வதற்காகத் தமிழீழம் பெறுவதற்கு அவர்களிடம், கொன்று சிவந்த கரங்கள் கொடுத்துச் சிவந்த கரங்களிடம், கையேந்தி நிற்பது அப்பாவி மக்களதும் மாவீரர்களதும் பலி கொடுப்பு தற்போதைக்கு நிற்கும் சாத்தியம் இல்லை என்பதையே காட்டி நிற்கிறது,

சோமாதேவி பாடசாலை விடயத்தில்

செஞ்சோலை தாக்குதல் குறித்து சத்தமிட்டோர் சோமாதேவி பாடசாலை விடயத்தில் மௌனம் சாதிப்பதாக குற்றச்சாட்டு

அமைச்சர் கெஹலிய



முல்லைத்தீவில் புலிகளின் செஞ்சோலை ஆயுதப் பயிற்சி முகாம் மீது விமானப் படையினர் தாக்குதல் நடத்திய வேளையில் பாடசாலையொன்று தாக்கப்பட்டு அப்பாவி மாணவிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சத்தமிட்டு கூடிய பலர் கடந்த வியாழக்கிழமை திருகோணமலை கல்லாறு சோமாதேவி பாடசாலை மீது புலிகள் ஷெல் தாக்குதல் நடத்தி அழிவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மௌனம் சாதிப்பதாக பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சாட்டினார். இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் போருக்கு எதிரான அமைப்புகள் என்பவற்றையே அமைச்சர் இவ்வாறு சாடினார்.

நாராஹேன்பிட்டியிலுள்ள தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; கதிரவெளி மற்றும் வெருகல் ஆகிய பகுதிகளில் அப்பாவி தமிழர்களைப் பணயமாக வைத்துக் கொண்டு புலிகள் கல்லாறு சோமாதேவி வித்தியாலயம் நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தி உயிரிழப்பு மற்றும் அழிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். இதேநேரம் குறித்த அந்தப் புலிகளின் இலக்குகள் ராடார் கருவிகளின் மூலம் அடையாளம் காட்டப்பட்ட போதும் அங்கு பொது மக்கள் இருக்கும் நிலையில் படையினர் திருப்பித்தாக்கவில்லை.

படையினரை ஆத்திரமூட்டி திருப்பித்தாக்க வைத்துப் பொது மக்களைச் கொல்லச் செய்து சர்வதேச சமூகத்திற்குப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதாக பிரசாரமொன்றை மேற்கொள்ளவும் அரசாங்கத்தை இக்கட்டான நிலைமைக்குள் தள்ளவும் திட்டமிட்டே புலிகள் சோமாதேவி வித்தியாலயம் மற்றும் கல்லாறு கிராமம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அண்மைக் காலாமாக புலிகள் தமது புதிய யுத்த உக்தியாக அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து கொண்டு படையினர் மீது தாக்குதல் நடத்துவதைக் கையாண்டு வந்தது நன்கு தெளிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் திருப்பித் தாக்குவது இப்போது கவனமாக கையாளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அவர்கள் எதிர்பார்த்தது நடவாமல் அவர்களின் திட்டம் தோல்வி அடைந்துள்ளது. இதேவேளை இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் உடனடியாக அறிவித்து சோமாதேவி பாடசாலை தாக்குதலுக்குள்ளாகி இருப்பதைக் கண்காணிக்குமாறு கோரிய போதும் இதுவரை யாரும் அங்கு சென்று அது குறித்துக் கவனம் செலுத்த வில்லை.

ஆபத்து நிறைந்த இடத்திற்கு விரைந்து சென்று படையினர் மற்றும் அரச நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்வதிலும் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவதிலும் மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் பிரச்சினைகள் இல்லாத தடையின்றி செல்லக் கூடிய இடங்களுக்குச் சென்று அங்கு புலிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள அவலத்தை உலகிற்கு எடுத்துக் கூற இதுவரை முன்வர வில்லை. இது வேதனைக்குரிய மற்றும் கண்டிக்கத்தக்க விடயமாகவுள்ளது. இதேவேளை மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து ஆயுதங்களை அப்புறப்படுத்த புலிகளிடம் கோருமாறும் அப்பாவி மக்களை ஆயுதங்கள் உள்ள இடங்களிலிருந்து அகன்று செல்லுமாறும் அல்லது புலிகளின் இவ்வாறான நடவடிக்கைகளை உலகிற்கு அம்பலப்படுத்துமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கும் இவர்கள் செவிசாய்க்கவில்லை.

இதனால் இவர்கள் பக்கசார்பாகவும் தங்களுக்கு சாதகமான வகையிலும் நடந்து கொள்வது நன்கு புலப்படுகிறது. செஞ்சோலை விடயம் அரசாங்கத்தினால் உரிய ஆதாரங்களுடனும் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் ஊடாகவும் அது புலிகளின் ஆயுதப் பயிற்சி முகாமென உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் சோமாதேவி வித்தியாலயம் அரச பாடசாலை மற்றும் அப்பகுதி மோதல் தவிர்ந்த இடமாக இருப்பதும் அங்கு அத்துமீறல் தாக்குதல் இடம் பெற்றுள்ளது பற்றியும் கூற வேண்டியுள்ளது என்றார். அமெரிக்கா இச்செயலைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளது. அந்த நாடு பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் நன்கு அடையாளம் கண்டு கொண்டுள்ளது என்றும் மேலும் கூறினார்.

வாகரை நோக்கி 2வது நாளாகவும் ஷெல் தாக்குதல்

வாகரை நோக்கி 2வது நாளாகவும் ஷெல் தாக்குதல் 18 பொதுமக்கள் பலி; 3க்கும் மேற்பட்டோர் காயம்


மட்டக்களப்பு வாகரையினை நோக்கி நேற்று இரண்டாவது நாளாகவும் படையினர் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் 10 பொது மக்கள் பலியானதுடன் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வாகரை நோக்கி மாங்கேணியூடாக முன்னேற முயற்சித்த படையினரே கடும் ஷெல் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட வம்மிவெட்டுவான் பாற்சேனை பகுதிகளில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களை அண்டிய பகுதிகளிலேயே ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படையினர் கடலில் இருந்தும் ஷெல் தாக்குதலை நடத்தி வருவதனால் படுகாயமடைந்த மக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 7 மணி முதல் பிற்பகல் வரை படையினர் ஷெல் தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவருகின்றது. ஷெல் தாக்குதலுக்கு அஞ்சி 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாகரை மருத்துவமனையில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் வாகரை பகுதியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 பொது மக்கள பலியானதுடன் 40 பேர் வரையில் காயமடைந்திருந்தனர். இதேவேளை இரு படையினர் பலி மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான கஜுவத்தை மற்றும் கிருமிச்சை போன்ற பிரதேசங்களில் நேற்றுக்காலை இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு படையினர் பலியானதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்களின் அண்மித்துள்ள பிரதேசங்களில் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் விடுதலைப் புலிகள் இப்படையினரை இலக்குவைத்து ஷெல் மற்றும் மோட்டார் குண்டுத்தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்
இச் சம்பவத்தில் பலியான இராணுவ சிப்பாய்களின் சடலங்களும் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இதில் காயமடைந்தவர்களும் படைச்சிப்பாய்களும் இவ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து படையினரும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இலக்குவைத்து தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர். படையினரால் ஏவப்பட்ட மோட்டார் குண்டுகளும் மற்றும் ஷெல்களும் விடுதலைப் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளதால் விடுதலைப் புலிகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்தனர். குண்டுகள் வீழ்ந்து வெடித்து சிதறுவதால் அப்பிரதேசங்களில் எப்போதும் குண்டுச் சத்தங்கள் கேட்டவண்ணமிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பால்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள அகதி முகாம்களிலும் வீடுகளிலும் ஷெல் மற்றும் மோட்டார் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததினால் 20 அப்பாவி மக்கள் பலியானதுடன் மேலும் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவத்தில் பலியான மக்களின் சடலங்கள் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்த பொதுமக்கள் அனைவரும் இவ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேரினது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வாகரை வைத்தியசாலை டாக்டர் பி. வரதன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 4.00 மணிவரை வாகரை பால்சேனை கதிரவெளி போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் படுகாயமடைந்த அப்பாவிமக்களை வாகரை வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஐ.சி.ஆர்.பி. பிரதிநிதிகள் மேற்கொண்டிருந்த போதிலும் பாதுகாப்புப் படையினர் இதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி ஷெல் தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் வயோதிபர்கள் உட்பட இளைஞர் யுவதிகள் பலரும் பலியானதுடன் படுகாயமடைந்திருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் ஈச்சிலம்பற்று மற்றும் சம்பூர் போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்கள்காரணமாக இடம்பெயர்ந்த மக்களும் அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களும் வாகரை பால்சேனை கதிரவெளி போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை ஈச்சிலம்பற்று பிரதேசத்தின் ஊடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட படை நகர்வின் போது விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் உக்கிரமான மோதல் நடைபெற்றிருந்த வேளையில் ஷெல் மற்றும் மோட்டார் குண்டு வீச்சுகளும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு வீசப்பட்ட ஷெல்கள் மற்றும் மோட்டார் குண்டுகள் மக்கள் குடியிருக்கும் அகதி முகாம்களில் வீழ்ந்து வெடித்துள்ளதால் தலா ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மூவர் நான்கு பேர் என்ற அடிப்படையில் பலியானதுடன் படுகாயமடைந்தும் உள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து மக்கள் அல்லோலகல்லோலப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. மேற்படி முகாம்களில் காணப்பட்ட பொருட்களும் சேதமாகியுள்ளன. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்

விரைவில் A15 பாதை திறப்பு?

விரைவில் வாகரைக்கான ஏ-15 பாதை திறப்பு?

(அடியான்)


யாழ்ப்பாணத்திற்கான ஏ9 பாதை, மற்றும் வாகரைக்கான ஏ-15 ஆகிய பாதைகள் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் திறக்கப்பட வேண்டும் என்பதே புலிகளின் நிலைப்பாடாகும். இதையே சென்றவாரம் வன்னி சென்றிருந்த நோர்வேக்கான தூதுவர்களிடமிமும் தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.

தற்போது வாகரைக்கான ஏ-15 பாதையை அரசாங்கம் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விரைவில் திறந்து விடக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. ஏனென்றால் எந்த விலைகொடுத்தாவது புலிகள் தற்போது கிழக்கில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகுதிகளை கைப்பற்ற அரசாங்கம் பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படி கிழக்கு அரசாங்கத்தின் கட்டுபாட்டிற்குள் வந்தால் ஏ-15 பாதையை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லையே.

வாகரை, ஈச்சிலம்பற்று, கதிரவெளி போன்ற இடங்களில் நடைபெறும் தாக்குதல் பற்றி அரசாங்கம் பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்ளாத போதிலும் அவர்கள் ஏற்கனவே பல கிலோ மீட்டர்கள் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவி இருப்பதாகவே அறிய முடிகிறது. அரசாங்கம் நில ஆக்கிரமிப்புச் சமரில் ஈடுபட்டுள்ளது என புலிசார்பு ஊடகங்கள் சொல்வதிலிருந்தே தங்கள் பகுதிகளை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். அவ்வப்போது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என்று அவை சொல்லிக் கொள்வதாலோ, அல்லது இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை பல மடங்கு கூட்டிச் செல்வதாலோ புலிகள் வெல்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல. தாங்கள் இராணுவத்தின் உடல்களை கைப்பற்றியிருப்பதாகவும், ஒரு ராணுவ வீரரை உயிருடன் பிடித்திருப்பதாகவும் சொல்வதும் ஒருவேலை உண்மையாக இருக்கலாம். ஆனால் இதுபற்றிய புகைப்படங்கள் இன்னும் புலிகளின் ஊடகங்களில் வெளியாகவில்லை.

கிழக்கில் அரச படைகளுடன் தங்களால் ஈடுகொடுக்க முடியாது என்பதை சம்ப+ர் தாக்குதலின்போதே புலிகள் உணர்ந்திருப்பார்கள். அதனால்தானோ என்னவே கிழக்கின் முக்கிய தளபதிகள் பலர் ஏற்கனவே வன்னி சென்று விட்டனர். சம்ப+ரில் தாக்குதல் நi;டபெற்றபோது களநிலவரம் சம்பந்தமாக எழிலன் தான் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இப்போது அவரையும் காணவில்லை. எல்லாவற்றுக்கும் இளந்திரையன்தான் பதிலளிக்கிறார்.

புலிகளை அரசாங்கம் கிழக்கில் வெற்றி கொண்டால் அதையும் அடுத்த மாவீரர் உரையின்போது தாங்கள் தந்திரோபாயமாக பின்வாங்கியதாகவே பிரபாகரன் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

தை பிறக்குமுன் கிழக்கு மக்களுக்கு வழியும், புலிகளுக்கு வலியும்தான் பிறக்கும்போல் தெரிகிறது

தொல்.திருமாவளவனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள தலித் மக்கள் எழுப்பும் கேள்விக்கு உங்கள் பதில் என்ன

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்


திரு. தொல் திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு

தமிழ் நாடு. இந்தியா

அன்புள்ள தலைவர் அவர்கட்கு,

கடந்த பல வருடங்களாக இலங்கைத் தமிழரை உலுக்கி வருகிற அரசியலில் நீங்கள் அக்கறை காட்டிவருவதையும், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ ;நாட்டின் தலித் சமூகத்தின் ஒரு பிரிவின் தலைவராக இருந்து அந்தப் பிரிவு மக்களை சமூக விடுதலையை நோக்கி வீறு நடை போடவைக்கும் முயற்சிகளில் நீங்கள் ஈடுபட்டு வருவதை மனதிற் கொண்டும் யாழ்ப்பாண மாநிலத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் விடுதலைப ;புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் அங்குள்ள தமிழ்ச் சமூகத்திற்கு குறிப்பாக உங்கள் பிரிவைச் சேர்ந்த சமூகத்திற்கு புலிகளினால் செய்யப்பட்ட பெரும் அநீதி ஒன்றை சுட்டிக்காட்டி அதற்கு உங்களிடமிருந்து நியாயம் கேட்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இந்தக் கடிதத்தில் பொதிந்தள்ள செய்தி இரு நபர்களுக்கிடையே எழுந்த தனிப்பட்ட விவகாரமல்ல. பதிலாக புலிகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தையுமஇ; நீங்கள் இலங்கையின் அரசியல் மோதலில் ஒரு பக்கத்தையே பார்த்துஇ அதே பக்கமே உங்கள் புலன்களைத் திசை திருப்பி வைப்பதையும் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் எதிர் காலத்தையும் தமிழ்நாட்டு தலித் மக்கள் விடுதலைப் புலிகள் மீது வைத்திருக்கும் பார்வையையும் கேள்விக்கு உட்படுத்தும் செய்தி இது. இது இதுவரை பத்திரிகைகளிலே அல்லது ஏனைய தொடர்புச் சாதனங்களின் சேவையிலோ தெரிவிக்கப்படாத அல்லது இருட்டடிக்கப்பட்ட ஒன்று. ஆகையால்தான் இச் செய்தியை உங்களுக்கும்இ உங்களுக்குப் பின்னால் தமிழ் நாட்டில் அணிதிரண்டிருப்போருக்கும் தெரிவிப்பதற்காக இந்தக் கடிதத்தை பகிரங்கமாக எழுதுகிறேன்.

இந்தக் கடிதத்தை ஒரு தலித் தலைவரான உங்களுக்கு எழுதுவதற்கு எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று நீங்கள் ஒரு கேள்வியை முன்வைக்கலாம். நீங்கள் முன்வைக்கத் தயங்கினாலும்இ நீங்கள் பாடிவருகிற ஈழத்துப் பரணியின் நாயகரும் அவரைச் சுற்றி ஆலவட்டம் தூக்குவோரும் என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கண்டிப்பாகக் கேட்பார்கள். அதனால் என்னைப் பற்றிய அறிமுகத்தை ஓரிரு வரிகளில் கூறிவிடுகிறேன். நீங்கள் தமிழக சமூகத்தில் தலித்துகளின் ஒரு பகுதியினருக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்காக உறுதிப+ண்டு எவ்வாறு போராட முன்வந்தீர்களோ அதேபோல 1966-1968 இல் பாடசாலை மாணவனாக இருக்கும் போது தீண்டாமைக்கு எதிராக போராடுவதற்காகக் களமிறங்கிஇ உலகின் கவனத்தை ஈர்த்த மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தொடக்கம் பல சைவத் தமிழ் கோவில்களை யாழ்ப்பாணத்தில் பஞ்சமர்களக்கு (தலித்துகளுக்கு) திறந்து வைப்பதற்காக போராடியவர்களுள் நானும் ஒருவன். பின் உயர் கல்வியை முடித்துக் கொண்டுஇ சாதிய ஒடுக்கு முறையின் குறிப்பாக தீண்டாமைக் கொடுமையின் தாக்கத்திலிருந்து தள்ளியிருக்கும் கொழும்பு நகரில் சுதந்திரமாக வேலை செய்து சௌகரியமாக வாழும் வாய்ப்புக் கிடைத்தும்இ யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தேன். யாழ்ப்பாண நிலத்தில் தீண்டாமையின் அழுத்தத்தினால் அடங்கி ஒடுங்கிய சமூகங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிக்கொள்வதற்காக.

அவ்வாறு எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்று: 1984ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள உயர் பாடசாலையில்- அதன் விஞ்ஞான ஆய்வு கூடத்தில-; உங்கள் பிரிவைச் சேர்ந்த நடுத்தர வயது கொண்ட தலித் ஒருவர் ஆய்வுகூட உதவியாளராக வேலை செய்தார். சில நாட்களின் பின்பு ஒடுக்கு முறையாளர் (வெள்ளாள) சமூகத்தைச ;சேர்ந்த அதே வயதுடைய ஒருவர் பிய+னாக புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டார். ஒரு வாரத்திற்குள் புதிதாக சேர்ந்த பிய+னை ஆய்வு கூட உதவியாளராக வேலை செய்ய வைத்துவிட்டு. அந்த தலித் சகோதரனை பிய+னாக பதவி தாழ்த்தியது மட்டுமல்லஇ அந்தப் பாடசாலையில் அவரைஇ கூட்டிக் கழுவுகிற வேலை செய்யுமாறு உத்தரவிட்டார் பாடசாலையின் அதிபா.; இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த அந்த தலித் சகோதரனை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கூட்டிக் கொண்டு வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியிலிருந்து நிவாரணம் பெற்றுத் தருமாறு கேட்டார். இது சம்பந்தமாக கல்வி இலாகா அதிகாரிகளுக்கும் எனக்கும் நடந்த கடுமையான பேச்சு வார்த்தையின் பயனாக அந்தத் தலித் சகோதரனை இன்னொரு பாடசாலைக்கு இடம் மாற்றியதுமஇ; வேலை இழந்த ஒரு மாத காலத்திற்குரிய சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்ததும் தான் அப்போது என்னால் செய்ய முடிந்த உதவி.

ஏன் இவ்வாறான சமரசத்திற்கு நாங்கள் உடன்பட்டோம்? இந்த விவகாரத்தைப் போராட்டமாக்கியிருந்தால் பல தமிழீழ விடுதலை இயக்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியத்திற்கான போராட்டத்தை அன்றைய சிங்கள அரசு, இலகுவாக தமிழர்களைப் பிரித்து அந்தப் போராட்டத்தை நலிவடையச் செய்துவிடும் என்பதனால்தான். தமிழர்களின் ஐக்கியத்தை உடைக்கஇ தமிழர் சமூகத்தின் ஒரு பகுதியான தலித்துகள் சிங்கள இனவாத அரசுக்கு துணைபோகக ;கூடாது என்பதற்காகவே. எவ்வளவு துன்பத்தை அனுபவித்தாலும் தனது இனத்தை எதிரி பிளவுபடுத்த விடக்கூடாது என்ற கொள்கை எங்களுக்கு மாத்திரமல்லஇ எம் மூதாதையர்களுக்கும் இருந்தது. அதனால்தான் போத்துக்கீசரும், ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் இலங்கை நாட்டை ஆக்கிரமித்த போது தலித் மக்கள் அந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாகப் போகவில்லை. பதிலாக இவர்களை அடக்கிவந்த உயர்சாதியினர்தான் அவர்களுக்குத் துணைபோனார்கள்.

சரி. அந்த அதிபரும் அங்கே வேலை செய்த ஆசிரியர்களும் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள்? ஏன் அந்த தலித் சகோதரனை பதவியிறக்கி அவ்வாறு சித்திரவதை செய்தார்கள் என்பதை நீங்கள் இலகுவாக விளங்கிக் கொள்வீர்கள். ஆனால் புலிகளுக்கு வன்னியிலிருந்து சாமரம் வீசும் தலித்துகளுக்கு இவற்றை விளங்கப்படுத்தத்தான் வேண்டும். ஏனெனில் புலிகளின் அன்பு மழையில் இந்தத் தலித்துகள் எல்லாம் ஞானஸ்தானம் பெற்றுஇ சைவ வெள்ளாளத் தமிழர்களாகிவிட்டார்கள்;.

இந்திய அமைதிப் படையின் காலத்திலே புலிகள் பதுங்கி இருந்த போது மக்கள் மத்தியிலே துணிச்சலாக சென்று புலிகளுக்காக பரப்புரை செய்த “செங்கதிர்’’ என்ற தலித் தோழனை கொன்றவர்கள் இந்திய இராணுவமோ இலங்கை இராணுவமோ அல்லது ‘‘ஒட்டுக்குழுக்களோ’’ அல்ல. புலிகள் இயக்கத்துள் ஆதிக்கம் செலுத்தும் சைவ வெள்ளாளர்களே. இது ஒரு பகிரங்கமான வரலாற்றுப் பதிவு. ஆனால் புலிகளுக்கு சாமரம் வீசும் தலித்துகள் இவற்றையெல்லாம் மறந்துவிட்டு பரலோகம் போவதற்கு சிதம்பரத்தில் மூட்டிய தியில் விழுந்த நந்தனைப் போல புலிகள் மூட்டிய கரும்புலித் தீயில் போட்டி போட்டுக் கொண்டு விழுந்துகொண்டிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட பாடசாலையில் அந்த தலித் சகோதரனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போன்று பல நூறு சம்பவங்கள் தமிழீழப் போராட்டம் தொடங்கிய பின் நடந்தள்ளன. தமிழ் ஈழம் கேட்டு போராடிய ஏனைய இயக்கங்கள் பலவீனப்படுத்தப்பட்டு புலிகளால் அழிக்கப்பட்டதற்குரிய காரணங்களில் முக்கியமானது தலித்துகளுக்கு மற்ற இயக்கங்களில் சில முக்கிய இடம் கொடுத்ததே.

1991ம் ஆண்டில் குறிப்பாக இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து வெளியேறிய பின் வடமாகாணம் முழுவதும் புலிகளின் அதிகாரம் மீண்டும் நிறுவப்பட்டது. அந்த நேரத்தில்தான் புலிகள் தங்கள் பாஸிஸ கோரத்தை தலித்துகளுக்கு காட்டுவதற்கு முன்வந்தார்கள்.

தலித் சமூகத்துள்ளும் குறிப்பாக உங்களுடைய பிரிவைச்சேர்ந்த சமூகத்திற்கு எதிராக?

அதுதான் உங்கள் சமூகத்தைச் சேர்ந்த தலித்துகளின் ஒரே ஒரு அமைப்பான திருவள்ளுவர் மகாசபையை இயங்கவிடாமல் தடையுத்தரவு பிறப்பித்துஇ அந்த நிறுவனத்தின் அறிக்கைகள், வைப்புப்பணம், உபகரணங்கள் முதலியவற்றை விடுதலைப் புலிகள் சூறையாடிச் சென்றது, அதுவும் துப்பாக்கிமுனையில்.

தலித் மக்களுக்காக. 1940இன் பிற்பகுதியில் போராட நிறுவப்பட்ட சிறுபான்மை தமிழர் மகாசபைஇ தீண்டாமையைக் கோவில்களிலும் தேநீர்க் கடைகளிலும் வேறு பொது இடங்களிலிருந்தும் அகற்றுவதற்கு போராடிக் கொண்டிருந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஐன இயக்கம் ஆகியன போராட்ட இயக்கங்களாக செயற்பட்டமையால் விடுதலைச் சிறுத்தைகளின் சமூகத்தைச் சார்ந்த யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தலித் பிரிவு மக்களை முன்னேற்றுவதற்கு கல்வியை வழங்கவதுதான் ஒரே வழியெனத் தீர்மானித்து, அந்தத் திட்டத்தை தனது நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் திருவள்ளுவர் மகாசபை. தமது சமூகத்திலுள்ள ஓரளவு வசதியுள்ளவர்களிடமிருந்து நிதியைத் திரட்டி தமது சமூகத்திலுள்ள ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு உதவிவந்தது அந்த நிறுவனம். அதே வேளையில் தமது உரிமைகளுக்கு எந்த வகையான போராட்டத்தையும் நடத்த விரும்பாத அமைப்பு அது. தனித்து நின்று போராடும் வல்லமை அவர்களுக்கு இருக்கவில்லை.

தமிழ்ச் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து மக்களின் ஒரு பிரிவினருக்காக உருவாக்கப்பட்ட அந்த அமைப்பை நீங்கள் தலையில் வைத்து காவித்திரியும் புலிகள் மூடவைத்தார்கள். புலிகளின் கனவாகிய தமிழீழம் ஒன்று அமைவதற்கு முன்பே அவர்களின் எதிர்கால குடிமக்களில் ஒரு பகுதியான தலித்துகளுக்குச் சேவை செய்து வந்த ஒரு சமூக அமைப்பை புலிகள் தடைசெய்ததற்கு அதன் பாஸிஸ இயல்புதான் ஒரே காரணம். இந்நிலையில் அவர்கள் கற்பனை செய்யும் தமிழீழத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கும் மனித உரிமைகளுக்கும் ஐனநாயகத்திற்கும் என்ன நடக்கும்? அவை குழி தோண்டி புதைக்கமாட்டாது என்பதை மறுத்து வாதிட உங்களிடம் ஏதாவது நியாயங்கள் இருக்கின்றனவா? சாதிக் கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய சமூகத்தில் சுதந்திரமாக நின்று ஒரு சாதி ரீதியான ஒரு அரசியல் இயக்கத்தை நீங்கள் நடாத்த இந்திய சமூகம் உங்களுக்கு இடம் அளித்த அளவிற்கு புலிகளின் தமிழீழத்தில் ஒரு சமூக அமைப்பை தலித்துகளுக்காக நடாத்த முடியவில்லை என்றால் புலிகளின் சமூகம் முற்போக்கானதா அல்லது இந்திய சமூகம் முற்போக்கானதா? என்று இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள தலித் மக்கள் எழுப்பும் கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்பதை தயவு செய்து பகிரங்கமாக எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இங்ஙனம்இ

அன்புள்ளஇ

மு.ஏரம்பு

மார்கழி 10இ 2006

தலைவர் கருணாஅம்மானின் நேரடி செவ்வி….

கிழக்கிலுள்ள தமிழ்மக்கள் என்று மட்டும் வரையறை வைத்துக் கொண்டு நாம் போராடவில்லை. வடக்கிலுள்ள தமிழ்மக்களும், பிரபாகரனின் அடக்கு முறையினால் பெரும் இன்னல்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர். இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின மக்களினதும் நிம்மதியான வாழ்வதற்கும், சகோதரத்துவ உறவி;ற்கும் இன்று பெரும் தடையாக இருப்பது பிரபாகரனின் பயங்கரவாதமும், வன்முறையும் தான். எனவே எமது போராட்டம் அனைத்து மக்களுக்காகவும் தான். இதில் நாம் பிரதேச, இன, மொழி ரீதியாக வேறுபாடுகளை எக்காலத்திலும் ஏற்படுத்தப் போவதில்லை. ரிஎம்விபித் தலைவர் கருணாஅம்மானின் நேரடி செவ்வி….


--

பிரபாகரனின் அடக்குமுறையிலிருந்தும், கொலைக் கலாச்சாரத்திலிருந்தும் எம் மக்களை விடுவிக்கவே நாம் ஆயுத ரீதியாகப் போராடுகின்றோம். எமது இவ்விலக்கு எய்தப்படும் வரை எமது போராட்டத்தில் எம்மாற்றமுமில்லை. – கருணாஅம்மான்
( அதிரடி நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் ரிஎம்விபியின் தலைவர் கருணாஅம்மான் அவர்களைச் செவ்வி காணும் நோக்கில் (தயக்கத்துடன்) ரிஎம்விபியின் மட்டுநகர் அரசியல் செயலகத்தில் ரிஎம்விபியின் ஊடகத் தொடர்பாளர் அசாத் மௌலானா மற்றும் ரிஎம்விபியின் தமிழ்அலை பத்திரிகை ஆசிரியர் குழுவில் ஒருவரான கோபி ஆகியோரை நேற்றுமாலை சந்தித்தேன். அவர்கள் தமது ரிஎம்விபியின் முதன்நிலைப் பொறுப்பாளர் பிள்ளையானுடன் தொடர்பு கொண்டு எனது விபரத்தை தெரிவித்ததும் நான் ரிஎம்விபியின் மட்டுநகர் அரசியல் செயலகத்தில் பல மணிநேரம் தங்க வைக்கப்பட்டேன். பின் தமது வழமையான சோதனைக்குப் பின்னர் நள்ளிரவில் வாகனமொன்றில் என்னை ஏற்றிக் கொண்டு பயணித்தனர். வாகனம் குறிப்பிட்ட இடத்தை அடைய முன்பாக குறைந்தது ஐந்து தடவையாவது குறிப்பிட்ட இடங்களில் தரித்து நின்று வாகனத்திற்கு வெளியே நின்ற சில இளைஞர்களுடன் உரையாடி விட்டே பயணித்தனர். (அவ்விளைஞர்கள் ஆயுதங்களுடன் நின்ற தோரனையும், அவர்களின் தமிழ் உரையாடலும் அவர்கள் ரிஎம்விபியின் போராளிகள் என்பதைத் தெளிவாகக் காட்டியது.) நான் குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைந்ததும் அங்கு நிலைமைகளைப் பார்த்தவுடன் ‘ஈ, காக்கைகள்” கூட இலகுவில் நெருங்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததை தெளிவாக உணர்ந்து கொண்டேன்… )



(நான் பேட்டியை ஆரம்பிக்க முதலே ரிஎம்விபியின் தலைவர் கருணாஅம்மான் அவர்கள் ‘அதிரடி இணையம்” எம்மைப் பெரிய சிக்கலில் மாட்டி விட்டதெனச் சிரித்துக் கொண்டே கூறினார். ‘யாது காரணமென?” நான் வினவிய போது.. ‘நீண்டகாலமாக நான் எவரையும் நேரில் சந்திப்பதோ அன்றில் தொலைபேசியில் உரையாடுவதோ இல்லையெனத் தீர்மானித்து செயல்படுகிறோம். எனது கருத்துக்ககை; கூட மின்னஞ்சல் மூலம் தான் தெரிவித்து வந்தேன். முக்கியமாகத் தேவைப்பட்டால் மட்டுமே தொலைபேசியில் உரையாடினேன். ஏனெனில் எமது மக்களுக்காக நாம் குறைந்த பட்சம் எதையாவது சாதித்து விட்டே எல்லோருடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதென இருந்தேன். ஆயினும் அதிரடி இணையம் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை எமக்காகவும் எமது அமைப்புக்காகவும் எமது தரப்புச் செய்திகளை உடனுக்குடன் அதிரடியாக வெளிக்கொண்டு வரும் நடுநிலைமையான செயற்பாடு, மற்றும் மாற்று தமிழ்அமைப்பொன்றின் சர்வதேச முக்கியஸ்தராக இருந்த போதிலும் அதிரடி இணையத்தினருக்காக எல்லா அமைப்புக்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருப்பது போல் எம்முடனும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள அச்சகோதரரின் புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையான செயல்பாடுகளுக்காகவே அவரது வேண்டுகோளுக்கிணங்க உங்களைச் சந்திக்க சம்மதித்தேன். ஆனால் இதனை அதிரடி இணையம் பகிரங்கப்படுத்தியவுடன் சிங்கள ஆங்கில தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் என்னை நேரில் சந்தித்து உரையாட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்கள். விரைவில் பத்திரிகையாளர்களை மட்டுமல்ல எனக்கும் எமது அமைப்புக்கும் ஆரம்பகாலம் முதலே உதவுபவர்களுடன் கூட உரையாடுவேன் என்பதையும் அதுவரை அனைவரும் பொறுத்திருக்குமாறும் அதிரடி இணையம் ஊடாகக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.)

********
கேள்வி:- உங்கள் அமைப்பின் குறிப்பாக இராணுவப்பிரிவின் பிரதான நோக்கமென்ன?
கருணாஅம்மான்:- இப்போதும் அரச படையினருக்கும், பிரபா குழுவினருக்கும் இடையே மோதல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசபடையினருக்கும், பிரபா குழுவினருக்குமிடையே பாரிய யுத்தம் ஏற்பட்டாலும், இல்லாவிட்டாலும் எமது இராணுவப் பிரிவின் இலக்கு தெளிவானதும், உறுதியானதுமாகும். இதில் எவ்வித மாற்றமுமில்லை. பிரபாகரனின் அடக்குமுறையிலிருந்தும், கொலைக் கலாச்சாரத்திலிருந்தும் எம் மக்களை விடுவிக்கவே நாம் ஆயுத ரீதியாகப் போராடுகின்றோம். எமது இவ்விலக்கு எய்தப்படும் வரை எமது போராட்டத்தில் எம்மாற்றமுமில்லை. எவ்வித புறக்காரணிகளையும் இதில் தாக்கம் செலுத்த அனுமதிக்கப் போவதில்லை. எமது இராணுவப்பிரிவு தனித்துவமாகவும், சுயாதீனமாகவும் செயற்படுகின்றது. இவை பற்றி நான் பல தடவைகள் தெளிவாக்கியுள்ளேன்.

கேள்வி:- உங்கள் அமைப்பின் செயலகங்களின் செயற்பாடுகள் குறித்து??

கருணாஅம்மான்:- எமது அரசியல் செயலகங்கள் இப்போது விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் எமக்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் உள்ளது. முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் 20அரசியல் செயலகங்ளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. பொத்துவில் தொடக்கம் திருமலை வரை எமது இவ்வரசியல் செயலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. எமது அரசியல் தலைமைச் செயலகம் கொழும்பிலுள்ள அதே நேரம் கிழக்கு மாகாண அரசியல் தலைமை செயலகமான மீனகம் மட்டக்களப்பில் உள்ளது.

கேள்வி:- உங்களின் அரசியல் கெயலகங்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டும் தான் ஏற்படுத்தப்படுமா??..

கருணாஅம்மான்:- எமது அரசியல் செயலகங்களையோ, செயற்பாடுகளையோ நாம் குறுகியதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அனைத்து தமிழ் மக்களுக்குமாகவே எமது அரசியல் பணி விஸ்தரிக்கப்படுகின்றன. இதில் எமக்கு எப்பிரதேச பாகுபாடும் இல்லை. விரைவில் எமது அரசியல் செயலகம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கப்படும். நாம் வடக்கு கிழக்கு மக்களுக்காக மட்டுமல்ல கொழும்பு முதல் மலையகம் வரை அனைத்துத் தமிழ் மக்களுக்காகவும் செயல்படுவோம். அதுமட்டுமல்ல தமிழ்மக்களுடன் சிங்கள முஸ்லிம் தொழிலாள வர்க்க மக்களுக்காகவும் குரல் கொடுக்கவோ அவர்களுக்காகப் போராடவோ தயங்க மாட்டோம்.

கேள்வி:- நீங்கள் பிரதேசவாதியா? கிழக்கு மாகாணம் மட்டும் தான் உங்கள் நோக்கமா??

கருணாஅம்மான்:- நாம் இது தொடர்பில் எமது நிலைப்பாட்டை பல தடவைகள் தெரிவித்துள்ளோம். கிழக்கிலுள்ள தமிழ்மக்கள் என்று மட்டும் வரையறை வைத்துக் கொண்டு நாம் போராடவில்லை. வடக்கிலுள்ள தமிழ்மக்களும், பிரபாகரனின் அடக்குமுறையினால் பெரும் இன்னல்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர். இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின மக்களினதும் நிம்மதியான வாழ்வதற்கும், சகோதரத்துவ உறவி;ற்கும் இன்று பெரும் தடையாக இருப்பது பிரபாகரனின் பயங்கரவாதமும், வன்முறையும் தான். எனவே எமது போராட்டம் அனைத்து மக்களுக்காகவும் தான். இதில் நாம் பிரதேச, இன, மொழி ரீதியாக வேறுபாடுகளை எக்காலத்திலும் ஏற்படுத்தப் போவதில்லை.

கேள்வி:- அப்படியாயின் வடகிழக்கு இணைப்புக் குறித்த உங்கள் கருத்தென்ன??

கருணாஅம்மான்:- வடக்கு-கிழக்கு மாகாணமானது 1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலமே இணைக்கப்பட்டது. இவ்வொப்பந்தத்தில் கூட ஒரு வருட காலத்திற்கே இணைக்கப் படுவதாகவும் தொடர்ந்து இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டுமென்றால் அம்மக்களிடம் சர்வதேச வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அது தொடர்பான சர்வதேச வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் உயர் நீதிமன்ற தீர்ப்புக் குறித்து விமர்சனம் செய்வது ஆரோக்கியமானதல்ல. எம்மைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கானது தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பூமி. வடகிழக்கு தமிழர்களின்; தாயகம் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. வடக்கு-கிழக்கு இணைந்திருக்க வேண்டுமா? பிரிந்திருக்க வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அப்பகுதி மக்கள் தான் அம்மக்களின் விருப்புக்கு தலைசாய்க்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும். மக்கள் தீர்ப்பே மகேசன்(ஆண்டவன்) தீர்ப்பாகும். மக்கள் தீhப்புக்கு நிகரான தீர்ப்பு எதுவுமில்லை.

கேள்வி:- நோர்வே எரிக் சொல்ஹைமினால் பிரபாகரனுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட. தொலைக்காட்சிப் பெட்டி குறித்து அண்மையில் பரபரப்பான செய்தி வெளியாகியது. இது குறித்து உண்மைத் தகவலென்ன? அதன் விபரமென்ன??

கருணாஅம்மான்:- இத்தொலைக்காட்சிப் பெட்டியானது தாய்லாந்தின் பாங்கொக்கில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது எரிக் சொல்ஹைமினால் பிரபாகரனுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. பிரபாகரனுக்கு சினிமாப் படங்களில் பெரும் மோகம் இருக்கின்றது. அதில் அவர் பார்த்து ரசிக்கும் ஹாலிவூட் படங்களில் காண்பிக்கப்படும் யுக்தியை தனது எதிரியை கொல்வதற்கும் அவர் பயன்படுத்துகின்ற சந்தர்ப்பங்களும் அதிகம்.
எரிக் சொல்ஹைமினால் வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியானது கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினரால் கொண்டு வரப்பட்டது. அக்காலப்பகுதிக்கான விமான நிலையப் பதிவேடுகளை சோதனை செய்தால் அத்தொலைக்காட்சிப் பெட்டி கொண்டு வரப்பட்டதற்கான பதிவுகள் நிச்சயம் இருக்கும். கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர்; இலங்கை விமானப்படையின் உலங்கு வானூர்தியிலேயே கிளிநொச்சிக்கு சென்றனர்.
ஆனால் இடவசதியைக் கருத்திற் கொண்டு பேச்சுவார்த்தைக் குழுவினருடன் தொலைக்காட்சிப் பெட்டியையும் கொண்டு செல்ல விமானப் படையினர் மறுத்து விட அதற்காக இலங்கைக்கான நோர்வேத் தூதரகத்தின் உதவி கோரப்பட்டு நோர்வேத் தூதரக அதிகாரிகளினால் தரை வழியாக அத்தொலைக்காட்சிப் பெட்டி கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
நான் இவ்விடத்தில் ஒன்றைத் தெளிவாகக் கூற வேண்டும். நோர்வே நாட்டு அரசாங்கத்தையோ, அந்நாட்டு மக்களையோ நான் என்றும் குற்றம் சொல்லவில்;லை. அதேபோல் மேற்படித் தொலைக்காட்சி விடயம் கூட சாதாரண விடயம் ஆனால் நடுநிலைமைவாதியாகக் குறிப்பிடும் எரிக் சொல்ஹைம் எனும் தனிநபர் இலங்கை விவகாரத்தில் புலிகளின் சார்பாளராக நடந்து கொள்கிறார். இதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இதனைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் விடயத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.

கேள்வி:- பிரபாகரனின் இவ்வருட மாவீரர்தின உரை குறித்த உங்கள் கருத்தென்ன?

கருணாஅம்மான்:- பிரபாகரனின் இவ்வருட மாவீரர்தின உரையிலும் கூட வாய்ச்சவாடல்கள் மட்டுமே உள்ளது. அதிலும் இம்முறை தடுமாற்றமும், பீதியும் அதிகமாகக் காணப்பட்டது. என்றுமே சாத்தியப்படாது என்று நன்குணரப்பட்ட தனிநாட்டு கோரிக்கைகள் இப்போது மீண்டும் தூசு தட்டியிருப்பது தனது கஜானா காலியாகியிருப்பதால் தான். சர்வதேச சமூகங்களின் புலிகள் மீதான பயங்கரவாதத் தடையும், ஏ9 பாதை மூடப்பட்டதும் புலிகளுக்கு பொருளாதார ரீதியில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன் கஜானாவை நிரப்புவதற்காக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் மடிப்பிச்சை கேட்பதே பிரபாகரனின் உரையின் பிரதான நோக்கம்.

கேள்வி:- தமிழீழக் கோரிக்கை குறித்த உங்கள் முடிவு? அது சாத்தியமா? இல்லையா??

கருணாஅம்மான்:- தனிநாட்டு கோரிக்கையோ பிரிவினையோ எப்போதுமே சாத்தியமாகாது என்று சாதாரண மக்கள் முதல் புத்திஜீவிகள் வரை அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம். சர்வதேச சமூகம் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அடையக் கூடிய இலட்சியங்களை உடைய தமிழ்மக்களின் நியாயமான விடுதலைப் ரோட்டத்தை அடைய முடியாத இலட்சியங்களுடன் கூடிய பயங்கரவாதப் போராட்டமாக மாற்றியதே பிரபாகரன் தான். பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை தமிழக மண்ணில் வைத்து படுகொலை செய்ததன் மூலம் தமது பயங்கரவாதத்தை எல்லை தாண்டிய பயங்கரவாதமாக மாற்றியதுடன் வடக்கில் இருந்த முஸ்லிம் மக்களை வெளியேற்றி கிழக்கிலே சகோதர இன மக்களுக்கெதிரான படுகொலைகள் மூலம் ஈழப் போராட்டம் என்பது சகோதர மக்களுக்கெதிரான எல்லை கடந்த பயங்கரவாதப் போராட்டம் எனும் நிலைக்கு கொண்டு வந்தது பிரபாகரன் தான். இப்போது மீண்டும் தனிநாட்டு கோரிக்கையை அவர் எடுத்திருப்பது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் புலிகள் இயக்கத்தையும், தன்னையும் காப்பாற்றலாம் என்ற இறுதி முயற்சியாக இருக்கலாம்.

கேள்வி:- ஏ9 பாதையூடாக உணவுப்பொருட்கள் அனுப்ப அரசு முடிவெடுத்தது குறித்தும்.. அதற்கு விடுதலைப்புலிகள் தடை விதித்தது குறித்தும்… இதற்கான தீர்வு குறித்தும்?

கருணாஅம்மான்:- யாழ் குடாநாட்டு மக்கள் பிரபாகரனின் சுரண்டல்களுக்கு மாத்திரம் தானே தவிர அம்மக்களின் நலனிலோ அவருக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதை இந்நிகழ்வு மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது. அம்மக்கள்; தம் மக்கள் என்ற உணர்வு பிரபாகரனுக்கு இருந்திருக்குமானால் எவ்வழியிலேனும் அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கு தங்களினால் ஆன அனைத்தையும் செய்திருக்க வேண்டும். ஆனால் அதனை விடுத்து கடல் வழியாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லையென்றார்கள் இப்போது தரைவழியாக கொண்டு செல்லவும் அனுமதி மறுக்கின்றனர். இப்போது இவர்களின் ஒரே நோக்கம் ஏ9 பாதையில் வரி, கப்பம் அறவிட வேண்டும் என்பதே தவிர வேறோன்றுமில்லை. அதேநேரம் நான் இவ்விடத்தில் அரசாங்கத்திற்கு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். யாழ்ப்பாண மக்களும் இந்நாட்டின் பிரஜைகள் தான். அம்;மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், உணவுப் பொருட்களையும் வழங்க வேண்டியது அரசின் கடமை. எவ்வழியிலேனும் இவை வழங்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.


கேள்வி:- வாகரை மக்களின் நிலைமை குறித்து?

கருணாஅம்மான்:- வாகரையிலுள்ள சுமார் 30.000 மக்கள் இன்று பிரபா குழுவினால் மனித கேடயங்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர். கிழக்கில் மிகப் பலவீனமாக இருக்கும் பிரபா குழுவினர் இறுதி முயற்சியாகத் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இம்மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். இம்மக்களை பாதுகாப்பாக பிரபா குழுவினரிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும். அத்துடன் மக்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவை தொடர்பாக இலங்கை அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

கேள்வி:- ஈபிடிபி அமைப்புக் குறித்து உங்கள் கருத்து ? அவர்களுடனான உறவு?…

கருணாஅம்மான்:- எமது பிரிவின் ஆரம்ப காலத்தில் நாம் ஜனநாயக வழிக்குத் திரும்புவதற்கு எமது அறிக்கைகள் செயற்பாடுகளை ஆதரித்து ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் தார்மீக உதவிகள் செய்தார். நாம் அதனை எப்போதும் நன்றியுடன் நினைவு கூருவோம். பிரபாகரனின் அடக்குமுறையிலும், கொலைக் கலாச்சாரத்திலும் பாதிக்கப்பட்ட மாற்றுக் கருத்துடைய கட்சி என்ற வகையில் அவர்களுடனான எம் உறவு குறித்து உரிய தருணம் வரும்போது எமது அரசியல் செயற்குழு நல்லதொரு முடிவை எடுக்கும்.

கேள்வி:- உங்களுடன் இணைந்திருந்த ஈஎன்டிஎல்எப் அமைப்பினர் குறித்த உங்கள் கருத்து?

கருணாஅம்மான்:- இவர்கள் எமது அதிதீவிர களச் செயற்பாடுகளுக்கு ஈடுகொடுத்து செயற்பட முடியாத நிலையிலேயே இவர்களில் பலர் எம்மிடமிருந்து விலகி இந்தியாவுக்கே சென்று விட்டார்கள். அதிதீவிரமாகச் செயற்படக் கூடிய சிலர் எமது அமைப்புடன் இணைந்து செயல்படுகிறார்கள். அதேவேளை இதனை முக்கியப்படுத்திச் சொல்வதற்கோ இவர்களைக் கவனத்தில் கொள்வதற்கோ இது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று நினைக்கிறேன்…

கேள்வி:- தமிழர்விடுதலைக்கூட்டணி புளொட் ஈபிஆர்எல்எப்(நாபாஅணி) ஆகிய மூன்று அமைப்புக்களும் கூட்டாக இணைந்து செயல்படுவது குறித்து உங்கள் கருத்து? அக்கூட்டில் உங்கள் ரிஎம்விபி அமைப்பும் இணைந்து கொள்ளுமா??

கருணாஅம்மான்:- இக்கூட்டணியை நான் வரவேற்கிறேன். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இதுவோர் முன்னேற்றகரமான நல்லதோர் முடிவு. தமிழ் மாற்றுக் கட்சியில் நாங்கள் வேறுபட்ட அமைப்பாக இயங்கி வருகின்றோம். அதாவது நாம் இராணுவ மற்றும் அரசியல் செயற்பாடுகளை இணைத்தே செயல்படுகிறோம். ஏனையோர் முற்றுமுழுதாக அரசியல் செயற்பாட்டில் முழுமையாக தீவிரமாக ஈடுபடுகிறார்கள். அதேநேரம் நாம் தொடர்ந்தும் ஆயுதங்களில் மோகம் கொண்டு ஆயுதத்தைத் தூக்கித் திரிய விரும்பவில்லை. எமது தற்பாதுகாப்புக்காக எம்மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை தூக்கியெறியும் காலம் விரைவில் வருமென நம்புகிறோம். காலப்போக்கில் ஏனைய அமைப்புகளுடனான உறவுகள் குறித்தும் கள நிலைமைக்கு ஏற்ப எவ்வாறு செயற்படுவதென்பது குறித்தும் எமது அரசியல் செயற்குழு முடிவெடுக்கும்.

கேள்வி:- கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் கொலைகள், ஆட்கடத்தல்…குறித்து??

கருணாஅம்மான்:- கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் கொலைகள், ஆட்கடத்தல் எமக்கு பெரும் கவலையையும், வேதனையையும் அளிக்கின்றது. கிழக்கு மாகாணம் என்று மட்டுமல்ல வட மாகாணத்தில் இடம் பெறுவதையும் தான். இவையனைத்திற்கும் காரணம் பிரபாகரனும், பொட்டனும் தான். கிழக்கில் நாம் மிகப் பலம் பெற்றுள்ளதாலும் மக்களிடம் எமக்கு பெரும் ஆதரவு இருப்பதாலும்; திட்டமிட்டு படுகொலைகள் மேற்கொண்டு இனவன்முறைகளைத் தோற்றுவிப்பதே அவர்களின் நோக்கம். ஆனால் இதற்கு நாமும் எம் மக்களும் இடம் கொடுக்கப் போவதில்லை.

கேள்வி:- காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை உங்களின் தலைமையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறதே இது உண்மையா? இது குறித்து??

கருணாஅம்மான்:- இது அபத்தமான குற்றச்சாட்டு சகோதர இனமக்களுக்கெதிரான எத்தாக்குதலும் நாம் என்றுமே மேற்கொண்டதில்லை. இதனை என்னால் உறுதியாகக் கூற முடியும். 1990 ஆம் ஆண்டு பிரேமதாச அரசுடனான தேனிலவுக் காலம் முடிவுக்கு வந்த பின் மோதல்கள் ஆரம்பமான சமயம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்காக பாரிய இராணுவ நடவடிக்கையொன்றிற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இதனால் அரசாங்கத்தின் கவனத்தை திசைதிருப்ப கிழக்கில் பாரிய சகோதரப் படுகொலைக்கு பிரபாகரன் உத்தரவிட பொட்டனின் நேரடிக் கண்காணிப்பிலேயே காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலையும், ஏறாவூர் படுகொலையும் எல்லைப்புற சிங்கள மக்கள் மீதான படுகொலைகளும் இடம் பெற்றன. படுகொலைகள் இடம்பெற்ற பின் பொட்டன் இதனை நேரடியாகவே என்னிடம் கூறினார். ஆனால் அக்கொடூரங்கள் இடம்பெற்ற சமயம் நானும் அவ்வியக்கத்தில் இருந்தேன் என்பதற்காக வேதனையடைகிறேன்.

கேள்வி:- வடகிழக்கு முஸ்லிம் மக்கள் குறித்து உங்கள் கருத்து??

கருணாஅம்மான்:- முஸ்லிம் சகோதரர்கள் தொடர்பான எமது நிலைப்பாடு தெளிவானதும், உறுதியானதும் ஆகும். முஸ்லிம் மக்கள் எம் சகோதர மக்கள் அவர்கள் தமது தாயக பூமியில் அச்சமற்ற, நிம்மதியான அனைத்து அடிப்படை உரிமைகளுடன் வாழ வேண்டும். ஒரு இனத்தின் தனித்துவங்களும், அரசியல் அபிலாசைகளிலும் இன்னொரு இனம் குறுக்கீடு செய்யக் கூடாது. முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமைகளையும், அரசியல் அபிலாசைகளையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். முஸ்லிம்கள் மட்டுமன்றி கிழக்கில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கான அரசியல் அபிலாசைகளையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். கிழக்கில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களாகிய மூவின மக்களும் வாழ்கின்றனர். இம்மக்கள் புரிந்துணர்வுடனும், நிம்மதியாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது அது அனைத்தின மக்களினதும் அரசியல் அபிலாசைகளைப் உறுதி செய்யக் கூடியதாகவும் அனைவரையும் திருப்திப்படுத்துவதாயும் இருக்க வேண்டும். பேச்சுவார்த்தை மேசையில் முஸ்லிம்களின் தனித்தரப்பு பிரசன்னத்திற்கு நாம் ஆதரவு தெரிவிக்கிறோம். எம்மக்களுக்குண்டான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு.

கேள்வி:- அதிரடி இணயத்தளம் குறித்த உங்கள் கருத்தென்ன??

கருணாஅம்மான்:- அதிரடி இணயத்தளத்தின் சேவை மிகப் பராட்டுக்குரியது. உண்மைகளை உடனுக்குடன் அதிரடியாகத் தருவதில் அதிரடிக்கு நிகர் அதிரடிதான். பல அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் மத்தியில் தமிழ்மக்கள் உரிமைக்காக அதிரடி இணையத்தளம் மேற்கொண்டு வரும் இவ்வரிய பணி என்றும் தொடர வேண்டும். அத்தோடு மாற்று தமிழ் அமைப்பொன்றின் சர்வதேச முக்கியஸ்தராக இருந்த போதிலும் அதிரடி இணையத்தினருக்காக எல்லா அமைப்புக்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருப்பது போல் என்னுடன் மட்டுமல்லாமல் எமது அமைப்பினைச் சேர்ந்த பலருடனும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள அச்சகோதரரின் புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையான செயல்பாடுகளுக்கு அவருக்கும் அதேபோல் பல பிரச்சினைகள,; நெருக்கடிகளுக்கு மத்தியிலும் துணிவுடன் எம்மைப் பேட்டி காண வந்த உங்களுக்கும் அத்துடன் புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் எம் மக்களின் பிரச்சினைகளை உண்மைத் தன்மையுடன் பக்கச்சார்பின்றி கொண்டு செல்லும் அதிரடி ஆசிரியர் குழாமிற்கும் என் பாராட்டுக்களும் நன்றியும்…

கேள்வி:- புலம் பெயர்ந்து வாழும் எம் உறவுகளுக்கு அதிரடி இணையம் ஊடாக ஏதாவது தெரிவிக்க விரும்புகிறீர்களா??

கருணாஅம்மான்:- புலம் பெயர்ந்து வாழும் எம் சகோதரங்கள் தாயக மண்ணிலுள்ள மக்களின் நலனில் கொண்டுள்ள அக்கறையும், அர்ப்பணிப்பும் அளப்பெரியது. ஆனால் புலம் பெயர்ந்தவர்கள் தாயக மண்ணிலுள்ள தம் சகோதரர்களுக்கு வழங்கும் உதவிகள் உண்மையிலேயே அவர்களைத்தான் சென்றடைகின்றதா? என்பதை உறுதிப்படுத்தி;க் கொள்ள வேண்டும். எம்மக்களை நெருக்கடிக்குள் ஆளாக்கி, அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் பிரபா குழுவினருக்கு புலம்பெயர் வாழ் மக்களின் உதவிகள் சென்றடைந்தால் எம்மக்களின் இன்னல்களும், அவலங்களும் இன்னும் அதிகமாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். யாழ்ப்பாணம், வாகரை போன்ற பகுதிகளில் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் மக்களுக்கு தாராளமாக உதவுங்கள். ஆனால் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ய வேண்டாம் என தயவாக வேண்டுகின்றேன். நீங்கள் ஒன்றை சிந்தித்துப் பாருங்கள். ஏழைப் பெற்றோர்களின் சிறுவர்களையும் இளைஞர்களையும் கடத்திக் கொண்டு வந்து கட்டாய ஆயுதப் பயிற்சியளித்து கொலைக்களம் அனுப்புகின்றார் பிரபாகரன். தன் பருவ வயதையடைந்த பிள்ளைகள் பிரபாகரனுக்கும் அவரின் ஏனைய முக்கியஸ்தர்களுக்கும் இருக்கின்றனர். அப்பிள்ளைகள் இன்று எங்கே? யுத்த களத்தில் நின்று போரிடுகின்றார்களா? இல்லையே, ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பாக கல்வி பயில ஏழைச் சிறுவர்களும் அப்பாவி இளைஞர்களும் கொல்லப்படுகின்றனர். இதுதான் பிரபாகரனின் இன உணர்வு. எனவே இவ்வாறான பயங்கரவாதிகளுக்கு உங்கள் உதவிகள் சென்றடையக் கூடாது என்பதே என் வேண்டுகோள். சுpந்தித்து செயல்படுவோம். நன்றி…

**
நான் அங்கு சென்ற சமயம் கருணாஅம்மான் தலைமையிலான ரிஎம்விபியின் முக்கிய தளபதிகளுக்கும் பொறுப்பாளர்களுக்குமான கூட்டமொன்றுக்கு ஏற்பாடாகி இருந்தது. அச்சமயத்தில் நான் அனைவரையும் கருணாஅம்மானுடன் சேர்த்து ஒன்றாகப் புகைப்படம் எடுக்க விரும்பி எனது விருப்பத்தை தெரிவித்த போது சிலர் விரும்பாததும், சிலர் சந்தேகக்கண் கொண்டு என்னைப் பார்த்த போதிலும் கருணாஅம்மான் அவர்கள் ‘நாம் மக்களுக்காக வாழ்பவர்கள் அதனால் எம்மைக் குறித்து மக்கள் தெரிந்து கொள்வதில் தவறில்லையென”க் கூறியதுடன் புகைப்படத்திற்கும் ஒத்துழைத்தார்.


புகைப்படத்தில்……. ரிஎம்விபியின் தலைவர் கருணாஅம்மான் அவர்களுக்கு வலதுபுறத்தில் அமர்ந்திருப்பவர்கள் ரிஎம்விபியின் தளபதிகள் பிள்ளையான், பிரதீப்மாஸ்டர், பகீரதன், பிஎல்ஓ மாமா எனும் மகேந்திரன்

இடதுபுறத்தில் அமர்ந்திருப்பவர்கள் ரிஎம்விபியின் தளபதிகள் nஐயம், மார்க்கன், சின்னத்தம்பி, பாரதி எனும் இனியபாரதி

ரிஎம்விபியின் தலைவர் கருணாஅம்மான் அவர்களுக்கு பின்னால் நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக) ரிஎம்விபியின் தளபதிகள் முரளி, சுதன், மகிழன், மங்களன்மாஸ்டா், சிந்துஐன், சூட்டி, தூயவன் எனும் உருத்திரா, விஐpதரன், ரீஐசீலன், சீலன் ஆகியோர்.
(மேற்படி புகைப்படம் எடுத்த மறுதினமே (09.12.06) ரிஎம்விபியின் தளபதி இனியபாரதி உட்பட மூவர் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியதில் அவர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.)

******
மேற்படி பேட்டியைக் காண்பதற்காக ரிஎம்விபியின் தலைவர் கருணாஅம்மான் அவர்களுடன் (சுமார் ஒருவருடத்திற்கு பின்பாக) தொலைபேசி மூலம் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக உரையாடி ஏற்பாடு செய்து தந்தவரும், அதிரடி இணையத்தளத்திற்கு பல வழிகளிலும் உதவிபுரிபவர்களில் ஒருவருமான (ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும்) தமிழ் அமைப்பொன்றின் சர்வதேச முக்கியஸ்தரான அண்ணருக்கும்…. பல பிரச்சினைகள,; நெருக்கடிகளுக்கு மத்தியிலும் துணிவுடன் சென்று ரிஎம்விபியின் தலைவர் கருணாஅம்மான் அவர்களைப் பேட்டி கண்ட அதிரடியின் மட்டுநகர் விசேட செய்தியாளருக்கும் (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.) அதிரடி இணையத்தின் ஆசிரியர்குழு, நிர்வாகம் மற்றும் அதிரடி வாசகர்கள் சார்பாகவும் எமது நன்றி!!

அதேவேளை மேற்படி பேட்டி குறித்து உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எமக்கு எழுதி அனுப்புவதுடன் தொடர்ந்தும் கருணாஅம்மான் அவர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளையும் எழுதியனுப்பவும். முடிந்தால் மீண்டுமொரு முறை நேரடியாகப் பேட்டி கண்டு பிரசுரிப்போம் அல்லாவிடில் தொலைபேசி மூலமாவது பேட்டி கண்டு நிச்சயமாகப் பிரசுரிப்போம்.


athirady.com